Wednesday, December 22, 2010

டாய் ஸ்டோரி

ஹாய்,ஹாய்,ஹாய்!! புதிய பதிவைப் பார்த்ததும் ஆவலாய் ஓடிவந்து படிக்கும் வாசக நேயர்களுக்கு எங்களின் அன்பான வணக்கம்!

அப்புச்சி(grandpa),குட்டி(kutti),மோக்லி(mougli), அப்பு(appu),டெட்(ted),ட்வீட்டி(tweetty),
க்ரி
ஸ்லி(grizzly), நாங்க எல்லாரும் மகிஅக்கா வீட்டுல இருக்கோம். (போட்டோல லெஃப்ட் டு ரைட் பாருங்க).

2 வருஷத்துக்கும் மேல அக்காகூடவே இருக்கறதால எங்களுக்கும் ப்ளாகில் எழுதும் பைத்தியம் தொத்திகிச்சு. அக்கா எங்கே போயிட்டாங்கன்னு கேக்கறீங்களா? ஷீ இஸ் பிஸி இன் கிச்சன்..அவிங்க வரதுக்குள்ள நைஸா ஓடியாந்திருக்கோம். :)


விஷயம் என்னான்னா காயத்ரி அக்காவும்,அகிலா அக்காவும் மகி அக்காவ ஒரு தொடர்பதிவு எழுதச்சொல்லிருக்காங்க. உங்களுக்கே தெரியும்,அக்கா கொஞ்சம் கூச்ச சுபாவின்னு.அதனால அக்காவைப் பத்தி சொல்ல நாங்க வந்திருக்கோம். காயத்ரி அக்கா என்ன சொல்லிருக்காங்கன்னா,மகி அக்காவைப் பத்தி 7 விஷயம் சொல்லணுமாம்.காதை கொஞ்சம் தீட்டிகிட்டு கேளுங்க! :)

Ted:மகி அக்கா ரெம்ப நல்லவங்க,வல்லவிங்க! (வல்லவி=வல்லவனுக்கு பெண்பால்)
அப்பு:மகி அக்கா ரெம்ப அழகா(!!) இருப்பாங்க!
அப்புச்சி:மகி இயற்கைய ரொம்ப அழகா வர்ணிக்கும்!
குட்டி:மகி அக்கா சமையல்ல பலசமயம் புலி,சில சமயம் எலி! ஹிஹி!
க்ரிஸ்லி:மகி அக்கா போட்டோ எடுக்கறதுல எப்பவுமே புலி!
மோக்லி:மகி அக்கா ஒரு மல்ட்டிபிள் பர்சனாலிட்டி..அவிங்க எழுதறதைப் பாத்து,நேர்லயும் இப்படிதான் பேசுவாங்கன்னு கற்பனை பண்ணிருந்தீங்கன்னா,நீங்க ரெம்ப பாவம்! எழுதும்போது மட்டும்,அவங்க மனதில் ஒரு ஓரமா தூங்கிட்டு இருக்க ஸ்ப்ளிட் பர்ஸனாலிட்டி சுறுசுறுப்பா எழுதும். மத்த டைமெல்லாம் அக்கா ரெம்ப அமைதி!
ட்வீட்டி:மகி அக்காக்கு மஞ்சக்கலர் புடிக்கும்,நத்தை,பறக்கிற குருவி இதெல்லாம் ரசிக்கற அழகான ரசனை இருக்குது.

அடுத்து அகிலாக்கா கொஸ்டீன்ஸ் குடுத்து ஆன்ஸர்ஸ் கேக்கிறாங்கோ.அதெல்லாம் பார்த்தா எக்ஸாம் எழுதற எபெக்ட் வருதா,ஸோ யாரையாச்சும் பாத்து காப்பி அடிச்சுடலாம்ணு நாங்கள்லாம் ப்ளான் பண்ணம். இங்கே அக்காவே கொஞ்சம் கொஸ்டின்ஸுக்கு ஆன்ஸர் பண்ணிருந்தாங்கோ..அதையும் காப்பி அடிச்சி,அவிங்க மெய்ல் பாக்ஸ்ல ட்ராப்ட்-ல வச்சிருந்த மீதி ஆன்ஸர்ஸும் காப்பி அடிச்சி இங்கே பேஸ்ட் பண்ணிட்டம்.:)

1. Are you a vegetarian or have you thought of being one?
In-spite of Born, brought-up and married in a non-vegetarian family, I am an egg eating Vegetarian.

2. Who inspired you to cook?
I started to cook all 3 meals by myself only after the marriage. Hunger was the inspiration to cook! haahaa!!! Okay,don't get tensed! My mom,m-in-law and my beloved hubby are my initial inspirations,and then the inspiration list expanded with my friends and Internet.

3. How do you celebrate Christmas or a favourite festival of your choice?
We don't do much on Christmas day..Once we forgot to buy milk, and somehow managed to get it in a gas station. Its an unforgettable experience about Christmas!:)
My favourite festival is Diwali..I would love to celebrate it with everybody in my family. Of course with lot of fireworks and sweets.

4.Do you prefer to celebrate New Year's Eve with friends and/or family to ring in the New Year quietly and privately at home?
Back home,New Years were quite and private..I always get a new dress for the new year. Since it comes in between the month of Markazhi, I used to go to the temple early in the morning...those are good old days!! Now we are going to see fireworks and having get-to-gathers with the friends around.

5.If someone were to ask you to bring a dessert to a party,what would you bring? Store-bought or home made?If you were to make at home,what would you make?
I never liked the store bought (Indian) desserts here,so will make it at home only..the choices will be gulab-jamoon,kesari,ras malai,or some cakes.

6.How will you celebrate your next birthday?
Haven't thought about it yet! Like last year it will be quite and private.:) We will go to the temple and have dinner outside.

7.Do you have a New Year resolution and will you be sticking to it?
Nope..I haven't had any resolutions so far.Its better not to take it than brake it.

இவ்ளோதாங்க டைப் பண்ணி வச்சிருந்தாங்கோ.ஆன்ஸர்ஸ் எல்லாம் எப்பூடி இருக்கு? சூப்பரா இருக்குல்ல? மகி அக்கா ஆல்வேஸ் ராக்ஸ்,யூ நோ??

இவ்ளோ நேரமா போராடி(!!) அக்கா பண்ணிய குக்கீ!! எல்லாரும்*** சுத்தி,கடப்பாரை,வெடிமருந்து இதெல்லாம் ரெடியா எடுத்துட்டு பிஸ்கட் சாப்புட வாங்கோஓஓஓஓ! :) :) :)))))

மகி அக்கா கொடுமை போதாதுன்னு இப்ப எங்க கொடுமையையும் பொறுமையா படிச்சதுக்கு டாங்க்ஸ்!

ஜெய்லானி
அண்ணா

அப்பாவி தங்கமணியக்கா
என்றென்றும் 16-பானுஅக்கா
பாலாஜி சரவணன் அண்ணா
வானதியக்கா
சிவா அண்ணா
ஜலீலா ஆன்டி
ஸாதிகா ஆன்டி
(ஆன்டீஸ்,கோபப்படாதீங்க,நீங்க மகியக்காவுக்குதான் அக்கா,எங்களுக்கு ஆன்ட்டி!ஹிஹி)
இவங்களை எல்லாம் இந்தப் பதிவைத் தொடருமாறு அன்போடு கேட்டுக்கொண்டு,அட்வான்ஸா இந்த அவார்டையும் வழங்கிவிட்டு விடைபெறுகிறோம்.
இப்ப நம்மள்லாம் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டமல்ல?உங்கள விட்டுட்டு எங்களால இருக்க முடியாது,இனிமேல் நாங்க அடிக்கடி வருவோம்,(ஜாக்கிரதை!) நன்றி!
_()_ _()_ _()_

**** அந்த இடத்தில கொஞ்சம் ஸ்பேஸ் வெள்ளையா இருக்கும்,அதை ஹைலைட் பண்ணிப் படியுங்கோ. ஜெய் அண்ணாவோட கழுக்குக்கண்ணுக்கே இது தெரிலன்னா,வேற யாருக்குமே தெரியாது,அதனாலே சஸ்பென்ஸை உடைச்சாச்ச்ச்ச்ச்ச்ச்! :)

41 comments:

 1. ஆஹா... அவார்ட் குடுக்கறேன்னு கொக்கி போட்டு கூப்ட்டு இப்படி சிக்க வெக்கறது என்ன ஞாயம்? இதுக்கு இ.பி. கோ செக்சன் படி...ஓ... நீங்க இருக்கறது அமெரிக்காவாச்சே... சரி இந்த ஊரு இ.பி.கோ படி தினமும் என் ப்ளாக் படிக்கணும்னு தண்டனை குடுத்து கம்ப்யூட்டர் arrest செய்கிறேன்... ஹா ஹா ஹா

  Thanks for the award Mahi. Sure will write the post... thanks

  ReplyDelete
 2. ஆஹா..இதுல இப்படி ஒரு வழி இருக்கா இது தெரியாமப் போச்சே..!! அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 3. விருது பெற்றவர்கள் வாழ்க...!!அதை கொடுத்தவர் வாழ்க..வாழ்க..!!

  ReplyDelete
 4. //ஆன்டீஸ்,கோபப்படாதீங்க,நீங்க மகியக்காவுக்குதான் அக்கா,எங்களுக்கு ஆன்ட்டி!ஹிஹி)//

  நல்ல வேளை என்னைய தாத்தா ஆக்காம விட்டாங்களே ஹி..ஹி..

  ReplyDelete
 5. //How will you celebrate your next birthday?
  We will go to the temple and have dinner outside.//
  அன்னைக்கி ஒரு நாள் மட்டுமாவது மாம்ஸ ஃபிரியா விடுறீங்களே ஆனந்த கண்ணீரே வருது :-)

  ReplyDelete
 6. //what would you bring? Store-bought or home made?If you were to make at home,what would you make?

  I never liked the store bought (Indian) desserts,so will make it at home only..the choices will be gulab-jamoon,kesari,ras malai,or some cakes.//

  சத்தியமா மனச தொட்டு சொல்லுங்க ..பதில்ல முதல் வரி (I never liked )மட்டும் தானே உண்மை ஹி..ஹி...

  ReplyDelete
 7. //Once we forgot to buy milk, and somehow managed to get it in a gas station. Its an unforgettable experience about Christmas!:) //

  அந்த ஒரு நாள் மட்டும்தானா மறந்தது..!!
  பால் இல்லாம பால்கோவா செய்வது எப்படின்னு ஒரு ரெஸிபி போடுங்களேன் :-)

  ReplyDelete
 8. //Hunger was the inspiration to cook! haahaa!!!//

  100 / 100 மார்க் நீங்க பாஸ்

  ReplyDelete
 9. first, i say thank you..

  you are the first one giving award to me.

  thanku you..

  (am very sad am not annaa..)am very small boy..18years old.

  ReplyDelete
 10. //அவிங்க எழுதறதைப் பாத்து,நேர்லயும் இப்படிதான் பேசுவாங்கன்னு கற்பனை பண்ணிருந்தீங்கன்னா,நீங்க ரெம்ப பாவம்!//

  இது மட்டும் நூத்துக்கு நூறு சரிங்கோ :))

  மீதி ஆறும் - இந்த அவர்கள் படத்துல ஜூனியர் பேசறா மாதிரி கமலே பேசுவாரே.. அந்த மாதிரி நீங்களே உங்க புராணம் பாடியிருக்கீங்களா மஹி :))

  ReplyDelete
 11. மகி அக்கா,

  சிவா அண்ணா இல்லை
  சிவா தம்பி
  அப்டின்னு சொல்லுங்கோ
  அப்போதான் அவர்ட் வாங்கிப்பேன்

  இரண்டு தடவை படித்தும் புரியலை
  கொஞ்சம் ஆங்கிலம் வராது :)
  பிறகு விருது வாங்கியவர்களுக்கும்
  கொடுத்த மகிமாவுக்கும்
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 12. //அந்த மாதிரி நீங்களே உங்க புராணம் பாடியிருக்கீங்களா மஹி :)) //அதான் பண்ணச்சொன்னாங்க சந்தனா! டைரக்ட்டா பாட கூச்சமா இருந்ததால,இப்படி பாடவைச்சாச்சு! :)

  சிவா தம்பி,நீங்க எனக்கு தம்பிதான்,ஆனா எங்க வீட்டு டாய்ஸ்க்கு எல்லாம் கண்டிப்பா அண்ணாதான்! சின்னப்பசங்க உங்களுக்கு மொதமொதலா அவார்டு குடுத்திருக்காங்க,மறுப்பு சொல்லாம வாங்கிக்கோங்க. :)

  புவனா,/தினமும் என் ப்ளாக் படிக்கணும்னு தண்டனை குடுத்து கம்ப்யூட்டர் arrest செய்கிறேன்... ஹா ஹா ஹா/ இதெல்லாம் தண்டனை இல்லீங்கோ,,நாங்க தினமும் பண்ணறது..வேற ஏதாவது டொரான்டோ தண்டனை இருந்தா குடுங்க.ஹிஹி!

  ஜெய் அண்ணா,பிஸ்கட் பத்தி எதுமே சொல்லல நீங்க?? அந்த சோடா புட்டி கண்ணாடியப் போட்டுட்டு படிங்க,சரியா??

  ReplyDelete
 13. விருதுக்கு மிக்க நன்றி மகி :)
  விருது கொடுத்துட்டு அப்படியே தொடர் பதிவுக்கும் ஆர்டர் போட்டுட்டீங்க :)

  ReplyDelete
 14. //Its better not to take it than brake it. //
  ஹி ஹி.. நீங்களும் நம்ம சங்கம் தானா? :)

  ReplyDelete
 15. மகி, நல்லா தான் இருக்கு. ஆனா, இந்த வானதியக்கா என்பது நானா?? ஜெய் அண்ணாவா?? தாத்தான்னு சொல்லியிருந்தா மனசு கொஞ்சம் ஆறி இருக்கும்.
  உங்கள் ஆங்கிலதளம் பற்றி எனக்கு இப்பதான் தெரியும். நல்ல பொறுமை தான் உங்களுக்கு.

  ( வானதியக்கா நானாக இருந்தால் ) விருதுக்கு மிக்க நன்றி. ஏன்ன்ன்ன்ன் சந்தனா பேபியை அழைக்கவே இல்லை?????

  ReplyDelete
 16. /வானதியக்கா என்பது நானா??/ஆமாம் வானதி,சாட்சாத் நீங்களேதான்! :)

  /தாத்தான்னு சொல்லியிருந்தா மனசு கொஞ்சம் ஆறி இருக்கும்./அடுத்த பதிவுல 'கொள்ளுத்தாத்தா'ன்னு சொல்லி ஜமாய்ச்சிடலாம்,கவலைப்படாதீங்க!

  /ஏன்ன்ன்ன்ன் சந்தனா பேபியை அழைக்கவே இல்லை?????/அட ஆமாம்! விட்டுப்போச்சே,கூப்ப்ட்டுடலாம்னறீங்க? ;)

  ReplyDelete
 17. Mahi alaga eluthi asathareenga! Valthukkal! Biscuts super!
  Kurinji

  ReplyDelete
 18. மஹி ரொம்ப அசத்தலான பதிவு ... பிஸ்கட் எனக்கு வேணாம் ,வேற எதாவது கொடுங்க.. yes mahi you rock in this post....

  ReplyDelete
 19. //ஜெய் அண்ணா,பிஸ்கட் பத்தி எதுமே சொல்லல நீங்க?? அந்த சோடா புட்டி கண்ணாடியப் போட்டுட்டு படிங்க,சரியா??//

  நீங்க பதிவு போடற டைம் எங்கூர்ல பேய் உலவும் நேரம் பாதியில் கொர்ர்ர்ர்ர்ர்......

  ReplyDelete
 20. //அவிங்க எழுதறதைப் பாத்து,நேர்லயும் இப்படிதான் பேசுவாங்கன்னு கற்பனை பண்ணிருந்தீங்கன்னா,நீங்க ரெம்ப பாவம்! //
  ஏன் அடிச்சி பின்னிடுவீங்களா..? எதுக்கும் கிரிக்கெட் டிரஸ்சோடதான் வரனும் போல ..ஹி..ஹி...

  ReplyDelete
 21. ha ha...;) நல்ல செலக்ஷன் தான். இட்லி மாமிக்கு ஒரு சமையல் @#மி அவார்ட் குடுக்கர்து ஒன்னும் அதிசயம் இல்லை!னு ஜெய்லானி சொல்ல சொன்னார்!..:PP ( நாராயண! நாராயண!)

  ReplyDelete
 22. //ஷீ இஸ் பிஸி இன் கிச்சன்..அவிங்க வரதுக்குள்ள நைஸா ஓடியாந்திருக்கோம். :) //

  //இவ்ளோ நேரமா போராடி(!!) அக்கா பண்ணிய குக்கீ!! //

  இன்னைக்கிதான் ஒரு உண்மை வெளி வந்திருக்கு ஹா..ஹா...

  //சுத்தி,கடப்பாரை,வெடிமருந்து இதெல்லாம் ரெடியா எடுத்துட்டு //

  இதெல்லாம் சொல்லிதான் தெரியனுமா..?ஹி..ஹி...ஆல்ரெடி இன் பில்டட்..


  //பிஸ்கட் சாப்புட வாங்கோஓஓஓஓ! :) :) :))))) //

  ஒரு குக்கிக்கேஇந்த நிலை என்றால் நீங்க ஹல்வா , லட்டு செய்வதை நினைத்தால குலை நடுங்குது அவ்வ்வ்வ்

  ReplyDelete
 23. /( நாராயண! நாராயண!)/நாரதரே,உங்க கலகம் இங்கே பலிக்காது! உடன்பிறப்புகளுக்குள்ள சண்டைக்கெல்லாம் சான்ஸே இல்ல! Good try தக்குடு!:)

  ReplyDelete
 24. //ஜெய்லானி சொல்ல சொன்னார்!..:PP ( நாராயண! நாராயண!)//

  அடப்பாவிங்களா...எங்கே போனாலும் விடாம குத்துறாய்ங்களே...!! ஒரு கேப் ...விட்டு அடிக்ககூடாது....அப்புறம் கொலை கேசில உள்ளே போய்டுவீங்க ..ஜாக்ரத :-)

  ReplyDelete
 25. /குலை நடுங்குது அவ்வ்வ்வ்/அட,இதுக்கே பயந்தா எப்புடி ஜெய் அண்ணா? டவுன்ஹால் தர்க்கால கயிறு மந்திரிச்சு வச்சிருக்கேன்,ஐயனார் கிட்ட விபூதியும் மந்திரிச்சி ரெடியா இருக்குது,அந்தோணியார் கோயில் உப்பு-மிளகும் இருக்குது.அல்வா கிண்டும்போது சொல்லிவிடறேன்,சீக்கிரமா வந்துருங்க. ஹாஹாஹா!

  ReplyDelete
 26. யக்காவ் ..படத்துல மூனுமே நல்லா இருக்கே..இதுல எது அவார்டு..? ((ஒரு சின்ன சந்தேகம் ஹி..ஹி.. ))

  ReplyDelete
 27. @ Mahi akka - //நாரதரே,உங்க கலகம் இங்கே பலிக்காது//
  கலகம் எல்லாம் ஒன்னும் இல்லை, உண்மையை தானே ஜெய்லானி சொல்லி இருக்கார்!!
  (ஜெய்லானி நல்ல பாத்துக்கோங்க! தக்குடு உங்களுக்கு சப்போர்ட்தான் பண்ணரான்)..:)

  ReplyDelete
 28. nice answers and great to know abt u !

  ReplyDelete
 29. Mahi! Super.. Thank you so much for answering! Kalakkitteenga!

  ReplyDelete
 30. வித விதமான டெட்டி பியர் பொம்மைகள் வெகு அழகு.விருதுக்கு மிக்க நன்றி மகி.

  ReplyDelete
 31. டெடி பியரெல்லாம் சேர்ந்து மஹியோட மஹிமையெல்லாம் சொலரது நன்றாக இருக்கு. கம்பர் வீட்டுத் தறியும் கவிதை பாடுமாம்.
  சாதாரணமாக யோசிக்கும் கேள்விக்கெல்லாம் சரியான பதில்.ஓஹோ என்னிதும் சரியான பதில்.

  ReplyDelete
 32. விருது பெற்றவர்கலுக்கும் அதை கொடுத்த தாங்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..

  ReplyDelete
 33. hey teddy kutties.... neengalum mahi maathiriye, nalla katha ezhutha aarambichuteengala..... unga akka kudave irunthu neengalaum bloguku ellam post panna aarambichuteengala.... welcome kuttingala.....

  ReplyDelete
 34. super post, Mahi veetu bommayum kooda attakaasama posting podaraangalae, wonderful

  ReplyDelete
 35. ஹாய் டெட்டீஸ்... நீங்க எல்லாரும் ச்சோ ச்வீட்.... இனிமே அடிக்கடி உங்க பதிவுகளை எதிர்பார்க்கிறோம்... அவார்டுக்கும் தொடர்பதிவு எழுத அழைச்சதுக்கும் நன்றி டெட்டீஸ்...பதிலுக்கு என் பங்கு குக்கீஸ் உங்களுக்கு...

  ஹாய் மஹி... நான் சொன்னது க்ரெக்ட்டாயிடுச்சு பார்த்தீங்களா... வாயில்லா ஜீவன் டெட்டிஸையே பேச வச்சீட்டீங்களே!

  நன்றி மலிக்கா.

  ReplyDelete
 36. மகி வீட்டு டாய்ஸ் இவ்வளவு பேசும் பொழுது மகி வாயை திறந்தால் அப்பப்பா! நல்ல பகிர்வு,லேட்டாக வந்ததால் பின்னூட்டங்களை ரசிக்க முடிந்தது.காயத்ரி இந்த விருது தந்து என்னை தொடர சொல்லி இருந்தாங்களே!மறந்தே போயிட்டேன்.

  ReplyDelete
 37. /மகி வீட்டு டாய்ஸ் இவ்வளவு பேசும் பொழுது மகி வாயை திறந்தால் அப்பப்பா!/
  /ஏன் அடிச்சி பின்னிடுவீங்களா..? எதுக்கும் கிரிக்கெட் டிரஸ்சோடதான் வரனும் போல ..ஹி..ஹி.../
  ஆசியாக்கா & ஜெய் அண்ணா,முற்றிலும் தவறான கருத்து! என்னை நேரில் பாத்த சாட்சி இங்கே கருத்து சொல்லிருக்காங்க,பார்க்கலையாஆஆஆஆ?

  // எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

  //அவிங்க எழுதறதைப் பாத்து,நேர்லயும் இப்படிதான் பேசுவாங்கன்னு கற்பனை பண்ணிருந்தீங்கன்னா,நீங்க ரெம்ப பாவம்!//

  இது மட்டும் நூத்துக்கு நூறு சரிங்கோ :)


  நான் ரொம்ப அமைதியான,சாதுவான பொண்ணுங்க,நம்புங்க,ப்ளீஸ்! :))))))

  ReplyDelete
 38. Mahi after seeing this post I can't help but write to you :) I donno whether you will forgive me for not responding to your mail but I had to take a break from blog due to some valid reasons. We do have so much in common. I just have to say I love you and I love you the person your are! Take care!
  Manju

  ReplyDelete
 39. வெகுநாட்களுக்குப் பிறகு உங்க கருத்தைப் பார்த்து சந்தோஷமா இருக்குங்க மஞ்சு! எப்படி இருக்கீங்க..நலம்தானே?

  யாரும் வேணும்னே மெய்லுக்கு பதில் அனுப்பாம இருக்கமாட்டாங்க,பதிலனுப்ப சந்தர்ப்பம் இல்லாமல் போயிருக்கலாம். அதனால் எனக்கு உங்கமேல கோவமெல்லாம் இல்லை! :)

  ஒத்த ரசனையுள்ள ஆட்களைப் பார்க்கையில் ஒரு மகிழ்ச்சியா இருக்கும். எனக்கும் அப்படியே! முடிந்தால் ப்ளாக்-ஐ அப்டேட் பண்ணுங்க மஞ்சு! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails