Tuesday, May 3, 2016

அவரைக்காய் பொரியல்

அவரைக்காய், எனக்கு மிகப் பிடித்த காய். யு.எஸ். வந்த இந்த சிலபல வருடங்களில் சுத்தமாக மறந்து போனகாய்..இங்கே அவரைக்காய் எப்பொழுதாவதுதான் கிடைக்கும், அதுவும் கோவையில் ருசித்த அவரைக்காய்க்கு கிட்டத்தில் வரவே முடியாத காய். இந்த 9 வருடங்களில் ஓரிரு முறைதான் வாங்கியிருக்கிறேன். இந்த முறை கொஞ்சம் சுமாராக இருந்ததால் வாங்கிவந்து இங்கே பதிவிட்டு மனதை ஆற்றிக்கொள்கிறேன்! ;) :) 

இணையத்தில் துழாவியபோது கிடைத்த படங்களின் கொலாஜ் அடுத்து வருவது..இதில் முதல் மற்றும் இரண்டாவது படத்திலிருக்கும் அவரைகள் வீட்டில் வளர்த்திருக்கிறோம். மூன்றாவது படத்தில் இருப்பது சற்றே பட்டையான திக்கான அவரைக்காய்.."கோழி அவரை" [பெயர்க்காரணமெல்லாம் கேக்கப்புடாது..எனக்கு தெரியாது...அவ்வ்வ்] என்று சொல்லுவோம், அதுவும் வீட்டில் வளர்த்த நினைவு இருக்கிறது.  கடேசியா இருக்கே, அகலமான அவரைக்காய்...தட் இஸ் மை ஃபேவரிட் யு ஸீ!! :))) 

அவரைக்கொடிகளை வீட்டில் இருந்த வேப்ப மரத்தடியில் ஊன்றி மரத்தைப் பற்றி மேலே ஏறிக்கொள்ளும். பக்கத்துவீட்டிலிருந்த மகேஷை [அது மகேஷ்குமார்...!! ;)] கூப்பிட்டு மரத்தின் மேலே ஏறி காய் பறிக்கச் சொல்லுவாங்க வீட்டில். அவருக்கும் [இப்ப அவன் என்றால், அவன் பையன் என்னை அடிக்க வந்திடுவான்!!  ;)) ] எட்டாத காய்கள் மரத்தில் மேலே கொடியிலேயே தங்கி முற்றி காய்ந்து விதைகள் கீழே உதிரும். தினமும் வேப்ப மரத்தடியில் அவரை விதை பொறுக்கிவைப்போம்.ஹூம்...அது ஒரு அழகிய கனாக்காலம்!! 

இதோ எனக்கு கிடைச்ச அவரைக்காயைப் பாருங்க..
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை!! :p 

தேவையான பொருட்கள் 
அவரைக்காய் - 150கிராம்
வெங்காயம் - கொஞ்சம் 
பச்சைமிளகாய் -2
கறிவேப்பிலை-கொஞ்சம்
கடுகு -1/2 டீஸ்பூன் 
க.பருப்பு, உ.பருப்பு - தலா 1/4டீஸ்பூன் 
தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன் 
உப்பு 
எண்ணெய் 

செய்முறை
அவரைக்காயை கழுவி, தலையையும்-வாலையும் கிள்ளி நார் எடுத்து வைக்கவும். 
சுத்தம் செய்த அவரைக்காயை பொடியாக நறுக்கி வைக்கவும். 
வெங்காயம் - பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிவைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, க.பருப்பு -உ.பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
நறுக்கிய வெங்காயம் -ப.மிளகாய் -கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, நறுக்கிய அவரைக்காயையும் சேர்க்கவும். 
காயைப் பிரட்டி விட்டு, லேசாகத் தண்ணீர் தெளித்து வேகவிடவும். 

காய் வெந்ததும் உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். சுவையான அவரைக்காய் பொரியல் தயார். சாம்பார் -ரசம்- தயிர் சாதங்களுடன் சரியான ஜோடி!

16 comments:

  1. ஆஹா அவரை !இங்கே கிடைக்குமே அந்த கடேசி தட்டு அவரைக்காய் இங்கே வங்காளிகள் கடையில் கிடைக்கும் விலை அதிகம்னாலும் செம டேஸ்டி .நாங்க முந்தி குடியிருந்த பக்கத்துக்கு வீட்டு பெங்கால் சிங்கம் இந்த கடேசி அவரையை வளர்த்து கூடை வச்சி பறிக்கும் அழகே தனி ..அந்த பக்கத்துக்கு வீடு காலியாதான் இருக்கு இன்னும் ..மகி வேணும்னா ஒன் மந்த் ஹாலிடேசில் வாங்க அங்க தங்கி நிதம் அவரை பரிசு சமைக்கலாம் :P

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்வ்வ்வ்! அந்த மீன்காரக்கா வீடுக்கு பக்கத்து வீடா!!! ஆளை விடுங்க சாமீஈஈஈஈ!! அவரைக்காயை மட்டும் ஒரு கூடை பறிச்சு தரச்சொல்லி இங்க அனுப்பிவுடுங்க அக்கா!! ;) :))))

      Delete
  2. அருமையான பொரியல்.. :)
    எனக்கும் அந்த பட்டை அவரை தான் பிடிக்கும்.. நாட்டு அவரை என நினைக்கிறேன் அதோட பெயர்.. மற்றதை இங்க கம்பெனி காய் என சொல்லுவாங்க நினைக்கிறேன்..
    எனக்கு அவரைக்காய் பொரியல், அவரைக்காய் சாம்பார் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. இதே முறையில் தான் நானும் பொரியல் பண்ணுவேன் அக்கா.. ஆனால் பச்சை மிளகாய்க்கு பதில் வத்தல் மிளகாய் அல்லது பழ மிளகாய் சேர்ப்பேன்.. ஹி ஹி ஒரு முறை காய்க்கும் மிளகாய்க்கும் வித்தியாசம் தெரியாம கடிச்சு சாப்பிட்டுட்டேன்.. அதிலிருந்து இந்த உஷார் நடவடிக்கை.. ஹி ஹி,..

    ReplyDelete
    Replies
    1. // ஹி ஹி ஒரு முறை காய்க்கும் மிளகாய்க்கும் வித்தியாசம் தெரியாம கடிச்சு சாப்பிட்டுட்டேன்.. அதிலிருந்து இந்த உஷார் நடவடிக்கை.. ஹி ஹி,..// எங்க வீட்டில சின்ன அக்கா பீன்ஸ் பொரியல்ல இப்படி அடிக்கடி அனுபவப்பட்டு எங்கம்மாவை கடிச்சு வைப்பா!! ஹிஹிஹி!! நான் பச்ச மிளகா காரத்தை எல்லாம் கண்டுக்க மாட்டேன் அபி! நாங்க சாப்பிட்டா தட்டு காலியாதான் இருக்கும். ;) ;)

      ஊருக்கு வந்தப்ப நாங்க சாப்பிட்ட அழகை(!)ப் பார்த்து வீட்டில எல்லாருக்கும் ஆச்சர்யம்!! மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை, கொத்துமல்லி இப்படி கைக்கு ஆப்பட்டதை எல்லாம் பொறுக்கி வைக்கும் மக்களிடையே ப்ளேட்டை காலியாக்கின நாங்க தனி ஆளா தெரிஞ்சோம்!! கிக் கிக் கி!!

      நாட்டு அவரையா? தெரியலயே! எனக்கு அந்த அவரைக்காய்தான் ரொம்ப பிடிக்கும், ஆனா மத்த அவரைக்காயும் பிடிக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அபி! :)

      Delete
  3. என்னங்க நீங்க தண்ணி இல்லா காட்டுலதான் வசிக்கிறீங்க போல... பேசாமல் நீயூஜெர்ஸிக்கு வந்துடுங்க தினமும் அவரைக்காய் வாங்கி சமைச்சிடலாம். எங்க வீட்டுல் வாரத்தில் ஒரு நாள் அவரைக்காய் சமையல் கண்டிப்பாக உண்டு பொரியலாகவோ அல்லது கூட்டாகவோ அல்லது சாம்பாராகவோ

    ReplyDelete
    Replies
    1. //தண்ணி இல்லா காட்டுலதான் வசிக்கிறீங்க போல// ஹிஹி...ஆமாங்க!! தண்ணிப் பஞ்சம் வருது வருதுன்னு ஜாக்கிரதையாத்தான் இருக்கோம். :) அவரைக்காய் கிடைக்கலைங்கறது இருக்குதான், ஆனா மத்த ப்ளஸ் பாயிண்ட் எல்லாம் இருக்குல்ல எங்கூர்ல! நியூஜெர்ஸி வரலாம்தான், ஆனா ஸ்னோ-வை நினைச்சா அலர்ஜியால்ல இருக்கு!! வந்ததுல இருந்து இந்தப்பக்கமே இருந்து பழகிட்டோம். இனி நியூஜெர்ஸி வரதுன்னா ஒரு வாரம் டிரிப்-தான் வரலாம்! :)

      சாம்பார்ல அவரைக்காய் போட்டு செய்திருக்காங்க அம்மா, ஆனா எனக்கென்னவோ பொரியல்தான் பிடிக்கும். கூட்டு செய்ததில்ல. வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க! :)

      Delete
  4. Mahi, we have 2 verities of avarai at our garden. Come to Texas, you can grow lot of things :)

    ReplyDelete
    Replies
    1. :) அருண் ஹூஸ்டனுக்கு அடிக்கடி வரார், 2 வெரைட்டி அவரையிலும் ஓரொரு கிலோ குடுத்துவுடுங்க!! :) இங்கயும் ஐ கேன் க்ரோ லாட் ஆஃப் திங்க்ஸ், ஆனா நான் கொஞ்சம் சோம்பேறி, யு ஸி!! ஹிஹி..ஹி!! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

      Delete
  5. மகி,

    சூப்பர் பொரியல். எனக்கும் பிடிச்ச காய்.

    அவரைக்காய் கிடைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனா நம்ம ஊருல கொஞ்சம் வயலட் நிறம் கலந்தாற்போல் (நாட்டு அவரை?) இருக்குமே அந்த அவரை மட்டும் கிடைப்பதில்லை.

    மரம் ஏற பக்கத்து வீட்டில் இருந்து ஆள் வரணுமா ????

    ReplyDelete
    Replies
    1. // கொஞ்சம் வயலட் நிறம் கலந்தாற்போல் (நாட்டு அவரை?) இருக்குமே // கொலாஜ்ல முதல் படமா இருக்கே, அதானே சொல்றீங்க? :) இங்கே நான் போஸ்ட் பண்ணிருக்க அவரைக்காய் மட்டும் எப்பவாவது கிடைக்குது.

      //மரம் ஏற பக்கத்து வீட்டில் இருந்து ஆள் வரணுமா ????// இல்லையா பின்ன? உங்களுக்கு முன்ன பின்ன மரம் ஏறின அனுபவம் இருக்கோ??!! ;)

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா!

      Delete
  6. அவரைக்காய் எனக்கு மிகவும் பிடித்த காய். நானும் இதே முறையில் தான் செய்வேன். அருமை மகி. எனது வலைப்பூவையும் நேரம் கிடைக்கும் போது பார்வையிட வாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சாரதாம்மா, நான் உங்க ப்ளாகைப் பாத்துட்டேதான் இருக்கேன், கமெண்ட் போடத்தான் டைம் இருப்பதில்லை..ஹிஹி! சீக்கிரம் கமெண்ட்-ஐ பதிகிறேன். ;) :)
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!

      Delete
    2. Hi mahi akka..... I m jenifer from dindigul,India. A week ago only I found your blog. All recipes nd gardening ideas are really superb. And I love your way of writing. It's nice. I m becoming a fan of you. Today only I got time to share this.(*busy with my two kutties*)... here after I will regularly follow you(your
      Blog) ....

      Delete
    3. முதல் வருகைக்கு நன்றி ஜெனிஃபர்!! ரொம்ப சந்தோஷம்..என் வலைப்பூவில் உங்களுக்கு பொழுது நல்லாவே போகும். அடிக்கடி வாங்க. எங்க வீட்டு குட்டீஸின் லீலைகளும் அப்பப்ப எழுத நினைச்சிருக்கேன்..இனி சமையல் குறிப்பை குறைச்சுகிட்டு மத்த மொக்கையையும் போடணும் என நினைத்திருந்த சமயத்தில் உங்க கமெண்ட் அதற்கு இன்னும் கொஞ்சம் பூஸ்ட் கொடுத்திருக்கு. நன்றி! :) :)

      Delete
  7. இந்த போஸ்ட் எப்படி மிஸ் ஆச்சுன்னு தெரில... கோழி அவரை இங்கு தாராளமா கிடைக்கும். அதில் நான் பொரியல்,கூட்டுதான் செய்திருக்கேன். உங்க ரெசிப்பியில் அந்த அவரை வைச்சுத்தான் செய்யமுடியும். மற்ற அவரை கண்ட ஞாபகம் இல்லை மகி. நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஓ...!!! கோழி அவரை சுவை நார்மல் அவரைக்காய் போல வராது ப்ரியா!! கிடைக்காதப்ப என்ன செய்ய?? கோழி அவரைலயே செய்து பாருங்க, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! :)

      Delete

LinkWithin

Related Posts with Thumbnails