காரில் போகப்போக என்னுடன் துணைக்கு வந்த மேகங்களும் நீலவானமும்..
சூரியன் மேற்கில் புதையும் தருணம்..காற்று மேகங்களின் தலையைக் கலைத்து விளையாடிய ஒரு கணம்..
பஞ்சு மிட்டாயைக் கிள்ளிப்போட்டது போல வானமெங்கும் குட்டிக்குட்டியாய்க் கிள்ளிப்போட்ட மேகங்கள்..யார் சாப்பிடுவதற்கோ? :)
இந்தப் படத்தில் இடது மூலையில் செடிகளுக்கு சற்று மேலே இருந்த மேகக்கூட்டம் என் கண்ணைக் கவர்ந்தது..கார் கண்ணாடிக்குள் இருந்து படமெடுக்கையில் அவ்வளவாத் தெரியலையோ??
தூரத்தில் மழை பொழிகிறது..
மலையுச்சியைத் தட்டிக்கொடுக்கும் மேகம்...
பாலையும், பாலையின் வானமும், வானத்தில் மேகமும்.. இதுவும் ஒரு அழகுதான்!
திரும்பி வந்த பாதை..
பனியுடன் ஒரு சூரிய அஸ்தமனம்..
இனியும் யாரும் கேட்பீங்க..எங்கே இந்த மகியைக் காணோம்னு?? போட்டோவாப் போட்டே ஒரு வழி பண்ணிருமே,வராம இருக்கவரை நல்லதுன்னுதானே நினைக்கறீங்க?? :D :D
என்னைக் காணவில்லை என்றதும் அக்கறையாய் விசாரித்த வலையுலகின் நட்புக்களுக்கும் போனிலும் நேரிலும் கேட்டவர்களுக்கும்.. a small note of thanks with a loooo..ng stem rose! :)
heyyyyyyyyyyyy meeeeeeeeeee the firstuuuuuuuu
ReplyDeleteபடங்களும்
ReplyDeleteஅதற்கு ஏற்ற வர்ணனைகளும்
கலக்கல்
கடைசியில் போட்டோ தெளிவாக தெரியவில்லை
Nice pictures, athai vida arumai your comments..
ReplyDeleteஅருமையான புகைப்படங்கள் அருமையான வர்ணனை.
ReplyDeleteenjoyed reading the post...sky with perfect sky blue colour.love it.
ReplyDeleteபடங்க அழகென்ரால் வர்ணனைகளும் சூப்பர். வாழ்த்துகள்.
ReplyDeleteபடத்துக்கு கவிதையும் ”மாதிரி” போட ஆரம்பிச்சிட்டீங்க சூப்பர் .
ReplyDeleteஆனா யாரும் தேடின மாத்ரி தெரியலையே...தேம்ஸ் கரையில ஃபிஷ் ஃபிரை + புட்டு சாப்பிட்டுகிட்டே யாரோ இருந்த மாதிரி தெரிஞ்சுது ஹா..ஹா... :-)))))
ReplyDeletehai mahi .... படங்களும் /வர்ணனையும் சூப்பர் .
ReplyDeleteWelcome back Mahi
ReplyDeleteமேக வர்ணனை அழகாக இருக்கு. அடுத்தபடி கவிதை பிறக்கும். அழகான மேகங்கள். அதற்கேற்ற புகைப்படங்கள். சொல்லச் சொல்ல இன்னும், இன்னும் என்று கேட்க வைக்கிறது.
ReplyDeleteபடங்கள் ரொம்ப அழகா இருக்கு விளக்கங்களும் அருமை . ஆனா என்ன ஆச்சு யூஷுவல் மகி குசும்பு மிஸ்ஸிங் :)) ரொம்ப டயர்டோ ?? சீக்கிரம் ஒரு நகைச்சிவை பதிவு போடுங்க. ஐடியா க்கு எல்ப் வேணுமுன்னா நெறைய்ய பேர் இருக்காங்க இல்லே ??
ReplyDeleteநான் உன்னைக் காணோமே என்று நினைத்துக் கொண்டேன்.
ReplyDelete// தேம்ஸ் கரையில ஃபிஷ் ஃபிரை + புட்டு சாப்பிட்டுகிட்டே யாரோ இருந்த மாதிரி தெரிஞ்சுது ஹா..ஹா... :-))))//
ReplyDeleteபாவம் பூஸ் பர்த்டே கொண்டாடின டயர்டுல இருந்தா இப்புடியா போட்டு கொடுக்கறது :)) மிளகாய் கொழம்பு அனுப்பியும் அடங்க மாட்டேங்கிறீங்க ஜெய் :))
Awesome visuals mahi... kalakiteenga:)arputhamana varnanai... neengal ezhudum vidam sooper!!
ReplyDeleteஅடடா.... வந்திடுறேன் தொடுவானம் பார்க்க.. படங்கள் சூப்பர்... புட்டும் ஃபிஸ் பிரையும் சாப்பிட்டபடியே ரசிக்கிறேன்:))
ReplyDeleteVery enjoyable post. :) Really awesome and beautiful pictures you have managed to capture through your lenses, Mahi. Is it snow in the ninth and tenth pictures?
ReplyDeleteNice post like step by step description abt picture.
ReplyDeleteme present, Madam. Will be back later with my VALUABLE comments.
ReplyDeleteSuper Mahi...
ReplyDeletePictures i sonnen.
Ammam ennge pone?
Ethu entha idam?
viji
புகைப்படங்களும் வர்ணனையும் மிக அழகு!
ReplyDeleteநல்ல பகிர்வு.மகியை காணோமேன்னு நினைச்சேன்.
ReplyDeleteஆஹா மஹி... லாஆஆஆங் ட்ரிப் அடிச்சிருக்கீங்க போல... போட்டோஸ் ரொம்ப அழகா வந்திருக்கு... இயற்கையே அழகு... அதை உங்கள் படங்கள் மிக அழகாக எடுத்தியம்புகிறது... இறைவனின் படைப்பை ரசிப்பதோடு நமக்கு வழங்கியதற்காக அவனுக்கு நன்றி சொல்லவும் கடமைப்பட்டிருக்கிறோம்...
ReplyDeleteகவிதை அப்படியே கொட்டுது போங்க... எல்லா பிக்ஸர்ஸும் இனி என் டெஸ்க்டாப்பை அலங்கரிக்கும் ஒவ்வொன்றாக (செய்யலாமா?)... நன்றி.
சிவா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! கடைசி போட்டோவை மாத்திட்டேன்,இப்ப தெரியுதா?:)
ReplyDelete~~
ஹேமா,மிக்க மகிழ்ச்சி உங்க கமென்ட் படித்ததும்! தேங்க்ஸ்ங்க!
~~
ஸாதிகாக்கா,அருமையான கருத்துக்கு நன்றி! :)
~~
சுமி,ஆமாங்க வானத்தின் நீலம் நல்ல பளீர்னு இருந்தது.எங்க ஊர்ல மஞ்சள்,ஆரஞ்சு,சிவப்பு, ரோஸ்கலர்னு மற்ற நிறங்கள் நீலத்தை அமுக்கிரும்!:)
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க!
~~
லஷ்மிம்மா,வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றிம்மா!
~~
ஜெய்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! /யாரும் தேடின மாத்ரி தெரியலையே../ தேடின ஆட்களைப் பற்றி தேடாத ஆட்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைல்ல? அதான் உங்களுக்குத் தெரில! ;)
~~
ஏஞ்சல் அக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
கிரிஜா,ஒரு பத்துநாள் ப்ரேக்கடிச்சதுக்கே இவ்வளவு வரவேற்பா?? டாங்ஸுங்கோ!:)))
~~
காமாட்சிம்மா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றீம்மா!/சொல்லச் சொல்ல இன்னும், இன்னும் என்று கேட்க வைக்கிறது./ கேட்க ஆவலா இருக்குன்னு சொல்லியே மாட்டிக்கப்போறீங்க,ஜாக்கிரதை!;)
காணவில்லை என்று நினைத்திருப்பீங்கனு தெரியுமே,அதான் வந்துட்டேன்! :)
~~
கிரிஜா,/சீக்கிரம் ஒரு நகைச்சிவை பதிவு போடுங்க./ம்ம்..ஐ வில் ட்ரை! /ஐடியா க்கு எல்ப் வேணுமுன்னா நெறைய்ய பேர் இருக்காங்க இல்லே/நான் எழுதுவதெல்லாம் என்ர சொந்தச்சரக்குங்கோ! ;)
பூஸ் பர்த்டே பற்றி உங்க கமென்ட் பார்த்துதான் தெரிந்துகிட்டேன்,டேங்க்ஸ் பார் தி இன்பர்ஃமேஷன்.[படிச்சதும் கிழிச்சுருங்க,பூஸ் பார்க்கும்முன்! ;)]
~~
வித்யா,எல்லாமே கார் போகப்போக எடுத்த படங்கள்! வானம் ரொம்ப அழகா இருந்ததுங்க.:)
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி வித்யா!
~~
அதிரா,புட்டு சாப்பிட்டுட்டே பாத்தா வானம் இன்னுமே அழகா இருக்கும்!:) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
Rathai,thanks for the lovely comment! yes its the unusual snow on the way! I strongly had a feeling that we were going in the opposite direction for a while! LOL!!
~~
Anu,thanks for stopping by and the lovely words!
~~
வானதி, உங்க VALUABLE கமென்ட்ஸ்க்காக வெயிட் பண்ணீட்டேஏஏஏஏஏஏ இருக்கன்,வரமாட்டேன்றீங்களே மேடம்ம்ம்ம்ம்ம்?:))))))
~~
விஜிமா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!எங்க போயிட்டு வந்தோம்னு இனி வரப்போகும் பதிவுகள்ல தெரிஞ்சுப்பீங்க!;)
~~
மனோ மேடம்,வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!
~~
ஆசியா அக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! சில விஷயங்கள் சொல்லாமலே புரியும்!:)
~~
பானு,லாஆஆஆங் ட்ரிப்லாம் இல்லைங்க.41/2 மணி நேர ட்ரைவ்தான்!:) வீட்டை விட்டு வெளியே போனாலே வானம் இருக்கில்ல? விதவிதமா போஸ் குடுத்தது,நானும் க்ளிக் பண்ணிட்டேன். :)
/கவிதை அப்படியே கொட்டுது போங்க.../அழகாக் கொட்டறீங்க,ஆனா பார்த்து,சின்னதுரை,பெரியதுரை,அவிங்க அப்பாதுரை எல்லாம் கவிதைவெள்ளத்தில மூழ்கிரப்போறாங்க! ஹிஹி!
/என் டெஸ்க்டாப்பை அலங்கரிக்கும் ஒவ்வொன்றாக (செய்யலாமா?)... /தாராளமா! ரொம்ப சந்தோஷம்,அந்தளவுக்கு உங்களை என் படங்கள் கவர்ந்தது!:)) நன்றி!
மஹி நீங்க நல்ல ஃபோட்டோக்ராஃபர் கூட..அருமையான புகைப்படங்கள்.அந்த இரண்டாவது புகைப்படம் அவ்வளவு அருமை .கல்ல்க்குறீங்க மஹி .உங்க எழுத்து ரொம்ப அருமையா இருக்கு
ReplyDeleteமகி,
ReplyDeleteபடங்கள் என்ன ஒரு அழகு. "பாலையும், பாலையின் வானமும், வானத்தில் மேகமும்.." இதை வைத்து நானே நினைத்துக்கொண்டேன் இது 'பாம் ஸ்பிரிங்' ட்ரிப் அல்லது 'லாஸ் வேகாஸ் ட்ரிப்' என்று.
தளிகா,முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றிங்க! நல்ல ஃபோட்டோக்ராஃபர்னு வேற சொல்லிட்டீங்க,ரொம்ப சந்தோஷம்!:):)
ReplyDelete~~
சித்ரா மேடம், பாம்ஸ்ப்ரிங் நாங்க இன்னும் போகலைங்க. :)
அழகான நிறைய இடங்களைப் பார்த்தாலும் வானம் என்னை மிகவும் கவர்ந்தது, அதான் அதை முதலிலே போஸ்ட் பண்ணிட்டேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க!
தங்களுடைய பதிவுகள் அனைத்துமே நன்றாக உள்ளது. தங்களுடைய எழுத்துக்கள் படிக்கும்போது மிகவும் சுவாரசியம் நிறைந்துள்ளது. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteபெர்லின், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
ReplyDelete