நான்குமாதங்களின் பின்னர் கோடையை எதிர்பார்த்து புதுப்பூக்கள் மே இறுதியில் நடப்பட்டன. புதிதாக நட்ட நாற்றுக்கள் என்னவென்று நான் ஒருமாதம் கவனிக்கவில்லை..திடீரென்று ஜூன் மாதத்தில் ஒரு நாள் பலவண்ணத்தில் பூக்கள் சிரித்தன! :)
இந்தப்பூக்களின் பெயர் Zinnia. பலவண்ணங்களில் அளவெடுத்துப் போட்ட வட்டமாக, அடுக்கடுக்காக பூத்திருக்கும் பூக்களைப் பார்க்கப் பார்க்க அலுக்கவே இல்லை! செடிகளின் இலைகள் எதிரிலை அமைவில் இருக்கிறது..சிறு மொட்டாக ஆரம்பிக்கும் பூக்களின் செழுமை மிக அழகாக இருக்கிறது. சின்னஞ்சிறு மொட்டில் இவ்வளவு பெரிய மலரை ஒளித்துவைக்கும் இயற்கையின் கண்ணாமூச்சியை என்ன சொல்வது?
ஒருவேளை இந்தச் செடிக்கு மட்டும் இயற்கையன்னை காம்ப்ளான் குடுத்து வளர்த்திருக்கிறாளோ?? ;) அதுதான் மற்ற பூக்களை விட சற்றே உயரமாய் வளர்ந்து நின்று மனிதர்களை ரசிக்கிறதோ இந்தக் குங்கும நிறப்பூக்கள்?!
மஞ்சள், பச்சை, ஆரஞ்சு, தாமரை வண்ணம்...கண்களுக்கு விருந்தளிக்கும் இந்தப்பூக்கள் lilliput mix zinnia என்ற வகையைச் சேர்ந்தவை. அந்த லில்லிபுட் சேர்ந்தால்தான் இப்படி காம்பஸ் வைத்து போட்டதுபோன்ற சீரான வட்டங்களில் பூக்கள் வருகின்றது என்று நினைக்கிறேன்.
நான் சென்ற ஒரு பொன்மாலைப் பொழுதில் ஒரு தேனீ விச்ராந்தியாக ஆரஞ்சுப்பூவில் தேனை ருசித்துக்கொண்டிருந்தார்.."நீ லாங் ஷாட் எடு, இல்ல க்ளோஸ்-அப்தான் எடு, ஐ டோன்ட் கேர்! " என்று அந்தச்செடியில் எல்லா மலர்களிலும் மாறி மாறித் தேனை ருசித்தவாறே எனக்கும் 2-3 படங்களுக்கு போஸும் குடுத்தார்! :)
இந்த மலர்க்கூட்டங்கள் எங்கள் நுழைவு வாயிலருகே..ஒரு மாதத்தின் முன்பு இருந்ததற்கும், இப்பொழுதும் என்ன ஒரு வித்யாசம் பாருங்கள்...ஜூனில் பார்க்கையில் ஒரே சீராக வரிசைகளில் நடப்பட்டிருந்த செடிகள் இப்போது தழைத்துப் பல்கிப் பெருகி புதர் போல மண்டிக்கிடக்கின்றது..
இடையிடையே மண்ணைக் காட்டிக்கொண்டு மலர்ந்தாலும் சரி, புதர்போல மண்டிக்கிடந்தாலும் சரி, மலர்களும் மலர்ச்செடிகளும் அழகுதான்! மொத்தத்தில்
அ
ழ
கு
பூ! |
:))))))))))))))))))))
hey mee the firstu,...
ReplyDeleteஅப்பாட முதல் பூ எனக்குதானா
ReplyDeleteஇங்கே ஒளிப்பதிவாளர் தனது பூ படங்களை மிக நேர்த்திய்க படம் படம் பிடித்து காட்டி உள்ளார்
ReplyDeleteஅனைத்து பூக்களும் .....alagu....
முதல் பூ சிவாவுக்குத்தான்! நன்றி சிவா! :)
ReplyDeleteCute flowers..
ReplyDeleteஆ.. புய்ப்பம்:)
ReplyDeleteஅழகழகான பூக்கள். அத்தனையும் ஜினியா.அணிவகுத்து அழகாக கட்டியம் கூறுகிறது. என்னைப்பார், என் அழகைப்பார். கூப்பிடும் தூரத்தில்தான் இருக்கிறீர்கள். எல்லோரும் ஓடிவந்தால்ப் போகிறது. என்ன பிரமாதம். இதுகூடச் செய்யாமல்.
ReplyDelete//ஒருவேளை இந்தச் செடிக்கு மட்டும் இயற்கையன்னை காம்ப்ளான் குடுத்து வளர்த்திருக்கிறாளோ?? ;)//
ReplyDeleteஇந்த லொள்ளுதானே வேனாங்கிறது :-))
//நேரமிருந்தால் பூக்களின் கோடைக் கொண்டாட்டத்தை பார்க்க வாருங்கள்! நன்றி!//
ReplyDeleteகேட்டேனே..!! கனடா கவுன்சிலேட்டில போய் விசா கேட்டேனே..!! பூ பார்க்க எல்லாம் விசா தரமாட்டாங்களாம் ..!! மஹின்னு ஒருந்தங்க கூப்பிட்டாங்கன்னு சொன்னேன் .. காதுக்கு கீழே ஒன்னு குடுத்து அனுப்பிட்டான் அவ்வ்வ்வ்வ்வ்
மகி, அழகோ அழகு பூக்கள். நான் 2 வருடங்களின் முன்பு தோட்டத்தில் இந்த வகை பூக்கள் வைத்திருந்தேன். இப்ப எதிலும் பெரிதாக நாட்டம் இல்லை.
ReplyDeleteகடவுளே! அமெரிக்கா வருவதற்கு கனடா கான்சிலேட்டில் போய் யாரோ விசா கேட்டார்களாம். காதுக்கு கீழே தான் ஒன்று விட்டார்கள். நோ கமன்ஸ்ட் மூச்....
//கடவுளே! அமெரிக்கா வருவதற்கு கனடா கான்சிலேட்டில் போய் யாரோ விசா கேட்டார்களாம். காதுக்கு கீழே தான் ஒன்று விட்டார்கள். நோ கமன்ஸ்ட் மூச்....//
ReplyDeleteவான்ஸ்.. நம்ம மூஞ்சிக்கு அமெரிக்கா விசா தராதுன்னு தெரியும் அதனால கனடா கவுன்ஸிலேட் போனது . நயகராவை தாண்டுவது பெரிய விஷயமா ஹி...ஹி... !!
//'யு'-டர்ன் // ம்..
ReplyDelete//சின்னஞ்சிறு மொட்டில் இவ்வளவு பெரிய மலரை ஒளித்துவைக்கும் // நானும் வியப்பதுண்டு.
//காம்ப்ளான்// ;D
//"நீ லாங் ஷாட் எடு, இல்ல க்ளோஸ்-அப்தான் எடு, ஐ டோன்ட் கேர்!// ;) ரசித்தேன்.
இடுகை பற்றி 'பூ!' என்று சொல்ல இயலவில்லை. மகி வர்ணனை எனக்கு எப்பொழுதும் பிடிக்கும். சிறப்பூ!
படங்களும் வர்ணனையும் கவர்ந்து விட்டன கருத்தினையும் கண்களையும்.
ReplyDeleteஉண்மையில் ரொம்ப ரொம்ப அழகு...
ReplyDeletecute Zinnias, Mahi!
ReplyDeleteமகி..மலர்கள் கண்ணுக்கு விருந்தாகவும் மனதிற்கு புத்துணர்ச்சியாகவும் உள்ளது!!
ReplyDeletedhinamum kangalukku virundhaa! arumaiyana ezhuthu, azhagana padangal, ezhilaana vanna pookal. Melum melum idhagaya iniya kaatchigal ungal kangalilum manadhilum niraya vaazhthukkal.
ReplyDeleteரசித்துப் படித்து கருத்தும் பதித்ததுக்கு நன்றி இமா! ரொம்ப சந்தோஷம்,என் எழுத்தை ரசித்து குறிப்பிட்டுப் பாராட்டும் உங்களுக்கு மொறு-மொறூன்னு ஒரு ப்ளேட் உளுந்துவடை அனுப்பறேன்! ;) தேங்க்ஸ் இமா!
ReplyDeleteஸாதிகா அக்கா,டைமிருந்தா பிக்காஸா ஆல்பத்தையும் பாருங்க.நன்றி!
கீதா நன்றீ!
மஹேஸ் அக்கா,தேங்க்ஸ்! உங்க வீட்டுத்தோட்டத்தில் ஏன் இந்தப்பூ வைக்கல?
வாங்க ராதாராணி! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
//தினமும் கண்களுக்கு விருந்தா!!அருமையான எழுத்து,அழகான படங்கள்,எழிலான வண்ணப் பூக்கள். மேலும் மேலும் இத்தகைய இனிய காட்சிகள் உங்கள் கண்களிலும் மனதிலும் நிறைய வாழ்த்துக்கள்.// ஆஹா..ரொம்ப நன்றிங்க மீரா! இவ்வளவு அழகான கருத்தை ஆங்கிலத்தில் படித்தா ஏதோ மிஸ் ஆகற மாதிரி இருந்தது,அதான் ட்ரான்ஸ்லேட் பண்ணிட்டேன்! நன்றிங்க! :)
காயத்ரி,தேங்க்ஸ்!
ReplyDeleteஆமாம் அதிரா,புய்ப்பமேதான்! :) அதெப்படி ஏதோ ஒரு படத்தில் கவுண்டமணி-செந்தில் ஜோக்ல வரமாதிரியே சொல்றீங்க! நீங்க செந்தில்னா..கவுண்டமணி யாரு?? ஒரு வேளை..அவரா இருக்குமோ, இல்ல இவரா இருக்குமோ? ;) ;)
நன்றி அதிரா!
காமாட்சிம்மா, கவிதையே எழுதிடுவீங்க போலருக்கே,ரொம்ப நன்றிம்மா!
/இந்த லொள்ளுதானே வேனாங்கிறது :-))/ஹிஹி,அது கூடப்பொறந்தது,உட மாட்டேங்குதுங்க்ணா! ;)
/அமெரிக்கா வருவதற்கு கனடா கான்சிலேட்டில் போய் யாரோ விசா கேட்டார்களாம்./அதானே..நான் எங்கயோ இருக்கேன்,நீங்க எங்கயோ போய் விசா கேட்டா எப்பூடி?
/நம்ம மூஞ்சிக்கு அமெரிக்கா விசா தராதுன்னு தெரியும் அதனால கனடா கவுன்ஸிலேட் போனது ./அவ்வ்வ்வ்! அதும் அப்புடியா? நீங்க இதைப்பத்தி என்ன நினைக்கறீங்க வான்ஸ்? ;) ;)
/நயகராவை தாண்டுவது பெரிய விஷயமா ஹி...ஹி... !!//ஹெஹெஹே! அதெல்லாம் உங்களுக்கு சப்ப மேட்டரு ஜெய் அண்ணா! அலாவுதீன் பூதம் மாதிரி விஸ்வரூஊஊஊபம் எடுத்து ஒரு தாவு தாவினா கனடாலேருந்து இங்ஙன குதிச்சிரலாம்.ஹிஹிஹி!
ஜோக்ஸ் அபார்ட்,இவ்வளவு நாளா நான் எங்க இருக்கேன்னு கூட கவனிக்காம கமென்ட் கதகளி ஆடிய உங்களுக்கு வாஸலின்,நிவியா க்ரீம்,நியூட்ரோஜெனா சன்ஸ்க்ரீன் லோஷன் எல்லாம் போட்டு ஸ்பெஷலாத் தயாரிச்ச உளுந்து வடாம்,ச்சேச்சே வடை பார்சல் பண்ணிட்டேன்! கர்ர்ர்ர்ர்ர்ர்!
பூவுக்குள் ஒளிந்திருக்கும் பன்னிகூட்டம் ஓஓ சாரி ஸ்பெல்லிங் mistake பனிக்கூட்டம் அதிசயம். பூ பிடிக்காதவங்க யாராச்சும் இருப்பாங்களா? பூவா பொறந்தாலும் மகி இருக்கற ஏரியா லதான பொறக்கணும அப்போதான் நம்மளையும் நாலு பேரு பார்பாகன்னு என் வீட்டு தோட்டத்து ரோஜா எல்லாம் ஓ ன்னு ஒப்பாரி போங்க .
ReplyDeleteஒரு வாரத்துக்குள்ள இத்த....ன பதிவ போட்டா எப்போ படிச்சு எப்போ கமெண்ட் போடுறதாம்! இதுக்கு ஒரு வாரம் லீவு கொடுப்பாங்களோ ன்னு கேட்டு பார்க்கணும்
/ஓஓ சாரி ஸ்பெல்லிங் mistake/கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எம்புட்டு கரீக்ட்டா ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்றாங்கப்பா! ;) இருந்தாலும், திருத்தீட்டிங்களே,அதுக்கே ஒரு பூங்கொத்து அனுப்பணும் உங்களுக்கு! :)
ReplyDeleteபூக்களையெல்லாம் ஒப்பாரி வைக்கவிடக்கூடாது.பேபி கார்ன்,பாட்டி கார்ன்,மீசிக்-டியூன்னு ரெசிப்பி போஸ்ட் பண்ணற சைக்கிள் கேப்புல உங்க வீட்டு ரோசாவையும் போஸ்ட் பண்ணிருங்க! :)
வாரத்துக்கு ரெண்டு பதிவு கூடப் படிச்சு கமென்ட் போட டைம் இல்லீங்களா? கொஞ்சம் ரெம்பவே பிஸியாத்தேன் இருக்கீங்க.;) ஒண்ணும் அவசரமில்ல,நேரமிருக்கைல படிச்சுப் பாருங்க.
நன்றி!
ரொம்பத்தேன் கோவமா இருக்கியளோ. .. நெஜம்மா இந்த வாரம் வந்ததும் தெரியல போனதும் தெரியல. உங்க வடாம் போல புழிஞ்சு எடுத்துட்டாங்க !! என் பதிவுக்கு சமையல் photos எல்லாம் எடுத்து வச்சு இருக்கேன். குறிப்பு இன்னும் எழுதல.. பேசாம photos மட்டும் போட்டு இது என்ன டிஷ் அப்படின்னு எல்லாருக்கும் quiz வைக்கலாமுன்னு இருக்கேன். அத பத்தி என்ன நெனைக்கிறிங்க??
ReplyDelete//பூக்களையெல்லாம் ஒப்பாரி வைக்கவிடக்கூடாது.பேபி கார்ன்,பாட்டி கார்ன்,மீசிக்-டியூன்னு ரெசிப்பி போஸ்ட் பண்ணற சைக்கிள் கேப்புல உங்க வீட்டு ரோசாவையும் போஸ்ட் பண்ணிருங்க! :) //
இது கூட சூப்பர் ஐடியா வா இருக்கே?
அண்ணன் சிவா கூட மெனக்கெட்டு வந்து அவுக ப்ளோக்க்கு வராதவங்க கம்ப்யூட்டர் எல்லாம் hang ஆகட்டுமுன்னு சாபம் எல்லாம் கொடுத்திட்டு போயிருக்கார்!!! என்னத்த சொல்ல?
கோவத்துக்கு நடுவுலயும் எனக்கு பொக்கே அனுப்புனீங்க பாருங்க அங்கதான் நீங்க உக்கார்ந்து இருக்கீங்க :):)
//ரொம்பத்தேன் கோவமா இருக்கியளோ..// ச்சே,அதெல்லாம் இல்லைங்க. நீங்களே காய்ஞ்சு கருவாடா வந்திருக்கீங்க பாவம், உங்கமேலே எனக்கென்ன கோபம்?
ReplyDelete//photos மட்டும் போட்டு இது என்ன டிஷ் அப்படின்னு எல்லாருக்கும் quiz வைக்கலாமுன்னு இருக்கேன். அத பத்தி என்ன நெனைக்கிறிங்க??//அவ்வ்வ்வ்வ்வ்! இதையப் பத்தி என்ன நினைக்கிறது?!!
நீங்க கிவிஸுக்கு கோடி கோடியா பணத்தைக் கொட்டிப் பரிசு குடுத்தாலும் உங்க வாயாலே உங்க ரெசிப்பிய கேக்கறமாதிரி இருக்குமா? அதனால நீங்களே சொல்லிருங்க.இந்த விபரீத விளையாட்டெல்லாம் வாணாம்.[எப்புடியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்குது.சாமி,கடவுளே..என்னைய மட்டும் காப்பாத்தப்பா! ;) ]
//பொக்கே அனுப்புனீங்க பாருங்க அங்கதான் நீங்க உக்கார்ந்து இருக்கீங்க :)//ஹாஹ்ஹா! நானென்ன மஹாலக்ஷ்மியா இல்ல சரஸ்வதியா,பூமேலே பூங்கொத்துமேலயெல்லாம் உக்கார்ந்திருக்க? எங்க வீட்டு ஸோஃபாலேதான் உட்கார்ந்திருக்கேன். ஹிஹ்ஹி! ;))))))))
நன்றிங்க!
//ஒரொரு பதிவு எழுதுறதுக்கு முன்னாடி அவங்க ரெண்டு பேரையும் மானசீகமா கண்ணு முன்ன நிறுத்தி ஆசிர்வாதம் வாங்கிட்டு// இந்த சீனை கற்பனை பண்ணிப் பார்க்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன்... ;) அவங்க ஒவ்வொருத்தரும் என்ன கலர் தாமரைப் பூவுல நிப்பாங்கன்னு தான் தெரியல. ;)) மஹி... மஞ்சள்! // Ithu Imaa vin comment ennai pattriyil..
ReplyDeleteAthukku my reply...
கற்பனை பண்ணுங்க பண்ணுங்க. வெள்ளை தாமரை வீட்டிருப்பாள்... நெறைய்ய ப்ளாக் பத்தின அட்வைஸ் பண்ணுறதால மகிக்கு வெள்ளை தாமரை தானுங்கோ