Tuesday, April 23, 2013

மதுரை சட்னி

 தென்னிந்திய வீடுகளில் பெரும்பாலான நாட்களில் காலை மற்றும் இரவுச் சிற்றுண்டிக்கு இட்லி-தோசை வகைகளே பிரசன்னமாகும். என்னதான் ரவா உப்புமா- சேமியா உப்புமா-பொங்கல்-பூரி-சப்பாத்தி என்று வேறு ஆப்ஷன்ஸ் இருந்தாலும் அவற்றுக்கும் தேவைப்படுவது ஒரு சட்னி!!  அதிலும், எங்க வீட்டில் இட்லிக்கு சட்னி என்பதில்லாமல் சட்னிக்கு இட்லி- என்பதாகத்தான் உணவுப்பழக்கம்! :))

தமிழ்-ஆங்கிலம் இரண்டு வலைப்பூக்களிலும் சேர்த்து ஒரு 25 வகை சட்னி ரெசிப்பிய நானே போஸ்ட் பண்ணியிருந்தாலும், ஒவ்வொரு முறையும் என்ன சட்னி செய்வது என மண்டையப் பிச்சுக்கிற மாதிரிதான் இருக்கும். நான் ஒரு டீஃபால்ட் சோம்பேறி என்பதால் இந்த சட்னி அரைப்பதில் எனக்கு ஸ்டார்டிங் ட்ரபுள். நிறைய சட்னி ரெசிப்பிகள் வெங்காயம்-தக்காளி நறுக்கி, வதக்கி, ஆறவைச்சு, அரைச்சு, தாளிச்சுக் கொட்டுவதா இருக்கும். இம்ம்ம்ம்மாஆஆஆம் பெரிய ப்ராஸஸா என மலைப்பா இருக்கும் எனக்கு!! அதனால அந்த கடேசி தாளிச்சுக் கொட்டற ஸ்டெப் பலநாள் ஆப்ஸெண்ட் ஆகிரும்! :))

தேங்காச் சட்னி சிம்பிளான சட்னி- ன்னு நீங்க சொன்னாலும் அத ஒத்துக்க மாட்டேன். தேங்காயை உடைச்சு, துருவி அல்லது  ப்ரீஸர்ல இருந்து தேங்காய எடுத்து, தேவையான பொருள் எல்லாம் கேதர் பண்ணி, அரைச்சு...அவ்வ்வ்! இட்ஸ் நாட் ஈஸி ஐ ஸே! அப்ப எது ஈஸியான சட்னின்னு கேப்பீங்களே நீங்க..என்னது, இல்லையா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நீங்க கேக்காட்டியும் நானே சொல்லுவேன். வேர்க்கடலை சட்னி தாங்க இருக்கறதிலயே சிம்பிள்ள்ள்ள்ள்! வறுத்த வேர்க்கடல எப்படியும் ஸ்டாக் வைச்சிருப்பீங்க, ரைட்? கடலை-வரமிளகா-புளி-கொஞ்சூண்டு கொத்தமல்லி(தனியா)-உப்பு எல்லாம் சேர்த்து தண்ணி விட்டு அரைச்சா சூப்பர் க்விக் அண்ட் டேஸ்ட்டி சட்னி ரெடி! ரெசிப்பிய ஆங்கிலத்தில பார்க்க இங்கே க்ளிக்குங்க.

கதை முடிஞ்சது, கத்தரிக்காய் காய்ச்சது..இனி இன்றைய ரெசிப்பிக்கு போகலாம். ஒரு சனிக்கிழம காலைல ப்ரெஷ்ஷா எந்திரிச்சு, ஃபுல் ஆஃப் எனர்ஜியோட என்ன சட்னி செய்யலாம்னு யோசிச்சுகிட்டே ப்ரவுஸ் பண்ணினப்ப "ஜிங்ங்ங்ங்ங்ங்"- ன்னு "குக்கிங் ஜிங்கலாலா"-ல இருந்து வந்து குதிச்சுச்சு இந்த மதுரை சட்னி. என்னதான் நான் சோம்பேறின்னாலும், இப்படி புதுசா முயற்சிப்பதில ஆர்வம் உண்டு என்பது உங்களுக்கே தெரியும். அதனால செய்து பார்த்தேன், சூப்பரா இருந்துச்சு. கொஞ்சம் வேலை அதிகம்னாலும், இட்ஸ் வொர்த் அ ட்ரை! நீங்களும் செய்து பாருங்க.

தேவையான பொருட்கள் 
வதக்கி அரைக்க 
வெங்காயம் - பாதி
வரமிளகாய்-5 (காரத்துக்கேற்ப)
புளி- சிறிது
எண்ணெய்
தாளிக்க
வெங்காயம்- மீதி! :) [அதான் பாதிய நறுக்கி வதக்கீட்டீங்கள்ல..அதில மீதியிருக்கும் அடுத்த பாதி]
தக்காளி-1
கடுகு -1/2டீஸ்பூன்
உளுந்து-1டீஸ்பூன்
கறிவேப்பிலை
எண்ணெய்

செய்முறை
எண்ணெய் காயவைத்து நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், புளி சேர்த்து வதக்கி ஆறவைக்கவும். ஆறியதும் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நைசாக அரைத்து வைக்கவும். 
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து உளுந்து சேர்த்து பொன்னிறமானதும், கறிவேப்பிலை பொரியவிட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

தக்காளி குழைய வதங்கியதும், அரைத்த கலவையைச் சேர்த்து, உப்பும் சேர்த்து வதக்கிவிட்டு, அரைக் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 

5நிமிடங்கள் குறைந்த தீயில் கொதித்ததும் சட்னியை அடுப்பிலிருந்து இறக்கவும். காரசாரமான மதுரை சட்னி ரெடீஈஈஈ! இட்லி-தோசை-பணியாரம் இவற்றுக்கு பொறுத்தமான சட்னி இது. 

இந்தச் சட்னி செய்த அன்று பணியாரம்தான் செய்திருந்தேன். சட்னி ரெசிப்பி குடுத்த ஆளுக்கு அது எப்படியோ தெரிந்திருக்கு போல!  // Adutha murai kuzhi paniyaram kudunga.//  என்று கேட்டிருந்தாங்க..அவரது விருப்பம் நிறைவேற்றப்படுகிறது. மங்கள மீனாக்ஷி, என்ஜாய் குழிப்பணியாரம் அண்ட் மதுரை சட்னி!
படம்தான் கொஞ்சம் சரியில்லை, பசியில எடுத்தேனா, பொறுமையா க்ளிக்க முடில, அஜீஸ்;) பண்ணிக்குங்க!
~~~
இலவச இணைப்பு! :))) 
குரங்கு பொம்மையால முகத்த மறைச்சுகிட்டு ஒத்தக் கண்ண மட்டும் காட்டும் எங்க வீட்டுக் க்யூட் குட்டிப் பிசாசு! :))))

26 comments:

 1. குழிப் பணியாரமும் மதுரை சட்னியும் அருமை.

  ReplyDelete
 2. சிரித்துக் கொண்டே படித்தேன்... அழகான குட்டிப் பிசாசு...!

  செய்முறை விளக்கத்திற்கு நன்றி...

  ReplyDelete
 3. Superb platter, loved the kutti pisaasu :):)

  ReplyDelete
 4. Super chutney... Loved ur puppy pic too...

  ReplyDelete
 5. mahi.. ithukku munnadi unga blog pakkam vanthirukkenannu nyabagam ille..:) eppidi miss pannennu theriyale... ( romba nalave nan blog hop somberi akivitten ;))
  unga way of writing rommba nallayirukku!
  Tamil ezhuthu kootti kotti padikrathu namakku koncham kashtamana vishayam..irunthalum rombave sirichu enjoy pannen... keep up your style of writing ! :) nay kutti mikavum arumai :)LOL ..)ithu nan sirichathu) :)(laugh out loud) :D

  Thakkali chutney sooper a irukku.. thakkali kuzhambu pannuven athu mathiri irukku koncham...as you said ethachum ore mixie le pottu virrrr adikkira chutney than usually idly dosa night kku.. illatti ippi super energy irukkanum ;)

  nalla irukku!! :)

  ReplyDelete
 6. மகி.. இது ஆரிய பவான் சட்னி. மாலை பஜ்ஜிக்கு அந்த கடையில் இந்த சட்னிதான் ரொம்ப ஸ்பெஷல் .. நீங்க செய்த சட்னிய விட கொஞ்சம் நீர்க்க இருக்கும் அந்த சட்னி. ரொம்ப நாள் ஆச்சு.. இன்னிக்கு நைட் இந்த சட்னிதான் எங்க வீட்ல. இப்ப ஆரிய பவான் கடையே இல்ல மதுரையில... பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 7. உங்க வீட்டு குட்டி பிசாசு அழகு. எங்க வீட்டிலயும் ஒன்னு இருக்கு பஞ்சு மிட்டாய் மாதிரி..:)

  ReplyDelete
 8. ஹையோ மகி...

  சட்னி செஞ்சு சாப்பிடுறதுக்குள்ள சிரிச்சு வயிறே சட்னியாகிட்டுது உங்க மொக்கையால...;)
  மொக்கைன்னு தமாஸுக்கு சொன்னேன். கர்ர்ர்ர் -ன்னுடாதீங்கோ...;)

  அருமையான ரெஸிப்பி. ஆனா அடிக்கடி அந்த வரமிளகாயை அங்கின கண்ணில காட்டி காட்டி என்னை கடுப்பாக்கிறீங்க.. ரூ பாட்...:) இங்கை நம்ம நாட்டில நான் இருக்கிற ஊரில அக்கம்பக்கத்தில உள்ள ஆசியன் கடையில இந்த மிளகாயை காணவே இல்லை. அதுதான் வருத்தமா இருக்கு. ப்ளீஸ் அட்ரஸ் தாரேன் எனக்கு 1கிலோ வாங்கி அனுப்பிடுறீங்களா:)))

  ம். வழமையான கலகலப்புப் பதிவு மகி. ரசிச்சேன் பதிவை ருசிக்கணும் சட்னியை இனித்தான்...
  மிக்க நன்றி மகிம்மா...:)

  ஹாஆ... க்யூட் ஜீனோ... அவரும் ஒத்தக்கண்ணால சைட் அடிக்கிறார்...:)

  ReplyDelete
 9. மகி !!!!! இன்னிக்கு செய்யப்போறேன் மதுரை சட்னி ..தோசைக்கு போட்டேன் ..இது சூப்பரா இருக்கும்போலிருக்கு /.

  குட்டி sweeet ..:)))

  ReplyDelete
 10. Yummmmmy, ippove enakku venum :D
  Super recipe and combo Mahi

  ReplyDelete
 11. மகி மதுரை சட்னி , குழிப்பணியாரம் அருமை மகி... குட்டி அருமையாக போஸ் கொடுத்திருக்கு ... மற்றொருமுறை முகம் தெரியுமாறு கிளிக் செய்து போடுங்கள்... எனக்கு ரொம்ப பிடிக்கும்... ஆனால் நான் வளர்த்த டாமி ஞாபகம் வருது.. எங்கள் கிராமத்தில் இருக்கு நானோ இங்கு... குட்டியை பார்த்தவுடன் ... டாமி .. கவலை...

  ReplyDelete
 12. niirkka ulla satni, thakakaliyil seythathu kidiayaathu, rompa nalla irukku mahi

  ReplyDelete
 13. heyyyyy...... என்னப்பா... வாரம் வாரம் சர்ப்ரைஸ் தாரீங்க!!! சூப்பர் மகி :) லிங்க்ஸ்-க்கு நன்றிகள் :)
  அப்டியே அந்த குழி பணியாரத்துல இன்னும் கொஞ்சம் எண்ணெய் விட்டு ரோஸ்ட்-அ சுட்டு தாங்க எனக்கு :) :)
  ...."தேங்காச் சட்னி சிம்பிளான சட்னி- ன்னு நீங்க சொன்னாலும் அத ஒத்துக்க மாட்டேன். தேங்காயை உடைச்சு, துருவி அல்லது ப்ரீஸர்ல இருந்து தேங்காய எடுத்து, தேவையான பொருள் எல்லாம் கேதர் பண்ணி, அரைச்சு...அவ்வ்வ்! இட்ஸ் நாட் ஈஸி ஐ ஸே!...." ஹி ஹி ஹி கரெக்ட் பா :D

  ReplyDelete
 14. செய்முறை வித்தியாசமா இருக்கு.மதுரை சட்னியை ஒரு தடவ செய்து பார்க்கணும்.சட்னியில கொஞ்சம் தண்னீர் அதிகமாயிடுச்சோ!பசியில எடுத்ததால அஜீஸ் பண்ணி சாப்பிட்டாச்சு.

  ஜீனோவுக்கு ரொம்பத்தான் வெட்கம்.ஆனாலும் அழகாயிருக்கார்.

  ReplyDelete
 15. Another different chutney to try out, Mahi ivvalvu somberiya neenga ( ennai poleve)..

  ReplyDelete
 16. I'll try that peanut chutney.

  Hi Geno!
  ஒரு அழகான குட்டிப் பையனை //குட்டிப் பிசாசு!// என்று சொன்னதை வன்...மையாகக் கண்டிக்கிறேன். ;)

  ReplyDelete
 17. மதுரைன் சட்னி புதுசால்ல இருக்கு.அடுத்து கோயம்புத்தூர் சட்னியா?

  ReplyDelete
 18. அடி ஆத்தி,பேர் புதுசால்ல இருக்கு.நம்ம வீட்டில எப்பவும் இந்த சட்னி தான்..சூப்பர் மகி.

  ReplyDelete
 19. தோசை,இட்லிக்கு சட்னி செய்றதே பெரும்பாடு. சைட்டிஷ் தான் ப்ராப்ளம்.உங்க புண்ணியத்தில இந்த ரெசிப்பி அடுத்ததடவை கைகொடுக்கும்.ரெம்பதாங்க்ஸ் மகி.
  குட்டி ரெம்பத்தான் குறும்பு.

  ReplyDelete
 20. // வேர்க்கடலை சட்னி தாங்க இருக்கறதிலயே சிம்பிள்ள்ள்ள்ள்! வறுத்த வேர்க்கடல எப்படியும் ஸ்டாக் வைச்சிருப்பீங்க, ரைட்? கடலை-வரமிளகா-புளி-கொஞ்சூண்டு கொத்தமல்லி(தனியா)-உப்பு எல்லாம் சேர்த்து தண்ணி விட்டு அரைச்சா சூப்பர் க்விக் அண்ட் டேஸ்ட்டி சட்னி ரெடி!//

  ஆவ்வ்வ் இதுக்கு தே.பூ சேர்ப்பதில்லையோ?:) நானும் அதுவும் சேர்ப்பேனே:)

  ReplyDelete
 21. சட்னி சூப்பர்.. அது எப்படித்தான் உங்க எல்லோருக்கும் தக்காழி ஒத்துக்கொள்ளுதோ தெரியவில்லை.

  போங்கோ என்னை வெறுப்பேத்தாதீங்க..குண்டுச் சட்டி /குழிப்பணியாரச் சட்டி இம்முறை மேலோட்டமாக பரிஸ் தமிழ்க் கடைகளிலும் பார்த்தேன், சரியா அமையவில்லை நேரமும் போதவில்லை... எவ்ளோ காலமா தேடுறேன் இன்னும் வாங்கியபாடில்லை.

  ReplyDelete
 22. இலவச இணைப்பாக ஒருவரை வாங்கிட்டீங்களோ? இது எப்போ? என்ன பெயர்?

  ReplyDelete
 23. அதீஸ்... இலவச இணைப்புக்கு உங்கட காணாமல் போன தம்பியின்ர பேர்தான் வைச்சிருக்கினமாம். முதலே ஒரு போஸ்ட்ல சொல்லி இருந்தாவே மகி!

  //எப்படித்தான் உங்க எல்லோருக்கும் தக்காழி ஒத்துக்கொள்ளுதோ தெரியவில்லை.// இல்லையே! ஒருவருக்கும் தக்கா..ழி ஒத்துக்கொள்ளாது. அது... ளி... ;)))

  ReplyDelete
 24. Hi Mahi, how are you? It's been a while. Will try this recipe, my hubby is from Madurai. When did you get a puppy?

  ReplyDelete
 25. கருத்துக்கள் தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! விரைவில் வந்து ஒவ்வொரு கருத்துக்கும் பதில் தருகிறேன். நன்றி!

  ReplyDelete
 26. மஹி மதுரை சட்னி ஆஹா,ஓஹோதான். நாளைக்கு செய்யணும்னு தீர்மானம் பண்ணிட்டேன். காரமா இருக்குமா? குழிப்பணியாரம் இன்னும் எண்ணெய் கொண்டா என்று கேட்கிரது. ருசியா,வாய்க்கு வயணமா
  பார்த்துப் பார்த்துச் செய்கிறாய். அன்புடன்

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails