Tuesday, July 24, 2012

பேப்பர் க்ராஃப்ட்ஸ் - பகுதி 1

மாடுலர் ஓரிகாமி/3D ஓரிகாமி/கோல்டன் வென்ச்சர் ஃபோல்டிங் - அறிமுகம்
ஓரிகாமி என்பது சதுரவடிவிலான காகிதத்தை பலவாறு மடித்து உருவங்கள் செய்யும் ஜப்பானில் உருவான ஒரு கலை என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கும். கோல்டன் வென்ச்சர் ஃபோல்டிங் [Golden Venture Folding] என்பது ஓரிகாமியில் ஒரு வகை, சீனர்களால் உருவாக்கப்பட்டது. ஒரே ஒரு சதுர வடிவ காகிதத்துக்குப் பதிலாக நூற்றுக்கணக்கான செவ்வகக் காகிதத் துண்டுகளை மடித்து, இணைத்து உருவங்கள் உருவாக்கும் மாடுலர் ஓரிகாமியின் இந்தப் பிரிவு , 3D ஓரிகாமி என்ற பொதுப்பெயரால் அழைக்கப்படுகிறது.

தேவையான பொருட்கள்
வண்ணக் காகிதங்கள் [A4 பேப்பர்கள் சரியான அளவாக இருக்கும், கன்ஸ்ட்ரக்ஷன் பேப்பர் என்ற பெயரில் கிடைக்கும் காகிதங்களை நான் உபயோகித்திருக்கிறேன்.]

ஒரு காகிதத்தை இரண்டாக மடிக்கவும், அதனை நான்காக, எட்டாக, பதினாறாக மடித்து ( :)))) படத்தைப் பாருங்க, ஒரு பேப்பரை மடிச்சுப் பாத்தால் சுலபமாகப் பிடிபடும். :) ) கத்தரிக் கோல் அல்லது க்ராஃப்ட் கத்தியால் பிசிறில்லாமல் நறுக்கிக் கொள்ளவும். அடுத்து முக்கோணங்கள் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

செவ்வகத்தை (நீளப்பக்கத்தில்) சரிபாதியாக மடிக்கவும். (1 & 2) அதனை மீண்டும் சரிபாதியாக மடிக்கவும். (3) இப்போது அதனை விரித்தால் நடுவிலிருக்கும் கோடு தெரியும், அதனை மையமாக வைத்து, பேப்பரின் இரண்டு முனைகளையும் முக்கோணங்களாக மடக்கவும். (4 & 5) மடக்கிய முக்கோணத்தை மறுபுறம் திருப்பவும்.(6) இரண்டு கால்கள்:) தெரியும், அவற்றை நுனிப்பகுதியில் உட்புறமாக மடித்து விடவும்.(7) இப்போழுது இரண்டு கால்களையும் உட்புறமாக மடிக்கவும். (8) பிறகு நடுக்கோட்டின் இரு புறமும் உள்ள முக்கோணங்களை மடிக்கவும். (9)

இந்த ஸ்டெப்ஸ் முடிந்ததும் இரண்டு pockets உள்ள ஒரு செங்கோண முக்கோணம் உங்களுக்குக் கிடைத்திருக்கும், இதாங்க ஒரு யூனிட்! பல விதமான உருவங்கள் செய்ய இது போல நூற்றுக்கணக்கான முக்கோணங்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் இணைக்க வேண்டும்.

டாலர் ஷாப்பில் வாங்கியகன்ஸ்ட்ரக்ஷன் பேப்பரில் ஒவ்வொரு கலரிலும் 5 பக்கங்கள் இருந்தன, ஆக 80 முக்கோணங்கள் கிடைத்தன ஒவ்வொரு வண்ணத்திலும்!

நூறைக் கூட எட்டாத இந்த முக்கோணங்களைக் கொண்டு என்ன செய்வது?ஹ்ம்ம்ம்...முதலில் மடிப்போம், பிறகு பார்க்கலாம் என்று ஆரம்பித்தேன். மடித்த முக்கோணங்களை காமா-சோமான்னு போட்டு வைக்காம, ஒன்றுடன் ஒன்று இணைத்து வைத்தால் கலையாமல் நேர்த்தியாக இருக்கும் என்று...

கலர் கலராக மடித்து கோர்த்து வைச்சிருக்கேன், இவற்றைக் கொண்டு எளிய வடிவங்கள் செய்யும் முறைகளை அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

*************
முக்கோணங்கள் மடிப்பது குழப்பம் போல இருந்தாலும், மிகவும் சிம்பிளான ஒன்றுதான். ஆர்வம் இருந்தால் போதுமானது. ஓய்வு நேரங்களில் மடித்து வைத்துக்கொண்டால், இணையத்தின் உதவியுடன் அழகழகான பொருட்கள் செய்யலாம். முக்கோணம் மடிப்பது பற்றிய என்னோட விளக்கம் தலைய சுத்த வைக்குதா?! ;) இந்த வீடியோவைப் பாருங்க..



