பகுதி 1 -இல் சொல்லியபடி முக்கோணங்களை மடித்துக் கொண்ட பிறகு, அவற்றை இணைக்கவேண்டும். படத்தில் இருக்கும்படி ஒரு முக்கோணத்தின் இரண்டு கூர்மையான பகுதிகளிலும் இரண்டு முக்கோணங்களின் பாக்கெட்களை செருகவும்.
மூன்று முக்கோணங்களும் இணைந்து இப்படியான ஒரு வடிவம் கிடைக்கும். இதுவே அடிப்படையான இணைப்பு. இதில் தேவைக்கேற்ப முக்கோணங்களை இணைத்து விதவிதமான வடிவங்கள் செய்யலாம்.
பெரும்பாலான மாடல்கள் செய்ய இணைப்பு இதே போலதான் இருக்கும். சில நேரங்களில் முக்கோணங்களை தலைகீழாக இணைப்பதுவும் வரும். தேவைப்படுகையில் அப்படி இணைப்பதைப் பார்த்துக் கொள்ளலாம்.
இந்தப் பதிவில் எளிமையான பூஜாடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மிகவும் ஈஸியான செய்முறைதான். முயற்சித்துப் பாருங்கள். இந்தப் பூஜாடிக்கான செய்முறை கிடைத்தது ரம்யாவின் ஆர்ட் ப்ளேட்டர் வலைப்பூவில். மிகவும் தெளிவாக செய்முறையைக் கொடுத்திருக்கிறார். அழகான கோலங்கள், அருமையான கைவினைகள் நிறைந்த வலைப்பூ, நேரமிருந்தால் கட்டாயம் போய்ப் பாருங்கள்.
~~~
பூ ஜாடி - தேவையான பொருட்கள்ரோஸ் நிற முக்கோணங்கள் -91
ஆரஞ்ச் நிற முக்கோணங்கள் -52
மொத்தம் 143 முக்கோணங்கள்
செய்முறை
பூ ஜாடியின் ஒவ்வொரு வரிசையிலும் 13 முக்கோணங்களை இணைக்கவேண்டும், மொத்தம் 11 வரிசைகள். விருப்பமான வண்ணங்களை எடுத்துக்கொள்ளலாம், அல்லது ஒரே கலர் முக்கோணங்களிலும் செய்யலாம். நான் ஆரஞ்ச் மற்றும் பிங்க் வண்ணங்களை எடுத்திருக்கிறேன்.
முதலிரண்டு வரிசைகளும் ரோஸ் நிறம்...
இந்தப் பதிவின் முதலிரு படங்களில் குறிப்பிட்டுள்ள படி முக்கோணங்களை இணைக்க ஆரம்பிக்கவும். தனித்தனியே இரு செட் (13 முக்கோணங்களை) எடுத்துவைத்துக் கொண்டு இணைக்க ஆரம்பித்தால் சுலபமாக இருக்கும்.
முதலிரண்டு வரிசைகள் இணத்ததும் மூன்றாம் வரிசைக்கு அடுத்த நிறத்தை (ஆரஞ்ச்) இணைக்கவும்.
இப்பொழுது மூன்று வரி முக்கோணங்கள் கிடைத்திருக்கும்..
9 வரிகள் வரும் வரை ரோஸ் - ஆரஞ்ச் முக்கோணங்களை மாற்றி மாற்றி ஒவ்வொரு வரியாக இணைத்துக்கொண்டே வரவும்.
5 வரிகள் இணைக்கப்பட்ட நிலையில்...
9 வரிகளும் இணைக்கப்பட்ட நிலையில் மேலே உள்ள வடிவில் பூஜாடி கிடைத்திருக்கும்.
அடுத்தது 10 மற்றும் 11-ஆம் வரிசைக்கு ஆரஞ்ச் நிற முக்கோணங்களை தலைகீழாக இணைக்கவேண்டும்..
இந்த இரண்டு படங்களைப் பார்த்தால் தலைகீழாக இணைக்கப்பட்ட முக்கோணங்களின் வடிவங்களில் உள்ள வித்யாசம் தெரியும்.
மொத்த முக்கோணங்களும் இணைத்து முடித்தபின்னர் பூ ஜாடியை (தேவைப்பட்டால்) கொஞ்சம்
அழுத்திவிடவும்.
அடுத்த படம், "பூ ஜாடி- பறவைப் பார்வையில்!" [Bird's eye view - ;)]
அவ்வளவுதான், நீங்களும் ஒரு மாடுலர் ஓரிகாமி பூ ஜாடி செய்து முடிச்சுட்டீங்க! வாழ்த்துக்கள்! :)))))))
சூரியகாந்தி பூங்கொத்து கடையில் வாங்கியது, வேறு ஃப்ளவர் வேஸ்-ல இருந்து எடுத்து இந்தப் பூ ஜாடியில் வைச்சிருக்கேன். ;) :)
~~~இணையத்தில் தேடுகையில் இந்த மாடுலர் ஓரிகாமி பூக்கள் கிடைத்தன. நான் செய்ய முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன், அவர் வெற்றிகரமாக செய்தே முடித்துவிட்டார். படத்தை வெளியிடுங்கள் என்று சொன்னால் முடியாது என அடம்பிடித்தார். ஏதேதோ சொல்லி ப்ளாக் மெய்ல் செய்து, "தொடருகிறேன், ஒரு வளையம்!" என்று ஒரு பதிவை வெளியிட வைத்தாயிற்று. என்ன ஒண்ணே ஒண்ணு, மெயிலில் வந்த இந்தச் சிவப்புப் பூவை நைஸா;)
(போட்டோல என் ப்ளாக் பேரையும் எழுதி ;)) வெளியிட்டு, 'யார் கை இது, கண்டுபுடிங்க'- என்று ஒரு க்விஸ் வைக்கலாமுன்னு இருந்தேன், மிஸ் ஆகிப் போச்சு! :)))))))))
இந்தப் பதிவு வெளியிட்டதில் கொஞ்சம் குழப்பம் நேர்ந்துவிட்டது, அதனால் சிலநிமிஷங்கள் முன்பாக 'மீண்டும்' பப்ளிஷ் செய்திருக்கிறேன். தடங்கலுக்கு வருந்துகிறேன், தங்கள் புரிதலுக்கு நன்றி! :)
ReplyDeleteமிக மிக அருமையாக உள்ளது மகி !!!
ReplyDeleteok ok its alright:))
ReplyDeleteதடங்கலுக்கு முன்பு டிவி வருந்தும்போது நாங்க கொறிக்க கடலை /சிப்ஸ் சாப்பிடுவோம் ,அதெல்லாம் வச்சி தடங்கலுக்கு வருந்துகிறேன் சொல்லுங்க :))
பூ சாடி அழகா இருக்கு மகி .இன்னும் நிறைய செய்து ப்ளாகில் போடுங்க
மகி போஸ்ட் உடனே டாஷ் போர்டில் வந்திடுச்சி ஆனா ரொம்ப நேரமா கமென்ட் பப்ளிஷ் ஆகல்ல இப்ப ட்ரை செய்றேன் .now ok
ReplyDeleteits beautiful :)
ReplyDeleteகுறிஞ்சி, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க! :)
ReplyDelete~~
/டிவி வருந்தும்போது நாங்க கொறிக்க கடலை /சிப்ஸ் /// டிவி வருந்தும்போது நீங்க கொறிச்சீங்க, சரி! ஆனா "மகி வருந்தும் போதும்" கொறிக்கணுமா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ;)
கடலை சிப்ஸ் எல்லாம் கிடைக்கல ஏஞ்சல் அக்கா, அவசரத்துக்கு பஜ்ஜி-டீ தான் கிடைச்சது..என்ஜாய்! :))))
மகியெல்லாம் க்ராஃப்ட் போட்டா!!!- அப்படின்னு ப்ளாகர் ஏதோ மண்டை காஞ்சு போயி மக்கர் பண்ணுது..ஹாஹா!
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்!
~~
PT, தேங்க்ஸ்! :)
~~
பூஜாடி சூப்பரோ சூப்பர்.அடுத்தடுத்து வடிவங்களைப் போட்டுட்டு வாங்க. பாத்துட்டுப்போறேன்_ "... இணைக்க ஆரம்பித்தால் சுலபமாக இருக்கும்"_ ஒருவேளை விருப்பமிருந்தால் சுலபமா இருக்கும்னு நினைக்கிறேன்.
ReplyDeletesuperb...
ReplyDeleteVIRUNTHU UNNA VAANGA
அருமை, பொறுமை, அழகு, அற்புதம் பூ ஜாடி.
ReplyDeleteருசியோ ருசி பஜ்ஜியும் டீயும். ;) பாராட்டுக்கள்
//அவ்வளவுதான், நீங்களும் ஒரு மாடுலர் ஓரிகாமி பூ ஜாடி செய்து முடிச்சுட்டீங்க! வாழ்த்துக்கள்!// அவ்வ்!! படிச்சு முடிச்சா செய்து முடிச்சதுக்கு சரியா!! ம். ;)
ReplyDelete//ப்ளாக் மெய்ல்// blog mail!!
//வெற்றிகரமாக// garrr.. இப்போ இதற்கு ஆர்டர் வந்து இருக்கு. மகிக்கு நன்றி. ;D //அடம்// இன்னொரு கர்ர். செய்தது நீங்க. நீங்கதான் பப்ளிஷ் பண்ண வேண்டும்.
//நைஸா... போட்டோல என் ப்ளாக் பேரையும் எழுதி// திருட்டு... நம்பிக்கைத் துரோகம்... கேஸ் போடப் போறேன். ;))))))
கலக்குங்க மகி. அடுத்த போஸ்ட் பூதானே!!!!! ;)
அது என்ன வெங்காய பஜ்ஜியில் 2 வடிவம்!!
எனக்கு 'நேக்கட்' டீதான் பிடிக்கும். பாஸ்சரைஸ்ட்தானே என்று கொதிக்க வைப்பது இல்லை நான். பரவால்ல அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்.
அனைத்திற்கும் நன்றி.
பூ ஜாடி ரொம்ப அழகா இருக்கு மகி. நீங்க இத பண்ணுறத பத்தி விளக்கம் நல்லாத்தான் கொடுத்து இருக்கீங்க ஆனா ஆஸ் யூஷுவல் என் சிற்றறிவுக்கு:)) இது டூ மச் ஸோ நான் பார்த்து ரசிச்சிட்டு போறேன்.
ReplyDelete//தடங்கலுக்கு வருந்துகிறேன்// இட்ஸ் ஓகே மகி.
ReplyDelete//தங்கள் புரிதலுக்கு நன்றி! :)// நாளைக்கி ஒருத்தவுங்க வந்து குய்யோ முய்யோன்னு கத்திட்டு போவாங்க வெய்டீஸ் :))
//அதெல்லாம் வச்சி தடங்கலுக்கு வருந்துகிறேன் சொல்லுங்க :))// ஓ உங்க புண்ணியத்துல தான் டீ அண்ட் பஜ்ஜியா டாங்க்ஸ் அஞ்சு:))
//வலைப்பூவுக்கு மாடுலர் ஓரிகாமி பதிவுகள் வரும்வரை கொண்டுவந்து சேர்த்தது...இவரேதானுங்க. :)))//
ReplyDeleteநான் சத்தியமா லிங்க் இல் போய் பார்க்காமலே கைக்கு சொந்த காரவுங்க யாருன்னு கண்டு புடிச்சிட்டேன். நம்ம கெ.கி.தலைவி!!
கியுடேக்ஸ் ரொம்ப அழகா இருக்குங்கோவ். நீங்களே அடிச்சுகிட்டதா இல்லே கடையில அடிச்சு:)) விட்டாங்களா?
அப்புறம் டீச்சர் ஷேம் ஷேம் பப்பி ஷேம் :)) எதுக்கா? நேகட் டீ குடிக்கிறீங்க அதுக்குத்தான் நான் எல்லாம் சீவி சிங்காரிச்சு டிரஸ் போட்டுத்தான் டீ குடிப்பேன் (இஞ்சி, சர்க்கரை, பால்:))
// வெளியிட்டு, 'யார் கை இது, கண்டுபுடிங்க'- என்று ஒரு க்விஸ் வைக்கலாமுன்னு இருந்தேன், மிஸ் ஆகிப் போச்சு! :)))))))))//
ReplyDeleteநான் வேணுமுன்னா என் கை அப்புறம் சமையல் ன்னு அனுப்புறேன் நீங்க வேணுமுன்னா குவிஸ் வையுங்க ஹவ் இஸ் இட்? (எல்லாரும் ஒரே நேரத்துல கொசு மெயில் ஐ டி மாத்த போறாங்க:))
நல்லா இருக்குங்க... பாராட்டுக்கள்... தங்களின் நட்பூவிற்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி…
பூ ஜாடி அழகா பண்ணி இருக்கீங்க மகி. ஜாடி மேலே பெரிய பூ வைக்காம அதை விட சின்னதா வைத்திருந்தா ஜாடியோட முழு அழகும் தெரிஞ்சிருக்குமே...
ReplyDeleteதப்பா எடுக்காதீங்க.. மனசுல பட்டதை சொன்னேன்.:)
ஆஹா அருமை ...சூப்பர் பூஜாடி... நானும் செய்து பார்க்கிறேன்... நல்ல பயனுள்ள பதிவு...
ReplyDelete/ஜாடி மேலே பெரிய பூ வைக்காம அதை விட சின்னதா வைத்திருந்தா/ இருந்திருந்தா கட்டாயம் வைச்சிருப்பேங்க. இந்தப் பூங்கொத்துதான் என்னிடம் இருந்ததில் சிறியது. :)
ReplyDeleteஅதுவும் இல்லாமல் பூஜாடியைத் தனியே படமெடுத்தும் போட்டிருக்கிறேனே! அதிலேயே /ஜாடியோட முழு அழகும் தெரிஞ்சிருக்குமே.../ என்ற ஒரு நம்பிக்கைதான்! :)
/தப்பா எடுக்காதீங்க.. மனசுல பட்டதை சொன்னேன்.:)/ இதில தப்பா எடுக்க என்னங்க இருக்கு? எல்லாரும் கருத்துக்களைப் பகிர்ந்துக்கதானே கமென்ட் பாக்ஸே இருக்கு? :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். மீண்டும் காலையில் வருவேன். :)
ReplyDeleteமகி... உங்களோட பூ ஜாடி சூப்பர்.... உங்க ப்ளாக் பார்த்து.... நானும் சில முயற்ச்சிகள் செய்து இருக்கேன்...3D origami வொர்க்ஸ் செய்து போஸ்ட் பண்ணி இருக்கேன்.... முடிந்தால் பாருங்க...
ReplyDeleteமஜி..... மஜீ.... சே..சே... என்னப்பா இது மகி..மகி..... வாஸ் ஜூப்பர், ஆனா என்னால இன்னும் எப்பூடி மடிப்பதென்றே கண்டு பிடிக்க முடியவில்லை:(.
ReplyDeleteஆனா ஒன்றை மட்டும் கண்டு பிடிச்சனே... நேம்ல:) சே.. நகத்தில கியூஸ் ஐக் காணல்லியே....
ஆஆஆஆ கடேஏஏஏசில றீச்சர் ஆருக்கு பூக் கொடுக்கிறாவாக்கும்?:).. ஒருக்கா கேடுச் சொல்லுங்க மஜீ:)..
ReplyDeletePriyaram said...
ReplyDeleteமகி... உங்களோட பூ ஜாடி சூப்பர்.... உங்க ப்ளாக் பார்த்து.... நானும் சில முயற்ச்சிகள் செய்து இருக்கேன்...3D origami வொர்க்ஸ் செய்து போஸ்ட் பண்ணி இருக்கேன்.... முடிந்தால் பாருங்க...//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவசரமா ஓடிப்போய்த் திறந்து பார்த்தேன்ன்... அங்க ஒண்ணுமே இல்லையே:).
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவசரமா ஓடிப்போய்த் திறந்து பார்த்தேன்ன்... அங்க ஒண்ணுமே இல்லையே:).//
ReplyDeleteப்ளாகை திறந்தீங்க சரி ஓகே .. ஆனா கண்ணை திறந்தீங்களா ஆ ஆ :))
மெய்ல் நோடிபிகேஷன் மட்டும் இல்லன்னா பூசால் என் கமெண்டை கண்டுபிடிச்சிருக்க முடியாது ..நீங்க மஜின்னத வச்சு மகின்னு புரிஞ்சு இங்கே வந்தேனே மியாவ் நான் கிரேட் தானே
ReplyDeleteஅதிரா நான் அங்கே சென்று கமெண்டும் போட்டேனே எனக்கு தெரிறது உங்களுக்கு ஏன் தெரியல :))
ReplyDeleteஅழகாக வந்திருக்க்கு இதைப்பார்த்து செய்ய பொறுமைதான் வேண்டும்.கூடவே ஆனியன் பஜ்ஜியும் டீயும் பேஷ் பேஷ்
ReplyDeleteangelin said...
ReplyDeleteஅதிரா நான் அங்கே சென்று கமெண்டும் போட்டேனே எனக்கு தெரிறது உங்களுக்கு ஏன் தெரியல :))///
இருக்கு ஆனா இல்ல:))..
மகி, சூப்பரா இருக்கே. எனக்கு இந்த பேப்பரை யாராவது மடிச்சு தந்தால் நல்லது. அதெல்லாம் மடிக்க நேக்கு பொறுமை தான் இல்லை.
ReplyDeleteநான் முன்பு போட்ட கமன்ட் எங்கே???? எனக்கென்னவோ பூஸார் மேலே டவுட்டு டவுட்டா வருது.
The vase looks superb, going to ask my daughter to try this one..
ReplyDeleteHi Mahi...Nice article... Thanks for linking and mentioning about my website...Best wishes!!
ReplyDeleteRamya.
/விருப்பமிருந்தால் சுலபமா இருக்கும்னு நினைக்கிறேன்./ கரெக்ட்டா சொன்னீங்க! :) முயற்சித்துப் பாருங்களேன் ஒரு முறை! ;)
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சித்ராக்கா!
~~
விஜி,தேங்க்ஸ்!
~~
கோபு சார், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க! டீ-பஜ்ஜி பிடிச்சிதா? ரொம்ப சந்தோஷம்!:)
~~
/படிச்சு முடிச்சா செய்து முடிச்சதுக்கு சரியா!! ம். ;)/ ஆமாங்க இமா! :) செய்முறைல 10 % கம்ப்ளீட் ஆகிரும் படிக்கிறதுல, மீதி 90%தானே?! ;)
/திருட்டு... நம்பிக்கைத் துரோகம்... கேஸ் போடப் போறேன். ;))))))/ ம்..ம்..பிரித்தானிய உச்ச நீதிமன்றத்தில போடுங்க, அப்பதான் மகா கனம் பொருந்திய மியாவ் நல்ல தீர்ப்பு தருவாங்க. :)))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க றீச்சர்! அடுத்த பதிவு பூ---இல்லை! ;)))))
~~
//என் சிற்றறிவுக்கு:)) இது டூ மச் ஸோ நான் பார்த்து ரசிச்சிட்டு போறேன். // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* 101 கிரிஜா! டைமில்லன்னு சொல்லுங்க, ஒத்துக்கிறேன், ஆனா இந்தக் காரணம் ஏற்றுக் கொள்ளப்படாது! :)
//நாளைக்கி ஒருத்தவுங்க வந்து குய்யோ முய்யோன்னு கத்திட்டு போவாங்க வெய்டீஸ் :))// அவிங்களுக்கு கீபோர்டில் எழுத்துக்கள் எங்க இருக்குன்னு பார்த்து தட்ட கூட டைமில்லையாமா..நீங்க வேற! :)))))
/உங்க புண்ணியத்துல தான் டீ அண்ட் பஜ்ஜியா டாங்க்ஸ் அஞ்சு:)) / ஹூம்..பஜ்ஜி சுட்டு, டீக்கு அழகா;) ட்ரெஸ் எல்லாம் போட்டு வைச்சது நானு, நன்றி அஞ்சு அக்காவுக்கா? கர்ர்ர்ர்ர்ர்ர்! :))))
/நான் எல்லாம் சீவி சிங்காரிச்சு டிரஸ் போட்டுத்தான் டீ குடிப்பேன் (இஞ்சி, சர்க்கரை, பால்:)) / :))))) புல்லா அரிச்சுப் போச்சு போங்க! நீங்களும் இமாவும் டீயை வைச்சு கதை சொல்லறதைப் பார்த்துத்தான்! ;))))
/நம்ம கெ.கி.தலைவி!!/ :)))))
/என் கை அப்புறம் சமையல் ன்னு அனுப்புறேன் நீங்க வேணுமுன்னா குவிஸ் வையுங்க ஹவ் இஸ் இட்?/ ஆஆஆஆஆ! ;))))))
/ (எல்லாரும் ஒரே நேரத்துல கொசு மெயில் ஐ டி மாத்த போறாங்க:)) / தேங்க்ஸ் பார் தி எஸ்கேப்பிங் ப்ளான் கிரி! மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்களுக்கும்!
~~
திண்டுக்கல் தனபாலன்,வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க!
~~
விஜிபார்த்தி, பூ ஜாடி செய்துபார்த்தீங்களா? பதிவு பயனுள்ளதாய் இருப்பது மகிழ்ச்சிங்க! நன்றி!
~~
ப்ரியா, உங்க முயற்சி திருவினையாக்கிருச்சு! :) எல்லாமே அழகழகா செய்திருக்கீங்க. அடுத்து கலர் பேப்பரில் செய்து போஸ்ட் பண்ணுங்க.ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி!
~~
/மஜி..... மஜீ.... சே..சே... என்னப்பா இது / கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! மியாவுக்கு வாய் குழறுதா, இல்ல கை குழறுதா? கீபோர்டில k-டைப் பண்ணறதுக்கு பதிலா j-வையே அடிச்சிருக்காங்க? ;)))))
ReplyDelete/இன்னும் எப்பூடி மடிப்பதென்றே கண்டு பிடிக்க முடியவில்லை:(./ சீரியஸாவா அதிராவ் சொல்றீங்க? போனபதிவிலயே தெளிவா போட்டிருந்தேனே? நான் சொல்வது புரியாமல் போக வாய்ப்பிருக்குன்னு வீடியோ லிங்க் கூட குடுத்திருந்தேனே? வீடியோல அழகா சொல்லித் தருவாங்க, மீண்டும் ஒருக்கா பாருங்கோ!
/நகத்தில கியூஸ் ஐக் காணல்லியே...// :) அப்ப இல்ல, இப்ப இருக்கு! :)
/கடேஏஏஏசில றீச்சர் ஆருக்கு பூக் கொடுக்கிறாவாக்கும்?:).. ஒருக்கா கேடுச் சொல்லுங்க மஜீ:).. / ஹாஹா! அது.....ஹ்ம், எனக்குத் தெரிலையே அதிரா! ஒருக்கா கேடுச்;) சொல்றன். மறுபடி j??! ஜர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ;)))))
//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவசரமா ஓடிப்போய்த் திறந்து பார்த்தேன்ன்... அங்க ஒண்ணுமே இல்லையே:).//
ப்ளாகை திறந்தீங்க சரி ஓகே .. ஆனா கண்ணை திறந்தீங்களா ஆ ஆ :)) // ஹாஹாஹா! :)))) ஏஞ்சல் அக்கா, போட்டு விளாசறீங்க போங்க! சூப்பர்,சூப்பர்! நல்லா சிரிச்சாச்சு உங்க கமென்ட்டைப் பார்த்து! :D /மியாவ் நான் கிரேட் தானே/ எக்ஸாக்ட்லி! யு ஆர் க்ரேட்! :)
/எனக்கு தெரிறது உங்களுக்கு ஏன் தெரியல :))/ இதுக்கு பதில் சொல்லிருக்காங்க, பாருங்க, /இருக்கு ஆனா இல்ல:)).. / ஏன்னா, அவிங்க கண்ணைத் திறக்காமலேதான் பாத்து(!) இருக்காங்க ஏஞ்சல் அக்கா! :))
அதிரா, எங்க போனாலும் கண்ணைத் திறந்துட்டுதான் போகோணும், சரியா? ;)
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க அதிறாவ்!:))
~~
ஸாதிகா அக்கா, ஆமாம்..பொறுமைதான் வேணும். மத்தபடி மூளையை கசக்கிப் பிழிஞ்சு கஷ்டப்பட்டெல்லாம் செய்ய வேணாம்,அதானே நானே செய்திருக்கேன்! ;))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா!
~~
/எனக்கு இந்த பேப்பரை யாராவது மடிச்சு தந்தால் நல்லது. அதெல்லாம் மடிக்க நேக்கு பொறுமை தான் இல்லை. / வானதி, எனக்கு ஒரு ஆளைத் தெரியும், ஆனா அவங்களுக்கு பேப்பர் மடிக்கத் தெரியாது, அப்பப்ப கண்ணும்;) தெரியாது!! ஆனா கண் பார்த்ததை கை செய்யும் திறமை கொண்டவர். :)))))
ஒருக்கா இழுத்து உட்காரவைச்சு ஒரு பேப்பரை மடிக்க கத்து குடுத்துட்டீங்கன்னாச் சரி, ஆயிரக் கணக்கில மடிச்சுத் தள்ளிருவாங்க! அட்ரஸ் தரட்டே?
மிஸ்.மியாவ், எவர் சிக்ஸ்-ரீன், லிவர் பூல் மாவட்டம், பிரித்தானிய மாநிலம், தேம்ஸ் நதி-420
:))))))))
/நான் முன்பு போட்ட கமன்ட் எங்கே????/ ஆஹா! இதானே நீங்க போட்ட கமென்ட்டே? இதுக்கு முன் வேறெந்த கமென்ட்டும் வரலையே வானதி?
/எனக்கென்னவோ பூஸார் மேலே டவுட்டு டவுட்டா வருது./இருக்கலாம், கமென்ட் ப்ளாக்ல பதியுமுன்:) பிடுங்கி தேம்ஸுக்குள்ள வீசிட்டாங்களோ?! அவ்வ்வ்வ்வ்! ;))))))))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானதி!
~~
ஹேமா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! கண்டிப்பா உங்க பொண்ணை செய்து பார்க்க சொல்லுங்க. :)
ReplyDelete~~
ரம்யா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! உங்களை என் வலைப்பூவில் பார்த்தது ரொம்ப சந்தோஷம்! :)
~~
Lovely craft with clear picture and love the classy nail art tooo..
ReplyDeleteசரஸ்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! நெய்ல் ஆர்ட் போட்டவரும் உங்க கருத்தைப் பார்த்திருப்பார், அவர் சார்பாகவும் நானே நன்றி நவில்கிறேன்! :)
ReplyDelete//உங்க கருத்தைப் பார்த்திருப்பார், அவர் சார்பாகவும் நானே நன்றி நவில்கிறேன்! :) // karr பார்கல. அது எப்படி!! நான்தான் நன்றி நவில்வேன்ன்ன். ;)
ReplyDeleteநன்றி சரஸ். :) மகியம்மா நன்றியை அவங்கள்ட்டயே திரும்ப கொடுத்துருங்க. ;))))
மகி இப்ப பாருங்க சரியா என்று?
ReplyDeleteஉங்க கைவண்ணம் மிக அழகூஊஊ.இதனால்தான் ஆர்வம் ஏற்பட்டு செய்தேன்.
க்* ;)
ReplyDeleteஇமா, நீங்களே பார்த்து நன்றி நவில்ந்துட்டீங்க, சந்தோஷம்! :)
ReplyDelete~~
ப்ரியா, //உங்க கைவண்ணம் மிக அழகூஊஊ.இதனால்தான் ஆர்வம் ஏற்பட்டு செய்தேன்.// ரொம்ப சந்தோஷங்க. படித்தவுடன் புரியும் வண்ணம் எளிமையாக சொல்ல முயற்சி செய்கிறேன் இனிமே.
உங்கள் கைவண்ணம் அருமை. :)
~~
இமா, :)
~~