தேவையான பொருட்கள்
முளை கட்டிய பச்சைப்பயறு -1/4கப்
உருளை கிழங்கு (சிறியது) -1
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் -1
பூண்டு - 5 பற்கள்
புளிக்கரைசல் -1/4கப்
வத்தக்குழம்பு பொடி - 11/2டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/8டீஸ்பூன்
கடுகு -1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
கொத்துமல்லித் தழை -கொஞ்சம்
உப்பு
எண்ணெய்
அரைக்க
தேங்காய்த்துருவல் - 3டேபிள்ஸ்பூன்
தக்காளி (சிறியதாக) -2
செய்முறை
1.பச்சைப்பயறை 8 மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து மூடி வைக்கவும். 8 -10 மணி நேரங்களில் பயிறு முளைத்துவிடும்.
2.முளைத்த பயறை தேவையான தண்ணீர் விட்டு குழையாமல் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
குறிப்பு
தேங்காய் சேர்க்க விரும்பாதவர்கள்(6-வது ஸ்டெப்பில் உள்ள) தேங்காய்க்கு பதிலாக 2 டேபிள்ஸ்பூன் வேகவைத்த முளைப்பயிறை தக்காளியுடன் சேர்த்து அரைத்துச் சேர்க்கலாம்.
உருளைக்கிழங்குடன் கத்தரிக்காயும் சேர்க்கலாம். கத்தரிக்காய் கைவசம் இல்லாததால் சேர்க்கவில்லை.
வத்தக்குழம்பு பொடி இல்லையென்றால் மிளகாய்த்தூள்+மல்லித்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.
முளை கட்டிய பச்சைப்பயறு -1/4கப்
உருளை கிழங்கு (சிறியது) -1
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் -1
பூண்டு - 5 பற்கள்
புளிக்கரைசல் -1/4கப்
வத்தக்குழம்பு பொடி - 11/2டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/8டீஸ்பூன்
கடுகு -1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
கொத்துமல்லித் தழை -கொஞ்சம்
உப்பு
எண்ணெய்
அரைக்க
தேங்காய்த்துருவல் - 3டேபிள்ஸ்பூன்
தக்காளி (சிறியதாக) -2
1.பச்சைப்பயறை 8 மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து மூடி வைக்கவும். 8 -10 மணி நேரங்களில் பயிறு முளைத்துவிடும்.
2.முளைத்த பயறை தேவையான தண்ணீர் விட்டு குழையாமல் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
3. பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து, கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
4.வெங்காயம் நிறம் மாறியதும் நறுக்கிய உருளைக் கிழங்கு, வத்தக்குழம்பு பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
5.சிறிது தண்ணீர் சேர்த்து கிழங்கை வேகவிடவும். வெந்ததும் புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
6. தேங்காய் தக்காளியை நைஸாக அரைத்துக்கொள்ளவும்.
7. குழம்பு நன்கு கொதித்து புளியின் பச்சை வாடை போனதும், அரைத்த தேங்காய் விழுதைச் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
8. வேகவைத்த பயிறை சேர்க்கவும். தேவைப்பட்டால் இன்னும் தண்ணீர் விட்டு மிதமான தீயில் 5-7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
9. குழம்பில் எண்ணெய் தெளிந்து வந்ததும் 1டீஸ்பூன் சர்க்கரை (விரும்பினால்) சேர்த்து, கொத்துமல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான முளைப்பயிறு குழம்பு ரெடி. சாதம், இட்லி தோசை எல்லாவற்றுக்கும் நன்றாக இருக்கும்.குறிப்பு
தேங்காய் சேர்க்க விரும்பாதவர்கள்(6-வது ஸ்டெப்பில் உள்ள) தேங்காய்க்கு பதிலாக 2 டேபிள்ஸ்பூன் வேகவைத்த முளைப்பயிறை தக்காளியுடன் சேர்த்து அரைத்துச் சேர்க்கலாம்.
உருளைக்கிழங்குடன் கத்தரிக்காயும் சேர்க்கலாம். கத்தரிக்காய் கைவசம் இல்லாததால் சேர்க்கவில்லை.
வத்தக்குழம்பு பொடி இல்லையென்றால் மிளகாய்த்தூள்+மல்லித்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.
குறிப்பையும் குறித்துக் கொண்டாயிற்று...
ReplyDeleteநன்றி...
நன்றி டிடி அண்ணா! :)
Deleteஇரண்டு நாட்கள் முன்பு நானும் முளை கட்டிய பச்சை பயறு குழம்புதான் கிழங்கு சேர்க்காமல் செய்தேன். கிட்டத்தட்ட இதே முறையில் ஓம வள்ளி இலை சிறிது சேர்த்து செய்தேன்..உங்க வீட்டு குழம்பு நல்லா இருக்கு..:)
ReplyDeleteஓம வள்ளி இலை?? புதுசா இருக்குங்க...நாங்க கத்தரி உருளைக்கிழங்கு மட்டும் சேர்த்து செய்வதுதான்..!! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
Deleteமிகவும் ஹெல்தியான குழம்பு மகி. பயறு (ஊறவிட்டு)அவித்து சுண்டல்
ReplyDeleteஇப்படியாக செய்வதுதான். இது வித்தியாசமாக இருக்கு. நன்றி.
குழம்பு குருமா செய்யவும் முளை விட்ட பயிறு நல்லா இருக்கும். செய்து பாருங்க..நன்றி அம்முலு!
Deleteஹெல்த்தி குழம்பு , முளைகட்டிய பச்சைபயற் மிகவும் சத்துள்ளது, உடலிற்கு தேவையான அணைத்து சத்துக்களும் உள்ளது இதுபோன்ற முளைகட்டிய தானியங்களில்.
ReplyDeleteஇன்றைக்கு இந்த ஜங்க் புட் உலகத்தில் எங்கு பார்த்தாலும் ஜங்க் புட், பாஸ்ட் புட் உடலிற்கு கேடு விளைவிக்கின்ற உணவு முறை வாழ்கையில், இதுமாதிரி சத்துள்ள ரெசிபி தொடர வாழ்த்துக்கள்.
உணவே மருந்து , மருந்தே உணவு. அனைவரும் இது போன்ற சத்துள்ள உணவை முடிந்த அளவு சேர்த்துகொள்வது இன்றியமையாதது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ராஜேஷ்!
Delete