Sunday, October 25, 2015

நரி முகத்தில முழிச்சிருக்கீங்களா? :)


என்னங்க...ஏடா கூடமா டைட்டில் வச்சிருக்கனே பாக்கிறீங்களா? வேற என்னத்தச் செய்ய?! சும்மா கம்பு தோசையும், சட்னியும் , குழம்புமாவே ப்ளாகில எழுத போரடிக்குதுல்ல? அதனால என்னைய அடிச்ச போர உங்களுக்கும் அடிக்க வைக்கலாம் என்ற ஒரு நல்லெண்ணத்தில தலைப்ப வச்சுப்புட்டேன். ஹிஹிஹி...

தலைப்புக்கேத்த மாதிரி என்ன செய்யலாம்னு சோஃபால உட்கார்ந்து யோசிச்சதில சமீப காலமா எங்க ஏரியாவுக்கு வருகை தரும் விசிட்டர்ஸை உங்களுக்கும் அறிமுகப்படுதலாம்னு பல்பு எரிஞ்சுது.

எங்கள் வீடு இருக்கும் பகுதி ஊரின் ஓரம் என்பதால், வீட்டிற்கடுத்த படியாக மலைச்சரிவுகளும், ஒரு அவகாடோ தோட்டமும், காட்டுப்பகுதியுமாகத்தான் இருக்கும். எப்பொழுதாவது  "கயோட்டி" என்னும் மிருகம் எட்டிப்பார்ப்பதும்,  காட்டிற்குள் இருந்து இரவு நேரங்களில் சத்தமிடுவதுமாக இருக்கும். இங்கிருந்த 5 வருடங்களில், பலமுறை அவற்றின் சிரிப்பை (ஆமாங்க..அவை சத்தமிடுவது மனிதர் சிரிப்பதைப் போலவே இருக்கும்...அவ்வ்வ்வ்வ்)  நான் ஒரு முறை கூடப் பார்த்ததில்லை. ஆனால் கொஞ்ச நாட்களாகவே வீட்டெதிரே இருக்கும் சிறு குன்றின் சரிவிற்கப்பாலிருந்து ஒரு சில "கயோட்டி"-கள் குன்றின் மேலே ஏறி நடை பழக ஆரம்பித்திருக்கின்றன.

தனியாகவும், ஜோடியாவும், குடும்பத்தினருடனும் என்று மாலை மயங்கும் நேரங்களில் இவர்களது வருகை இருக்கும். ஜீனோ அவற்றை கண்டுகொண்டு "வள்..வள்..வள்ள்ள்ள்ள்" என்று வரவேற்பு கொடுப்பார். அவர்களுக்கு மனிதர் மற்ற விலங்குகளெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, நிதானமாக நின்று ஒரு லுக்கு விடுவார்கள். அவசரப்படாமல் 5-10 நிமிஷங்கள் நின்று "எதற்கு இந்த சின்னக் குள்ளன் (ஜீனோ! :) ) சித்திரக்குள்ளன் மாதிரி கத்தறான்? " என்று ஆலோசனை பண்ணிவிட்டு ஜாலியாக நடந்து போவார்கள்.

இப்படியாக இருந்தது..ஒரு வார இறுதியில் மாலை 3.30-4 மணி இருக்கும், காய்ந்த துணிகளை எடுத்து மடித்து வைத்துக்கொண்டிருக்கையில் வெளியே வந்த என்னவர், "ஏய்..அங்கே பார்" என எக்ஸைட்டட் ஆக சின்னக் குரலில் கத்த...எட்டிப் பார்த்தால்...

வீட்டெதிரே இருக்கும் பார்க்கிங் லாட்டில் கார்களுக்கப்பால் ஹாயாக ஒருவர் மேய்ந்து(!!?) கொண்டிருந்தார்..சட்டென்று கேமராவை எடுத்து வந்த படமெடுக்க, வழக்கம்போல "யாரிவர்கள்...எதற்கு நம்மை படமெடுக்கிறார்கள்?" என்று அசால்டாக சிறிது நேரம் பார்த்துவிட்டு, நிதானமாக ரோட்டில் இறங்கி நடந்து சென்று மறைந்தார்.
யார்ரா அது...நம்மளை போட்டோ புடிக்கிறது??
போட்டோ தான? புடிச்சாப் புடிக்கட்டும்...நமக்கென்ன? 
சரி..அப்படியே மேலே ஏறிப் போயிரலாமா?
இல்ல...கீழ இறங்கலாம்...
ஆச ஆசையாப் படம் புடிக்கறாங்க...அயகா:) ஒரு போஸ் குடுப்பம்..!!
ஓகே..கிளம்புறன்!
என்னய்யா இது? நடக்குறதையும் விடாமப் படம் புடிக்கிறாய்ங்க? நம்ம நடக்கத்தான ரோடு போட்டு வைச்சிருக்காங்க? ஹ்ம்ம்ம்ம்....
ஸ்பீட் லிமிட்டு 5 மைலாம்..கி கி கி!! நாங்கள்லாம் ஆரு? எங்களுக்கெல்லாம் நோ லிமிட்!! 
வந்ததுக்கு சாப்புட ஏதும் கிடைக்கலன்னாலும் நல்லாப் போஸ் குடுத்தாச்சு...வர்ட்டா?? பய்..பய்ய்ய்ய்ய்!! 
:))) 

பி.கு. இந்த கயோட்டிகள் நாய்க்குடும்பத்தைச் சேர்ந்த பிராணிகள். மனித நடமாட்டம் உள்ள பகுதிகளில் புகுந்து குப்பைத்தொட்டிகளை ஆராய்ந்து உணவைத்தேடும் நிலைமைக்கு வந்துவிட்டன. மனிதர்கள்,  வளர்ப்புப் பிராணிகளையும் தாக்க வாய்ப்புண்டு..நாய்கள், பூனைகளை அடித்துத் தின்னும் என்றும் சொல்கிறார்கள். மேலதிக தகவலுக்கு விக்கிபீடியா லிங்க் இங்கே...(Coyote)

14 comments:

  1. oh நாங்க நரி குட்டிங்க முகத்திலும் முழிச்சிருக்கோமே

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்..கிண்டல் பண்ணுறீங்களா? இல்லன்னா சீரியஸாவே நரிக்குட்டிங்க முகத்தில முழிச்சிருக்கீங்களா??

      Delete
    2. true mahi ..நாங்க தர்மபுரியில் இருந்தது ஒரு காட்டுப்பகுதி ஒரு வீட்டுக்கும் இன்னோர் வீட்டுக்கும் நடுவே பெரிய இடைவெளி பக்கத்தில் சோள கொள்ளை கரும்புத்தோட்டம் எங்க முன் வெராண்டாவில் கதவிருக்காது நரி வந்து குட்டிபோட்டு வச்சி ..அப்போ ஊர் பெரியவர் சொன்னார் டச் பண்ண வேணாம் நைட்டோட நைட்டா தாய் மீண்டும் வந்து எடுத்து போகும்னு ,,அப்படியே நடந்ததே .!!!!

      Delete
  2. பாவம் மனித பேராசையில் காடு அழிவை தொடர்ந்து மற்றும் நம்ம நோக்கி இதுங்க வருதுங்க

    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்வதுன்னு தெரியல அக்கா...சமீப காலமாகத்தான் அடிக்கடி விஸிட் பண்ணுதுங்க..நேத்து கூட கடைக்கு போயிட்டு வரப்ப மெயின் ரோட்ல பெடஸ்ட்ரியன் பாத் வே-ல அனாயாசமா நடந்து போகுது ஒரு கயோட்டி!! :-|

      Delete
  3. கயோட்டி பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன் மகி. பார்த்தால் நரி போலத்தான் இருக்கு. hyena கத்துவது மனிதர்கள் சிரிப்பதுபோல் இருக்கும் என்று தெரியும். இதுவுமா? எப்போதும் மிகுந்த கவனமாக இருங்க.. ஜீனோவிடமும் கவனம் வைங்க. எங்க ஊரில் டிங்கோ என்ற நாய்கள் பயங்கரமானவை.. நரிகளைப் போல கூட்டமாய் வந்து வேட்டையாடும்.. எல்லாம் ஊருக்கு வெளியேதான்.. அதனால் பயமில்லை.

    ReplyDelete
    Replies
    1. வட அமெரிக்காவில இந்தப் பிராணிகளை சாதாரணமா பார்க்கலாமாம்...விக்கி இணைப்பு கொடுத்திருக்கேனே, படிச்சுப் பாருங்க கீதாக்கா! இவை சிரிப்பது கேட்க பயமா இருக்கும்..அதுவும் இரவு நேரத்தில ஊரே அமைதியா இருக்கைல கத்தும் பாருங்க...தூக்கம் கலைஞ்சு போயிரும்!!
      ஜீனோவை எக்ஸ்ட்ரா கேர்ஃபுல்லாதான் வைச்சிருக்கோம். பொதுவாக நாய்கள் மனிதரின் நண்பர்கள் என்பாங்க.. டிங்கோ ஆட்கள் விதிவிலக்கா இருப்பாங்க போல..!! வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றிகள்! :)

      Delete
  4. அவசரப்படாமல் 5-10 நிமிஷங்கள் நின்று "எதற்கு இந்த சின்னக் குள்ளன் (ஜீனோ! :) ) சித்திரக்குள்ளன் மாதிரி கத்தறான்? " என்று ஆலோசனை பண்ணிவிட்டு ஜாலியாக நடந்து போவார்கள்.

    இந்த காட்சியை நினைத்து பார்த்தல் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

    உங்கள் ஜீனோவிடம் சொல்லிவையுங்கள் " அமைதி அமைதி " . பார்த்தால் நரிபோல் இருக்கிறது, கவனமாக இருங்கள். நல்ல அமைதியான சுற்றுசூழல் இடமாக இருந்தாலும் இதுபோன்ற சங்கடங்களும் இருக்கத்தான் செய்கிறது.

    பார்ப்பதற்கு கொஞ்சம் (lightaa) பயமாத்தான் இருக்கு, இருந்தாலும் பரவாயில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஜீனோவுக்கு நம்ம சொல்லுவதெல்லாம் புரியும்ங்க..ஆனா இப்படி நல்லதுக்கு சொன்னா மட்டும் கேட்க மாட்டான்..:)

      கடவுள் புண்ணியத்தால் பெரிய சங்கடங்கள் வருவதில்லை..இவர்கள் வந்தாலும் அமைதியாகப் போயிடறாங்க..இருந்தாலும் பார்க்க கொஞ்சம் பயம்தான்!!

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ராஜேஷ்!

      Delete
  5. அய்யய்யோ.. இதென்னதிது..:(
    நரியெல்லாம் இப்படி உங்க வீட்டுக்கருகிலேயே வந்துபோகுதா?..
    அச்சச்சோ வேணாம் சாமி! உங்க பதிவு பார்த்ததே எனக்கு
    பயத்திலே கைகாலெல்லாம் சில்லிட்டுப் போச்சு!..

    பாதுகாப்பா இருங்க மகி! ஜீனோவும் பத்திரம் மா!

    ReplyDelete
    Replies
    1. :) பத்திரமாவே இருக்கோம், நீங்க பயப்படாதீங்க! :)
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க இளமதி!

      Delete
  6. கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. பகல்ல சாதாரணமாவே வந்திருக்கே. வெளியில நடை போகும்போது பார்த்து போங்க. ஜீனோ இருக்கறதால் கொஞ்சம் முன்கூட்டியே சொல்லிடுவார். இருந்தாலும் கவனமா இருங்க mahi.

    ReplyDelete
  7. நீங்க நல்ல மெனக்கெட்டு ஸ்டெப் பை ஸ்டெப் ஆ (பயமில்லாமல் ) படம் வேறு எடுத்திருக்கிறீங்க. இயற்கை அழிவு ஒரு பக்கம். அவைகளும் என்ன செய்வது. நகரப்புறங்களுக்கு வருகின்றன. எங்க ஏரியா மலை+காடு இவைகளில் இந்த கயோட்டியில் சிறு இனங்கள் இருக்கின்றன.அதைவிட மான்,முயல்,மரை,பன்றி என இருக்கின்றன. நாங்க காட்டுப்பாதையால் செல்லும்போது (அது shortcut கணவர் வேலைக்கு செல்ல.) காண்போம். ஆனால் குடிமனைக்கு வருவதில்லை. நீங்க கவனமா இருங்க மகி.

    ReplyDelete
  8. கயோட்டி மைடு வயுசு "ஒரு காலத்துல இது எங்க இடம், இவங்க வந்து இங்க வீடு கட்டிட்டு, எங்கள எளியன் மதிரி போட்ட புடிக்கராங்க! கலி காலம்! "

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails