Saturday, November 5, 2011

மிக்ஸர்

காராபூந்தி
தேவையான பொருட்கள்
கடலைமாவு-3/4கப்
தண்ணீர் -1/2 கப்
எண்ணெய்
மஞ்சள் food colour -2 துளிகள்

செய்முறை
கடலைமாவில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
மஞ்சள் கலரையும் மாவுடன் சேர்த்து கலக்கவும்.
மிதமான சூட்டில் எண்ணெய் காயவைத்து பூந்திகளாகப் பொரித்தெடுக்கவும்.
****
ஓமப்பொடி

தேவையான பொருட்கள்
கடலைமாவு-1கப்
அரிசிமாவு-1/2கப்
வெண்ணெய்-1டீஸ்பூன்
பெருங்காயப்பொடி-1/8டீஸ்பூன்
தண்ணீர்
உப்பு
எண்ணெய்

செய்முறை
கடலைமாவு-அரிசிமாவு-வெண்ணெய்-உப்பு-பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் கலந்து கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவுபதத்துக்கு பிசையவும்.
எண்ணெய் காயவைத்து, முறுக்கு அச்சில் சிறிய கண்கள் இருக்கும் தட்டை போட்டு, நேரடியாக ஓமப்பொடியை எண்ணெயில் பிழிந்துவிடவும்.
ஓமப்பொடி பொன்னிறமாக வெந்ததும் எடுத்து வைக்கவும்.

***
மிக்ஸர்

தேவையான பொருட்கள்
பூந்தி
ஓமப்பொடி( கைகளால் நொறுக்கிக் கொள்ளவும்.)
மிளகாய்த்தூள்-1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்-1/8டீஸ்பூன்
உப்பு

எண்ணெயில் பொரிக்க
வேர்க்கடலை -1/4கப்
பொட்டுக்கடலை-1 கைப்பிடி
அவல் -1 கைப்பிடி
கறிவேப்பிலை -2 கொத்து
முந்திரி -10
நசுக்கிய பூண்டு -4பற்கள் (விரும்பினால்)

செய்முறை
எண்ணெய் காயவைத்து பொரிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியாகப் பொரித்தெடுக்கவும்.
எல்லாப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பூண்டு வாசனையுடன் மொறுமொறுப்பான காரசாரமான மிக்ஸர் ரெடி!

காராபூந்தி-ஓமப்பொடி இவற்றை முன்பே பொரித்து வைத்துக்கொண்டால் மற்றபொருட்களை பொரித்து கலந்தால் சிலநிமிடங்களில் சூப்பர் மிக்ஸர் ரெடி!

9 comments:

  1. சூப்பரா இருக்கு. நீங்க செய்யும் ஒவ்வொரு டிபன் வகையறாக்கள் ரெம்ப டேஸ்டிதான்.சிலவற்றை செய்திருக்கிறேன். மிக்சர் செய்யனும் ஆசை ஆனால் மெனக்கேடு என விட்டுடுவேன். இதைப்பார்த்ததும் உடனே செய்யனும். நன்றி சிம்பிள்& சூப்பர்.நான் நியூ என்ரி. டைம் கிடைக்கும் போது வாரேன்.சாரி.

    ReplyDelete
  2. ஓமப்பொடி அப்படியே சாப்பிடலாம் போலஇருக்கு. ஒவ்வொன்றும் அருமை. என்தஸ்கூல்லே படிச்சே. இதெல்லாம் எழுத

    ReplyDelete
  3. Mixture ... Super Mahi..:) U make it sound so easy... Wonderful snack for the evening time..:) loved it..
    Reva

    ReplyDelete
  4. ஆஹா...தீபாவளி மிக்சரா?அழகா செய்து காட்டி இருக்கீங்க மகி.

    ReplyDelete
  5. மகி சூப்பர்,எங்க வீட்டில் மிக்ஸர்(கடையில் வாங்கியது) எப்பவும் வீட்டில் இருக்கும்,இனி நானே செய்து பார்க்க வேண்டியது தான்.அம்மாடி பெரிய சமையல் கில்லாடி தான் நீங்க,அனைத்து விதமான சமையலும் செய்து அசத்துறீங்க..

    ReplyDelete
  6. மிக்‌ஷர் நல்லாயிருக்கு.

    ஆனா ஓமப்பொடி எனில் அதில் ஓமம் சேர்த்திருக்க வேண்டுமே? இல்லையெனில் அது எப்படி ஓமப்பொடியாகும்? எங்கிட்டயேவா?:)))).

    ReplyDelete
  7. உமா,முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. புதுவரவுகளைப் பார்த்தாலே ஒரு சந்தோஷம்!:)

    நானும் மிக்சர் செய்வது கஷ்டம்னுதான் நினைச்சேன்,ஆனா சிம்பிளாதாங்க இருக்கு. என்ன ஒண்ணு, டீப் ஃப்ரை பண்ணிட்டேஏஏஏ இருக்கோமேன்னு நம்ம மைண்ட்வாய்ஸ் குய்யோமுறையோன்னு கத்தும்,கண்டுக்காம பொரிச்சிடணும்,அம்புட்டுதான்!;)

    டைம் கிடைக்கும்போது அடிக்கடி வாங்க. எதுக்கு "சாரி"?? சேலை அனுப்பறீங்களா,ஹிஹீ,ரெம்ப நன்றீங்க! :))))))

    ~~
    காமாட்சிம்மா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா! நான் படிச்சது கோவையில் ஒரு அரசினர் மேல்நிலைப்பள்ளிங்க. :)
    ~~
    ரேவதி,உமாவுக்கு சொல்லிருக்கேனே,அதே பதில்தான்! ஈஸிதான்,ஈஸிதான்,ஈஸியேதான்! ;)
    நன்றி ரேவதி!
    ~~
    ஆமாம் ஸாதிகா அக்கா,தீபாவளிக்கு செய்து ரெண்டேநாளில் காலியும் ஆயிட்டது!
    நன்றி!
    ~~
    ஆசியாக்கா,இனிமே வீட்டுலயே மிக்சர் செய்துருங்க. ப்ரெஷ் அன்ட் கம்பேரிட்டிவ்லி ஹெல்த்தி மிக்சர்! :)
    நன்றி ஆசியாக்கா!
    ~~
    /ஆனா ஓமப்பொடி எனில் அதில் ஓமம் சேர்த்திருக்க வேண்டுமே? /கரெக்ட்டுதான் அதிரா,தனியா ஓமப்பொடியா இருந்தா ஓமம் சேர்ப்பாங்க.ஆனா மிக்"ஷ"ர்ல போடறதுக்கு ஓமம் போடாமத்தான் செய்வாங்கன்னு நினைக்கிறேன். :)
    நன்றி அதிரா!

    ReplyDelete
  8. ரொம்ப அருமை மகி
    ஓம பொடியில் ஒமம் இதில் சேர்க்கலையா?

    எப்போதும் ஊரிலிருந்து அடிக்கடி மிக்சர் வந்து கொண்டே இருப்பத்ால் செய்வதிலை

    ஆனால் தீபாவளி அப்ப என் பைய ஏதாவது ஸ்நாக்செய்தெே ஆும்
    என்ற்தால்
    ஓம முருக்கு
    ராகிபார்லி தட்டை
    பால்கோவா
    செய்து கொடுத்தேன்.

    ReplyDelete
  9. ஜலீலாக்கா,வாங்க! எனக்கு ஓமம் அவ்வளவாப் புடிக்காது..இதுவரை நான் வாங்கினதே இல்ல! ;) அதுவும் இல்லாம மிக்ஸர்ல ஓமம் சேர்க்காமத்தான் பிழிவாங்கன்னு நினைக்கிறேன். உங்க பலகாரலிஸ்ட் சூப்பரா இருக்கு. :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜலீலாக்கா!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails