Thursday, May 26, 2011

சோமாஸ்

அஸ்மா அவர்கள் ப்ளாகில் பார்த்து, சில மாற்றங்களுடன் இந்த சோமாஸ் செய்தேன்,மிகவும் நன்றாக இருந்தது.

தேவையான பொருட்கள்

மேல்மாவுக்கு
மைதா-11/4கப்
கார்ன் ஃப்ளோர்-1/4கப்
ரவை-1டேபிள்ஸ்பூன்
சர்க்கரை-1டேபிள்ஸ்பூன்
உப்பு-1/2டீஸ்பூன்
எண்ணெய்-2டேபிள்ஸ்பூன்
தண்ணீர்-3/4கப்

பூரணத்துக்கு
ஸ்வீட்டன்ட் கோகனட் ஃப்ளேக்ஸ்-1கப்
ஏலக்காய்-2
முந்திரி,பாதாம் -ஒரு கைப்பிடி
திராட்சை-ஒரு கைப்பிடி
எள்ளு-1டேபிஸ்பூன்
பொட்டுக்கடலை-1டேபிள்ஸ்பூன்
சர்க்கரை-1/2கப்
நெய்-11/2டேபிள்ஸ்பூன்

செய்முறை
ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை சூடாக்கி, முந்திரி-திராட்சை-பொட்டுக்கடலை-எள்ளு இவற்றை தனித்தனியாக (கருகாமல்) வறுத்து எடுக்கவும்.

மீதியுள்ள நெய்யையும் ஊற்றி சூடாக்கி, தேங்காயை சிவக்க வறுத்து எடுத்து, ஏலக்காய் தட்டிப்போட்டு கலந்து ஆறவைக்கவும்.

சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். சர்க்கரை கரைந்து கொதிக்கத்தொடங்கியதும், வறுத்த தேங்காயைச் சேர்த்து பிரட்டி, முந்திரி-திராட்சை-பொ.கடலை-எள்ளு இவற்றை சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கி,
உடனே வேறு கிண்ணத்தில் மாற்றி, க்ளியர் ராப் பேப்பரால் மூடி ஆறவைக்கவும்.

மைதா-கார்ன் ஃப்ளோர்-ரவை-உப்பு-எண்ணெய் இவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்கு கலந்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக நீர் தெளித்து பிசையவும். சுமார் 10 நிமிடங்கள் சப்பாத்திமாவு போல பிசைந்து, ஒரு மணிநேரம் மூடிவைக்கவும்.

ஒரு டேபிள்ஸ்பூன் மைதாவை கொஞ்சம் நீர்விட்டு நீர்க்க கரைத்துவைக்கவும்.

பிசைந்த மாவை சிறு உருண்டைகள் உருட்டி, சிறிய பூரிகளாக தேய்க்கவும்.

பூரியின் நடுவில் இனிப்பு பூரணத்தை வைத்து, ஓரங்களில் மைதா கலவையைத் தடவி, பிறைச்சந்திர வடிவத்தில் மடித்து ஒட்டி, முள்கரண்டியால் ஓரங்களை அழுத்திவிடவும்.

எண்ணெயை மிதமான சூட்டில் (medium low to low heat) காயவைக்கவும். செய்துவைத்த சோமாஸ்களை பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

பொரித்த சோமாஸை எண்ணெய் வடியவைத்து நன்றாக ஆறவைத்து காற்றுப்புகாத டப்பாவில் வைத்து மூடிவைக்கவும்.
சோமாஸ் நன்றாக ஆற 2-3 மணி நேரமாகும் என்று அஸ்மா சொல்லியிருந்தாங்க,அதே போல் ஆறவைத்து எடுத்து வைத்தேன். இது போனவாரம் புதன்கிழமை செய்தது, 3-4 நாட்கள் வெளியிலேயே இருந்தது.இன்னும் 2 சோமாஸ் பத்திரமா ஃபிரிட்ஜில் இருக்கு, வீட்டுக்கு வாங்க, சாப்பிடலாம்! :):)

15 comments:

  1. My MIL makes so perfect,I have tried only once or twice,I am soon going to try this.. My MIL stuffes only pottukadalai and coconut :)

    ReplyDelete
  2. இது சாப்பிட்டதே இல்லை மகி. இனிப்பா இருக்கிறதால சமைச்சா நான் மட்டும் தனியா சாப்பிடுற நிலமை வந்துரும். நான் அங்க வரப்ப பண்ணித் தாங்க.

    ReplyDelete
  3. Paarkave supera irukkuthu Mahi. inga konjam anuppi vaiunga.

    ReplyDelete
  4. சோமாஸ்... புதுப்பெயராக இருக்கே.... அபடம் பார்த்ததும் பற்றிசைத்தான் சோமாஸ் என்கிறீங்கள் என நினைத்தேன்... குறிப்பை பார்த்தால் இனிப்பு.. நல்லாவே இருக்கு... எனக்கு இனிப்பு பிடிக்காது.

    //இன்னும் 2 சோமாஸ் பத்திரமா ஃபிரிட்ஜில் இருக்கு, வீட்டுக்கு வாங்க, சாப்பிடலாம்! :):)//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கடசியா.... கைவிடப்பட்ட இரண்டே இரண்டு “குட்டி” சோமாஸை வைத்துக்கொண்டு ஊரைக்கூப்பிடுறீங்களோ?:))))).

    ReplyDelete
  5. //அபடம் பார்த்ததும் பற்றிசைத்தான் சோமாஸ்// தலை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;))

    ReplyDelete
  6. Thanks for the recipe mahi,sure will try...

    ReplyDelete
  7. These are very unique recipes and u have prepared the perfect somas. Loved and appreciate the illustrative clicks.

    ReplyDelete
  8. எனக்கு மிகவும் பிடித்த ஒன்று..என்ன கொஞ்சம் வேலைஅதிகம்போல தோனும்...

    ReplyDelete
  9. செய்துப் பார்த்து ஃபோட்டோக்களும் பகிர்ந்துக் கொண்டதற்கு மிக்க நன்றி மஹி :) தேங்காய்ப்பூவை நாம் வறுத்திருப்பதால் 1 வாரம்வரை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டியதில்லை மஹி. ஒரு வாரத்திற்கு மேல் வைப்பதாக இருந்தால் மட்டும் முன்பே ஃபிரிட்ஜில் வைத்து மைக்ரோ ஓவனில் சூடு பண்ணிக்கலாம்.

    ReplyDelete
  10. இதனை ஃபிரிட்ஜ்ஜில் வைக்கவேண்டிய அவசியம் இல்லை மகி.சீக்கிரத்தில் கெட்டுப்போகாது.கூடவே ஸ்டோர் செய்து வைக்கும் வைக்கும் ஏர் டைட் டப்பாவில் சில ரோஜா இதழ்களை போட்டு வைத்தால் சோமாஸ் ரோஜா நறுமணத்துடன் சுவையாக இருக்கும்.

    ReplyDelete
  11. இது எத்தனாவது முயற்சி. ருசியான ஸோமாஸ். என் கமென்ட்டைச் சொல்கிறேன்

    ReplyDelete
  12. பூர்ணம் கொஞ்சம் புதுமாதிரி.அழகாகவும் வந்திருக்கு.

    ReplyDelete
  13. ப்ரியா,தேங்க்ஸ்ங்க!

    ராஜி,செய்துபாருங்க,ரொம்ப நல்லா இருந்தது. எனக்கு ஸ்டஃபிங் பத்தி அவ்வளவு தெரியல,நான் பார்த்த ரெசிப்பிய அப்படியே செய்தேன்.:)

    இமா,கண்டிப்பா செய்துதரேன்.வீட்டுல மத்தவங்க யாருமே ஸ்வீட் சாப்பிடமாட்டாங்களா? பாவம் நீங்க! ;)

    குறிஞ்சி,அனுப்பிட்டேன்! நன்றி! :)

    /எனக்கு இனிப்பு பிடிக்காது./அவ்வ்வ்!எனக்கு ஆப்போஸிட்டா இருக்கீங்க அதிரா! பற்றீஸ் ரெசிப்பி வானதி ப்ளாக்லே பாத்திருக்கேன்,நாங்க கொஞ்சம் வேற ஷேப்ல செய்து சமோசான்னு சொல்லுவோம் அதை.அதுவும் செய்துபார்க்கணும்.
    /கைவிடப்பட்ட இரண்டே இரண்டு “குட்டி” சோமாஸை வைத்துக்கொண்டு ஊரைக்கூப்பிடுறீங்களோ?:)))))./கையெல்லாம் விடப்படலை,அதுவும் இப்ப காலி!வாங்க,ப்ரெஷ்ஷா செய்துதரேன்.

    அதிராக்கு கை தவறி ஒரு 'அ' அதிகமா வந்துட்டதாம் இமா! ;)

    ப்ரேமா,தேங்க்ஸ்ங்க!

    சிட்சாட்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! நீங்க சொன்னது உண்மைதாங்க,எங்க வீட்டில் இந்த ஸ்வீட் எல்லாம் செய்ததே இல்ல! :)

    மேனகா,நான் முதல்முறை செய்தேன்,அதுவும் கொஞ்சமா செய்ததால் வேலை அதிகம்னு தோணல. அடுத்தமுறை செய்யும்போதுதான் பார்க்கணும்.உங்க ப்ளாக்ல இருக்க ரவை-சேமியா ஃபில்லிங்கும் செய்துபார்க்கணும்.

    மஹேஸ் அக்கா,தேங்க்ஸ்!

    அஸ்மா,ரெசிப்பிய போஸ்ட்பண்ணி என்னை தூண்டிவிட்டதுக்கு உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்! நாலஞ்சுநாள் வெளியேதான் வைத்தேன்,அப்புறம் கொஞ்சம் டவுட்டு வந்ததால் ப்ரிட்ஜ்லே வைச்சேன். நன்றிங்க.

    ஸாதிகா அக்கா,ரோஜா இதழுக்கு இங்கே எங்கே போக? பெரும்பாலும் இங்கு பூக்கள் வாசமில்லாமல்தான் இருக்குது. உங்களுக்கும் இது பரிச்சயமான இனிப்புதான் போல. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸாதிகாக்கா!

    காமாட்சிமா,ப்ளாகர் ப்ரச்சனை பண்ணுதுன்னு நினைக்கீறேன்,வெற்றிகரமா 2 முறை உங்க கமென்ட் வந்துடுச்சே,அப்புறம் என்ன? :)
    நன்றிமா!

    ஆர்த்தி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! ஹேப்பி ஹோஸ்டிங்! :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails