Tuesday, March 15, 2016

அவசர சாம்பார் / இன்ஸ்டண்ட் சாம்பார்

பருப்பு இல்லாமல்,  தேங்காயும் தேவைப்படாத சாம்பார் இது. சும்மா இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு மாலைப்பொழுதில் இந்த ரெசிப்பி கண்ணில் பட சட்டென்று செய்து சாப்பிட்டாயிற்று. நீங்களும் செய்து பாருங்க..ஈஸி & டேஸ்ட்டி! 

தேவையான பொருட்கள்
வெங்காயம் - பாதி (அ) சின்ன வெங்காயம் - நாலைந்து 
பச்சைமிளகாய்-1
நறுக்கிய காய் - 1/2கப் [விருப்பமான காயைச் சேர்த்துக்கொள்ளலாம். நான் மஞ்சள்பூசணி/அரசாணிக்காய் சேர்த்திருக்கிறேன்]
கடுகு-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து, கொத்துமல்லித் தழை -கொஞ்சம் 
சர்க்கரை -1/2டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
அரைத்துக்கொள்ள
பொட்டுக்கடலை -1டேபிள்ஸ்பூன்
நன்கு பழுத்த தக்காளி -2 
புளி - சிறுதுண்டு
சாம்பார்பொடி -2டீஸ்பூன் 
சீரகம்-1/2டீஸ்பூன் 

செய்முறை
அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸியில் எடுத்து,
அரைத்துக்கொள்ளவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை, தக்காளி இருப்பதால் அதுவே போதும்.
காயை சற்றே பெரிய துண்டுகளாகவும், வெங்காயம் பச்சைமிளகாயையும் நறுக்கி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் சூடாக்கி, கடுகைப் பொரியவிடவும். பிறகு கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய காயைச் சேர்த்து வதக்கவும்.
அரைத்த கலவையை குக்கரில் சேர்த்து,
தேவைக்கு தண்ணீர் மற்றும் உப்பு, சர்க்கரையைச் சேர்க்கவும். நான் சுமார் 1 கப் தண்ணீர் சேர்த்தேன், உங்களுக்கேற்ற கன்ஸிஸ்டன்சி-க்கு தண்ணீரை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.
குக்கரை மூடி, ஒரு விசில் விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். நறுக்கிய மல்லித்தழை தூவி பரிமாறவும்.
பதிவின் முதல் படத்தில் இருப்பது ஓட்ஸ் பொங்கல் & சாம்பார்...இறுதிப் படத்தில் இருப்பது இட்லி & சாம்பார்.
குக்கரின் விசிலை கவனிக்காமல் 2-3 என்று போனதில் நான் சேர்த்த காய் சாம்பாரில் கரைந்துவிட்டது, ஹிஹி...ஆனால் சுவை அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி!

Recipe Link : HERE

14 comments:

  1. ஆமா ஈஸியா யா தான் இருக்கும்போல செய்துட்டு சொல்றேன் மகி

    ReplyDelete
    Replies
    1. ஓகே!! சீக்கிரம் செய்து பார்த்து சொல்லுங்க சுரேஜினி!
      நன்றி! :)

      Delete
  2. வாவ் சூப்பரா இருக்குக்கா.. நான் பண்ணி பார்க்கிறேன்.. இட்லி அதை விட சூப்பரா இருக்கு..

    ReplyDelete
    Replies
    1. அபியோட முக்கோண இட்லிய விடவா? :)
      தேங்க்ஸ் அபி..சீக்கிரம் செய்து பார்த்து சொல்லணும்!

      Delete
    2. ஹி ஹி..செய்திட்டேன் அக்கா... சூப்பர் டேஸ்ட்...

      Delete
    3. ஆஆஆஆ!! இவ்ளோ ஃபாஸ்ட்டாவா? கலக்கறே அபி!! :)))

      Delete
  3. //குக்கரின் விசிலை கவனிக்காமல் 2-3 என்று போனதில் நான் சேர்த்த காய் சாம்பாரில் கரைந்துவிட்டது,// எனக்கு சாம்பார் நீர்க்க இருக்கிறது பிடிக்கும். பூசணி கரைய இறுக்கமாக வரவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. இல்லை இமா..நைட் செய்தேன், பொங்கல் கூட! மறுநாள் காலை இட்லி கூட இருக்கு பாருங்க..இறுக்கமாகல!! [இப்படி என்ர சீக்ரட் எல்லாம் பப்ளிக்கு-ல அம்பலப் படுத்த வைக்கிறீங்களே..கர்ர்ர்ர்ர்ர்ர்!!]

      Delete
  4. சாம்பார் வாசனை ஜீனோவையும் கிச்சனுக்குள் இழுத்து வந்துட்டது போல...:) நைட் தோசைக்கு சட்னியோட இதையும் செய்து பார்க்கணும் மகி.

    ReplyDelete
    Replies
    1. :) ஜீனோவா?? அவர் அப்பப்ப என் பின்னாடியே திரிவாருங்க. அந்த மாதிரி ஒரு நாள்ல செய்த சாம்பார் இது. :) செய்து பாருங்க, ரொம்ப நல்லா இருக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!

      Delete
  5. அடுத்த முறை செஞ்சு பார்க்கனும் ...easy recipe

    ReplyDelete
    Replies
    1. நன்றி அனு! செய்து பார்த்து சொல்லுங்க!

      Delete
  6. சாம்பார் பார்க்கவே நல்லா இருக்கு..

    செஞ்சு பார்க்குறேன்.

    ReplyDelete
    Replies
    1. செய்து பார்த்து சொல்லுங்க ஷமீ! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete

LinkWithin

Related Posts with Thumbnails