Thursday, July 26, 2018

மீண்டும் தொடங்கலாமா? :)

சரியாக ஒரு வருடம் முன்பு இந்த வலைப்பூவில் பதிவிட்டது..ஓராண்டு காலம் ஓடியது தெரியாமல் ஓடிப்போய்விட்டது..இதற்கு மேலும் இங்கே வராமல் இருந்தால் அப்படியே விட்டுவிடுவேனோ என்ற பயம் உந்தித் தள்ளி, ஒருவழியாய் வந்துவிட்டேன்!! :) 

நாட்களும் வாரங்களும் மாதங்களும் நிற்க நேரமில்லாமல் கடக்கின்றன..ஒரு நொடியும்  யோசிக்க நேரமில்லாமல் என் நேரத்தை பங்குபோட்டுக்கொள்ள என் குட்டிப்பெண்களும் நாலுகால் பையனும் இருப்பதால் அவர்களோடு நானும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்..இன்னும் சில ஆண்டுகள் இந்த ஓட்டம் தொடரும்! அதனூடே இங்கேயும் அவ்வப்போது எதாவது செய்யலாம் (கவனிச்சு படிங்க..என்ன செய்வேன்னு நான் சொல்லவேயில்ல...அது சமையலா இருக்கலாம்..என் மனங்கவர்ந்த பூக்களா இருக்கலாம்..உங்களை கலங்கடிக்கும் மொக்கையா இருக்கலாம்...எதுவா வேணாலும் இருக்கலாம்...ஹிஹி...)

 இந்த குருவிக்கூட்டம் இந்த மே மாதம் சுற்றுலா சென்ற இடத்தில் இருந்து வாங்கி வந்தது..குடும்ப உறுப்பினர்கள் ஐவருக்கும் ஆளுக்கொரு குருவி. ;) பார்க்க நிஜ குருவிகள் போலவே தத்ரூபமாக இருக்கின்றன..அதனால அவங்களுக்கு தானியங்கள் வச்சுக் குடுத்து உட்கார வைச்சிருக்கோம்.

சம்பந்தமே இல்லாம மாம்பழம், ரோசாப்பூ, குருவி அப்புறம் ஒரு பொங்கல்-சட்னி-கொத்சு படம்ன்னு கலந்துகட்டி ஏதோ போட்டிருக்கேன்...அஜீஸ் ;) பண்ணிக்கோங்க. முதல் படம் இந்தக் கோடையின் மாம்பழம்..இரண்டாவது எங்க வீட்டு அழகு ராணி..மூணாவது குருவிக்கூட்டம், நாலாவது சாமை பொங்கல், சுரைக்காய் கொத்சு, தேங்காய்ச் சட்னி.

நன்றி, வணக்கம்!! விரைவில் மீண்டும் பார்க்கலாம்!! :) :))) 

15 comments:

  1. வருக... வருக... தொடர்க...

    நானும் ஒரு வருடம் கழித்து தொடங்கியுள்ளேன்...

    ReplyDelete
  2. உங்கள் தளத்திற்கு நான் இப்போதுதான் முதல் வருகைதருகிறேன்,
    உங்கள் தளத்தை பாலௌ கொடுத்து ரொம்ப நாள் ஆச்சு,
    என்னடா எந்தப்பதிவும் காணக்கிட்டாதோனு நெனச்சா இந்தா வந்திடிச்சே!
    மாம்பழ கொதியை காட்டி விட்டீங்களே!

    அருமை, அருமை தொடருங்கள்...

    ReplyDelete
  3. வாங்க வாங்க...

    ரொம்ப மகிழ்ச்சி உங்க வருகைக்கு அதுவும் மாம்பழத்தோடு...


    பூ அழகு

    குருவி cute

    பொங்கல் சூப்பர்..

    ReplyDelete
  4. ஆவ்வ்வ்வ் வாவ்வ்வ் வாங்கோ மகி வாங்கோ... கொமெண்ட்ஸ் பார்த்தபோது கொஞ்சம் ஊகிச்சேன்ன் மகி தலை காட்டப் போகிறா என.. அபடியே இமாறீச்சரையும் கூட்டி வாங்கோ.. பேஸ்புக்கை மூடச்சொல்லி அதிரா சொன்னா எனவும் சொல்லி விடுங்கோ.. ஹா ஹா ஹா:))

    ReplyDelete
    Replies
    1. //பேஸ்புக்கை மூடச்சொல்லி அதிரா சொன்னா எனவும் சொல்லி விடுங்கோ.// அவ்வ்! ;))) நான் அங்க நிறையச் சுத்துறன் எண்டு நினைக்கிறீங்களோ! ;) தேம்ஸ்ல பிடிச்சுத் தள்ளீருவன். ;))))))

      Delete
  5. ஆவ்வ்வ்வ் சமையல், குருவிக்கூட்டம் ரொம்ப அழகு.. உற்றுப்பார்க்காட்டில் அவை உண்மைக் குருவிகள் என்றே நினைக்க வருது...

    ReplyDelete
  6. கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்!! :)

    ReplyDelete
  7. ஆ.. மகி நலம்தானே. நானும் ஆரம்பித்து நிற்குது..பார்ப்போம். குருவிக்கூட்டம் அழகோ..
    மாம்பழமும்,டிஷ் அழகா இருக்கு.

    ReplyDelete
  8. வாங்க மஹி :) மறுபடியும் பிளாக்கில் பார்ப்பது சந்தோஷமா இருக்கு .பூஸாரின் ரீசன்ட் பதிவில் அந்த கருப்பு மைப்போட்டு ஹைட் பண்ணத பார்த்ததும் உங்க நினைவு வந்தது :) நம்ம வேலையே இப்படி அந்த மையை ரிமூவ் செஞ்சு கலாட்டா பண்றது தானே :)

    நானும் இன்னும் ஓடிட்டேதான் இருக்கேன் மஹி :) படிச்சி முடியும்வரை ஓட்டம் தொடரும் அதனால் அப்பப்போ ரிலாக்ஸ் பண்ணுங்க

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல் அக்கா எப்படி இருக்கீங்க?ரொம்ப நாளாச்சு பேசி..:)

      Delete
    2. நான் நல்லா இருக்கேன் அபி :) நீங்க ரெண்டு குட்டீஸும் நலமா .

      Delete
  9. எல்லாமே சூப்பர்.. நானும் ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கேன்

    ReplyDelete
  10. ஆஹா... வாங்க.. வாங்க.. பல்சுவையோடு நல்வரவு.

    ReplyDelete
  11. ஹை!! இதை எப்படி நான் பார்க்காலல் இருந்தேன்! ம்... இடைக்கிடை ஏதாவது போடுங்க மகி.

    அந்தக் குருவிக் கூட்டம் அழ..கு. எப்படி இத்தனை தத்ரூபமாகச் செய்கிறார்களோ!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails