Tuesday, November 22, 2011

அது..இது..எது??!!

வழக்கம் போல எதோ ஒரு குசும்பு டைட்டில்னு உங்களுக்கே புரிஞ்சுதான் வந்திருப்பீங்க! என்ன செய்ய...ப்ளாக் ஆரம்பிச்சு கொஞ்சநாள்ல இருந்து சமைக்கிறதோட இல்லாம, அதையும் இதையும் உளறிக்கொட்டி கிளறி மூடி, அப்புடி-இப்புடின்னு நானும் 200 பதிவு தேத்தீட்டேன்! :))))

பொதுவாவே இந்த நம்பரை எல்லாம் கவனிக்கிற பழக்கம் இல்லைன்னாலும் அங்கங்க வரும் அரைசதம் பதிவு, முதல் சதப்பதிவு, 75வது பதிவு அதுக்காக ஒரு Give away, இதெல்லாம் பார்க்கிறப்ப எனக்குள்ள உறங்கிகிட்டு இருந்த சிங்கம் சிலிர்த்து எழுந்து பார்த்தப்பவே 200வது பதிவு பப்ளிஷ் ஆகிருந்தது. ஹிஹி!

சரி, இருநூறு போனாப்போகட்டும், 201வது பதிவாவது இனிப்பாப் போடுவோம்னுதான் ஒருமுறை நண்பர் வீட்ல சாப்பிட்ட இனிப்பை ட்ரை பண்ணுவோம்னு ஆரம்பிச்சு, எப்புடியெப்படியோ என்னென்னமோ நடந்து ஒருவழியாக மேலே இருக்க ஸ்வீட்டாக அவதாரம் எடுத்துச்சு. இதை செய்து முடிச்சு பக்கத்துவீட்டுக்கு டப்பால அனுப்பிட்டு சில நண்பர்களுக்கு மெய்ல்ல அனுப்பினேன்.

ஒரு இடத்தில இருந்து "தேங்கா பர்ஃபி சூப்பர்ர்ர்ர்ர்ர்!"னு பதில் வந்தது!?!! இன்னொரு இடத்தில இருந்து "ப்ரெட் pudding-ஐ டயமண்ட் ஷேப்ல கட் பண்ணிட்டீங்களா?"ன்னு கேள்வி வந்தது!?!! சிலரிடம் இருந்து பேச்சுமூச்சே இல்ல!?!! ஹூம்..என்னவோ போங்க,நான் ஒண்ணு நினைச்சு செய்யப்போக, அது என்னவோ நினைச்சுகிட்டு புதுசா வந்தது. விநாயகர் புடிக்கப்போய் முருகரா வந்தமாதிரின்னு வச்சுக்குங்களேன்! கொரங்கா வராதா வரை சந்தோஷம்தான நம்மளுக்கு?? என்ன நாஞ்சொல்றது? ;))))

ஜோக்ஸ் அபார்ட், என் பதிவுகளைப் படித்து ஊக்கம் தரும் உள்ளங்களுக்கும், பின்தொடரும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி! இனிப்பு சாப்புடுங்க! :)))

~~~~

பூரியவும் ஒரு ரெசிப்பின்னு தனியாப் போடணுமா ன்னு மனசாட்சி கேட்டுதா..அதனால போடோவுடன் நான் நின்னுட்டேன். பூரிக்கு ரவை போடணும், எண்ணெய் ஊத்தி பிசையணும் எக்ஸட்ரா எக்ஸட்ரா எல்லாம் நான் செய்யறதில்லைங்க. கொஞ்சமா உப்புப் போட்டு, மாவை கொஞ்சம் கெட்டியாப் பிசைஞ்சு குட்டி குட்டி பூரியா செய்துருவேன், பார்க்கவும் அழகா இருக்கும், எண்ணெயும் கம்மியா ஊத்திப் பொரிச்சாப் போதும். பூரி-தேங்காச்சட்னி-உருளை கிழங்கு மசால்..இதான் எங்க டீஃபால்ட் காம்பினே ஷன்! :)
~~~~
இது போனவாரம் செய்த ரவா இல்டி..ச்சீ,ச்சீ, இட்லி! :))) எப்பவுமே எங்கூட்டுக்காரருக்கு ரவா இட்லி-ரவா தோசை இதெல்லாம் புடிக்காது. இருந்தாலும் இந்த முறை ஈனோ சால்ட் வாங்கிவந்து செஞ்சு பார்ப்பமேன்னு..
சாயந்தரம் வந்ததுல இருந்து ஆஃபீஸ் call-லயே உட்கார்ந்திருந்தாரா, தேங்காச் சட்னி அரைக்க மிக்ஸி போடமுடில. அவர் வருகைக்கு முன்பே அரைச்ச வெங்காயச்சட்னி, ஃப்ரிட்ஜ்ல இருந்த பீட்ரூட் சட்னியுடன் இட்லி சூப்பரா இருந்தது. ரெசிப்பி விரைவில் வெள்ளித்திரையில்! ;)
~~~~
லிஸ்ட்ல அடுத்து வருவது மல்லிகே(Mallige) இட்லி/மல்லிகைப்பூ இட்லி/குஷ்பூ இட்லி!! ;) சுடச்சுட இட்லிய எடுத்து அதுமேல இதயம் நல்லெண்ணெய் ஊத்தி சாப்ட்டா.....:P:P:P ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸூப்பரா இருக்கும்! சாப்பிட்டிருக்கீங்க? ஜோதிகாதான் அதெல்லாம் சாப்புடும், நம்ம எங்கே??!ன்னு அங்கலாய்க்கறீங்களா..வெயிட்டீஸ்!! நான் எங்க வீட்டுல பூத்த மல்லிகைப்பூவ(!) பத்தி சீக்கிரமா சொல்லறேன்.
~~~~
இந்த கேப்ல பல படங்கள் &ரெசிப்பிகள் ரெடியாகிடுச்சு! சாய்ஸ் நிறைய வந்ததால எதைப் பப்ளிஷ் பண்ண, எந்த வரிசையில பப்ளிஷ் பண்ணன்னு ரெம்ப குழப்பமாகிருச்சுங்க. அது..இது...எது??!! ன்னு மண்டையப் பிச்சுகிட்டதுல 2 நாள் ஓடிருச்சு. முக்காவாசிப் படங்கள கொலாஜ் பண்ணினேன்.

மண்டே ப்ளூஸ் கூட அது..இது..எதுங்கற குழப்பமும் சேந்ததால கம்ப்யூட்டர் ஸ்க்ரீன விட்டுத் தொலைச்சிட்டு கடவுள் படைச்ச பூமிப்பந்தை ரசிக்க கையில் கேமராவுடன் புறப்பட்டேன் நேற்றுப் பிற்பகலில்! சரி..சரி..ஓடாதீங்க..இயற்கையில மூழ்கினதுல கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன். :)

எங்க வீட்டுப்பக்கதிலே இருக்க ஒரு பார்க்கில் நான் ரசித்த இலையுதிர்கால வண்ணக்கலவை இந்தப் படம்! மாலை வெயில் மரங்களை கழுவிவிட்டதில் இன்னும் கொஞ்சம் மெருகேறி பலநிறங்களில் படம் காட்டிய மரங்கள், இலைகள், பச்சைப்பட்டு விரித்தது போல புல்வெளி.. பார்க்க பார்க்க அலுக்கவில்லை! சாலைகளில் கடந்து செல்கையில் கலர்ஃபுல் மரங்கள் "வாவ்!"னு திரும்பிப் பார்க்க வைக்கிறது.
~~~~
மழையும் மழை நிமித்தமும்..

ஞாயிற்றுக் கிழமை வெளியே கிளம்பும்போதே வானில் கருமேகங்கள் படைதிரண்டு தாக்குதலுக்குத் தயாராய் நின்றிருந்தன..கடைக்குள் இருந்து வெளியே வருகையில் சற்றே ஓய்ந்திருந்த மழையில் சுத்தமாய்க் கழுவி விட்டதுபோல பளபளத்த பார்க்கிங் லாட்டில் அழகாய்ப் பிரதிபலித்த மரம்..காருக்குள் இருந்து க்ளிக்கியதில் கவிதையாய்ப் படிந்த மழைத்துளிகள்!! ம்ம்ம்...குளிர்காலம் தொடங்கிடுச்சு!!! :)))))))
மழையோடு ஒரு இலையுதிர் காலம்..
மழையையும் மரங்களில் இயற்கையின் வண்ணக்கோலங்களையும் ரசிக்க சில நொடிகள்/நிமிஷங்கள் இருந்தால் ஆல்பத்தை க்ளிக்கிப் பாருங்க!:)
~~~~
அது..இது..எது??!...எந்த வரிசையில் பதிவுகளை எதிர்பார்க்கறீங்கன்னு சொன்னா வசதியா இருக்கும். அதுக்காக அதே வரிசையில் போடுவேன்னு உத்தரவாதம் தரமாட்டேன், ஆனா I will try to follow that order!!
[இதுக்கப்பறம் கண்டிப்பா கல்லடிதான் விழும்..மீ எஸ்கேப்பூ! ;))))]
~~~~

பி.கு. அது என்ன ஸ்வீட்னு கடைசிவரைக்கும் சொல்லவே இல்லையேன்னு கேட்கும் க்யூரியாஸிட்டி வாசகர்களுக்கு என்ன பதில் சொல்றது?? நான் எதை நினைச்சு ஆரம்பிச்சேனோ அந்த ப்ராடக்ட் கிடைச்ச பிறகுதான் இன்கிரிடியன்ட்டை சொல்லுவனுங்க. நாங்கள்லாம் கஜினி முகமது பரம்பரையில்ல..ஹிஹிஹி! நீங்க தைரியமாச் சாப்புடுங்க! ;)


39 comments:

  1. என்னவோ போங்க,நான் ஒண்ணு நினைச்சு செய்யப்போக, அது என்னவோ நினைச்சுகிட்டு புதுசா வந்தது. //
    இப்படித்தானே பல புது பண்டங்கள் உண்டாகுது. u continue !!
    எனக்கு ரொம்ப பசி வந்திட்டுது, இப்போ நான் சாப்பிடப் போறேன்

    ReplyDelete
  2. 200 க்கு நல்வாழ்த்துக்கள்.பாதாம் முந்திரி ஸ்வீட்!நமக்கு ஆஊன்னால் இது தான் நினைவுக்கு வருது.
    இப்படி பூரி,இட்லியை காட்டி இப்ப வயிறு கப கபங்குது.
    இலையுதிர்க்காலம்,மழைக்காலம்,குளிர்காலம் எல்லாம் அட்டகாசமாக இருக்கு.

    ReplyDelete
  3. ரொம்ப நல்ல தமிழ் ல எழுதறீங்க மகி ...கலக்கிடீங்க போங்க.... வாழ்த்துக்கள் உங்க 201 பதிவுக்கு .. நீங்கள் சொல்லும் விதம் அருமை...

    ReplyDelete
  4. உங்களின் கலக்கலான 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மகி... இன்னும் இன்னும் பசியினை தூண்டும் சுவையான படங்களை காட்டி அசர வைக்க வாழ்த்துக்க

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் மகி.நீங்க இன்னும் நிறைய பதிவுகள் எழுதனும்னு நான் வாழ்த்துறேன்.
    உங்க தேங்காய் பர்பி கூட செய்து பார்த்தேன்.ரெம்ப சூப்பரா இருந்துச்சு.நான் தேங்கா பூவை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றுவிட்டு, வனிலா எசன்ஸ்தான் இருந்தது அதை மிக்ஸ் பண்ணினேன்.நல்ல டேஸ்ட். உடனே கொமன்ட் எழுதமுடியல.சாரி கேட்டுக்கறேன்.

    ReplyDelete
  6. முதலில் வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
    இன்னும் பல நூறு பதிவுகள் பெறவும் வாழ்த்த வயதில்லை
    என்றாலும் வாழ்த்தி மகிழ்கிறேன்

    ReplyDelete
  7. பிறகு ஒரு எட்டு இட்லி பார்சல் ...
    கூட பச்சை ,மஞ்சள் ,செகப்பு,எல்லா கலர் சட்னியும் தனியாக பார்சல்

    ReplyDelete
  8. பிறகு நான்கு பூரியும்
    ஸ்வீட் தேங்காய்பாறை போல நினைக்றேன் அதுவும் பார்சல் 4pcs.
    அப்புறம் உப்புமா இட்லி வேணாம்
    அதுக்கு பதிலா மல்லிகைப்பு இட்லி பார்சல் பண்ணிடுங்க

    ReplyDelete
  9. அணைத்து காலம் கலந்த புகைப்படம் அருமை
    ""இதுவும் கடந்து போகும்னு ""
    படங்கள் மெசேஜ் சொல்லுது

    ReplyDelete
  10. பேபி அதிரா விரதம் இருக்காங்க அவங்களுக்கு
    இதுவும் அனுப்ப வேணாம் ..
    dont forget to parcel to me...:)

    ReplyDelete
  11. இதுவும் //sorry mistakes எதுவும்//

    ReplyDelete
  12. கருத்து தெரிவித்த அன்புள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இப்ப தூக்கம் தூக்கம் தூக்கமா வரதால நாளை வந்து எல்லாருக்கும் தெளிவா நன்றி சொல்லறேன். தேங்க்ஸ்! :))))))))))

    ReplyDelete
  13. வெள்ளித்திரையில் தங்கதாரகையின் 200 வது பதிவுக்கு இரண்டாயிரம் வாழ்த்துக்கள் .
    சமையல் அறையில் கொஞ்சம் எக்ஸ்பெரிமென்ட் செய்து கொண்டிருக்கிறேன் மீண்டும் வருவேன்

    ReplyDelete
  14. ஆஆஆஆ.. மஞ்சள்பூஊஊஊஊஊஊ.. அதுவும் உணவில இடம் பிடிச்சிட்டுதோ அவ்வ்வ்வ்வ்வ்:)))...

    வரவர எனைப்போலவே நீஈஈஈஈஈஇண்ட பதிவு போடப் பழகிட்டீங்க... இதை 2 ஆக்கியிருக்கலாமோ?:)

    ReplyDelete
  15. பூரி ரெசிப்பி... இந்தியர்களுக்கு தேவையில்லாமல் இருக்கலாம், ஆனா நம் நாட்டவருக்கு... குறிப்பாக என் போன்றோருக்கு தேவைதான்... அதனால் எதுவாயினும் போடுங்க தயங்காமல்.

    எனக்கு சில பூரி மட்டும் பாதி பொங்கும்.... மற்றதெல்லாம் பொயிங்கவே பொயிங்காது... :))) கிக்..கிக்...கீஈஈஈஈஈஈஈ:)))

    ReplyDelete
  16. //siva said...
    முதலில் வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
    இன்னும் பல நூறு பதிவுகள் பெறவும் வாழ்த்த வயதில்லை
    என்றாலும் வாழ்த்தி மகிழ்கிறே//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் இதையே பாடிக்கொண்டு அவ்வ்வ்வ்வ்வ்:)))... சிவா..சிவா... இதுவும் கடந்து போகும்:)) நான் வயதைச் சொன்னேன்ன்:)))

    ReplyDelete
  17. இட்லி சூப்பர்... ஆனா பார்ப்பதுபொலவே வாய்க்கும், பூ மாதிரி இருக்குமோ? ஏனெனில் எனக்கும் பார்க்க படமெடுக்க சூப்பராக தெரியும், ஆனா பூ மாதிரி வராது... எப்பூடியெல்லாம் குப்புறக்கிடந்து முயன்றுவிட்டேன்... ம்ஹூம்....

    அம்மா நின்றால் மட்டுமே சூப்பர் இட்லி செய்வா:(.

    ReplyDelete
  18. //
    siva said...
    பிறகு ஒரு எட்டு இட்லி பார்சல் ...
    கூட பச்சை ,மஞ்சள் ,செகப்பு,எல்லா கலர் சட்னியும் தனியாக பார்சல்

    23 NOVEMBER 2011 00:09
    siva said...
    பிறகு நான்கு பூரியும்
    ஸ்வீட் தேங்காய்பாறை போல நினைக்றேன் அதுவும் பார்சல் 4pcs.
    அப்புறம் உப்புமா இட்லி வேணாம்
    அதுக்கு பதிலா மல்லிகைப்பு இட்லி பார்சல் பண்ணிடுங்//


    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வாணாம் மகி வாணாம்.. பேசாமல் சிவாவுக்கு ரிக்கெட் போடுங்க:))... அதிலயும் 20 வீதம் தள்ளுபடி கிடைக்கும்... பேபி எல்லோ ஹையோ ஹையோ... இனியும் நிண்டால் நான் இருட்டடி வாங்கிடுவேன்.. என் வாய் அடடடடங்கவே அடங்காதாம்:)))

    ReplyDelete
  19. இலையுதிர்காலம் சூப்பரோ சூப்பர் இங்கேயும்... சொல்ல முடியாத அயகு:))... யெச்..யெச்.... அதிகம் துள்ளப்பிடா.. இதுவும் கடந்து போகும்:)

    ReplyDelete
  20. siva said...
    பேபி அதிரா விரதம் இருக்காங்க அவங்களுக்கு
    இதுவும் அனுப்ப வேணாம் ..
    dont forget to parcel to me...:)///


    http://www.google.co.uk/imgres?q=shooting+cat&hl=en&sa=X&rlz=1C1RNNN_enGB370&biw=1440&bih=779&tbm=isch&prmd=imvns&tbnid=5pRK-Q6Np2kEiM:&imgrefurl=http://www.hunterlodging.com/K-9%2520Accomodations.htm&docid=Z0Y0Gd0sSpTF5M&imgurl=http://www.hunterlodging.com/CatShootingPheasant.gif&w=400&h=240&ei=9cHMTrKeFsrRhAfE4Ym_DQ&zoom=1&iact=hc&vpx=515&vpy=156&dur=306&hovh=174&hovw=290&tx=171&ty=90&sig=101279205199939732709&page=1&tbnh=106&tbnw=177&start=0&ndsp=30&ved=1t:429,r:2,s:0

    ReplyDelete
  21. //மகி said...
    கருத்து தெரிவித்த அன்புள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இப்ப தூக்கம் தூக்கம் தூக்கமா வரதால நாளை வந்து எல்லாருக்கும் தெளிவா நன்றி சொல்லறேன். தேங்க்ஸ்! :)))))))))//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு டேசெண்ட் டிசுப்பிளினே இல்லாத ஆட்கள்:))))))))))))))))0

    ReplyDelete
  22. //angelin said...
    வெள்ளித்திரையில்//

    ஹா...ஹா...ஹா... கிக்...கிக்..கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஏன் சிரிக்கிறேன் எனத்தானே விழிக்கிறீங்க...
    ஹா..ஹா..ஹா.... இம்..ஹாக்க்க்..மு...ஹா...றை...ஹா...ஹா..
    அ.....ஹா...ஞ்...ஹா..ஹா...சு..
    ..ஹா...ஹா...13 ஆவது கிக்..கிக்..கீஈஈஈஈஈஈஈ:)).

    ReplyDelete
  23. சரி சிரிச்சாச்சு, வயிறு முட்டச் சாப்பிட்டாச்சு... இனி அடுத்தது ஆங்.....

    200 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் மகி.

    ReplyDelete
  24. kamatchi.mahalingam@gmail.comNovember 23, 2011 at 3:02 AM

    அது, இது, எதுவானாலும் அழகாகவும்,
    ருசியாகவும் இருக்கு. எல்லாவற்றிற்கும் சேர்த்து வாழ்த்துக்கள். எல்லாருக்கும் நிறைய பார்ஸல் செய்து அனுப்பிவிடு.படங்கள்ளாம் அருமையாக இருக்கு. கோர்வையாக எழுதுகிறாய். ஆயரமாயிரமாய் பதிவுகள் போட வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  25. //அது அதுவாகவே இருக்கட்டும் இது அதுவாக இருக்கலாம் எதுவாகவும் இருக்கலாம் //


    ஒழுங்கா என்ன ஸ்வீட்டுன்னு சொல்லிடுங்க மகி இல்லன்ன இப்படிதான் (மொக்க)கவிதை நிறைய வரும் ஸ்டாக்ல வச்சிருக்கேன் சொல்லிட்டேன்

    ReplyDelete
  26. பிரட் ஹல்வா அல்லது கஷுநட் ஹல்வா

    ReplyDelete
  27. 200 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் மகி...

    ReplyDelete
  28. Superaa ezhuthureenga..:) Arumai... Ithu enna sweet? thayavu seithu sollunga Mahi..
    Reva

    ReplyDelete
  29. இது 7 கப் கேக் தானே ???????

    ReplyDelete
  30. 200 -க்கு வாழ்த்துக்கள் மகி.... ஸ்வீட் - ஏதோ ஒரு கத்லி-ன்னு நினைக்கிறன்.

    ReplyDelete
  31. கண்டுபிடிச்சிட்டேன் அது Cashew Katli

    ReplyDelete
  32. Mahi, ingridients ok, you tell later on. but what is the name of the sweet? ;-) 7 cup cake? .....

    the rain photos are superb! make it large and publish so that we can enjoy the big screen view.

    Kushboo idli...m...ennanamo solli tempt pannareengale!

    so did your husband had the rava idli the other day?

    ada enna mahi, ipadi romba sindhikka vittaa epdi?! tired ayduvenla ;-)

    ReplyDelete
  33. 200 வது பதிவுக்கு
    வாழ்த்துக்கள்.
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துகக்ள்



    இயற்கை காட்சிகள் மிக அருமை

    ஸ்வீட், ரவா இட்லி, குஷ்பு இட்லி பார்த்துட்டு , இப்ப சாப்பிட்டு கொண்டு இருக்கும் கருஞ்சீரக பூரி பாஜி உள்ளே இரங்க மாட்டுங்கிறது.

    (ரொம்ப நாள் கழித்து ஜலீலாக்க பக்கம் வந்தமைக்கு மிக்க நன்றி.
    கர்நாடகா ஸ்டைல் எலுமிச்சை சாதட்ம் அதை செய்து போட்டோவும் போட்டுள்ளேன் , அதே போல நெல்லிக்க்கா சாதமும் செய்துள்லேன், நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள்)

    ReplyDelete
  34. த்ட்டைக்கு ட்ரை மிக்சியில் பொடித்து கொண்டேன்.

    தீபாவளிக்கு எல்லோரும் நிறைய ஸ்வீட் பலகாரம் எல்லாம் செய்றாஙக் மம்மி ஏதாவது சாப்பிட செய்து கொடுங்க அது போல் என்றான் என் பையன்.

    மைக்ரோ வேவ் பால் கோவா
    ஓமம் முறுக்கு
    ராகி பார்லி தட்டை
    போ பிஸ்கேட்
    இதை செய்து கொடுத்தேன்
    தட்டை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதான் கொஞ்டம்ஹெல்தியா யோசிப்போன்னு.. அப்ப நினைத்து மனதில் தோன்றிய இன்கிரிடியன்ஸ் சேர்த்தேன், மனம் அருமை சூப்பர்/

    ReplyDelete
  35. Congrats Mahi. Keep going, you are doing an awesome job.

    ReplyDelete
  36. //அதையும் இதையும் உளறிக்கொட்டி கிளறி மூடி//
    ஹலோ... இது ரமணி சந்திரன் மேடம் காபி ரைட் வாங்கி வெச்சுருக்கற டயலாக்... Anyway 200 மொக்கைக்கு வாழ்த்துக்கள் அம்மணி... :)

    எல்லாஞ்சரி, நீ கொலைவெறில ஏதோ ரெசிபி ட்ரை பண்ணிட்டு அதென்ன "கோவை ஸ்பெஷல்" tag ... ஊரு என்ன பாவம் பண்ணுச்சு அம்மணி...:) ஹா ஹா... ஜோக்ஸ் அபார்ட்... நீ என்ன செஞ்சாலும் எப்படி செஞ்சாலும் போட்டோ புடிச்சு அசத்தி போடுற.. ஒண்ணும் பேச முடியாது...:) ஆனா அண்ணாவை நெனச்சா தான் கொஞ்சம் பீலிங்கா இருக்கு... இப்படி சோதனை எலியா சிக்கிட்டு இருக்கறேன்னு...:)

    ReplyDelete
  37. @அப்பாவி,//ஊரு என்ன பாவம் பண்ணுச்சு அம்மணி.//படம் பார்த்து கருத்து சொல்லக்குடாது.இந்த பதிவுல மல்லிகே இட்லி இருக்கு தெரியுமா? அது நம்மூர்ல செய்யறது,அதுக்குதான் அந்த லேபிள்!

    /ஒண்ணும் பேச முடியாது...:) /பேசறதாவது? ஒரு துண்டு ஸ்வீட்ட எடுத்து வாயில போட்டா அப்புடியே அமைதியாயிரவேண்டியதுதேன். அவ்ளோ சுவை! ஹிஹிஹிஹி!;)

    காப்பி ரைட்-டீ ரைட்லாம் நேக்குத் தெரியாது. ஒரு ஃப்ளோல வந்தா எழுதிருவேன்,அம்புட்டுதான்! :)
    தேங்க்ஸ் புவனா!
    ~~
    @மஹேஸ் அக்கா, ரொம்ப சந்தோஷம்! உங்களைப் போல நல்ல வார்த்தை சொல்லும் அன்பு உள்ளங்களாலதான் என் பொழப்பு ப்ளாகுலகத்தில ஓடிட்டு இருக்கு! தேங்க்ஸ்!
    ~~
    @ஜலீலாக்கா,சந்தேகத்தை தீர்த்து வைச்சதுக்கு நன்றி! கர்நாடகா எலுமிச்சைசாதம் ரெசிப்பி தமிழ்குடும்பத்துக்கு அனுப்பிருந்தேன்,அங்கே இருக்கும். உங்களுக்கு பிடிச்சிருந்தது மகிழ்ச்சி!
    விரிவான கமென்டுகளுக்கு மிக்க நன்றி!
    ~~
    @மீரா, அது 7கப் கேக் எல்லாம் இல்லீங்க. உங்கனால கண்டுபுடிக்கவே முடியாத ரெசிப்பியாக்கும் அது!;)

    நீங்க கேட்டப்புறம் மழை படங்களை ஆல்பம்ல அப்லோட் பண்ணி லிங்க் பண்ணேன்,பார்த்தீங்களா? :)

    ரவா இட்லி அவர் சாப்ட்டாரோ இல்லையோ, அவர் கலீக்ஸ் எல்லாரும் என்சொய் பண்ணிருக்காங்க!:)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மீரா!
    ~~
    @ஏஞ்சல் அக்கா, கத்லியாவது சுண்டெலியாவது?! நோ வே!;)
    ~~
    @சித்ரா, வாழ்த்துக்கு நன்றிங்க ஆச்சு! உங்க கணிப்பும் தவறு!:)
    ~~
    @ப்ரியா, இல்லைங்க!:)
    கருத்துக்கு நன்றி!
    ~~
    @ரேவா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! நான் நினைச்ச ஸ்வீட் செய்தாத்தான் பேரை சொல்லுவேன்,அதுவரை அது ஸ்வீட் தான்!:)
    ~~
    @ப்ரியா,வாழ்த்துக்கு நன்றி!
    ~~
    @ஏஞ்சல் அக்கா, இதுவும்இல்ல.அதுவும் இல்ல."அது அதுவாகவே இருக்கட்டும் இது அதுவாக இருக்கலாம் எதுவாகவும் இருக்கலாம்."!!உங்க மொக்கை கவிதை ஜூப்பரு! நன்றி!
    ~~

    ReplyDelete
  38. @காமாட்சிம்மா,உங்கள் ஆசிக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி!
    ~~
    @அதிரா,வாய்வலிக்க சிரிச்சு,வயிறு முட்ட சாப்பிட்டு, மனசு நிறைய வாழ்த்துக்கள் சொன்னதுக்கு நன்றி! :)

    /ஒரு டேசெண்ட் டிசுப்பிளினே இல்லாத ஆட்கள்:))))))))))))))))/அதென்னமோ கரீக்ட்டா சொன்னீங்க போங்க! எப்படி எப்படியோ ட்ரை பண்ணீனாலும் வாரம் ஒரு முறைதான் இங்ஙன கமென்ட் போடுறேன்.ஹிஹி!

    நல்லாவே சூட்:) பண்ணறீங்க அதிரா! அதுவும் என் ஸ்வீட்டை "தேங்காப் பாறை"ன்னு சொன்னதுக்காகவே இன்னும் நல்லா சூட் பண்ணுங்கோ! ;)

    பூரிக்கு பெரிதா ரெசிப்பில்லாம் இல்லையே அதிரா..இருந்தாலும் தனியா போட முயற்சிக்கிறேன். இட்லி, சீக்கிரமா போஸ்ட் பண்ணறேன், முன்கூட்டியே சொல்லிடறேன்,இட்லி ரெசிப்பி படிச்சுப்போட்டு என்னையும் ஷூட் பண்ணக்கூடா...டீல்? ;)

    /ஏனெனில் எனக்கும் பார்க்க படமெடுக்க சூப்பராக தெரியும், ஆனா பூ மாதிரி வராது... /கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! என்னோட இட்லிய லன்ச் பாக்ஸ்ல வச்சு குடுத்தா, இவர் ஆபீஸ்ல இருக்க லேடீஸ்லாம் டபக் டபக்குன்னு இட்லிய எடுத்து தலையில வைச்சுக்கிறாங்களாம்..பூ மாதிரியே இருக்குனு! கி கிக் கி! :)))))))))

    நான் படமெடுப்பது மட்டுமில்லாம சுமாரா இட்லி-தோசைல்லாம் செய்வேன் அதிரா.,ஒருக்கா வீட்டுக்கு வாங்க,செய்து தரேன்!

    /மற்றதெல்லாம் பொயிங்கவே பொயிங்காது.../குட்டிக் குட்டி பூரியா தேய்த்தால் சீராகத் தேய்க்கலாம். அப்புறம் பொரிச்சால் இந்த பொயிங்கிங்:) ப்ரச்சனை வராமல் எல்லாமே புஸ்ஸுன்னு பொங்கும்!:)

    /யெச்..யெச்.... அதிகம் துள்ளப்பிடா.. இதுவும் கடந்து போகும்:)/இதுவும் கடந்து போனால் அடுத்து வசந்தம் வருமே!அப்பவும் துள்ளுவோம்! இப்ப என்ன செய்வீங்க..இப்ப என்ன செய்வீங்க??:)))) எல்லாமே ஒரொரு மாதிரி அழகுதான்..நான் எல்லாத்தையும் ரசிப்பேனே!
    ~~
    @ஏஞ்சல் அக்கா, வெள்ளித்திரை-தங்கத்தாரகை..ஆஹா,ஆஹா! படிக்கும்போதே அப்படியே பறக்கிறமாதிரியே இருக்குதே.....
    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஏஞ்சல் அக்கா!

    ReplyDelete
  39. /ஸ்வீட் தேங்காய்பாறை போல நினைக்றேன் அதுவும் பார்சல் 4pcs./கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! சிவா,இதுக்கப்புறமும் நான் பார்ஸல் அனுப்புவேன்??சிங்கப்பூர்லயே இருக்க பெரீஈஈஈஈய்ய பாறையா எடுத்து கொண்டுவந்து உங்க ரூம்ல டோர் டெலிவரி போடச் சொல்லிட்டேன்! என்ஜாய்! ;)

    ஜோக்ஸ் அபார்ட், கருத்து மழைக்கு நன்றி சிவா!
    ~~
    @உமா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. தேங்காய் பர்ஃபி செய்தீங்களா..மறக்காமல் வந்து சொன்னது மகிழ்ச்சி!
    மறுபடியும் சாரி-யா??வாணாம்,வாணாம்,விட்டுடுங்க!;))))~~
    @பாயிஸா,கலக்கலான வாழ்த்துக்களுக்கு நன்றிங்க. ரொம்ப சந்தோஷம்,உங்க கருத்து படித்து!;)
    ~~
    @வித்யா,தமிழ் நல்லா எழுதறேன்னா அந்தப் பெருமை எல்லாம் எனக்கு தமிழ் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கே!:)
    நன்றிங்க,வருகைக்கும் கருத்துக்கும்!
    ~~
    @ஆசியாக்கா, ஸ்வீட்ல தெரியற நட் வகைகளை வைத்து கெஸ் பண்ணறீங்க..ஆனா இது அது இல்லை! ;)
    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!
    ~~
    @ரூஃபினா,முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. முதல் கருத்தை பார்த்து ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. மிக்க நன்றி!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails