தேவையான பொருட்கள்
தேங்காய்த் துருவல் - 6 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் - 4 (காரத்துக்கேற்ப)
கறிவேப்பிலை - 1 கொத்து
சோம்பு - 1/2டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2 (அ) பெரிய வெங்காயம் - சிறு துண்டு
புளி
உப்பு
எண்ணெய்
செய்முறை
எண்ணெய் காயவைத்து வரமிளகாய், கறிவேப்பிலை, சோம்பை வதக்கி எடுத்துக்கொள்ளவும். மிளகாயும் சோம்பும் விரைவில் பொரிந்துவிடும், கருகாமல் வறுக்கவேண்டும். கறிவேப்பிலை மொறுமொறுப்பாக பொரியும் வரை வதக்கி எடுத்து ஆறவைக்கவும்.
ஆறியதும் அவற்றுடன் வெங்காயம் , புளி, உப்பு சேர்த்து சிறு உரலில் இடிக்கவும்.எல்லாம் நன்றாக இடிபட்டதும்,
தேங்காய்த்துருவலைச் சேர்க்கவும்.
ஸ்பூனால் நன்றாக கிளறி கலக்கிவிடவும்.
எல்லாம் ஒன்றாக கலக்கும் வரை இடித்து எடுத்தால்,
இடி சம்பல் அல்லது இடிச்ச சம்பல் தயார். தேங்காய்ப் பூ சேர்த்த பிறகு நிறைய நேரம் இடிக்கக் கூடாது, தேங்காய் எண்ணெய் விட்டுவிடும். அதனால் கவனமாக இடிக்கவும்.
இலங்கை ரெசிப்பியான இது இட்லி, புட்டு, தோசை, தேங்காய்ப்பூ ரொட்டி மற்றும் ரொட்டியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
உப்புமா, பொங்கல் வகைகளுடனும் நன்றாக இருந்தது. சுடு சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்தும் சாப்பிடலாம். இந்த ரெசிப்பியைக் கொடுத்த அம்முலு மற்றும் அதிராவுக்கு என் நன்றிகள்!
சூப்பர் மகி. நல்லாவே வந்திருக்கு..!! தேங்காய்ப்பூ வறுத்து இடித்தாலும் டேஸ்ட் ஆ இருக்கும்..!!
ReplyDeleteஓ..அதையும் செய்து பார்க்கிறேன் ப்ரியா, நன்றிங்க!
Deleteவணக்கம்
ReplyDeleteசெய்முறைவிளக்கம் சிறப்பு செய்து பார்க்கிறோம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி!
DeleteUse store bought grated coconut. The type you use does not suit for sambal.
ReplyDeleteYou can freezer them in snack packs. Thaw it and use whenever you want.
http://79.170.44.120/meerasodha.com/wp-content/uploads/2014/02/coconut-scraped.jpg
ReplyDeletehttp://tesathome.com/wp-content/uploads/2010/07/Tom-Kha-Mushroom-12.jpg
ReplyDeleteYou can keep it in the fridge for more than a month.
ReplyDeleteI sometimes, grind sambal in the dry jar and store it in big ice-cube tray or snack packs
slightly roast the onion, the sambol will stay for longer period
ReplyDeletemake t without soombu. and see if you like it
ReplyDeleteபுதுசா இருக்கு, முயற்சி செய்து பார்க்கிறோம். உரலில் இடித்து செய்ததால் மிகவும் நன்றாக இருக்கும், உரல் சூப்பர்.
ReplyDeleteநன்றி ராஜேஷ், செய்து பார்த்து சொல்லுங்க! :)
Deleteஉங்கள் கம்பு தோசை ரெசிபி செய்து டேஸ்ட் பார்த்தாச்சு, நன்றாக இருந்தது, நன்றி.
Deleteஅடுத்த ஹெல்த்தி ரெசிபி பிளீஸ்.
அனானி, நீங்க சொல்ல வருவது தேங்காய்த் துருவல் என்று எனக்குப் புரிந்தது. ஆனால் என்னிடம் தேங்காய் துருவி இல்லை...இண்டியன் ஸ்டோர்ல ஃப்ரோஸன் கோக்கனட் நான் வாங்குவதே இல்லை..முழு தேங்காய் வாங்கி கத்தியால தோண்டி எடுத்து உபயோகிப்பதே வழக்கம். இந்த ரெசிப்பி பற்றி தெரிந்ததும் ஆர்வக்கோளாறில் அதை வைத்தே செய்து பாத்தேன், ருசி எங்களுக்குப் பிடித்திருந்தது. :)
ReplyDeleteஃப்ரீஸரில் வைத்தால் நான் மட்டும்தான் சாப்பிடணும் இங்கே, டிப்ஸுக்கு நன்றிங்க..நீங்க சொல்லி இருப்பதை அடுத்த முறைகள் செய்கையில் செய்து பார்க்கிறேன்.
கருத்துக்களுக்கு நன்றீங்க!
Haha. I can eat sambal every day for every meal. I saw somewhere, they grate with carrot grater. But I am sure it is a pain process. How did you scrape it into such small pieces. Wow.
Deleteஓ மஹிக்கா இந்த டிப்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..........
ReplyDeleteநன்றி சுபிதா!
DeleteInteresting dish Mahi, going to try this out soon..
ReplyDeleteThanks Hema..give it a try! I am sure you will like it!:)
Deleteம்ம் நம்மட சம்பல் .ஜம் ஜம் ஜம் .4 மிளகாய் .மீ ஒருநாளும் 20 க்கு கம்மியா எடுத்ததில்ல .அவளோ நிறைய சம்பல் தேவைப்படும்.
ReplyDelete