Wednesday, December 14, 2011

காஃபி வித் மகி!

வாங்க,வாங்க,வணக்கம்! :)))))))))))))))))))

உட்காருங்க..எப்படி இருக்கீங்க? வீட்டுல எல்லாரும் சௌக்கியம்தானே?

என்னோட காஃபி சாப்பிட வந்ததுக்கு நன்றி!

ரொம்ப நாளா காப்பியைப் பத்தி எழுதணும்னு நினைச்சுட்டே இருந்தேன்..ஒருவழியா அதுக்கு நேரம் வந்திருக்கு. பில்டர் காப்பி/ ப்ரூ காப்பி/கண்ணன் காப்பி/நரசுஸ் காப்பி/உதயம் காப்பி/சன்ரைஸ் காப்பி/ஹோட்டல் காப்பி/வரக்காப்பி.. இதெல்லாம் எனக்குப் பரிச்சயமான காப்பி வகைகள்..(அப்பாடி எத்தனை வகைக் காப்பி?!!

கல்யாணத்துக்கு முந்தி காலைல வீட்டில் எல்லாருக்கும் நரசுஸ் காபி போட்டாலும் எனக்கு மட்டும் ஸ்பெஷலா ப்ரூ காப்பிதான்! (இப்பவுமே அப்புடித்தான்!!:)).. சுடச்சுடக் கையில் காப்பி டம்ளரோட வாசப்படியில் உட்கார்ந்து காலைக் குளிர் காற்றை அனுபவிச்சுட்டே ஒரொரு ஸிப்பா காபியை என்ஜாய் பண்ணறதே ஒரு சுகம் போங்க! :)

கல்யாணத்துக்கு அப்புறம் என்னவர் வீட்டில் பெரியவங்க எல்லாரும் காலை/மாலை ரெண்டு நேரமும் டீதான்..இருந்தாலும் எங்களுக்கு (நாங்க & கொழுந்தனார்கள்) ஒரு பாக்கெட் காஃபி பவுடர் வாங்கி வைச்சு காப்பி போட்டு குடிப்போம். இப்பவும் நாங்க ஊருக்கு போகைல எங்களுக்கு ஸ்பெஷலா காபிபவுடர் வாங்கி வைச்சிருந்தாங்க.

பெங்களூர்ல முதல்முறையா எவர்சில்வர் காஃபிபில்டர் வாங்கி அதிலே எப்படி டிகாக்ஷன் போடணும்னு தெளிவாக் கத்துக்கறதுக்குள்ளே இங்ஙன வந்திட்டோம்..ஃபில்டரையும் எடுத்துட்டு வரல. அதனால் ப்ரூ காப்பிதான் யூஸ் பண்ணினோம். சிலபல ஊர்கள் மாற்றியதும் என்னவர் காஃபி மேக்கர் வாங்கணும்னு அடம் பிடிச்சு ஒரு 4கப் காஃபி மேக்கர் வாங்கித்தந்தார்.


இந்தப் படத்தில் வலப்புறம் இருப்பது காபி ஃபில்டர் பேஸ்கட்..இந்த பேப்பர் கப்பை காஃபி மேக்கர்ல வச்சு, அதிலே காப்பித்தூளை ஃபில் பண்ணி, தேவையான அளவு குளிர்ந்த நீரை காஃபிமேக்கர் உள்ளே ஊற்றி மெஷினை ஆன் பண்ணி, க்ளாஸ் காஃபி மக்-ஐ வைச்சா நிமிஷங்களில் சூடான கருப்பு காபி கிடைக்கும். இது basic காஃபி மேக்கரின் செயல்பாடு. மத்தபடி எஸ்பிரஸோ மேக்கர், cappuccino மேக்கர்னு பலவகையா காஃபி மேக்கர்கள் இருக்கிறது. (அதெல்லாம் நமக்கு வேணாம்,விட்டுடுங்க!;))

ஆனா பாருங்க,நமக்குத்தான் இந்த ஸ்டைல் காஃபி பிடிக்காதே. இந்த காஃபி மேக்கரை வச்சு என்ன பண்ணன்னு நான் மண்டையபிச்சுகிட்டு இருந்தேன்..அப்ப என் தோழி ஒருவர் (ஊரில் ஃபில்டர் காபி போடுபவர்) இந்த மெஷினிலும் நான் அதே போல காஃபி போடுவேன் என்று சொல்லி, " ஃபில்டர்ல காபித்தூளைப் போட்டு,தண்ணீரையும் ஊற்றி, மெஷினையும் ஆன் பண்ணிடனும், ஆனா காபிமக்-ஐ உடனே வைக்காமல் ஒரு பத்துநிமிஷம் கழிச்சு வையுங்க..திக் டிகாக்ஷன் கிடைக்கும்"னு டிப்ஸ் குடுத்தாங்க. அதை ட்ரையல் & எரர் மெதட்ஸ்ல பலமுறை முயற்சித்து ஒரு வழியா எங்க டேஸ்டுக்கு ஏத்தமாதிரி காப்பி போடக் கத்துகிட்டேன். :)

Folger's Classic Roast coffee பவுடரை ஒரு ஆறுஸ்பூன் போட்டு ஒரு கப் தண்ணியையும் காஃபிமேக்கர்ல ஊத்தி க்ளாஸ் காஃபி மக்-ஐ வைக்காம ஆன் பண்ணிடனும்.

அட்லீஸ்ட் 20 நிமிஷம் கழிச்சு, ரெண்டு கப்ல அரைகப் பாலை மைக்ரோவேவ்-ல 2.30 நிமிஷம் சூடு பண்ணி எடுக்கணும். பால் நல்லா சூடாகி ஆடை கட்டி இருக்கும். மேலே படிந்திருக்கும் பாலாடையை எடுத்துட்டு,ரெண்டு கப்லயும் தேவையான சர்க்கரையைப் போட்டுடணும்.

இப்ப காபி மேக்கர்ல காஃபி மக்-ஐ வைச்சம்னா திக் டிகாக்ஷன் கிடைக்கும்.
அதை ரெண்டு பால் கப்லயும் சரிசமமா:) ஊத்தி, ஸ்பூனால நல்லா கலக்கி, 2-3 தடவை சர்-சர்ர்ர்ர்ர்ர்ர்னு ஆத்தினா....
மணக்க மணக்க காப்பி ரெடி!:))

இன்னை வரை எனக்கு அமெரிக்க காப்பி காப்பி புடிக்காது..வேற வழியே இல்லைன்னாஒரு ஸ்மால் latte/ cappuccino வாங்கி அதில நாலுவாய் குடிப்பேன், அப்பறம் அது அவ்ளோதான்!!:)))
~~~~
அது..இது..எது?-ல ஒரு ஸ்வீட் போட்டேன்..அது என்னன்னு தெரிஞ்சுக்க எல்லாரும் ஆர்வமா இருந்தீங்கள்ல? ஒருவேளை.....


இதானோ அது??இருக்கலாம்,இல்லாமலும் இருக்கலாம்,ஆக மொத்தம் அது இதுவாக இருக்க 90% வாய்ப்புகள் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!
:))))))))
~~~~


34 comments:

 1. போட்டி.. அப்றம் சைன் பண்ண மக்லாம் கொடுக்கிறது இல்லிச்யா?

  ReplyDelete
 2. சின்னக் காலத்துல 'சம்ஸ் காஃபி'ன்னு ஒண்னு வந்துச்சு. சூப்பரா இருக்கும். மிஸ் பண்றேன். ;((

  வலது புறம் இருப்பது.. ஹை! கப்கேக் பேப்பர்கப்! ;)

  நுரை மேல படம் போடலயா! எனக்கு ஹார்ட் பிடிக்கும்.

  ReplyDelete
 3. இனிப்பு மிக்க்ஷர்தானே!
  சூப்பரா இருக்கு. பவுல அப்புடியே இங்க அனுப்புங்க மகி.

  ReplyDelete
 4. கோலம் அழகா இருக்கு. அந்த நட்சத்திரத்தீபம் சூப்பர். இங்க கிடைக்குமான்னு பார்க்கணும்.

  ReplyDelete
 5. ஸைன் பண்ண கப்புதானே..குடுத்துட்டாப்போச்சு இமா!:)

  என்னது...நுரை மேலே படமா??அது இந்தக்காப்பில வராது..காஃபி ஆர்ட் எனக்கும் புடிக்கும். வீடியோ பார்க்க ஆரம்பிச்சா பாத்துட்டே இருப்பேன்!;)

  /இனிப்பு மிக்க்ஷர்தானே!/கர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஆமாம்,இல்லை!

  தீபங்கள் தீபாவளி டைம்ல இங்கே வாங்கியது. நட்சத்திர தீபம் கோயமுத்தூர்ல இருந்து வந்தது.அங்கே கிடைக்குமா தெரில இமா!

  நன்றி!

  ReplyDelete
 6. மகி கிட்ட காஃபி பட்ட பாடு,வாய் இருந்தால் அழும்.
  ஆமாம் ஹோம் மேட் பஞ்சாமிர்தம் மாதிரின்னா இருக்கு.
  இமா சொல்லாததை நான் சொல்ல வேண்டாமா?

  ReplyDelete
 7. /மகி கிட்ட காஃபி பட்ட பாடு,/ :))) ஆசியாக்கா,என்ன செய்யறது?அந்த அளவுக்கு காஃபி அடிக்ட் ஆகிட்டேன்! :)

  /ஹோம் மேட் பஞ்சாமிர்தம் மாதிரின்னா இருக்கு./சீரியஸா சொல்றீங்களா,இல்ல ஜோக்கடிக்கிறீங்களா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...பஞ்சாமிர்தம் இந்தக் கலர்லயா இருக்கும்?!!!!!!

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியாக்கா!

  ReplyDelete
 8. 1. கடவுளே!!! அதிரா இந்தப்பக்கம் வரப்படாது. _()_ _()_ _()_
  2. //ஆமாம்,இல்லை! // krr
  3. //ஹோம் மேட் பஞ்சாமிர்தம்// ;))

  ReplyDelete
 9. காபி வித மகி..ம்ம்..நடத்துங்கோ மகி...

  ReplyDelete
 10. ada mahi, namma filter evlavo thevalai pola irukke! 10 nimishathula nalla manaka manaka kaapi pannidalaame!

  Wow! nothing beats a freshly brewed filter coffee. Before boiling the milk, i pour hot water and brew the decoction fresh. But I don't have time to sit and enjoy my cup :-(

  ReplyDelete
 11. நானும் காப்பி குடிக்க வந்துட்டேன் .
  நமக்கு சன்ரைஸ் ஆல் டைம் ஃபேவரிட் .அதுவும் வித் coffee mate or coffee whitenerதான் சரியாருக்கும் .
  கூர்க் காப்பி /ரெட் கலர் பேக்ல வருமே பெயர் மறந்துடிச்சு அப்புறம் AVT COFFEE / சுக்கு காப்பி /பனைவெல்ல கருப்பட்டி காப்பி ஹ்ம்மம்ம்ம்ம்
  நான் சன்ரைசுக்கு மட்டுமே வைட்னர் சேப்பேன் .மற்றபடி எனக்கு ப்ளாக் காப்பிதான் எப்பவும் பிடிக்கும் .
  இங்கே ஜேகப்ஸ் காபி /ஷிபோ காப்பி எல்லாம் கிடைக்கும் ஆனா நம்மூர் நரசுஸ் காப்பிக்கு ஈடேது .இருங்க ஒரு காபி குடிச்சிட்டு வரேன் ......

  ReplyDelete
 12. மகி சூப்பர் காபிதான். காபி போடுவேனே தவிர குடிக்கமாட்டேன்
  குடித்ததுமில்லை. குடிக்கப் போவதுமில்லை. காபியைத்தான். யார் வந்தாலும் நல்ல காபிபோட்டுக் கொடுத்து உபசாரமெல்லாம் செய்வேன். காபி வித் மகிக்கு இப்படியொரு வித்தியாஸமான கமென்ட்டா. நன்ராக இருக்கு காபி.

  ReplyDelete
 13. நோ.. நோ எனக்கு கோப்பி வாணாம்... எனக்குப் புடிக்கவே புடிக்காது.. சூப்பரா ஒரு ஸ்ரோங் ரீ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))..

