Tuesday, March 16, 2010

வெஜ் பேஸ்ட்ரி வீல்ஸ்

தேவையான பொருட்கள்
பஃப் பேஸ்ட்ரி ஷீட் -2
கேரட் - 2
பீன்ஸ் -10
உருளைகிழங்கு - 1
ப்ரோஸன் பச்சைப் பட்டாணி -1/4கப்
மிளகாய்த்தூள் -1 1/2ஸ்பூன்
மல்லித்தூள் -1ஸ்பூன்
சீரகத்தூள் -1/2ஸ்பூன்
சோம்புத்தூள் -1/2ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது -2ஸ்பூன்
பச்சை மிளகாய் -1
கொத்துமல்லி இலை -சிறிது
சீரகம் - 3/4ஸ்பூன்
எண்ணெய் -1ஸ்பூன்
சர்க்கரை-1/2ஸ்பூன்
உப்பு
முட்டை -1




















செய்முறை


கேரட்,பீன்ஸ்,உருளைக் கிழங்கு,பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

பேஸ்ட்ரி ஷீட்டை முக்கால் மணி நேரம் முன்பாக பிரீசரில் இருந்து வெளியே எடுத்து வைக்கவும்.


குக்கரில் நறுக்கிய காய்கறிகள்,பட்டாணி,பச்சைமிளகாய்,மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,சீரகத்தூள்,சோம்புத்தூள், மஞ்சள்தூள்,சர்க்கரை,உப்பு சேர்த்து முக்கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வைக்கவும்.பிரெஸ்சர் அடங்கியதும் குக்கரைத் திறந்து காய்களை மசித்து வைக்கவும்.

எண்ணெய் காயவைத்து சீரகம் தாளித்து மசித்த கலவையை சேர்த்து தண்ணீர் வற்றும்வரை கிளறவும்.இறுதியாக கொத்துமல்லி இலை தூவி இறக்கி ஆறவைக்கவும்.

மாவு தூவி பேஸ்ட்ரி ஷீட்-ஐ சதுரமாகத் தேய்த்துக் கொள்ளவும்.காய்கறி கலவையை பேஸ்ட்ரி ஷீட்டில் வைத்து (நான்கு ஓரங்களிலும் ஒரு இன்ச் இடம் விட்டு) சமமாகப் பரப்பவும்.


பேஸ்ட்ரி ஷீட்டை ஒரு முனையிலிருந்து இறுக்கமாகச் சுற்றவும். ஷீட்டின் இறுதியில் சிறிது தண்ணீர் தடவி ஒட்டவும்.


ரோல் செய்த பேஸ்ட்ரி ஷீட்டை கிளியர் ராப் பேப்பரில் வைத்து சுற்றி பதினைந்து நிமிடம் ப்ரீசரில் வைக்கவும்.
முட்டையை உடைத்து ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கிவைக்கவும்.
பேஸ்ட்ரி ரோல்-ஐ பிரீசரில் இருந்து எடுத்து முட்டையை ரோல் முழுவதும் தடவவும்.

பின்னர் கத்தியால் வேண்டிய வடிவத்தில் நறுக்கி
பேக்கிங் ட்ரேயில் சிறிது இடைவெளி விட்டு அடுக்கவும்.

350F ப்ரீ ஹீட் செய்த அவன்-ல் வைத்து பேக் செய்யவும்.
பத்து நிமிடம் கழித்து ட்ரேயை எடுத்து பேஸ்ட்ரி வீல்களை திருப்பி அடுக்கி மீண்டும் பத்து நிமிடம் பேக் செய்யவும்.டேஸ்ட்டி வெஜ் பேஸ்ட்ரி வீல் ரெடி!


குறிப்பு
முட்டை விரும்பாதவர்கள் எக்வாஷ்-க்கு பதிலாக சிறிது வெண்ணையை உருக்கி ரோல் மீது தடவி பேக் செய்யலாம்.
பேஸ்ட்ரி ரோலை எக் வாஷ் கொடுத்து நறுக்குவதை விட, நறுக்கிய பின்னர் எக் வாஷ் செய்தால் ஈசியாக இருக்கும்.
ஸ் டஃபிங் அவரவர் விருப்பபடி, வெஜ் அல்லது நான்வெஜ் கலவை வைத்துக்கொள்ளலாம். சீஸ் விரும்புவோர் சீஸ் வைத்தும் பேக் செய்யலாம்.

28 comments:

  1. ம்... இது என்னோட செய்முறைல இருந்து வித்தியாசமா தான் இருக்கு. எல்லாத்துக்கும் விடுமுறை வரட்டும். ;)

    குறிப்புக் கொடுத்ததற்கு நன்றி மகி.

    ReplyDelete
  2. ரொம்ப நல்லா இருக்கு மஹி

    ReplyDelete
  3. எனக்கு இப்ப திடீர்னு ஒரு டவுட். ;) 'மகி' சரியா! 'மஹி' சரியா! ;) 'ஹி, ஹி' என்று சொல்லாம சொல்லுங்கோ. ;)

    ReplyDelete
  4. ரொம்ப நல்லா இருக்கு. இதை பார்த்ததும் எனக்கு பசிக்குது மகி.

    ReplyDelete
  5. மகி,பார்க்கவே அழகாக அசத்தலாக இருக்கு,பஃப்ஸ் டேஸ்டில் இருக்கும் தானே மகி.

    ReplyDelete
  6. மகி, நல்ல ரெசிப்பி. பார்க்க நல்லா இருக்கு.
    வந்து இமாவின் சந்தேகத்தை தீர்த்து வையுங்கோ??. என்னிடம் தான் நிறைய சந்தேகங்கள் கேட்பார். இன்று நீங்கள் மாட்டிக் கொண்டீர்கள்.

    ReplyDelete
  7. mahi நான் போன வாரம் தான் இதே போல் பைலோ ஷீட்டில் ஸ்பினாச் ரோல் செய்தேன். எனக்கு ரொம்ப பிட்க்கும் இந்த பேஸ்ட்ரி ஷிட்டில் செய்வது. அடுத்த தடவை இந்த முறை தான்.

    மஹி உங்களை நான் பிடித்த பத்து பென்கள் தொடர் பதிவில் அழைப்பு குடுத்திருக்கென் வாங்க.
    தொடருங்க.

    ReplyDelete
  8. /'ஹி, ஹி' என்று சொல்லாம சொல்லுங்கோ. ;)/ தமிழ்-ல எழுதும்போது என் பேரு மகேஸ்வரி..இங்கிலிஷ்ல எழுதும்போது Maheswari..ஸோ,எப்படி வேணாலும் கூப்பிடலாம் இமா! ஹி,ஹி!!;) :)

    /பஃப்ஸ் டேஸ்டில் இருக்கும் தானே மகி./ ஆமாம் ஆசியாக்கா!! சூடா சாப்பிட சூப்பரா இருக்கும்.

    /இதை பார்த்ததும் எனக்கு பசிக்குது மகி./ எடுத்து சாப்பிடுங்க பிரபா! ;)

    /பார்க்க நல்லா இருக்கு./சாப்பிடவும் நல்லாவே இருக்கும் வானதி,தைரியமா ட்ரை பண்ணி பாருங்க.

    நன்றி விஜி..தொடர்கிறேன்.

    சாரு,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  9. வீல் பேஸ்ட்ரி செய்யனும்னு ஆசையா இருக்கு படத்தை பார்த்தால்.ஒரு நாள் செய்து பார்க்கிரேன்.ரொம்ப நன்றி மஹி குறிப்பு கொடுத்ததர்கு.

    ReplyDelete
  10. செய்து பாருங்க கொய்னி..பிரிட்ஜ்ல மிச்சம் மீதி இருக்கற காய்கறி எல்லாம் காலி பண்ண ஒரு நல்ல ஐடியாவாம் இது.(மெயில்ல வந்த ஒரு கருத்து!)
    நன்றி!

    ReplyDelete
  11. இப்ப யாருக்கு நன்றி சொல்றீங்க! கொய்னிக்கா இல்லை மெய்ல்ல வந்த கருத்துக்கா!!

    மகி எவ்ளோ கஷ்டப் பட்டு ரெசிபி போடறாங்க. யாருப்பா அந்த மாதிரி கருத்து சொன்ன அதி மேதாவி? அதை இங்கேயே வந்து சொல்லி இருக்கலாம்ல. (யாராவது மகி க்ளோஸ் ஃப்ரெண்டா இருக்கப் போறாங்க. நமக்கெதுக்கு ஊர்....)

    எனி வே, நல்ல ஐடியா சொல்லி இருக்காங்க, அவர்கள் வாழ்க வளர்க.

    ReplyDelete
  12. Mahi, this is how i do it. pics looks great!!!!!!!!!!!

    ReplyDelete
  13. all time favorite snacks. நாலஞ்சு முறை செய்திருக்கேன்.சூப்பர் மகி.thanks.

    ReplyDelete
  14. மஹியின் வெஜி பேஸ்ட்ரி வீல்ஸ்-க்கு ஒரு பின்னூட்டம் - இமாவின் உலகில் பார்க்க 'மகிக்கு ஒரு பின்னூட்டம்'. ;)

    http://imaasworld.blogspot.com/2010/05/blog-post_05.html

    ReplyDelete
  15. சுகந்திக்கா,கருத்துக்கு நன்றி!
    ~~~
    அப்படீங்களா ஜில்? மிக்க மகிழ்ச்சி...நன்றி!
    ~~~
    ஒரு முழு பதிவையே பின்னூட்டமா கொடுத்து சந்தோஷப் படுத்திட்டீங்க..மிக்க நன்றி இமா!:)

    ReplyDelete
  16. யம்மி மஹி.. ஒருத்தங்களோட உலகத்துல யிருந்து இங்க வந்திருக்கேன் :)))))

    ReplyDelete
  17. சந்தனா, இவ்வளவு நாள் கழிச்சு வந்து சொன்னதுக்கு நன்றி! நீயாவது போட்டோஸ்ல இருக்க கை-யை கவனிச்சு ஏதாவது சொல்லுவேன்னு பார்த்தேன். :)
    ~~~***~~~
    :)-க்கு நன்றி இமா!

    ReplyDelete
  18. போட்டோஸ்ல இருக்கற கை, அழ'கை' இருக்கு மகி! :)
    அடுத்து பூங்கதிர் தேசத்தை ஃப்ரீயா ப்ரமோட் பண்ணலாம் என்று யோசிச்சேன்.அங்க ஏதாச்சும் ரெசிப்பி இருக்கா!! ;))

    ReplyDelete
  19. நன்றி இமா!
    இந்த மாதிரி பதில் தெரியாத கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது.:)

    ReplyDelete
  20. உங்கலின் இந்த பேஸ்ட்ரி வீல்ஸ் செய்தேன் மகி...மிகவும் நன்றாகயிருந்தது.சுவையான குறிப்புக்கு மிக்க நன்றி!!

    ReplyDelete
  21. செய்துபார்த்து பதிவும் போட்டதற்கு நன்றி மேனகா!

    ReplyDelete
  22. ரொம்ப நன்றாக இருக்கு படிக்கும் போதே.வீக் எண்டிலே மருமகளுக்குத்தான் சொல்லணும். பெறியசைஸ் பாக்கர்வடிபோல இருக்கு.
    அது என்ன பாக்கர்வடி கேட்டுடாதே.
    சாப்டிருக்கேன் அவ்வளவுதான்.
    பேஸ்ட்ரி வீல்ஸ் பேரும் அழகாயிருக்கு

    ReplyDelete
  23. காமாட்சிமா,கருத்துக்கு நன்றி!

    பேஸ்ட்ரி வீல்ஸ் பாக்கர்வாடி ஷேப்லதான் இருக்கும்,ஆனா டேஸ்ட் வேறுமாதிரி இருக்கும்.செய்துபாருங்க.

    பாக்கர்வாடின்னா என்னனு கேக்கமாட்டேன்,அது எங்க வீட்டில் பேவரிட் ஸ்னாக்! :)

    ReplyDelete
  24. வாவ்... நெஜமாவே மௌத் வாடேரிங்... நீ சொல்றப்ப ஈஸியா இருக்கற மாதிரி தான் இருக்கு மகி...ஆனா...சரி சரி திட்டாத, செஞ்சு பாக்கறேன்...:)

    ReplyDelete
  25. வணக்கம்...

    உங்களின் இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  26. http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
    இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்,அருமை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  27. வலைச்சர அறிமுகத்திற்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails