Monday, October 24, 2016

ஜெயின் கிச்சடி

மதிய உணவுக்கு அவசரமாக ஏதாவது சுவையாகச் சமைத்து சாப்பிடலாமே என்று தோன்றுகையில், குக்கரில் ஒரே சாதமாக தாளிச்சு விட்டு 3 விசில் விட்டு இறக்கினால் போதும் என்ற உணவுவகைகள்தான் என் சாய்ஸ்..அஃப்கோர்ஸ், வீட்டில் ஒரு பிரியாணி பிரியர் இருப்பதால் வெஜிடபிள் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி, கொண்டைகடலை பிரியாணி, தக்காளி பிரியாணி, மீல்மேக்கர் பிரியாணி என போட்டியாளர்கள் நிறைய இருந்தாலும், அதிக காரம்-மசாலா இல்லாத இந்த கிச்சடி இப்ப அடிக்கடி எங்க வீட்டில் இடம்பிடிக்கிறது. பிரியாணி பிரியரே விரும்பி சாப்பிடுகிறார்னா பாத்துக்கோங்க..!! ;) :)

அதுவும் இல்லாமல் பிரியாணி செய்தால் ரைத்தா இருக்கா என ஒரு கேள்வி வேற!! அவ்வப்பொழுது, எனக்கே கை அடங்காம, கத்தரிக்காய் க்ரேவி, மிர்ச்சி கா சாலன் இப்படி எதாவது சைட் டிஷ்-ஐ இழுத்து விட்டுக்கொள்வதும் நடக்கும். அவற்றிலிருந்து எஸ்கேப் ஆக இந்த கிச்சடி கை கொடுக்கிறது. இந்த கிச்சடிக்கு "பத்லா கடி" என்ற நார்த் இண்டியன் மோர் குழம்பு நல்லா இருக்கும் என்று ரெசிப்பில சொல்லிருந்தாலும் எங்களுக்கு அது கூட தேவையில்லை, அப்படியே சாப்பிட்டுடுவோம்! ;) :p

இந்த கிச்சடிக்கு விருப்பமான காய்கள் சேர்க்கலாம் என்றாலும் மிக முக்கியமான காய், குடைமிளகாய்..அதுவும் கலர் மிளகாய்கள் இருந்தால் ருசியும் வாசனையும் அருமையா இருக்கும். குடைமிளகாய் இல்லைன்னா கிச்சடி செய்யவே ஆரம்பிக்காதீங்க! ஹிஹி...!!...

அப்புறம் படத்தில் இருக்க குடைமிளகாய், தக்காளி மற்றும் பீன்ஸ் நம்ம வீட்டில காய்ச்சது..அதனால ருசி இன்னும் கொஞ்சம் அமோகமா இருந்துச்சு!! :))))

தேவையான பொருட்கள்
காய்கறிகள்
கேரட் - 1
பீன்ஸ் - ஏழெட்டு
குடைமிளகாய், சிறியதாக - 1 (அல்லது 2 வண்ணங்களில் பாதி பாதி)
பச்சை பட்டாணி - கால்கப்
உருளை கிழங்கு (சிறியதாக) - 1
தக்காளி (சிறியதாக) -1
வெங்காயம் -1
பச்சைமிளகாய் -2
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 4 பற்கள்
உப்பு

பச்சரிசி/பாஸ்மதி அரிசி - 1கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்

தாளிக்க
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு/லவங்கம் -2
சீரகம் - 1டீஸ்பூன்
மிளகு- 8
வரமிளகாய் -1
பிரியாணி இலை
கறிவேப்பிலை  - கொஞ்சம்
கடைசியில் சேர்க்க
நெய் -1 டேபிள்ஸ்பூன் (சுவைக்கேற்ப சேத்துக்கலாம்!! ;))

செய்முறை 
அரிசி-பருப்பை களைந்து ஊறவைக்கவும். 20 நிமிடங்களாவது ஊறினால் நல்லது.
காய்களை கழுவி ஒரே அளவாக நறுக்கிக்கொள்ளவும்.
இஞ்சி-பூண்டை தட்டி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் காயவைத்து சீரகம், மிளகு, பட்டை கிராம்பு தாளித்து, வர மிளகாயையும் கிள்ளி சேர்த்து வதக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு தட்டியது சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கிவிட்டு காய்களை சேர்க்கவும்.  சில நிமிடங்கள் வதக்கிவிட்டு, ஊறிய அரிசி-பருப்பை தண்ணீர் வடித்து சேர்க்கவும். ருசிக்கு உப்பு சேர்த்து 3 கப் தண்ணீர் விடவும். (ஒரு கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர்..கொஞ்சம் குழைவாக இருக்கும் இந்த கிச்சடி) 
குக்கரை மூடி , மிதமான தீயில் 3 விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். ப்ரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரை திறந்து நெய் சேர்த்து கிளறி பரிமாறவும். ஆறிய பிறகு சாப்பிட்டாலும் சுவையாகவே இருக்கும். 
இதனுடன் ஜோடியாக பத்லா கடியும் செய்தேன், ஆனால் அது திரும்பி கூட பார்க்கப்படாமல் தங்கிவிட்டது.  ;)

ஒரிஜினல் ரெசிப்பி இங்கே..அதென்னவோ காமாட்சி அம்மாவின் சமையல்கள் எனக்கு கடந்த சில வருஷங்களாக தொடர்ந்து செய்து சுவைக்கும்படியாகவே அமைந்து கொண்டிருக்கின்றன. நன்றிம்மா!! :)
குறிப்பு
டைட்டில்-ல "ஜெயின் கிச்சடி" என இருந்தாலும், இது ஒரிஜினல் ஜெயின் கிச்சடி அல்ல, இஞ்சி-பூண்டு, வெங்காயம் இவையெல்லாம் சேர்க்காமல் செய்தால் அதுவே ஜெயின் கிச்சடி. விருப்பமுள்ளோர் அப்படியும் செய்து பார்க்கலாம். :) நேரமிருந்தா இங்கேயும் எட்டிப் பாருங்க. இது ஒரிஜினல் ஜெயின் கிச்சடி - கடி ஜோடி!

18 comments:

  1. Super..Enakum ipti sadham rompa pitikkum..
    Veettu capsicum,tomato,beans ah? Enjoy akka..Seekrama try panren..:)

    ReplyDelete
  2. நல்ல ரெசிபி,வாழ்த்துக்கள்/

    ReplyDelete
  3. அட... இது கூட நல்லாவே இருக்கு. ருசிக்கு ருசி , சீக்கிரம் வேலை முடியும். எல்லாரும் ரசிச்சு சாப்பிடுற மாதிரி இருக்கு. நாளை இதுதான் செய்யணும் மகி.

    ReplyDelete
    Replies
    1. செய்து பார்த்தீங்களா? நன்றி! :)

      Delete
  4. அருகில் இருக்கும் மோர் குழம்பும் நல்லாவே இருக்கு ..:)

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டில மோர்குழம்பு, சாம்பார் எல்லாம் அவ்வளவா எடுபடாது..எனக்கு ரொம்ப புடிக்கும்ங்கறது வேற கதை! ரொம்ப ஈஸியா செய்துடலாம், சீக்கிரமா ரெசிப்பி போட்டுடறேன்.

      Delete
  5. ஓ, கேப்ஸிகம் இல்லாம ஆரம்பிக்கக் கூடாதா ! அப்போ நான் எஸ்கேப் ! குட்டிகுட்டியா கலர்க‌லர் மிளகாய்களை வாங்கிவந்து வீணாக்குவதோடு என் வேலை முடிந்தது :)

    கலர்ஃபுல்லா பார்க்கும்போதே தெரியுது சூப்பரா இருக்கும்னு !

    ReplyDelete
    Replies
    1. சித்ரா உன்னைப் பிடிக்கவே முடியவில்லை. ஜிமெயிலில் முயற்சி செய்தேன். எல்லோரும் நலம் என்று நினைக்கிறேன். அன்புடன். ஒரு மெயில் அனுப்பு. விலாஸம் குறித்துக் கொள்கிறேன். அன்புடன்

      Delete
    2. சித்ராக்கா, கேப்ஸிகம் ஒரு முறை சேர்த்து செய்து பாருங்களேன், சும்மா சூப்பரா இருக்கும். பச்சை-சிவப்பு-மஞ்சள் மூணு கலரும், ஜஸ்ட் ஒண்ணொண்ணு எனக்காக வாங்குங்க..கண்ணை மூடிட்டு கட் பண்ணி போட்டு குக்கர்ல மூடி வைச்சுடுங்க. மூச்... வீட்டுல ஆருகிட்டவும் சொல்லீரக்குடாது, இன்க்ளூடிங் யூ!! ;) அப்புறம் குடைமிளகாய் விசிறி ஆகிருவீங்க. குட்டிக்குட்டி கலர் மிளகாய் அவ்வளவு ருசி இருக்காது, நான் ஆசைப்பட்டு காஸ்ட்கோல ஒருக்கா வாங்கினேன், ஆனா சாதா குடைமிளகாய் மாதிரி ருசியும் இல்ல, வாசனையும் இல்ல. சீக்கிரம் செய்து பார்த்து சொல்லுங்க!! :)

      Delete
    3. காமாட்சிம்மா, சித்ராக்கா கிட்ட இருந்து பதில் வந்துதா?? இல்லன்னா சொல்லுங்க..வலை போட்டு புடிச்சு தாரேன்!! :) :D

      Delete
  6. அன்பு மஹி அருண்,

    ஜெயின் கிச்சடி செய்தேன். ரொம்ப நன்றாக இருந்தது. (உங்கள் ஃபேஸ்புக் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன் இந்தக் குறிப்பை).

    நன்றி.

    அன்புடன்

    சீதாலஷ்மி

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப சந்தோஷங்க சீதாலஷ்மி!! காமாட்சிம்மா கிச்சடி உங்க கிச்சன் வரை வர நான் காரணமாகியிருக்கேன். :) செய்து பார்த்ததோட விடாம, இங்கே வந்து சொன்னது மகிழ்ச்சியாக இருக்கு. தேங்க்யூ வெரி மச்!!

      Delete
  7. ரொம்பவே பிரமாதம். அன்புடன்.

    ReplyDelete
  8. சித்ராவை ஜி மெயில்லே வரிசையிலே பிடிச்சுட்டேன்.பதிலும் வாங்கிட்டேன். நீயும் சொன்னதா சொன்னாங்க. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஓகேம்மா!! நன்றியெல்லாம் எதுக்கு? :)

      Delete

LinkWithin

Related Posts with Thumbnails