தேவையான பொருட்கள்
ராகி மாவு-1கப்
வேர்க்கடலை பொடித்தது-1/4 கப்
முருங்கைக் கீரை -1 கைப்பிடி
பொடியாக நறுக்கிய வெங்காயம்-3டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய்-2 (காரத்துக்கேற்ப)
உப்பு
தண்ணீர் - சுமார் 1/2கப்
எண்ணெய்- பொரிக்க
செய்முறை
வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்து ராகி மாவுடன் சேர்க்கவும்.
மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சுத்தம் செய்த முருங்கைக்கீரை, உப்பு சேர்த்து..நன்றாக கலந்துகொண்டு, கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து பிசைந்துகொள்ளவும். நான் சுமார் அரைக்கப் தண்ணீர் சேர்த்தேன்.
எண்ணெய் காயவைத்து ராகி மாவை சிறு வடைகளாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
எண்ணெய் வடியவைத்து சூடாக காப்பி அல்லது டீயுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
ராகி மாவு மட்டும் சேர்த்தும் செய்கையில் கொஞ்சம் கடுகடுப்பாக வரும். அதற்காகத்தான் வேர்க்கடலைப் பொடித்து சேர்ப்பது..வேர்க்கடலைக்குப் பதிலாக பொட்டுக்கடலையும் சேர்க்கலாம். கீரை சேர்க்காமலும் செய்யலாம்.
செய்து சுவைத்துப் பார்த்துச் சொல்லுங்க. நன்றி!
செய்து பார்க்கிறோம்... நன்றி...
ReplyDeleteIdhu vena adijadi seiven, last week senjappa konjam sahana'vukku kudujjakaangara idea'la added 2 scoops idli maavu. Vadai was so good, even ai liked it :)
ReplyDelete