Saturday, November 16, 2013

ஒரு பயணம், புதுவரவு, பதவிஉயர்வு & விடுமுறை!

ஒரு பயணம்...
ஒரு நாளில்லை,
ஒரு வாரமில்லை..
ஒரு மாதமில்லை! 
சற்றே நீண்ட நெடும்பயணம்!

பயணத்தின் ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மணியும்
ஒவ்வொரு நொடியும்
இதயக்கல்லில் செதுக்கிய 
இனிய சிற்பமாய்ப் பதிய..
பயணம் நெடுகவும் 
இடையிடையே
சொந்தங்களும் நட்புக்களும் 
சந்தோஷ கணங்களை 
அள்ளி வழங்க..
வாரங்கள் நாற்பதும் கழிய..
மாதங்கள் ஒன்பதும் முடிய..
 
எங்கள் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல, 
பூக்களின் வண்ணம் கொண்டு 
பிறந்திருக்கிறாள் எங்கள் தேவதை! 
We are Blessed with a BABY GIRL! 
:)
 ~~~ 
கணவன் - மனைவியாக இருந்த எங்களுக்கு அப்பா-அம்மா என்ற பதவிஉயர்வையும் செல்லக்குட்டியாய் வலம் வந்த ஜீனோவுக்குபெரியண்ணா என்ற பொறுப்பான:)பதவி உயர்வையும் தந்திருக்கும் எங்கள் மகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தவும், என் வலைப்பூக்கள் இன்னும் சிலநாட்கள் ஓய்வெடுக்கும் என்று அறிவிக்கவுமே இந்தப் பதிவு!
~~~
 உங்களனைவரின் வாழ்த்துக்களும் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும். விரைவில் மீண்டும் சந்திப்போம்! உங்கள் பிரார்த்தனைகளில் எங்களையும் சேர்த்துக்கொள்வதற்கு நன்றிகள்!:) :) :)
~~~

44 comments:


 1. மகிக்கு குட்டி தேவதை பிறந்து இருக்கிறாளா?மகிழ்ச்சி மகி.வாழ்த்துக்கள்.உங்கள் மகள் நீண்ட ஆயுள்,ஆரோக்கியம்,அனைத்து வளங்களுடன் மகிழ்வாக வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

  ReplyDelete
 2. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 3. Congrats Mahi!Enjoy each and every moment with ur precious lil baby!

  ReplyDelete
 4. ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாழ்த்துக்கள் மகி. நிச்சயம் எங்கள் பிரார்த்தணைகள் உண்டு. குட்டிப் பாப்பாவுடனான பொழுதுகளை இனிமையாய், ரசித்து செலவிடுங்கள்.

  இடையில் பெரியண்ணாதான் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பார்போல, இந்தத் தூக்கம் தூங்குகிறார்!

  ReplyDelete
 5. I'm a silent reader to ur site mahi for a very long time.. Congrats for the baby. God bless you both. Enjoy the motherhood. We will miss you.

  ReplyDelete
 6. பயணம் நெடுகவும்
  இடையிடையே
  சொந்தங்களும் நட்புக்களும்
  சந்தோஷ கணங்களை
  அள்ளி வழங்க..

  மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்..!

  ReplyDelete
 7. Congratulations Mahi.!
  My blessings to you , Kutty Mahi and of course for your family.
  May your daughter be blessed, with health, wealth and prosperity.

  ReplyDelete
 8. ரொம்ப சந்தோசமாக இருக்கின்றது மகி...உங்களுடைய குட்டி பாப்பாவுக்கு எங்கள் வாழ்த்துகள்...

  ReplyDelete
 9. மகிழ்ச்சி பொங்க மகத்தான செய்தி சொன்னீர்கள்!

  நலமாக இருக்க மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் மகி!

  ReplyDelete
 10. Mahi,
  Wish you a very happy parenting!
  -Ezhilarasi Pazhanivel

  ReplyDelete
 11. Congrats Mahi, enjoy every moment of motherhood, take care of the little one and yourself..

  ReplyDelete
 12. Congrats, Mr $ Mrs. Mahi. Come back soon with your angel's story.

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள்டா :)
  டேக் கேர் மா ...

  ReplyDelete
 14. Very happy to hear the news, Take care dear.. post pictures of the baby soon.

  ReplyDelete
 15. Congratulations Mahi. Wish you both a very happy parenthood. Blessings & kisses to the baby. Hugs to you dear.

  ReplyDelete
 16. மகி, மனமார்ந்த இனிய நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. congrats Mr & Mrs MahiArun. eagerly waiting to see your lil one

  ReplyDelete
 18. மனமார்ந்த இனிய நல்வாழ்த்துக்கள். மகிழ்ச்சி மகி, உங்கள் மகள் நீண்ட ஆயுள்,ஆரோக்கியம், அனைத்து வளங்களுடன் மகிழ்வாக வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 19. மனமார்ந்த வாழ்த்துகள் மகி!! உங்கள் தேவதை எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகள்..

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள் மகி வாழ்த்துக்கள்.. குட்டித் தேவதைக்கு அதிரா ஆன்ரியின் வெல்கம்...

  பிளாஸ்பக் ஞாபகம் வந்திடுச்சி.......
  முடியும்போது படிச்சுப் பாருங்கோ...

  http://www.arusuvai.com/tamil/node/8870

  ReplyDelete
 21. My hearty congratulations Mahi. Very very happy for you. May god bless you all. Enjoy your days with the lovely princess. Take care Mahi. வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 22. குட்டி பாப்பா எல்லா வளங்களும் பெற்று சிறப்பாக வாழ மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மகி..!

  ReplyDelete
 23. //செல்லக்குட்டியாய் வலம் வந்த ஜீனோவுக்குபெரியண்ணா என்ற பொறுப்பான:)பதவி உயர்வையும் ///
  நோஓஓஓஓஓஓஓ ஜீனோ.. இனி நீங்க உப்பூடியெல்லாம் ஸ்லீப் பண்ணப்பூடா:) கொஞ்சம் அடக்கொடுக்கமா இருக்கோணும் சொல்லிட்டேன்ன்ன்:) தங்கச்சி பாப்பா வந்திட்டால்ல....

  ReplyDelete
 24. Hai Mahi.... Hearty Congratulations.... Really feel very happy to hear such a special news.... Eagerly waiting to see your princess :) .. Post her photos soon.

  ReplyDelete
 25. Great....Very Happy :) hearty congratulations.....mahi..... Happy Parenting to both of u.....

  ReplyDelete
 26. மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் மகி,குட்டி பாப்பா எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.குட்டி மகியின் பெயர் என்ன??

  ReplyDelete
 27. மனங்கனிந்த வாழ்த்துக்கள் மகி.

  அனிதா

  ReplyDelete
 28. மஹி இப்போதுதான் பார்த்தேன். ரொம்ப ஸந்தோ,ஷம்.
  சமத்தி எதைப் பெற்றாள். தலைச்சன் பெண்ணைப் பெற்றாள்.
  எவ்வளவு ஸந்தோஷம் தெறியுமா?பதவி உயர்வுக்கு அமோக வாழ்த்துகள். குட்டிச்செல்லத்திற்கு பாட்டி வரவேற்பு கொடுக்கிறேன். எல்லோருக்கும் நல்லாசிகள். உங்கள் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன். உங்கள் யாவரின் நலம் விரும்பும் அன்புடன் காமாட்சி.

  ReplyDelete
 29. ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாழ்த்துக்கள் மகி:-)

  ReplyDelete
 30. வாழ்த்திய அன்புள்ளங்கள் அனைவருக்கும் எங்கள் மனம் நிறைந்த நன்றிகள்! நாங்கள் புதிய ஃலைஃப் ஸ்டைலில் பொருந்தப் பழகிக்கொண்டிருக்கின்றோம். :)
  மீண்டும் சந்திப்போம், நன்றி!

  ReplyDelete
 31. Wowwwww.... Congrats mahi. Feeling happy for u. Enjoy the precious moments.

  ReplyDelete
 32. மகிக்கும் குடும்பத்தினருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள். @}->--

  ReplyDelete
 33. me the first wishess to kuti mahimaa..my sweet angel...
  i pray god to give all happiness to your family

  ReplyDelete
 34. வாழ்த்துக்கள். இறைவனின் அருளும் ஆசியும் உங்களுக்கும் குழந்தைக்கும் என்றென்றும் கிடைக்கட்டும்

  ReplyDelete
 35. Contracts mahi .........very happy to see this .......kuttimahikku vaalthukkal.

  ReplyDelete
 36. நல்வாழ்த்துக்கள் மகி, தாயும் சேயும் நலமா? எல்லா வளமும் நலமும் பெற்று தங்கள் செல்லக்குட்டி வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.மகி நன்றாக ரெஸ்ட் எடுத்து விட்டு, குழந்தையை கவனித்துக் கொண்டு நேரம் கிடைக்கும் பொழுது மட்டும் தங்கள் வலைப்பூவில் பகிருங்கள்.

  ReplyDelete
 37. romba romba santhosam Mahi.....kutti paapavukku engal vaalthukkal....enna peyar vaithuleergal? 1-2 yrskku busya than erukkum Mahi...enjoy :-)

  ReplyDelete
 38. வாழ்த்துக்கள் மஹீ. இந்த பதிவை மிஸ் பன்னிட்டேன். ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி மஹி. குட்டிக்கும் என் அன்பான முத்தங்கள்.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails