Wednesday, May 18, 2011

வெஜிடபிள் கேக்

ப்ரியாவின் ஈஸி & டேஸ்ட்டி ரெசிப்பீஸ் வலைப்பூவில் இந்த சேவரி கேக் ரெசிப்பி பார்த்தேன். செய்து பார்க்கணும்னு நினைச்சு, போன வியாழக்கிழமை சாயந்திரம் அஞ்சு மணிக்கு மேலே தேவையான சாமானெல்லாம் கலெக்ட் பண்ண ஆரம்பிச்சேன்.(எங்க வீட்டுல ஃப்ரிட்ஜுல இருந்துதான்,ஹிஹி!)

முட்டை -தயிர்-பால்-மைதா எல்லாம் எடுத்து வெளியே வைச்சுட்டு ப்ரோக்கலி,கேப்ஸிகம்,வெங்காயம் நறுக்கி எண்ணெயிலே வதக்கினேன், அதிசயமா என்னவர் நேரத்துலயே வீட்டுக்கு வந்துட்டார். அவர் வருவதுக்கு முன்னாலயே இந்த மாதிரி எக்ஸ்பெரிமென்ட் எல்லாம் செய்து முடிச்சுடுவேன், அதனால், இந்த baking-ஐ அப்படியே ஸ்டாப் பண்ணிட்டு, அரிசிம்பருப்பு சாதம்,கத்தரிக்கா-உருளைக்கிழங்கு பொரியல் செய்து இரவு உணவும் சாப்பிட்டாச்சு. இவர் மும்முரமா எலக்ஷன் ரிஸல்ட் பார்த்துட்டு இருந்தார், கேக் செய்ய திங்க்ஸ் எடுத்து வெளியில் வைச்சது நைட் 10 மணிக்கு திடீர்னு நினைவு வந்தது!

ஆரம்பிச்ச வேலைய பாதில விடமுடியுமா என்ன? மறுபடி ஆரம்பிச்சேன். எலக்ட்ரிக் பீட்டர்ல முட்டை+ஆயிலை beat பண்ணும்போது சத்தம் பலமா வர்ர மாதிரி எனக்கு ஒரு பயம்! "ரொம்ப சவுண்டா இருக்கா?"-ன்னு இவர்கிட்ட கேட்டேன். ஒண்ணுமே சொல்லல. நான் சொன்னதை கவனிக்காம டிவி பார்க்கறார் போலன்னு beating-ஐ தொடர்ந்தேன், உடனே சொல்லறார்,"இப்பதான் சத்தம் கேக்குது"-அப்படின்னு!!!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இதுக்கப்புறம் சத்தம் யாருக்கு கேட்டா என்னன்னு வேலையைத் தொடர்ந்து கேக்-ஐ அவன்-ல வைத்தேன். அப்பவே மணி 11-க்கு மேலே ஆகிட்டது.

நல்லா தூக்கம் வருது,ஆனா கேக் அவன்-ல இருக்கு. கஷ்டப்பட்டு முழிச்சிட்டு இருந்தேன். 35 நிமிஷம் கழிச்சு எடுத்துப் பார்த்தா, வேகலை. மறுபடி பத்துப்பத்து நிமிஷமா தூங்கி முழிச்சு, தூங்கி முழிச்சு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கப்புறம் கேக் ரெடியாச்சு! அந்நேரம் அம்மா அறுதிப்பெரும்பான்மையோடு வெற்றியடைந்து, டிவி-ல எல்லாருக்கும் லட்டு விநியோகம் செய்து வெற்றியைக் கொண்டாடிட்டு இருந்தாங்க. நாங்க சுடச்சுட கேக்கை வெட்டி சாப்பிட்டு தூங்கிட்டோம்! :)


தேவையான பொருட்கள்
மைதா (ஆல் பர்ப்பஸ் ஃப்ளோர்)-11/4கப்
கார்ன் ப்ளோர்-1/4கப்
பேக்கிங் பவுடர்-1/2டீஸ்பூன்
பேக்கிங் சோடா-1/4டீஸ்பூன்
மிளகுத்தூள்-1/2டீஸ்பூன்
உப்பு-1/2டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
முட்டை-2
எண்ணெய்(கனோலா ஆயில்)-1/4கப்
பால்-1/3கப் + தயிர்-2/3கப் (ஒரிஜினல் ரெசிப்பில மோர் சேர்த்திருந்தாங்க. என்னிடம் மோர் இல்லாததால் இப்படி அட்ஜஸ்ட் செய்துகிட்டேன்.மோர் இருந்தால் ஒரு கப் மோர் சேர்த்துக்கலாம்.)

பொடியாக நறுக்கிய- ப்ரோக்கலிப் பூக்கள்-1/2, கேப்ஸிகம்-1,வெங்காயம்-1,
பச்சைமிளகாய்-1,கொத்துமல்லி இலை-1டேபிள்ஸ்பூன்

செய்முறை
கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சூடாக்கி நறுக்கிய மிளகாய்-கொத்துமல்லி இலை-ப்ரோக்கலி-கேப்ஸிகம்-வெங்காயத்துண்டுகளை 3-4 நிமிடங்கள் வதக்கி ஆறவைக்கவும்.

மைதா-கார்ன் ஃப்ளோர்-பேக்கிங் பவுடர்-பேக்கிங் சோடா-மிளகுத்தூள்-உப்பு-சீரகம் இவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். பாலையும் தயிரையும் நன்றாக கலந்துவைக்கவும்.

முட்டை+எண்ணையை எலக்ட்ரிக் பீட்டரால் நுரை பொங்க கலக்கவும். இதனுடன் தயிரை சேர்த்து விஸ்க்கால் மெதுவாக கலக்கவும். வதக்கிய காய்களையும் சேர்த்து கலக்கவும்.


காய்கள் நன்றாக கலந்தபின்னர் மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.

வெண்ணெய் தடவிய பேக்கிங் பானில் கேக் கலவையை ஊற்றி மீதமிருக்கும் காய்களை மேலாகத்தூவி..
350F ப்ரீஹீட் செய்த அவனில் 55 முதல் 60 நிமிடங்கள் பேக் செய்யவும்.

கேக் பான்-ஐ அவன்-லிருந்து எடுத்து கொஞ்சநேரம் ஆறவைத்த பின்னர்தான் கேக்கை பானிலிருந்து தனியே எடுப்பது வழக்கம். இந்த கேக் அவனிலிருந்து வெளியே வரும்போதே நடுஇரவு! அதுக்கும் மேலே வெயிட் பண்ண நேரமில்லாததால் அப்பவே எடுத்தேன். அழகாக முழுசா வந்துட்டது. :)

இனி என்ன? துண்டுகளாக வெட்டி...

ருசிக்க வேண்டியதுதான்!
:)
~~~~~~~~~~~
பி.கு. போனவாரத்தில் ப்ளாகர் டவுனா இருந்த நேரத்தில் கேக் செய்ததால் ரெசிப்பியில் எனக்கு வந்த சந்தேகங்களை தீர்த்துக்க முடியல. அதனால் ப்ரியாவின் ரெசிப்பியில் என் வசதிப்படி ஒரு சில மாற்றங்களுடன் செய்திருக்கிறேன்.

18 comments:

 1. Love savory baking mahi. Thoongi yenchu yenchu bake pannigla ROFL vegalinu thorandhu thorandhu paatha ipdi dhan pazhi yedukkum :P

  ReplyDelete
 2. wonderfully baked cake. nice and love the savoury version of cake

  ReplyDelete
 3. appadi eppadiyo cake supera seithu mudichuteenga mahi. Cake romba nallave vathirukkuthu.
  Kurinjikathambam

  ReplyDelete
 4. கேக் ரொம்ப நல்லா வந்திருக்கு..நானும் செய்யனும்னு நினைக்கிறேன்,நேரம் வரல..

  ReplyDelete
 5. புது விதமான ரெசிப்பியா இருக்கு. படங்கள் அருமை, மகி.

  ReplyDelete
 6. Hi,looks good! ithai egg illamal seyya mudiyuma?

  ReplyDelete
 7. Love the way you have written :-) btw, cake looks so delicious..

  ReplyDelete
 8. அருமையாகவும் புதுவிதமாகவும் இருக்கு மஹி.

  ReplyDelete
 9. Luv the savory version,luks so soft and delicious...Perfect bake.

  ReplyDelete
 10. enaku kudukkama neengaley saaptreengala?kirrrr

  ReplyDelete
 11. enaku antha cake parcel pannidunga ammam choliten..
  :)

  ReplyDelete
 12. நல்லாத் தெரியுது மகி. ஸ்கூல்ல ஷேர்ட் லஞ்ச் வரப்ப செய்துட்டுப் போகலாம் என்று இருக்கேன். எங்க வட்டாரத்துக்கு ஏற்றதாத் தெரியுது.

  ReplyDelete
 13. Looks good, I must try soon.

  ReplyDelete
 14. //கத்தரிக்கா-உருளைக்கிழங்கு பொரியல்//
  வாவ்... நம்ம ஊரு ஸ்பெஷல்... :)))

  //டிவி-ல எல்லாருக்கும் லட்டு விநியோகம் செய்து வெற்றியைக் கொண்டாடிட்டு இருந்தாங்க. நாங்க சுடச்சுட கேக்கை வெட்டி சாப்பிட்டு தூங்கிட்டோம்//
  அவங்களா நீங்க? சொல்லவே இல்ல... ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங் மகி..:)

  Creative recipe... thanks for sharing...(மைண்ட்வாய்ஸ் - ஹும்க்கும்... என்னமோ நாளைக்கே செய்யற மாதிரி தான்...ஹையோ ஹையோ)

  ReplyDelete
 15. ராஜி,இட்லி செய்யும்போது கிச்சன் டைமர் செட் பண்ணிடுவேன்,அது பத்து நிமிஷத்தில வெந்துரும். இந்த முறை கேக் செய்தது அன் டைமா போச்சு. :) தேங்க்ஸ் ராஜி!
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெயஸ்ரீ!
  ஹாஹ்ஹா,ஆமாம் குறிஞ்சி! தேங்க்ஸ்!
  மேனகா,இந்த கேக் பாத்துட்டிங்க,சீக்கிரம் செய்துடுவீங்க.:) தேங்க்ஸ் மேனகா!
  வானதி,பாராட்டுக்கு நன்றி!
  அனானி,எக் சப்ஸ்டிட்யூட் ஏதாவது சேர்த்து செய்து பாருங்க.நல்லாத்தான் வரும்னு நினைக்கிறேன். பட்டர் கொஞ்சம் அதிகமா போட்டு ட்ரை பண்ணி பாருங்க.நன்றி!
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நித்து!

  ReplyDelete
 16. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா!

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரேமா!
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா! கேக் பார்சல் அனுப்பிட்டேன். :)

  /நல்லாத் தெரியுது மகி./கண்ணாடி போடாமலே நல்லாத் தெரியுதோ இமா? ;) கட்டாயம் செய்து கொண்டுபோங்க. தேங்க்ஸ்! :)

  தேங்க்ஸ் ஜலீலாக்கா!

  மகேஷ் அக்கா,செய்து பார்த்து சொல்லுங்க.நன்றி!

  புவனா,ஆமாம் அவசரமா சமைக்கணும்னா கை குடுக்கறது இந்த காம்பினேஷன் தானே? :)
  டிவி-ல ஒரு மீசைக்காரர் எல்லாருக்கும் லட்டு குடுத்தாரே,நீங்க பாக்கல? ;)
  மைண்ட்வாய்ஸ கொஞ்சம் இந்தப்பக்கம் அனுப்புங்க,நான் கேக் செஞ்சு குடுத்துவிடறேன்.

  ReplyDelete
 17. வெஜ் கேக்...வித்தியாசமாக இருக்கே!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails