யு.எஸ்.வந்த புதிதில் ஜெம் ஷோ-வை முதன் முதலில் கேள்விப்பட்ட அனைவரும் கண்டிப்பாய் சில பல டாலர்களை செலவு பண்ணியிருப்பாங்க.நானும் இதுக்கு விதிவிலக்கில்லை. பொதுவாக வருஷத்துக்கு 2 முறை வெள்ளி-சனி-ஞாயிறு என்று மூணு நாள் ஜெம் ஷோ நடக்கும். ஆன்லைன்ல பாஸ் பிரிண்ட் பண்ணினா ஆபர்,வெள்ளிக் கிழமை போனா, மத்த 2 நாளுக்கு ப்ரீ அட்மிஷன் இப்படி நம்மை கொக்கி போட்டு இழுப்பாங்க. கூடவே முதல் முறை டிக்கட் வாங்கும்போது நம்ம அட்ரஸ் வாங்கி வச்சுகிட்டு அடுத்த முறை இன்விடேஷன் + ப்ரீ அட்மிஷன் பாஸ் அனுப்பிடுவாங்க.
இரண்டு வருஷம் முன்பு நாங்க இருந்த ஊரில் ஜெம்ஷோ வந்தது. வீட்டுப் பக்கத்தில் இருந்த ஒரு தோழியும் எங்களுடன் சேர்ந்துகிட்டாங்க. இவரை கொத்திப் பிடுங்கி ஒருவழியா சனிக்கிழமை காலைல வெற்றிகரமா போய்ட்டோம். கல்யாண மண்டபம் சைசுக்கு இருந்த ஹால்-ல லைனா டேபிள் போட்டு ஸ்டால் வைச்சு இருந்தாங்க. கலர் கலரா கிறிஸ்டல், பவளம்,முத்து, ரூபி, எமரால்ட் , சபையர் இப்படி விலை உயர்ந்த கற்கள் எல்லாமும் இருந்தது. கீ செய்ன்,ரிஸ்ட் வாட்ச் கடைகள், கால்வலிக்க நடந்து பர்ஸ் இளைக்க ஷாப்பிங் செய்துட்டு ஆறுதலா உட்கார்ந்து சாப்பிட பிஸ்ஸா கார்னரும் இருந்தது.
அதுவரை எனக்கு முத்து பவளம் ரூபி தவிர வேறு கற்கள் எல்லாம் தெரியாது. அழகான மெரூன் கலர் கார்னெட், ப்ரைட்டான கருப்பு நிறத்தில் ஓனிக்ஸ், கடலின் நீலத்தில் டர்க்காய்ஸ், பச்சையிலே பல நிறங்களில் ஜேட் என்று பலவகை இருப்பதை அன்றுதான்தெரிந்துகிட்டேன். பட்டிக்காட்டான் முட்டாய்க் கடையப் பாத்தா மாதிரியே கொஞ்ச நேரம் பராக்கு பாத்துட்டு பர்ச்சேஸ் பண்ண புகுந்தோம்.
முத்து நல்ல சீப்பா கிடைத்தது. டாலர்(யு.எஸ்.டாலர் இல்ல,இது வேற டாலருங்க) வைச்சு,2 -3 வரில இருக்குமே முத்துமாலை அது மேல எனக்கு ரொம்ப நாளா ஒரு கண்ணு. கூடவந்த ப்ரெண்டும் அதே மாதிரி நினைத்ததால் முத்துமாலை +வளையல் செய்யற ப்ளான்ல, கடைக்காரர்கிட்ட பேரம் பேசி முத்துக்களை அள்ளிகிட்டோம். அந்நேரம் ஊருக்கு போகும் பிளானும் இருந்ததால் சொந்த பந்தத்துக்கெல்லாம் சேர்த்து நான் தேத்திய ஜெம் கலெக்ஷன் இதோ..
கார்னெட்,ஜேட்,முத்து,ஓனிக்ஸ், பவளம், எமரால்ட் மற்றும் ரூபி.
(எதுக்கு இப்படி கடை பரப்பி போட்டோ எடுத்திருக்கேன்னு நீங்க நினைக்கலாம். அங்கங்கே இருந்த தோழிகளுக்கெல்லாம் போட்டோவை அனுப்பி அவிங்க வீட்டு ரங்க்ஸ் பர்ஸ்களுக்கெல்லாம் வேட்டு வைக்கணும்ல? அதுக்குத்தான்! ஹிஹிஹி!)
ஊருக்கு போனதும் எல்லாருக்கும் டிஸ்ட்ரிப்யூட் பண்ணிட்டு என்னோடதெல்லாம் ராம் நகர்ல ஒரு ஜெம் ஷாப்ல குடுத்து கோர்த்து வாங்கினேன்.(தங்கமெல்லாம் இல்லைங்க. வெள்ளியோ, ஐம்பொன்னோ ஏதோ ஒண்ணுல செய்து தங்க முலாம் பூசியது). ஆசை ஆசையா வாங்கின முத்துக்களுக்கு அட்டகாசமா மாலை-வளையல் டிசைன் செலக்ட் பண்ணி குடுத்துட்டு வந்தேன். கடைக்காரக்கா கடைசி நேரத்தில் சரியா கோர்க்காம சொதப்பிட்டாங்க. அதனால் அது ஊரிலேயே இருக்கு.
ஓனிக்ஸ் மாலைக்கு என் அக்கா அழகான டாலர் செலக்ட் பண்ணி தந்தாங்க. இங்கே கிளம்பும்போது அதை சர்ப்ரைசா அக்காவுக்கே குடுத்துட்டு வந்துட்டேன். கார்னெட் மாடர்ன் ட்ரெஸ் கூட நல்லா மேட்ச் ஆகிறது. ரூபி சுடிதாருடன் போட நல்லா இருக்கு. பவளம் பார்க்க அழகா இருக்கு,ஆனா கழுத்தில் போட்டா சாமியார் மேடம் எபெக்ட் வரமாதிரி ஒரு பீலிங்! :)
"விடாது கருப்பு"-ன்னு அடுத்த வருடமும் ஜெம் ஷோ டிக்கட் அதுவே வந்தது. எதுவும் வாங்க வேணாம், சும்மா பாத்துட்டு வரலாம்னு(?!) போனோம். முதல் முறையே டர்க்காய்ஸ் என்னவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. அப்ப நான் வாங்கலை, இந்தமுறை அவர் ஆசையா வாங்கித் தரும்போது வேணாம்னு சொல்ல முடியுமா? நீங்களே சொல்லுங்க?!! ;)
டர்க்காய்ஸ் சரத்தினுள் பெயர் தெரியாத சிவப்புக்கல் சரம், பவளச் சரங்களுக்குள் ஓனிக்ஸ், டாப்ல டக்கரா இருப்பது ப்ளூ ஸஃபையர் ஸ்ட்ரான்ட். :) இந்த முறை ஊருக்கு போகையில் இதையெல்லாம் கோர்த்து வாங்கணும்.ஸ்டேட் மாறி வந்தப்பவும் விடாம இன்னமும் ப்ரீ டிக்கட் அனுப்பிட்டே இருக்காங்க. போன வாரம் பக்கத்து சிட்டியில் நடந்த ஷோவுக்கு இன்விடேஷனும் ப்ரீ பாஸும் வந்தது. போனாப்போகுதுன்னு நாங்க போகலை.:)
டிஸ்கி.: ஒரிஜினல் ரூபி-எமரால்ட்-ஸஃபையர் எல்லாம் ரொம்ப ரொம்ப காஸ்ட்லி, இப்படி சரங்களா எல்லாம் வாங்கமுடியாது, இந்த கற்கள் எல்லாம் ஒரிஜினல் இல்லை என்றும் சொல்றாங்க. எது உண்மைன்னு தெரில. ஆனால் குடுத்த காசுக்கு மதிப்பு இருக்கறமாதிரிதான் எனக்கு தெரிந்தது.
முதல் படத்தை பாத்து டென்ஷன் ஆயிராதீங்க..திருஷ்டிக்குன்னு போட்டிருக்கேன், சீரியஸா எடுத்துக்காதீங்க, சும்மா தமாஷுக்கு! அந்த லெமன் சிரிக்கறது அழகா இருக்கில்ல? :D
முத்து மாலைகள் எல்லாமே அழகு...சீப்பாக இருந்தா எனக்கு ஒரு செட் அனுப்புங்க...மகி.. திருஷ்டி பொம்மை அழகாக இருக்கே...
ReplyDeleteஎல்லாம் அழகாக இருக்கிறது மகி. என்னவோ எனக்கு தோடுகளில் மட்டும் தான் ஆர்வம் எப்பொழுதும்.
ReplyDeleteHahaha Mahi, I have been to the Gem show only twice. My MIL is here, she wants to go this time :)
ReplyDeleteஅழகாக இருக்கு மகி...அப்போ நீங்க dallas? நான் உங்களை பாத்தேனே!!!!
ReplyDeleteஅனைத்துமே அழகு மஹி. ஆனா கோயில்களில் பத்து ரூபாய்க்கு வாங்கும் மாலைக்கும் இவைக்கும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை, சொன்னால்மட்டுமே தெரியும்போல.
ReplyDeleteஎனக்கும் இப்படியானவற்றிலெல்லாம் அதிக நாட்டமில்லை. செயின் போட்ட நெக்லஸ்களில்(இமிடேசன்) விருப்பம் இருக்கு + தோடு.
ரொம்ப சூப்பரா இருக்கு மகி எவ்வளவு ஆச்சு சொல்லலையே
ReplyDeleteAll the gems are cute...
ReplyDeleteசிநேகிதி,சீப்பாதான் இருந்தது,ஆனா இந்த முறை நாங்க போகலையே,நீங்க கொஞ்சம் லேட்டா சொல்றீங்க!;) அடுத்தமுறை வாங்கி அனுப்பறேன். நன்றி!
ReplyDeleteஇமா,அடிக்கடி உங்க கருத்தைப் பார்ப்பதில் சந்தோஷமா இருக்கு. ஜெம்ஷோவில் இருந்த க்யூரியாசிட்டில வாங்கியதுதான்,மத்தபடி நானும் இதெல்லாம் அணிவது ரொம்ப ரேர்! ;)
மஹேஸ் அக்கா,போயிட்டு வாங்க,போயிட்டு வாங்க! :)
நன்றி!
ஹர்ஷினி அம்மா,நான் dallas இல்லைங்க,நீங்க என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை..அப்படியே வெஸ்ட் கோஸ்ட் பக்கம் வாங்க,சந்திக்கலாம்! :)
நன்றி!
/கோயில்களில் பத்து ரூபாய்க்கு வாங்கும் மாலைக்கும் இவைக்கும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை,/கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இதுவும் ஏறத்தாழ அதே விலைதான்,ஆனா இந்த ஊர்க்காசிலே! ;)
ஆசைப்பட்டு வாங்கிட்டேன்,ஊரிலே இருந்தாலாவது பங்ஷன்ஸ்க்கு போட்டுட்டு போலாம்,இங்கே அப்படியே பத்திரமா கிடக்கு.
நன்றி அதிரா!
ஜலீலாக்கா,எல்லாம் நாமினல் ரேட்டுதான்,ஹிஹி!
நன்றி ஜலீலாக்கா!
காயத்ரி,தேங்க்ஸ் காயத்ரி!
Aha,
ReplyDeleteMe too went to the show and got some bracelts and converted into chains.
Green, black,red and white.(Can be seen in my blog).
viji
எந்ந ஆச்சு
ReplyDeleteடாக்காயிஸைப்பத்தி எழுதினேன். திபெத்திய பெண்களின் முக்கிய அணிகலன்களின் கலர் என்று. 4தரம் எழுதியும் போகலே. உன் கலெக்ஷன் அழகாயிருக்கு. நிறைய பேர் வேண்டுமென்பார்கள். ஊறுக்கு போகும் போது அதிகமாக வாங்கிப் போகவும். ஓனிக்ஸ் ரொம்ப அழகாக இருக்கு.
ReplyDeleteஒரு முறை போனேன். அதன் பிறகு போக மூட் இல்லை. நான் எதிர்பார்த்து போனது வேறு அங்கு இருந்தவை வேறு. நீ என்ன எதிர்பார்த்தாய் என்கிறீங்களா??? அது தான் எனக்கும் விளங்கவில்லை. திருமண மோதிரம், தோடு தவிர வேறு எதுவும் நகைகள் அணிவதில்லை. வாங்கி வந்து என்ன செய்வது என்ற எண்ணமும் இருந்தபடியா வாங்கவில்லை.
ReplyDeleteInga rendu saram thallunga,lovely :)
ReplyDeleteஎல்லா ஜெம்ஸுமே அழகா இருக்கு மஹி. நான் இந்தியாவிலிருந்து வரவழைத்து வைத்திருக்கேன், ஜுவல்ஸ் செய்ய. நான் பார்த்திராத ஜெம்ஸுகளும் அறிமுகப்படுத்தியிருக்கீங்க, நன்றி மஹி :)
ReplyDelete//பவளம் பார்க்க அழகா இருக்கு,ஆனா கழுத்தில் போட்டா சாமியார் மேடம் எபெக்ட் வரமாதிரி ஒரு பீலிங்! :)//
நிச்சயமா அதுல சந்தேகமில்ல :))) ஆனா அதை கழுத்துச் செயினா செய்யக்கூடாது மஹி. கோல்டு மணிகள் சேர்த்து கைக்கு ஜுவல்ஸ் செய்தால் நல்லா வரும். ட்ரைப் பண்ணிப் பாருங்க.
ரொம்ப ரொம்ப அருமையான collections...
ReplyDeleteஎனக்கு இதில் எல்லாம் ரொம்ப ஆசை கிடையாது..இவர் வாங்கி கொள்ள சொன்னாலும் எதோ அந்த பக்கம் போகவே மனசு வரமாட்டுது..
இப்ப பார்த்துவிட்டேன் இல்ல..அடுத்த முறை போய் தான் பார்க்க வேண்டும்...
:)nice collection,.
ReplyDeleteவிஜிமா,உங்க ப்ளாக்ல போட்டிருந்ததை பாத்தேன்,நினைவிருக்கு. :)
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
காமாட்சிமா,ப்ளாகர் ப்ராப்ளம் எதாவது ஆகி உங்க கமென்ட் வந்திருக்காதுன்னு நினைக்கிறேன்.
போனமுறை ஊருக்கு போனபோது வாங்கிட்டுதான் போனேன். டர்க்காய்ஸ் பற்றிய தகவல்களுக்கு நன்றி!
வானதி,என்ன எதிர்பார்த்தீங்கன்னு தெரியாமலே போனீங்களா?வெரி குட்! நான் ஆர்வமா வாங்கினதோட சரி. அதுக்கப்புறம் பத்திரமா வச்சிருக்கேன்.:)
ராஜி,என்ன கலர் வேணும்னு சொல்லுங்க,அனுப்பிடறேன்.:)
அஸ்மா,பவளம் தனியா கோர்த்தா அவ்வளவா நல்லா இல்லைங்க.செய்தப்புறம்தான் தெரியுது.அடுத்தமுறை சரி பன்னிக்கவேண்டியதுதான்.நன்றிங்க.
கீதா,ரெம்ப நல்லவங்களா இருப்பீங்க போல! அடுத்த முறை போயிட்டு வாங்க! :)
சிவா,நல்லவேள,இதையும் ஒரு பார்சல் அனுப்புங்கன்னு கேக்காம விட்டீங்க! ;) :)
தேங்க்ஸ் சிவா!