Tuesday, May 10, 2011

பஸிஃபிக் கடலோரம்...

முன்பொருமுறை வந்த விருந்தினரை மறந்திருக்க மாட்டீங்க. (எதுக்கும் அந்த லிங்க்-ஐக் க்ளிக் பண்ணி ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுங்களேன். :)) சமீபத்தில் மீண்டும் ஒருமுறை அவரைப் பார்க்க அதே இடத்துக்குப் போனோம். ஆகஸ்ட் மாதம் ப்ரெட் சாப்பிட்டுக்கொண்டிருந்த அவரும் அவர் சுற்றமும் நட்புக்களும் இப்பொழுது ஆரோக்கிய உணவுக்கு மாறியிருந்தாங்க. ஆமாம்,இப்பல்லாம் அவிங்க வறுத்த வேர்க்கடலைதான் சாப்பிடுறாங்க!

அங்கே வந்த சுற்றுலாப் பயணிகள்,முக்கியமாக குழந்தைகள் இந்த அணில்களுக்கு ஆர்வமா வேர்க்கடலை குடுத்தாங்க. அணில்களும் எந்த பயமும் இல்லாம, ரொம்ப ஃப்ரெண்ட்லியா பக்கத்தில் வந்து அவங்க கைல இருந்து கடலைகளை வாங்கிட்டு அந்தப் பக்கம் ஓடி அமைதியா உட்கார்ந்து சாப்பிட்டுதுங்க.
இந்த அணிலைப் பாருங்க, அந்த தாத்தா கையிலிருந்து கடலையை கிட்டத்தட்ட பிடுங்குது!! :)))) குழந்தைகள் கடலைய ஒரு கையில் பிடிச்சுகிட்டு அணில் பக்கத்துல வந்ததும், நைஸா இன்னொரு கையால அணிலைத் தொட்டுத் தொட்டு பாத்துட்டு இருந்தாங்க. கவனிச்சுப் பார்த்தா,அணில் எவ்வளவு புத்திசாலியா இருக்குன்னு தெரியுது! கவனமா முழுக்கடலையக் கடிச்சு தோலை துப்பிட்டு அழகா கடலையை மட்டும் ருசிச்சு சாப்பிடுதுங்க.
எங்களுக்கு அணில் இப்படி ஆர்கானிக்கா மாறியது தெரியாது. (நாங்க) கொறிக்க கொண்டுபோயிருந்த சிப்ஸ்-ஐக் குடுத்துப் பார்த்தோம்.ம்ஹும்,வாங்கி கீழே போட்டுட்டு குட்டிப் பசங்க பக்கமே போயிடுச்சு. நான் பாவமா உட்கார்ந்திருந்தேன்,அதைப் பார்த்துட்டு பக்கத்தில் நின்றிருந்த ஒரு பெண்மணி கைநிறைய வேர்க்கடலைய குடுத்தாங்க.

ஹாஹ்ஹா...கடலை போடற சாக்கில் நானும் அணிலைத்தொட்டுப்பார்த்தேனே!! மெத்து மெத்துன்னு ரொம்ப ஸாஃப்ட்டா இருந்தது! :) கடலையைக் கொடுக்கும்போது டக்குன்னு குடுக்காதே,போட்டோ எடுக்க முடிலன்னு என்னவர் சொல்லிட்டே இருந்தார்.அப்படியே எல்லாம் தீர்ந்து போய் கடைசி கடலை வந்துடுச்சு.

நானும் கடலையக் குடுக்கறமாதிரி நடிச்சு, கையைத் தூக்க, விட்டேனா பாருன்னு அணிலாரும் எங்கிட்ட இருந்து பிடுங்க போராடினார். மென்மையான அணிலுக்கு எவ்வளவு கூரான நகங்கள்ங்கறீங்க? நல்லவேளை என் கைக்கு ஒண்ணும் ஆகல.;)

"போட்டோ எடுத்துட்டீங்களா?"ன்னு நான் கேக்கறதுக்குள்ள அணிலாருக்கு கோவம் வந்துடுச்சு. நீயும் வேணாம்,நீ குடுக்கற கடலையும் வேணாம்-னு விட்டுட்டு ஓடிட்டார். :-|
அப்புறம் இன்னொருவர் வந்து வாங்கிட்டு போயிட்டார், இருந்தாலும் கொஞ்சம் வருத்தமா இருந்தது. கடலை கிடைக்காத அணில் என்னைத்திட்டிட்டே போயிருக்கும்னு புலம்பிட்டே இருந்தேன்.
இதுதான் உண்டு கொழுக்கறதோ??!!
:)))))))))))

அணிலுக்கு டாட்டா சொல்லிட்டு கிளம்பி இந்தக் கடற்கரைக்குப் போனோம். (பதிவில் முதல் படம்) அழகான கடற்கரை,உற்சாகமான மக்கள் கூட்டம், சுடச்சுட நம்ம ஃபில்டர் காபி ரேஞ்சுக்கு espresso coffee கிடைக்கும் ஒரு காஃபி ஷாப் என்று மனசுக்கு சந்தோஷமா இருந்தது. அங்கே போயும் என் கை சும்மா இருக்காமல் இந்த seagull-ஐ போட்டோ எடுக்கப் போயிட்டேன்.

மாலை வெயிலில் இந்தப் பறவையின் நிழலும் கரையில் துல்லியமா விழுந்தது..அதுவும் பிகு பண்ணிக்காம அமைதியா போஸ் குடுத்தது. :)

சூரிய உதயம்-அஸ்தமனம் இரண்டுமே அழகுதான்..காலையில் எழுந்து சூரிய உதயம் பார்ப்பதெல்லாம் எப்பவாஆஆஆஆவது நடக்கும் விஷயம்(கவனிங்க,நடக்காத விஷயம்னு நான் சொல்லல. எப்பவுமே எர்லி மார்னிங் 7 மணிக்கு எந்திரிச்சாலும் நாங்களும் மிட்நைட் அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்திருப்போமுல்ல? ஹிஹி) சரி அதை விடுங்க..இந்த சன்செட்-டை பாருங்க...
மேகங்களுக்கிடையில் மறைந்து கிடந்தாலும் சூரியக் கதிர்கள் அங்கங்கே வானத்தை ஊடுருவி கடல்நீரில் விழுந்து பிரதிபலித்த அழகான சூரியாஸ்தமனம் ஒரு அழகான நாளை நிறைவு பெறச்செய்தது.

17 comments:

  1. மிக அருமையான பகிர்வு,முதல் பகிர்வில் பார்த்த அணில்களை விட இவை கொஞ்சம் ஸ்லிம்மாக தெரியுதே! ப்ரெட் பாப்கார்னுக்கு சதை போடும் போல,நாமும் கடலைக்கு மாறிடலாமான்னு தோணூது.

    பஸிபிக் கடலோரம் மகி அணிலைக்கண்டாளே.
    ஸீ கல்லைக்கண்டாளே1
    ஹம்மா,ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா...

    ReplyDelete
  2. ஆசியாக்கா,நல்ல ஃபார்ம்-ல தான் இருக்கீங்க போலருக்கே?! என்ஸொய் த ரிமெய்னிங் டே! ;);)

    நானும் 'அந்த அரபிக்கடலோரம்...'---பாட்டை நினைச்சுகிட்டேதான் டைட்டில் வச்சேன்.
    படுவேகமான கருத்துக்கு நன்றி ஆசியாக்கா!

    ReplyDelete
  3. வட போச்சே அவ்வ்வ்வ்வ்வ்:).

    ஊரில அணிலை திரும்பியும் பார்க்கமாட்டோம்.... இங்கே எப்பவாவது அணில் ஓடினா.... அது கார்த்திகைப்பிறைபோல... பிள்ளைகளைவிட முண்டியடித்துக்கொண்டு நான் தான் ஓடி ஓடிப் பார்ப்பேன்:)))...

    அணிலைத் தொட்டுப் பார்த்திருக்கிறீங்க, அந்த விதத்தில நீங்க கொடுத்துவச்சிருக்கிறீங்க..:).

    படங்கள் அழகு.

    ReplyDelete
  4. தலைப்பு சூபப்ர்ப்...

    அழகாக இருக்கின்றது...கடைசி படம் ரொம்ப சூப்பர்ப்...அழகோ அழகு...

    ReplyDelete
  5. வாவ் அனைத்து புகைப்படமும் அருமை
    எது நம்ம வீட்டு அன்னில்குட்டி போல இருக்கே
    :)
    சோ ஸ்வீட் லைக் மீ

    ReplyDelete
  6. மேகங்களுக்கிடையில் மறைந்து கிடந்தாலும் சூரியக் கதிர்கள் அங்கங்கே வானத்தை ஊடுருவி கடல்நீரில் விழுந்து பிரதிபலித்த இந்த அழகான சூரியாஸ்தமனம் ஒரு அழகான நாளை நிறைவு பெறச்செய்தது.//

    நீங்க ஒரு மெகா கவிதை எழுதும் கவி அறிந்து கொண்டேன்
    விரைவில் ஒரு கவிதை எழுதவும் மகிமா ..

    i wait for your next post as poem...thank you

    ReplyDelete
  7. வெரி நைஸ் மகி.. ஊர்ல குட்டி அணிலை தான் தொட்டுப் பார்த்திருக்கிறேன், ச்சோ சாஃப்ட் .
    பட் பெரிய அணில் இவ்வளவு பக்கத்தில வந்து கடலை வாங்குறது ரொம்ப ஆச்சர்யம் தான். :)
    கடைசி ஃபோட்டோ சூப்பர்!

    ReplyDelete
  8. ஊரில் அணில் எங்களைக்கு கிட்டவே வராது, ஆனால் உங்கள் அருகில் வரும் இந்த வெளி நாட்டு அணிலைப் பார்க்க வியப்பாகத் தான் இருக்கிறது.
    அனுபவப் பகிர்வையும், நீங்கள் ரசித்த இந்த அணில் பற்றிய சுற்றுலாப் பகிர்வினையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சகோ.

    ReplyDelete
  9. Romba alaga irukku idamum unga clicksm. enga veetukku dailym breakfast sapita varuvanga. but thoda ellam mudiyathu. neenga thottu vilaiyaduvaithai paartha athisayama irukkuthu.

    ReplyDelete
  10. கடைசி போட்டோ ரொம்ப அழகா இருக்கு மகி. இந்த படங்களை பார்க்கும் போது நீங்க in & around Los angeles மாதிரி தெரியுது. அண்ணாச்சி-கிட்ட சொல்லி இந்த (Hermosa beach pier) இடத்துக்கு போய் பாருங்க.
    இயற்கையை ரசிக்கும் உங்கள் கண்களுக்கும் கேமராவுக்கும் விருந்தா இருக்கும். இங்கே சன்செட் ரொம்ப பிரபலம். (இந்த இடத்தை பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்து இருந்தால் மொக்கைக்கு மன்னிக்கவும்!)

    ReplyDelete
  11. அனைத்து புகைப்படங்களும் அழகு...அதைவிட கடைசி படம் ரொம்ப பிடித்திருக்கு மகி..பகிர்வுக்கு நன்றி!!

    ReplyDelete
  12. மகி படங்கள் அருமை... அனில் ரொம்ப நல்லா இருக்கு.. அதோடு உங்களின் எழுத்து நடை வசிகரிக்கிறது..

    ReplyDelete
  13. தலைப்பை பார்த்தவுடன் இந்த பாட்டை பாடிகிட்டே ஒபன் பண்ணி கமெண்ட் போடலாம்னு பார்த்தா ஆசியா அக்கா போட்டுடாங்க.. நல்லா இருக்கு மஹி

    ReplyDelete
  14. Nice post, Mahi. Glad you had fun.

    ReplyDelete
  15. நன்றாக ரசித்திருக்கிறீர்கள். அணில்ப்பிள்ளைகள் அழகு.

    ReplyDelete
  16. அதிரா,ஊரிலே புளியமரத்திலே ஓடும் அணில்களைப் பாத்திருக்கேன்,அங்கே எல்லாம் பக்கத்திலே வராது.இங்கே ரொம்ப ப்ரெண்ட்லி அணில்கள்! :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா!

    சிவா,அது என்னது "அன்னில்குட்டி?" புதுசா இருக்கே? ;) கவிதைதானே? நான் எழுதிருவேன்,படிக்கிற நீங்கள்லாம்தான் பாவம்! தேங்க்ஸ் சிவா!

    நானும் ஊர்ல அணிலெல்லாம் பக்கத்துல பாத்ததில்லை பாலாஜி! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நிரூபன்,ஆமாங்க,இந்த அணில்கள் சாதாரணமா நம்மருகில் வருது. அவ்வளவு பழகிருக்கு. மத்தபடி எல்லா இடத்திலும் வராது. நன்றிங்க!

    குறிஞ்சி,தேங்க்ஸ் குறிஞ்சி! :)

    சித்ரா,கரெக்ட்டா புடிச்சிட்டீங்க! நீங்க சொன்ன இடம் எனக்குத் தெரியாது. வாய்ப்புக் கிடைக்கும்போது கட்டாயம் போய்ப் பார்க்கிறோம். நன்றி! :)

    மேனகா,நன்றி மேனகா!

    சிநேகிதி,உங்கள் பாராட்டுக்கு நன்றி!

    சாரு,வெகுநாள் கழிச்சு உங்க கமென்ட்டை பார்க்கிறேன்,பசங்களுக்கு லீவா இருப்பதால் பிஸியா? நன்றி சாரு!

    மஹேஸ் அக்கா,தேங்க்ஸ்!

    இமா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இமா!

    ReplyDelete
  17. Very beautiful writings dear.
    I enjoyed the photos and your write ups.
    Americaukku vandu, anil parthathule santhosham.
    viji

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails