Wednesday, February 29, 2012
Monday, February 27, 2012
பூரி,கிழங்கு & சட்னி

உருளைகிழங்கு மசால் -தேவையான பொருட்கள்
வேகவைத்த உருளைக்கிழங்கு -2
பொடியாக நறுக்கிய கேரட் - 3 டேபிள்ஸ்பூன்
வெங்காயம்(மீடியம் சைஸ்)-1
பச்சைமிளகாய்-2 (காரத்துக்கேற்ப)
வரமிளகாய்-1
தக்காளி-1
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை- கொஞ்சம்
சர்க்கரை-1/4டீஸ்பூன்
தண்ணீர்- 3/4கப்
உப்பு
எண்ணெய்
செய்முறை
வெந்த உருளைக்கிழங்கை தோலுரித்து உதிர்த்து வைக்கவும்.
வெங்காயம்,மிளகாய்,தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவிட்டு கடுகு-சீரகம்-கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெங்காயம்,பச்சைமிளகாய்,கிள்ளிய வரமிளகாய்,கேரட்,தக்காளி,மஞ்சள்தூள் சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கவும்.
உதிர்த்த கிழங்கு,தேவையான உப்பு சேர்த்து கிளறிவிட்டு தேவையான தண்ணீர் (1/2கப் to 3/4கப் சேர்த்திருப்பேன்) விட்டு கொதிக்கவிடவும்.
மசால் வெகுநேரம் கொதிக்கத் தேவையில்லை, ஒரு கொதி வந்ததும், சர்க்கரை சேர்த்து, நறுக்கிய மல்லி இலை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான உருளைகிழங்கு மசால் ரெடி. சப்பாத்தி-பூரிக்கு நல்லா மேட்ச் ஆகும்.
கோதுமை மாவு/ஆட்டா மாவு -11/2கப்
தண்ணீர் -1/2 கப்
உப்பு-1/4டீஸ்பூன்
செய்முறை
பொதுவாக சப்பாத்திக்கு மாவின் அளவில் பாதி தண்ணீர் ஊற்றி பிசைந்தால் சரியாக இருக்கும், ஆனால் பூரிக்கு மாவு கொஞ்சம் கெட்டியாக இருக்கவேண்டும்,அதனால் தண்ணீர் கொஞ்சம் குறைவாக ஊற்றினாலே சரியாக இருக்கும்.
மாவுடன் உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பிசைந்து, காற்றுப்புகாத பாத்திரத்தில் அரைமணி நேரம் வைக்கவும்.
பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
/பரத்துவது..அவிங்கவிங்க ஊர்ல என்ன சொல்லுவீங்களோ, அந்த வார்த்தையைப் போட்டுக்குங்கப்பா! எங்க வீட்டுல தேய்ப்பதுன்னுதான் சொல்லுவோம். :) ) அதனால் பூரிக்கு உருண்டையே சின்னதாக பிடித்துக்கொண்டால் சிறு பூரிகளை தேய்ப்பதும் சுலபமாக இருக்கும். பொரிப்பதற்கும் அதிகம் எண்ணெய் தேவையில்லை,கொஞ்சம் எண்ணெயிலே சுட்டு எடுத்துவிடலாம்.

Thursday, February 23, 2012
தொடுவானம்...
என்னைக் காணவில்லை என்றதும் அக்கறையாய் விசாரித்த வலையுலகின் நட்புக்களுக்கும் போனிலும் நேரிலும் கேட்டவர்களுக்கும்.. a small note of thanks with a loooo..ng stem rose! :)
Monday, February 13, 2012
மிளகாய் குழம்பு / Mirchi ka Salan
தேவையான பொருட்கள்
(காரமில்லாத) பெரிய மிளகாய்-3
வெங்காயம்-1
புளிக்கரைசல்-1/4கப்
மிளகாய்த்தூள்-11/2டீஸ்பூன்(மிளகாயின் காரத்துக்கேற்ப குறைத்துக்கொள்ளவும்)
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
அரைக்க
தேங்காய்-2டேபிள்ஸ்பூன்
எள்ளு-1டேபிள்ஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை-2டேபிள்ஸ்பூன்
செய்முறை
1.கடாயில் எண்ணெய் காயவைத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும், விதைகளை எடுத்து பெரிய துண்டுகளாக நறுக்கிய மிளகாய் சேர்த்து வதக்கவும். (நான் பஜ்ஜி மிளகாயை உபயோகித்ததால் நான்காக கீறிவிட்டு முழுதாக சேர்த்திருக்கேன்.)
2.அரைக்க வேண்டிய பொருட்களை தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.
3.மிளகாய் வதங்கியதும் அரைத்த விழுது +மஞ்சள்தூள் +மிளகாய்த்தூள் + உப்பு சேர்க்கவும்.

5.காரசாரமான மிர்ச்சி கா சலன் ரெடி. பிரியாணியுடன் சாப்பிட பர்ஃபெக்ட் சைட் டிஷ்.
Wednesday, February 8, 2012
தவா புலாவ்/ Tawa Pulao
உதிரியாக வடித்த சாதம் -11/2கப்
நறுக்கிய காய்கறிகள் -1கப்
(1 கேரட், 5 பீன்ஸ், காலிஃப்ளவர், பட்டாணி, கலர் குடைமிளகாய்)
தக்காளி -1
மஞ்சள்தூள்-1/4கப்
மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்
பாவ்பாஜி மசாலா- 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு -1டேபிள்ஸ்பூன்
கொத்துமல்லி இலை கொஞ்சம்
சீரகம்-1டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு
செய்முறை
காய்களை கழுவி நடுத்தர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து காலிஃப்ளவரை லேசாக வறுத்து, வேக வைத்த காய்களையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கி எடுத்துவைக்கவும். (குடைமிளகாயை வதக்கத் தேவையில்லை)
தவா புலாவ் மும்பையிலே மிகவும் பிரபலமான உணவுவகை..சாலையோரக் கடைகளில் தவா புலாவ் சூடாக செய்து தருவாங்களாம்..இந்த முறை ஊருக்கு போயிட்டு வரும்போது மும்பை வழியாக வந்தோம், அப்பொழுது சில(பல) மணி நேரம் ட்ரான்ஸிட் டைம் இருந்தது. விமான நிலைய பணியாளர்களுக்கான கேன்டீன் என்று நினைக்கிறேன், எங்க ஏர்லைன் கேட்டைத் தேடியதில் அந்த கேன்டீனைக் கண்டுபிடித்து மதிய உணவு முடித்துவிட்டு மூட்டை முடிச்சுக்களுடன் வெயிட்டிங் ரூமில் உட்கார்ந்திருந்தோம்.
இரவு உணவுக்கு மறுபடியும் பெட்டிகளை எடுத்துக்கொண்டு போகமுடியாது..ஓரொருவராகத்தான் போய் சாப்பிட்டுவரவேண்டும் என்று நினைத்து மண்டை காய்ந்துகொண்டிருந்தப்ப ஒரு ஆள் ரூமில் தேநீர் விற்றுக்கொண்டு வந்தார். டீ வாங்கிய பொழுது இரவு உணவு வேண்டுமானால் நானே கேன்டீனில் இருந்து வாங்கிவந்து தருகிறேன், என்ன வேண்டும் என்று ஆர்டர் பண்ணுங்க..உணவைக் கொடுத்துவிட்டு பணம் வாங்கிக்கொள்கிறேன் என்றார். ஆஹான்னு ஒரு தவா புலாவ், பனீர் கறி மற்றும் நான் ஆர்டர் செய்தோம், வாங்கிவந்து கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம்...ரொம்ப சுத்த்தமாக இருந்தது என்று சொல்ல முடியவில்லை..ஆனா இந்த சர்வீஸ்(!) சூப்பர்! Mumbaikar rocks! :) :)
Thursday, February 2, 2012
கதம்பம்..
கதம்பம்..மல்லிகை(அ)முல்லை, கோழிக்கொண்டை, மரிக்கொழுந்து,மருகு, என்று வெள்ளை,சிவப்பு,பச்சை என்று மூன்று வண்ணப்பூக்களைத் தொடுத்த சரத்தைச் சொல்வோம் எங்க ஊரில்..சிலநேரங்களில் வெள்ளைநிறத்துக்கு ஒரு பூ சேர்த்திருப்பார்கள். (பெயர் நினைவு வரல..வெள்ளைவெளேர்னு முல்லை போலவே இருக்கும்,ஆனா வாசனையே சுத்த்த்த்தமா இருக்காது. என்று சொல்லிருந்தேன், பிறகு நினைவு வந்தது.. ;), "காக்கடா" என்று சொல்லுவோம். எடிட் பண்ணலாம்னு வந்தா, குறிஞ்சியும் சொல்லிருக்காங்க.. :)). கலர்ஃபுல்லாக அழகாக இருக்கும்.
பொதுவாகவே எனக்கு செடிகளில் இருந்து மல்லி,முல்லை,ஜாதிமுல்லை பூக்களை பறிப்பதும் பிடிக்கும், நெருக்கமாக சரம் தொடுக்கவும் மிகவும் பிடிக்கும். ஊரில் இருக்கையில் கட்டிய சரம் வாங்குவதை விட விடுபூ(உதிரிப்பூ) வாங்கி கட்டி(சரம் தொடுத்து) வைப்பதே வழக்கம்.
ஸ்கூல்/காலேஜ்/வேலைக்குக் கிளம்பும் அவசரத்திலும் அப்படியே போற போக்கில பூ வாங்கி வைத்துக்கொண்டு போனதுண்டு. பஸ்ஸ்டாப் பூக்காரம்மாக்கள் பூவைத் தலையில் வைக்க ஹேர்பின்( to be more precise in our slang, பூ குத்தற(!) சைடூசி! :)) ) கூட விற்பாங்க. வீடுகளில் செடிவைத்து விற்பனை(!) செய்வோர் டம்ளர் கணக்கில் விற்பாங்க.அங்கே சீக்கிரமாப் போனால்தான் பூ கிடைக்கும், இல்லன்னா அக்கம் பக்கம் இருக்கும் போட்டிக்காரிகள்(!) வாங்கிட்டுப் போயிருவாங்க. ;)
கோவையில் காந்திபுரம்-க்ராஸ்கட் ரோடு கார்னரிலும், உள்ளே லக்ஷ்மி காம்ப்ளக்ஸ்,கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர் அருகிலும் நெருக்கமாகத் தொடுத்த மல்லிகைச் சரங்களை விற்பார்கள். மாலை மாதிரி அவ்வளவு நெருக்கமாகத் தொடுக்கப்பட்டிருக்கும். மல்லிகையின் இடையிடையே ப்ளாஸ்டிக்கில் வண்ணவண்ணமாக குட்டிகுட்டிப் பூக்கள் சேர்த்து கோர்க்கப்பட்ட மல்லிகைச் செண்டுகளும் கல்யாண சீஸன்ல படுவேகமா விற்பனையாகும். பட்டுச்சேலைக்கு மேட்சான கலரில் பூ கோர்த்த மல்லிகைச் செண்டு சூப்பரா இருக்கும்ல?;)
பூவை நெருக்கமாகத் தொடுத்து தண்ணீர் தெளித்து (எவர்)சில்வர் டப்பாவில் போட்டு மூடிவைத்தால், அடுத்தநாள் காலையில் சூப்பரா வைச்சுட்டுப் போலாம்..ம்ம்ம்...அது ஒரு அழகிய கனாக்காலம்!
***அப்டேட்***
யு.எஸ். மற்றும் கனடா வாழ் தமிழ்த்திருமக்களே, உங்களுக்கு மல்லிகை,முல்லைப்பூ எவ்வளவு விலையா இருந்தாலும் பரவால்லை, வாங்கியே ஆகணும்னு ஆசைப்பட்டீங்கன்னா, இதோ இங்கே க்ளிக்குங்க. இந்த பேன்ஸி ஃப்ளோரிஸ்ட்ஸ் மல்லி, முல்லை இப்படி பூக்கள் எல்லாமே விற்பனை செய்யறாங்க. கல்யாணம் கச்சேரி எல்லாத்துக்கும் பூ அலங்காரமும் செஞ்சு குடுக்கறாங்களாம்.....(பூ விக்கற தகவல் சரி,,,அடுத்தது எதுக்குன்றீங்களா??? ஜஸ்ட் இன் கேஸ்...ஹிஹிஹி! :))))))~~~
புற்றுநோய் விழிப்புணர்வை எல்லாரிடமும் பரப்பும் வகையில் நேசம் அமைப்பினரும் யுடான்ஸ் திரட்டியும் இணைந்து பல்வேறு போட்டிகள் நடத்துகிறார்கள்.

~~
மீராஸ் டேலன்ட் கேலரி யில் இருந்து என் வலைப்பூவுக்கு ஒரு விருது கொடுத்திருக்காங்க.. மீராவின் வலைப்பூவில் பல்வேறு கைவேலைகளில் இருந்து வட இந்திய உணவுவகைகள் வரை பல ஸ்வாரசியமான விஷயங்கள் உண்டு.கவிதை,ஓவியம், சமையல், கைவேலை என்று பலதுறைகளில் பிரகாசிக்கும் மீராவிடம் இருந்து இந்த விருதைப் பெற்றது சந்தோஷமாக இருக்கிறது.மிக்க நன்றி மீரா!! :)

1.வானதி -- "வானதி'ஸ்"
2.ப்ரியா ராம் -- "ரசிக்க ருசிக்க"
3.அதிரா -- "என் பக்கம்"
4.ஏஞ்சலின் -- "காகிதப்பூக்கள்"
5.விஜி -- "விஜி'ஸ் க்ராஃப்ட்ஸ்"
இவர்களுக்கு வழங்குகிறேன். விருது பெற்ற ஐவருக்கும் வாழ்த்துக்கள்! 200க்கு குறைவான பின்தொடர்வோர்( followers) இருக்கும் உங்களுக்கு விருப்பமான வலைப்பூ தோழமைகளுடன் இந்த விருதினைப் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
விருதை மட்டும் குடுத்தா நல்லாருக்காதில்ல..இந்தாங்க, பீன்ஸ் கேஸரோல் & கோக்கனட் கேக்! கேஸரோல் சுத்த சைவம்..கேக்ல முட்டை சேர்த்திருக்கு. பார்த்து சாப்பிடுங்க. :)

அடுத்து எங்க வீட்டுப்பக்கம் இருக்கும் ஒரு கடற்கரை..வீட்டிலிருந்து 20 நிமிட பயணதூரத்தில் இருக்கு..ஒரு புறம் மலைக்குன்றுகள், மறுபுறம் பஸிஃபிக் கடல் என்று அழகாக இருக்கும் சிறிய கடற்கரை..பலமுறை போயிருக்கிறோம்..ஒரு முறை சென்ற பொழுது கடலோரம் இருந்த உணவகம் ஒன்றில் லன்சுக்குப் போலாம் என்று நினைத்து மாலை 4 மணிக்கு சாப்பிட்டுக்கொண்டே சூரியன் கடலில் மூழ்கிய காட்சியை ரசித்தோம்..அதே நேரம் கடலோரம் நடந்துகொண்டிருந்த ஒரு போட்டோஷூட் கண்ணில் பட்டது. :)
நம்மள்லாம் கல்யாணம்னா மண்டபம் புடிச்சு,ஸ்டேஜ் டெகரேஷனுக்கு தனியா ஒரு செலவு செய்து போட்டோ எடுப்போம், இங்கே கல்யாணத்தை முடித்துவிட்டு சன்ஸெட் சமயத்தில் கடற்கரைக்கு வந்து கடலன்னையும் வானமும் இயற்கையாக சிருஷ்டித்திருந்த எழில்பொங்கும் செஞ்சாந்து நிறப் பிண்ணணியில் மணமக்கள் புகைப்படம் எடுத்துகிட்டு இருந்தாங்க...எந்த ஊர் கல்யாணமா இருந்தாலும் எப்பவுமே கல்யாணக்கூட்டத்தைப் பார்த்தாலே ஒரு சந்தோஷம்தான், இல்லீங்களா? :)

Labels:
இயற்கை,
கோவை ஸ்பெஷல்,
புகைப்படத் தொகுப்பு,
ரசித்தவை,
விருது
Subscribe to:
Posts (Atom)