அக்கா வந்தாங்க, ஆனா அக்காவுக்கும் டென்னிஸுக்கும் பலகாத தூரம் இடைவெளியாம். டென்னிஸ் ராக்கெட்லாம் எனக்குப் பிடிக்காது, ஸ்பேஸ் ராக்கெட்தான் புடிக்கும் அப்படினு பந்தா பண்ணிகிட்டாங்க. ஹிக்,ஹிக்,ஹிக்!! [விக்கல் இல்லீங்க, இது எங்க சிரிப்பு! ஹிக்,ஹிக்,ஹிக்! :) ]
அக்காவைப் பார்க்கற அவசரத்தில குளிச்சு முழுகி, டர்க்கி டவல்-ல சரியா உடம்பு துவட்டிக்காம ஓடியாந்திட்டேன். வெயில் வேற கொளுத்துச்சா, அப்படியே சில்லுன்னு சொகம்ம்ம்மா இருந்துச்சு.


இது எனக்கு போரடிக்கிற வேலை, பேப்பர் ஸ்டாண்ட், பேப்பர் வெயிட்டா இருக்கற ஐட்டங்களை குடுத்தீங்கன்னா கொஞ்ச நேரம் என்ஜாய் பண்ணிக்குவேன்னு சொன்னேன், கல்லெடுத்து அடிக்கவந்திட்டாங்க. ஹாஹாஹா! இது சரிப்படாதுன்னு ஒரு பெரிய ஆலமரத்தைத் தேடிப் போனேன்..அங்க போனா, ஒரு அழகான ஜோடி காதல் அந்தாதி பாடிட்டு இருக்காங்க..
அந்தாதிப் பாடல்- ஒரு வரி முடியும் வார்த்தையில் அடுத்தவரி ஆரம்பிக்கும்.
ஆடிவெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம், கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்..
ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன்கவிதைச் சாரம், ஓசையின்றி பேசுவது ஆசையென்னும் வேதம்..
வேதம் சொல்லி மேளமிட்டு மேடை கண்டு ஆடும், மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்..
நாடும் உள்ளம் ஓடும் எண்ணம் பேசும் மொழி மௌனம், ராகம் தன்னை மூடி வைத்த வீணை அவள் சின்னம்..
-இப்படியாகத் தொடரும் பாடல் முழுவதும், கவனித்திருப்பீங்க! என்னது இல்லையா? கர்ர்ர்ர்ர்ர்ர்! மறுபடி கவனமாக் கேளுங்க.
ஆடிவெள்ளிக்கிழமைக்கேத்த பாட்டாப் போயிருச்சு, நீங்களும் கேளுங்க. வாய்ப்புக் கிடைச்சா, மகி அக்கா வீட்டு மாடியிலிருந்து அப்பப்ப இங்கயும் எட்டிப் பார்ப்பேன். அதுவரைக்கும், sit tight, be good, and come here regularly, okie?!
~~
நேயர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு இந்தப் பாடலும் இணைக்கப் படுகிறது. :)