  ReplyDelete
 14. எனக்கு எந்தக் கோப்பியுமே பிடிக்காது, ஆனா இங்கு வந்த பின்பு மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ஷரில ரிச் கோல்ட் கோப்பி என ஒன்று கிடைக்குது,அதிலயும் கோல்ட் லேபல்தான் பிடிக்கும், அது மட்டும்தான் வாங்கி ஆராவது வீட்டுக்கு வரும் விசிரேஸ் கோப்பி கேட்டால் அவர்களோடு நாமும் குடிப்போம், மற்றும்படி நாம் இருவரும்.. ஏன் நால்வருமே ரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈதான்ன்ன்ன்ன்:))

  ReplyDelete
 15. //கல்யாணத்துக்கு முந்தி காலைல வீட்டில் எல்லாருக்கும் நரசுஸ் காபி போட்டாலும் எனக்கு மட்டும் ஸ்பெஷலா ப்ரூ காப்பிதான்! (இப்பவுமே அப்புடித்தான்!!:)).. சுடச்சுடக் கையில் காப்பி டம்ளரோட வாசப்படியில் உட்கார்ந்து காலைக் குளிர் காற்றை அனுபவிச்சுட்டே ஒரொரு ஸிப்பா காபியை என்ஜாய் பண்ணறதே ஒரு சுகம் போங்க! :)//

  பழைய ஞாபகங்கள்.. ஒரு கப் ரீ ஊத்திக் கொண்டு வந்து வெளி சன்செட்டில இருந்து குடிக்க வெளிக்கிட்டால் பூனைப்பிள்ளை ஓடிவந்து மடியில இருந்து, நான் ஒவ்வொரு தடவையும் கப்பை வாய்க்குக் கொண்டுபோக, எட்டி என் கையைத் தட்டி மியாவ் என்பார்... அவருக்கு ஒரு டிஷ் இருந்துது அதில அவருக்கு கொஞ்சம் கொடுத்திட்டு, திரும்பி குடிக்கப்போனால்.. முன்னால நாய்ப்பிள்ளை ஊஊஊஊஉ என்பார்.. அவருக்கும் அவரின் டிஷ்ல ஊத்திட்டு நான் குடிக்க பாதிதான் இருக்கும்... அதெல்லாம் ஒரு இனிமையான காலம் இப்ப நினைச்சாலும் கவலையாக இருக்கு:(.

  அதனால நான் எப்பவும் எழும்பியவுடன் ஒரு ரீ... பின்பு ஒரு மணித்தியாலத்தால் ஒரு ரீ குடிச்சுப் பழகிட்டேன்..... இப்பவும் பழக்கம் அப்பூடித்தான் தொடருது.....

  ReplyDelete
 16. அதீஸ்.... எங்கட ஜூலி ஸ்பூன்ல கோப்பி குடிப்பா. ஷெரீனுக்கும் எங்களோட கோப்பி குடிக்கிற பழக்கம் இருந்துது. எல்லாம் ஞாபகப்படுத்துறீங்கள். ;))

  ReplyDelete
 17. athira said...//அதெல்லாம் ஒரு இனிமையான காலம் இப்ப நினைச்சாலும் கவலையாக இருக்கு:(.//  சில விஷயங்கள் பசுமையா நினைவில் பதிஞ்சுடும் எனக்கும் பழைய நினைவுகளை கிளறி விட்டுட்டீங்க ஆடு மாடு கோழி அணில் கிளி புறா இவைகளோடுமற்றும் இவற்றின் குட்டிகளோடும் நானும் காலையில் காப்பி குடிச்சிருக்கேன் .அந்த வாழ்க்கை திரும்ப வரவே வராது .

  ReplyDelete
 18. அதுவும் கிளி என் பெயரை சொல்லி சொல்லி அழைக்கும் .அதுதான் என் வேக் UP அலாரம். அம்மா காப்பிய ரெடி பண்ணிட்டு ஒரு தரம் பேர் சொல்லி எழுப்பினா பாப்பு
  என்னை எழுப்பி விடும்

  ReplyDelete
 19. OK OK THATS IT .

  ஆஹ்ங் மகி இதை சொல்லத்தான் வந்தேன் எங்க வீட்டு எலி கொக்கிஸ் /அச்சு முறுக்கு மோல்டை கண்டுபிடிச்சிட்டார் .விரைவில் திரையில் எதிர்பாருங்கள்

  ReplyDelete
 20. என்னவோ போங்கள் எனக்கு காஃபி பிடிக்காது. அமெரிக்கா வந்து ஒரு தரம் கூட கடையில் காஃபி குடிச்சதில்லை. அம்மா காஃபி அரைக்கும் போது கொத்தமல்லி, சுக்கு, வேறு சில பொருட்களும் சேர்த்து அரைப்பார். அந்த காஃபி தூள் மட்டும் உடம்பு சரி இல்லாவிட்டால் ஒரு கப் குடிப்பேன். நோ, வலி எல்லாம் ஓடியே போயிடும்.

  ReplyDelete
 21. மகி ,starbucks ல chai tea latte குடிச்சு இருக்கீங்களா அது போல வீட்ல மசாலா டீ போட்டு குடிப்பேன்.

  காபி போடும் பாத்திரத்தில் கூட டீ போடமாட்டேன் நான்

  ReplyDelete
 22. மகி அந்த ஸ்வீட் soan papdi தானே ????????

  ReplyDelete
 23. //இமா said...
  1. கடவுளே!!! அதிரா இந்தப்பக்கம் வரப்படாது. _()_ _()_ _()_
  //

  Newz.... எங்களுக்கு தூரம் அதனால இப்போ வாற ஐடியா இல்லை இமா:)) ஆனா 2012 க்குப் பின் எல்லோரும் இருந்தால் பார்க்கலாம்:))).

  காலையில அவசரத்தில பின்னூட்டம் அதனால வேறு பின்னூட்டம் படிக்க நேரமிருக்கவில்லை..

  நீங்க ஸ்பூனில கோப்பி பருக்கினனீங்களோ ஷெரினுக்கு:)).. ஹா..ஹா..ஹா.. விலங்குகளும் குழந்தைகள்போலவேதான்...

  எங்களிடம் ஒரு மாடு இருந்தது, அதுக்குப் பெயர் “சீனிமாடு”, ஏனெனில் சுவீட்டாக அதாவது ஷோ நைஸ்.. புல்லுச் சாப்பிடும்போது, நான் ஓடிப்போய் மடியிலே(பால்கறக்க) தொட்டால் போதும், காலை ஒரு ஸ்டைலா விரித்து தந்துபோட்டு அதிலயே நிற்பா, நகர மாட்டா... பால் வராது ஆனா, நான் சும்மா கறந்து விளையாடுவேன்....


  இப்போ நம் பிள்ளைகள் தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டாலும் ஆடு மாடு இல்லையே... எங்கள் காலங்களும் இனிமையான காலங்கள்தான் அந்த வகையில் நாம் கொடுத்து வைத்தவர்கள்தான்?:).

  ReplyDelete
 24. அஞ்சுவுக்கும் பழைய ஞாபகம் வந்திட்டுதோ?... எனக்கு காலை என்பதை நினைத்தாலே.. அக்காவின் திருமணம்தான் நினைவுக்கு வரும்....

  காலை 5 மணிக்கே வீடியோக்காரர் வந்து ரோட்டோரம், முற்றம் எல்லா இடமும் குரோட்டன், ரோசா.. மற்றும் அயலவர்களின் ரோட்டோரம் இருந்த பூக்கள் இலைகள் எல்லாம் வீடியோ எடுத்தார்கள்... அந்த பனிப்பெய்யும், பாதி விடிந்துகொண்டிருக்கும் காலையும்.. வீடியோவில் பார்க்க... அதுக்கு ஏற்றதுபோல காலைத்தென்றல் பாடிவரும் காலம் ஒரு கால.... சரியாக வசனம் நினைவில்லை... பாட்டும் தொடர்ந்து போட்டிருக்கிறார்கள்... அதைப்பார்த்தால் மனம் என்னவோ செய்யும்... சூப்பராக இருக்கும்.

  ReplyDelete
 25. //நுரை மேல படம் போடலயா! எனக்கு ஹார்ட் பிடிக்கும்.//

  Noooooooooooooo எனக்கு அதில பூஸ் குட்டிதான் புடிக்கும்...

  ReplyDelete
 26. ரீச்சர்,1,2,3 எல்லாம் போட்டு சாமிகும்பிட்டு கண்டுக்காம போன பூஸை நீங்களே கூப்ட்டு விட்டுட்டீங்களே!:)))))

  ஸாதிகா அக்கா,என்னது இது? எட்டிப் பார்த்துட்டு ஓடிட்டீங்க போல? வேலைகள் முடிந்தப்புறம் நிதானமா வாங்கோ. உங்கட பூஸ்தங்கை ஒரே மலரும் நினைவுகளா சொல்லிட்டு இருக்காங்க,கமென்ட் பாக்ஸ்ல!:)

  மீரா,மார்னிங் டென்ஷன்ல கண்டிப்பா காபியை ரசித்துக் குடிக்க நேரமிருக்காது.அதெல்லாம் க.மு.காலங்களிலேயே சாத்தியம்!:) வீகென்ட்ல அட்லீஸ்ட் ஆறுதலா காஃபிய ரசிச்சு குடிங்க. தேங்க்ஸ் மீரா!

  ஏஞ்சல் அக்கா,எனக்கு நீங்கசொல்லும் பாலெல்லாம் புடிக்காது. 2% மில்க்/ஹோல் மில்க்தான் எங்க டேஸ்டுக்கு ஒத்துவருது. ப்ளாக் காஃபி ஊர்ல நரசுஸ் காபி/கண்ணன் காபின்னா பிடிக்கும்,இங்கத்த காபி பிடிக்கலை! :-|

  குறிஞ்சி, எங்கே போனீங்க இவ்வளவு நாளா? போனவாரம் கூட ஒரு மெய்லை தட்டிவிடலாமா உங்களுக்குன்னு நினைச்சேன். ஒளிஞ்சிருந்தது போதும்,ப்ளாக்ல அப்டேட்ஸ் போடுங்க. :))))))

  ReplyDelete
 27. காமாட்சிம்மா,நீங்க காப்பி குடிக்க மாட்டீங்களா?? ம்ம்ம்..சிலபேருக்கு அப்படியே பழகிருது,நாங்கள்லாம் காபிக்கு அடிமையாகிட்டோம்! :)
  நன்றிம்மா!

  /சூப்பரா ஒரு ஸ்ரோங் ரீ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))../ என்னது??? ரீஈஈஈஈஈயா????அதிரா,யோசிச்சுக் கேக்கோணும்..எங்கிட்டப்போயி!!கி கிக் கீஈஈஈஈஈஈ! ஸ்ரோங் ரீ வேணும்னா வான்ஸ் பக்கம் போங்கோ.அவிங்கதான் சூப்பரா ரீ போடுவாங்க. நான் பத்துமுறை ரீ போட்டா ஒரு முறை சுமாரா இருக்கும்,பரவால்லையா? ;))

  அதிரா,அந்தக்காலத்துக்கே போயிட்டீங்க போலருக்கே?? ரீச்சர் வீட்டில ஸ்பூன் ஃபீடிங் நடந்திருக்கு..எங்க வீட்டில இருந்த பூனை-நாய்ப்பிள்ளைகள் எல்லாம் டீ/காபி சாப்புட மாட்டினம்!:)

  /ஆடு மாடு கோழி அணில் கிளி புறா இவைகளோடுமற்றும் இவற்றின் குட்டிகளோடும் நானும் காலையில் காப்பி குடிச்சிருக்கேன் /அட,அட,அட!! எல்லாரின் இளமைக்காலத்தையும் கிளறி விட்டுட்டேன் போலிருக்குது. ஏஞ்சல் அக்கா,நல்லாவே என்ஜாய் பண்ணிருக்கீங்க!:)

  /கொக்கிஸ் /அச்சு முறுக்கு மோல்டை கண்டுபிடிச்சிட்டார் .விரைவில் திரையில் எதிர்பாருங்கள்/ஓ..ஓக்கே,ஓக்கே! அடுத்தமுறை ஊருக்கு போகும்போது நானும் மோல்ட் வாங்கிட்டு வந்திடறேன். எங்க வீட்டுல இந்த அச்சுமுறுக்கு செய்யும் வழக்கமே இல்லை..அதனால் நினைவில்லாமப் போச்சு. :)

  அது அசோகா/ப்ரெட் ஹல்வா இல்ல.அடுத்த போஸ்ட்ல சொல்லிடறேன்,வெயிட்டீஸ்!;)

  வானதி,நீங்க சொல்வது சுக்கு காஃபி. இது ரெகுலர் காஃபி. நீங்க ஊருலயும் காப்பி குடிச்சதில்லையா??

  ப்ரியா, ஒருமுறை சந்துவைச்(உங்களுக்கு சந்தனாவைத் தெரியுமான்னு தெரில! :)) சந்திச்சப்ப அவிங்க ஸ்டார்பக்ஸ் சாய் லாட்டே குடிச்சாங்க.நான் குடிக்கலை.வீட்டில சிலசமயம் இஞ்சி-ஏலக்காய் தட்டிப்போட்டு மசாலா டீ போடுவேன். :)

  /காபி போடும் பாத்திரத்தில் கூட டீ போடமாட்டேன் நான்/ நீங்க ரெம்ப மரியாதை(!) குடுக்கறீங்க காஃபிக்கு!அவ்வ்வ்!....

  அது சோன்பப்டி இல்லீங்கோ..நாளைக்கு நாளானைக்குள்ள அது என்னன்னு சொல்லிடறேன்,ஓக்கை?

  அதிரா,கன்னாபின்னான்னு பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தி விடறீங்க. சீனிமாடு,அக்கா கல்யாணம்..ம்ம்...எல்லாம் நினைச்சுப் பார்க்க அலுக்காத மயிலிறகால் மனசை வருடும் நினைவுகள்!:)))))))

  நுரை மேலே பூஸா??? ஆரும் போட்டிருந்தா காமிங்களேன்!:)))

  ReplyDelete
 28. சந்தனா யாருன்னு தெரியலையே மகி!!!!!!!!!

  ReplyDelete
 29. http://farm3.static.flickr.com/2700/4058197452_396042316e.jpg

  http://28.media.tumblr.com/tumblr_kxjd65HDG61qztf56o1_500.jpg


  http://www.sitepoint.com/wp-content/uploads/2009/09/cat1.png


  http://1.bp.blogspot.com/_YMOXQUoxk08/TSdzImFBQ5I/AAAAAAAAFxs/NC5OAwQjmkE/s1600/latte1.jpg

  ReplyDelete
 30. /சந்தனா யாருன்னு தெரியலையே மகி!!!!!!!!!/ அவங்களும் எங்க கேங்-ல ஒரு ஆளா இருந்தாங்க! இப்ப ஆளையே காணம்! :)))

  அதிரா,1ஸ்ட் போட்டோ சூப்பர்! :)

  ReplyDelete
 31. ஐயயோ, நான் காபி குடிக்க லேட்டாவந்துட்டனோ? ஆறிப்போச்சோ? ஃப்ரெஷா வேர காபி போட்டுக்கொடுங்க.

  ReplyDelete
 32. எனக்கும் BRU காபி ரொம்ப புடிக்கும் பட் இந்த தடவ ஊருக்கு போய் sunrise க்கு மாறிட்டேன்! க.மு. காலையில ப்ரு காபிய கையில வச்சுக்கிட்டு அன்னிக்கு போட்ட விகடன் குமுதம் இல்லே நியூஸ் பேப்பர் யாரு first படிக்குறதுன்னு ஒரு போட்டியே எனக்கும் எங்க அக்காவுக்கும் நடக்கும். இந்த மாதிரி ஒரு காபி போஸ்ட போட்டு எல்லாரயும் ஒரேயடியா பீல் பண்ண வெச்சுட்டீங்க போங்க.

  பட் இங்க வந்தப்புறம் காபி வாரத்துல ஒரு தடவ இல்லே ரெண்டு தடவ தான் குடிக்கிறேன் மீதி நேரம் எல்லாம் டீ தான். அத இத சொல்லி காபி நல்லதுக்கில்ல அப்படின்னு எங்க வீ .கா என்னைய brain wash பண்ணிட்டாரு

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails