ஈஸ்டர் - ஏசு பிரான் உயிர்தெழுந்த திருநாள். இங்கே ஈஸ்டருக்கு "எக் ஹண்ட்" மிக பிரபலம். "முட்டை" உயிர்த்தெழுதலின் அடையாளமாகக் கொள்ளப்படுகிறது. ப்ளாஸ்டிக் முட்டைகளுக்குள் குழந்தைகளுக்குப் பிடித்தமான தின்பண்டங்கள், சிறு பொம்மைகளை வைத்து ஆங்காங்கே ஒளித்து வைக்கப்படுகிறது. குழந்தைகள் கூடைகளுடன் சென்று முட்டைகளைச் சேகரிப்பார்கள். பொதுவாக சாக்லேட் அதிகளவு உபயோகிக்கப்படுகிறது. முட்டைவடிவிலேயே சாக்லெட்ஸ் தயாரித்து விற்கிறார்கள், அல்லது ப்ளாஸ்டிக் முட்டைகளுக்குள் அவை வைக்கப்படுகின்றன. மேலும் தகவலறிய இங்கே கைய வைங்க! :)
எங்க வீட்டு குட்டிப்பெண்ணுக்கு இந்த சர்ப்ரைஸ் எக்'ஸ் மிகப் பிடிக்கும் என்பதால், இந்த வருஷம் ஈஸ்டர் எக் ஹண்ட்-க்கு போகலாம் என்று நினைத்திருந்த நேரத்தில், பக்கத்தில் ஒரு எக் ஹண்ட் நடப்பது தெரியவர, நாங்களும் முட்டைகளைத் தயார் செய்துகொண்டு, முட்டை வேட்டைக்கு போய்வந்தோம். குழந்தைகளுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருக்கும் பட்சத்தில் உணவுப்பொருட்கள் பிரச்சனையாகும் என்பதால் உணவுப்பொருட்களை ஸ்டஃப் செய்யவேண்டாம் என சொல்லியிருந்தார்கள். இணையத்தை நாடியதில், உணவுப்பொருட்கள் அல்லாத சிறு பொருட்கள் பற்றி ஒரு ஐடியா கிடைத்தது.
ஒவ்வொரு முட்டையினுள்ளும் 2-3 குட்டிப் பொருட்களை நிறைத்து முட்டைகள் தயார்.
அருகே உள்ள ஒரு பூங்காவிற்கு சென்றோம். ஏழெட்டு குழந்தைகள், அனைவர் வீட்டிலிருந்தும் இப்படியான சர்ப்ரைஸ் முட்டைகளைக் கொணர்ந்து பூங்காவினுள்ளே ஒளித்து வைத்தாயிற்று. [ஒளிப்பதுன்னா, ரொம்பவெல்லாம் ஒளிக்கிறதில்லைங்க, குழந்தைங்க கண்டுபுடிக்கிற மாதிரி சும்மானாச்சுக்கு ஒளிச்சு வைச்சாச்சு.] எல்லாக் குட்டீஸும் வந்து, முட்டைகள் ஒளிக்கப்பட்டதும் துவங்கியது முட்டை வேட்டை!! :)))
சற்றே பெரிய குழந்தைகள் சுறுசுறுப்பாக முட்டைகளைப் பொறுக்கி சேர்த்துவிட்டனர். ஒரு குட்டியர் வேட்டையாடிய முட்டைகள்..
லயாவும் நானுமாகச் சேர்ந்து கொஞ்சம் முட்டைகள் சேகரித்தோம். அதிலொன்று "தங்க முட்டை" :))) அது என்ன ஸ்பெஷல்னு கடைசில சொல்றேன்.
முட்டை வேட்டை முடிந்ததும் ஒரு சிறப்பு விருந்தினர் வந்தார். பெயர் Mr. Muffin !! நாலே மாதங்களான குட்டி முயலார்!!
கூட்டத்தைக் கண்டதும் மிஸ்டர் மஃபின் கொஞ்சம் பயக்க, அவரைக் கண்ட குட்டீஸ் கொஞ்சம் பயக்க என சற்று நேரம் கடந்தது. ஃபோட்டோஷூட் எல்லாம் ஓரளவு முடிந்ததும், முயலார் பூங்காவினுள் சற்று நேரம் உலாவினார். மஃபினும், அவரது உரிமையாளரும் அடுத்து வரும் படத்தில்.இவைதான் லயா சேகரித்த முட்டைகள். தங்க முட்டையை திருப்பி வாங்கிகொண்டார்கள்! ;) :)
அந்த தங்க முட்டை விவகாரம்...!! :) ஸ்பெஷலாக 3 தங்க முட்டைகளை நிகழ்ச்சியை நடத்தியவர்கள் ஒளித்திருந்தார்கள். அதைக் கண்டுபிடித்தவர்களுக்கு ஒரு கிஃப்ட் கார்ட் கிடைத்தது. வரும் வழியில் காப்பியை வாங்கி குடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.
பலூன்கள், சிறிய ரப்பர் முயல், டாட்டூ, ஜெல்லி பீன்ஸ் என இருந்தன. :))) மொத்தத்தில் நல்லதொரு அனுபவம். ;) :)
ஈஸ்டருக்கு ஏன் egg craft னு ரொம்ப நாள் சந்தேகம் ...இன்று விடை தெரிந்தது ...
ReplyDeleteஉங்க வேட்டையும் சூப்பர் ...
நன்றி அனு! இங்கே இந்த ஈஸ்டர் எக் ஹண்ட் ரொம்ப பிரபலம். குழந்தைகளுக்கு ஸ்கூல்ல கண்டிப்பா இருக்கும்..இது ஸ்கூல் போகாத குட்டீஸுக்கு நாங்க செய்தது! :)
Deletemuffin பூசாரின் முந்தைய பெட் மொப்பி மாதிரி இருக்கு..இங்கே பிளாஸ்டிக் எக்ஸ் வைக்கல்லை ஹெல்த் அன்ட் சேப்டி ரீசன்ஸ் ..எங்க சர்ச்சில் எக் சாக்லேட்ஸ் ஒளிச்சி வைச்சி கண்டுபிடிக்க வைச்சோம் குட்டீஸை .ப்றேசென்ட்ஸ் எங்களுக்கு 10 பெரிய எக் சாக்லேட்ஸ் கிடைச்சி ஆளில்லாம அப்படியே இருக்கு :
ReplyDelete//muffin பூசாரின் முந்தைய பெட் மொப்பி மாதிரி இருக்கு// ஆமாமாம்...எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன் அக்கா! ;)
Deleteஇங்கயும் சாக்லட் சாப்பிடற ஆட்கள் இல்லை..அதனால நான் சாக்லட் எக்ஸ் வாங்கலை..!! :) நன்றி அக்கா கருத்துக்கு!
மகி நீங்க எழுதியவையை வாசித்ததும் மகனுக்கு இப்படி செய்த பழைய நினைவு வந்திச்சு. இப்போ அவர் வளர்ந்திட்டார். ஆனா இன்னும் ஈஸ்டர் பிரசண்ட் கொடுக்கனும்.
ReplyDeleteலயாவுக்குதான் நல்ல ஹப்பியா இருந்திருக்கும்.!
ஆமாம்...லயாவுக்கு ஒரே ஹேப்பிதான்! முதல் முதலா அவ கண்டுபிடிச்ச ஒரு க்ரீன் எக்-ம் அதனுள் இருந்த பொம்மையுமே போதுமானதா இருந்தது அவளுக்கு. :))) மத முட்டையெல்லாம் நான் இழுத்துட்டுபோய் சேர்த்தது!! ;)))) ஈஸ்டர் ப்ரசெண்ட் என்ன கொடுத்தீங்க இந்த வருஷம்?
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா!!
மேடம் ரொம்ப ஆர்வமா திறந்து பார்த்திட்டு இருக்காங்க போல??? அம்மாவும் மகளும்!!?? சேர்ந்து நிறைய சேகரிச்சிட்டீங்க.. என்ஜாய் லயாக்குட்டி..
ReplyDeleteநிறையவெல்லாம் இல்லை அபி! நாங்க 16 கொண்டு போனோம்...11 தான் லயா சேகரிப்பு! ;) :) ஆனா நல்லா எஞ்சாய் பண்ணோம்!! :)
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!