ரொம்ப ஈஸியான செய்முறைதான். :) இனி என்ன? முதலில் வீட்டில் இருக்கும் பழைய பேப்பர்களை வைத்து மடித்துப் பாருங்க. பிறகு வண்ணக் காகிதங்கள் வாங்க ஆட்டோமேடிக்-கா கிளம்பிருவீங்க! கோடை விடுமுறையில் இருக்கும் குட்டிப் பசங்களுக்கும் நல்லதொரு பொழுதுபோக்கா இருக்கும் இந்த பேப்பர் க்ராஃப்ட்ஸ்..
ரெடி... ஸ்டார்ட்...
ஒன், டூ, த்ரீ...
ரவா டோக்ளா சாப்டுட்டு தெம்பா பேப்பரை கிழிங்க! :)))))))
*********
பேப்பர் க்ராஃப்ட்ஸ்-பகுதி 2 : பூ ஜாடி செய்முறை காண இங்கே க்ளிக் செய்யுங்க.

29 comments:

  1. மகி !! சூப்பரா இருக்கு ....என் பொண்ணு ஜம்பிங் frog செய்வா .அவ ப்ளாகில் செய்து காட்ட சொல்றேன் .விரைவில் அனைத்துவகை பேப்பர் க்ராப்டும் வெளிவருமா :))
    அந்த ரவுன்ட் சக்கரத்தை அப்படியே உங்க அழகான னில் பாலிஷ் போட்டா விரல்களால் ஒரு ரவுண்ட் சுற்றி விடுங்க நான் நினைச்சவங்களை :))தாக்கிட்டு உங்க கிட்டேயே வந்துடும் .

    ReplyDelete
  2. /விரைவில் அனைத்துவகை பேப்பர் க்ராப்டும் வெளிவருமா :))/ :)) நீங்க போட்டிருக்கும் ஸ்மைலி-லயே உங்களுக்கு நிலவரம் தெரிஞ்சிருக்கும்னு நம்புகிறேன். I am a beginner ஏஞ்சல் அக்கா!

    தக்கிமுக்கி எதோ செய்து அந்த நினைவுகளை சேமிச்சு வைக்கப் பார்க்கிறேன், இப்படி க்ரிட்டிகல் கேள்விக்கணை தொடுக்கிறீங்களே! :)))

    ஜம்பிங் frog?? ம்ம்..இன்ட்ரஸ்டிங்! செய்து காட்டச் சொல்லுங்க ஷரனை..நானும் ட்ரை பண்ணுவேன்ல?

    /ஒரு ரவுண்ட் சுற்றி விடுங்க நான் நினைச்சவங்களை :))தாக்கிட்டு உங்க கிட்டேயே வந்துடும்./ ஹாஹா! அது பூமராங்-இல்லையே! நீங்க நினைச்சவுங்க:) திரும்பி பாக்கக் கூட நேரமில்லாம இருக்காங்களாம். ஜம்பிங் frog-ஐ அனுப்புங்க பிரித்தானியாவுக்கு, தாவிக் குதிச்சு வந்துருவாங்க! :)))

    உடன் வருகைக்கும் கருத்துகும் நன்றி ஏஞ்சல் அக்கா!

    ReplyDelete
  3. ரொம்ப பொறுமையா மடிச்சு இருக்கீங்க மகி. அழகாவும் இருக்கு. கோடை விடுமுறையில் பண்ண சொல்லி இருக்கீங்க நான் இதுல ஒரு பத்து முக்கோணம் மடிக்குறதுக்கு முன்னமே டயர்ட் ஆகிடுவேனே அதனால உங்க நகங்கள ரசிச்சிட்டு போறேன். சேம் பின்ச் நானும் கிட்டத்தட்ட இந்த கலர் நெயில் பாலிஷ் தான் போட்டு இருக்கேன்

    ReplyDelete
  4. அஞ்சு ஒடம்பு சரி ஆயிடுச்சு போல இருக்கு கண்ணாடிய கழட்டிடீங்க :)) சங்கு சக்கரம் போல மகிய சுழட்டி விட சொல்லுறீங்க. மகி கரீட்டா நார்த் ஒப் பிரிட்டானியா போற மாதிரி எய்ம் பண்ணுங்க என்ன??

    //நீங்க நினைச்சவுங்க:) திரும்பி பாக்கக் கூட நேரமில்லாம இருக்காங்களாம். //

    இதுதான் கரீக்ட் சான்ஸ் இப்போதான் நெறையா போட்டு தாக்கலாம் சான்ச விட்டறாதீங்க மகி ;)) .

    ReplyDelete
  5. அடடே கிரி...வாங்க! :)

    /நான் இதுல ஒரு பத்து முக்கோணம் மடிக்குறதுக்கு முன்னமே டயர்ட் ஆகிடுவேனே / அதான் இல்ல! இது ஒரு அடிக்டிவ் டைம்பாஸுங்க! நானும் உங்களை மாதிரிதான் நினைச்சேன், ஆனா கொஞ்சம் மடிச்சதும் தானா ஆர்வம் வந்துருச்சு. கூடவே கை பழகிட்டா சீக்கிரமா மடிச்சிரலாம். நீங்க வழக்கமா டிவி-பார்ப்பீங்களே,அந்நேரம் மடிங்க..டூ-இன்-ஒன்!! படமும் பார்க்கலாம், முக்கோணமும் ரெடி! :)

    /சேம் பின்ச் நானும் கிட்டத்தட்ட இந்த கலர் நெயில் பாலிஷ் தான் போட்டு இருக்கேன்/ ஐ..இஸ் இட்! பின்ச்,பின்ச்! :)

    /மகி கரீட்டா நார்த் ஒப் பிரிட்டானியா போற மாதிரி எய்ம் பண்ணுங்க என்ன??/ ஓஹ்...அங்கதான் அந்த 'L'-ல ஸ்டார்ட் ஆகிற ஊர் இருக்கோ? :))

    பக்கத்தூரில் இருக்க நீங்க ரெண்டுபேரும் அட்டாக் பண்ணாம எங்கயோ இருக்க என்னைய மாட்டிவுடப் பார்க்கறீங்களே?! நான் கழுவுற மீனுல நழுவுற மீனாக்கும்! ;)

    ReplyDelete
  6. டிவி-பார்ப்பீங்களே,அந்நேரம் மடிங்க..டூ-இன்-ஒன்!! படமும் பார்க்கலாம், முக்கோணமும் ரெடி! :) // wow!! I can't really do that, because I keep on changing channels. Any help giri?

    Really cool Mahi. But I hate folding paper. Once, I tried one origami craft after watching a you tube video.... Still trying.....

    ReplyDelete
  7. உப்புமாவா....

    பார்க்க சூப்பரா இருக்கே...

    ஒரு ப்ளேட் பார்சல்

    ம் கலர் பேப்பர்
    கப்பல் ம் ம் கலக்குங்க மகிமா

    ReplyDelete
  8. He he he... Nice craft work....
    http://recipe-excavator.blogspot.com

    ReplyDelete
  9. தெளிவான விளக்கங்கள் படங்கள் செய்து பார்க்கத்தூண்டுகிரது.

    ReplyDelete
  10. இதோ உங்கள் செய்முறை பார்த்து இந்த க்ராஃப்ட்ஸ் செய்து பார்க்கப்போறேன்.கூடவே ரவா டோக்ளாவும்.

    ReplyDelete
  11. ம்ம்ம்ம் சூப்பர் .... நானும் செய்து பார்க்கிறேன் மகி....

    ReplyDelete
  12. பதிவு நல்லா இருக்கு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  13. My daughter loves origami, she has done some, using the youtube, I would show this post to her..

    ReplyDelete
  14. .
    நீங்க சகலகலா வல்லி அது தான் எல்லா பேப்பர் கிராப்ட்சும் விரைவில் வெளிவருமன்னு கேட்டேன் .

    அப்புறம் சேம் பின்சுக்கேல்லாம் உங்க ரெண்டுபேர் கையை கிள்ளாதீங்க வலிக்கும் .அதான் அவங்க மி மி ய் யா வ்வ்வ் :))) அவங்களை கிள்ளுங்க
    ஹா ஹா .

    வெய்ட் நேற்று நான் வரும்போது டோக்ளா இல்லையே .இப்ப எப்படி வந்திச்சு ????

    ReplyDelete
  15. ஆஆஆஆஆஆஆஅ அல்லோரும் ஓடியாங்கோஓஓஓஓ.. மகி கியூடெக்ஸ் அடிச்சிட்டாஆஆஆஆஆ.. கலக்கல் மகி.. நான் கீயூஸுக்குச் சொன்னேன் (எங்கட பக்கத்து வீட்டில ஒரு குட்டி இருந்தவ, அவ என்னிடம் வந்து கேட்பா, அதிராக்கா எனக்கு “கியூஸ்” அடிச்சு விடுவீங்களோ என:)).. அந்தநாள் ஞாபகம்..

    ReplyDelete
  16. //ஓரிகாமி என்பது சதுரவடிவிலான காகிதத்தை பலவாறு மடித்து உருவங்கள் செய்யும் ஜப்பானில் உருவான ஒரு கலை என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதெப்பூடி நீங்களே முடிவெடுப்பதாம்?, இங்கின ஒருவருமே கேள்விப்பட்டமாதிரித் தெரியேல்லை, ஆனா இமேஜ் டமேஜ் ஆகிடக்கூடாதெனச் சொல்லாமல் போயிட்டினம்:))).. ஹையோ என் வாய்தேன் மீக்கு எனமீஈஈஈஈஈஈ:))..

    அஞ்சூஊஊஊஊ காப்பாத்துங்கோஓஓஓ:)

    ReplyDelete
  17. அதாற்ற அந்த கி.மு ஃபோன்?:))... ஹையோ.. மீக்கு கண்ணு சார்ப்பூஊஊஊஉ:))

    சரி இனிக் கொஞ்சம் சீரியசாக் கதைப்பம் என்ன?

    ReplyDelete
  18. vanathy said...
    டிவி-பார்ப்பீங்களே,அந்நேரம் மடிங்க..டூ-இன்-ஒன்!! படமும் பார்க்கலாம், முக்கோணமும் ரெடி! :) // wow!! I can't really do that, because I keep on changing channels. Any help giri?
    ///
    யெச்ச்ச்ச் ஐ கான் யெல்ப் யூ வான்ஸ்ஸ்:))
    think different..
    do different...
    make different...
    then go to the mental hospital:)..

    Poosh esssssss:))).

    ReplyDelete
  19. சுப்பரா... நீற்றா இருக்கு மகி. ஆனா ஏதும் உருவம்.. பூஸ்ஸ் அப்பூடிச் செய்திருக்கலாமெல்லோ, இது குறைமாதக் கொயந்தையில படம் வெளியிட்டு விட்டீங்க..:).
    அடுத்த பாகத்தில டொடருங்கோ:).

    ஊ.கு:
    எங்கட குட்டிச் சிங்கம் டிவாவை:) எங்காவது கண்டனீங்களோ மக்கள்ஸ்ஸ்ஸ்:)).

    ReplyDelete
  20. /எங்கட குட்டிச் சிங்கம் டிவாவை:) / :) அதான் மேல தெளிவா கருத்து போட்டிருக்காரே, பார்க்கலை?! ;)

    /குறைமாதக் கொயந்தையில படம் வெளியிட்டு விட்டீங்க..:).
    அடுத்த பாகத்தில டொடருங்கோ:)./ இல்ல அதிரா, இன்னொரு உருவமும்;) சேர்த்துதான் போட நினைத்தேன், ஆனா பாருங்க...நீங்க "படிச்சே களைச்சிட்டன்!" என்பீங்க..அதாலை இப்படி பிரிச்சு வெளியிட்டேன். பிச்சு பிச்சு சாப்பிட்டா சாப்பிட ஈஸிதான, அதான்! ;))))))

    /think different..
    do different...
    make different...
    then go to the mental hospital:)../ Yup..this is a statement from a myaav, who just got discharged from the mental hospital! LOL! :D :D

    /அதாற்ற அந்த கி.மு ஃபோன்?:))/ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! என்ரதுதான் ஆப்பிள் ஐஃபோன் லேடி! ;) இருங்க, இருங்க..அடுத்து வரும் பதிவுகளில் இதை சரி பண்ணிடறேன்.

    /அல்லோரும் ஓடியாங்கோஓஓஓஓ.. மகி கியூடெக்ஸ் அடிச்சிட்டாஆஆஆஆஆ.. /ச்சே,இது தெரிந்திருந்தா க்யூஸ்;) அடிச்சதை ஒரு தனி பதிவாப் போட்டிருக்கலாம் போலவே..மியாவ் விழா எடுத்து கொண்டாடிருப்பாங்க, ஜஸ்ட் மிஸ்ட்டூ!;))))))

    கிரி வந்த தடம்;) தெரியுது..இருக்காங்களா, நழுவிட்டாங்களா தெர்லையே!?!

    ReplyDelete
  21. Mahi said...
    /எங்கட குட்டிச் சிங்கம் டிவாவை:) / :) அதான் மேல தெளிவா கருத்து போட்டிருக்காரே, பார்க்கலை?! ;) //

    karrrrrrrrrrrrrrr:)) அது தெரிஞ்சுதானே தேடினனான்:))) எங்கிட்டயேவா?:))

    ReplyDelete
  22. "எளிய வடிவங்கள் செய்யும் முறைகளை அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்"_ஆவலோடு இருக்கிறேன்.

    ReplyDelete
  23. //அதெப்பூடி நீங்களே முடிவெடுப்பதாம்?, இங்கின ஒருவருமே கேள்விப்பட்டமாதிரித் தெரியேல்லை, ஆனா இமேஜ் டமேஜ் ஆகிடக்கூடாதெனச் சொல்லாமல் போயிட்டினம்:))).. // :))))) ஆத்தீ...உங்களுக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் தோணும் அதிராவ். உண்மை விளம்பி என்று தங்களுக்கு ஒரு பட்டம் குடுக்கிறேன்,வாங்கிக்குங்கோ! :)))
    ~~
    சித்ராக்கா, சீக்கிரமா போஸ்ட் பண்ணறேன். என்ன ஒண்ணு, எந்த சிம்பிள் மாடல் என்றாலும் 100+ முக்கோணங்கள் தேவைப்படும். :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    /அது தெரிஞ்சுதானே தேடினனான்:))) எங்கிட்டயேவா?:))/ :) அப்பச்சரி, தேடிகிட்டேஏஏஏ இருங்க அதிராவ்! ;)
    ~~
    /நீங்க சகலகலா வல்லி அது தான் எல்லா பேப்பர் கிராப்ட்சும் விரைவில் வெளிவருமன்னு கேட்டேன் ./ இதுக்கு நீங்க நல்லா நங்கு-நங்குன்னு நாலு குட்டு வைச்சிருக்கலாம்! அவ்வ்வ்வ்வ்வ்! ;);) இன்ஃபாக்ட் நான் இந்த வேலை செய்வதற்கு பின்னால ஒரு பலமான ஹெல்ப்பிங் ஹேண்ட் இருக்கு ஏஞ்சல் அக்கா, இல்லைன்னா நான் எப்பவோ இதை மூட்டை கட்டி போட்டிருப்பேன். :) அதனால் ச.வல்லி எல்லாம் வேணாமே,ப்ளீஸ்! :)

    /நேற்று நான் வரும்போது டோக்ளா இல்லையே .இப்ப எப்படி வந்திச்சு ???/அதுவா? போஸ்ட் ஸ்பீட் போஸ்ட் (இது வேற post) ல வந்தது, டோக்ளா ஆர்டினரி போஸ்ட்ல வந்தது. நீங்க ஸ்பீட் போஸ்ட் மட்டும் வாங்கிட்டு;) ஓடிட்டீங்க,அதான்! ஹாஹா! :)
    ~~
    ஹேமா, உங்க பொண்ணுகிட்ட காட்டுங்க. நிறைய வீடியோஸ் கூட இருக்கு, பார்க்கச் சொல்லுங்க. :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    கோபு சார், மிக்க நன்றி!
    ~~
    விஜிபார்த்தி, செய்து பாருங்க, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    ஸாதிகாக்கா, டூ இன் ஒன்?! கலக்குங்கோ! பிக்னிக் போய் பேட்டரிய ரீசார்ஜ் பண்ணிட்டு ப்ரெஷ்ஷா வந்திருக்கீங்க..செய்து பார்த்து மறக்காம சொல்லோணும்!:) நன்றி!
    ~~
    லஷ்மிம்மா, ட்ரை பண்ணிப் பாருங்க, ஈஸிதான்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா!
    ~~
    சங்கீதா, உங்க கருத்தை அப்படியே தமிழ்ல எழுதினா..

    /He he he... Nice craft work..../ = ஹீ..ஹீ..ஹீ...நைஸ் க்ராஃப்ட் வொர்க்...

    :)))) நன்றிங்க, ஹீ..ஹீ..ஹீ.. ;)))
    ~~
    /உப்புமாவா....

    பார்க்க சூப்பரா இருக்கே...

    ஒரு ப்ளேட் பார்சல்

    ம் கலர் பேப்பர்
    கப்பல் ம் ம் கலக்குங்க மகிமா / ஹும்..என்னத்தச் சொல்ல? குட்டி சிங்கம் டிவா;)வுக்கு கண்ணு சரியாத் தெரியறதில்லை! நல்ல veterinary டாக்டராப் பாருங்கோ! :)
    ~~
    thanks for stopping by Siva! :)

    ReplyDelete
  24. ம் கலர் பேப்பர்
    கப்பல் ம் ம் கலக்குங்க மகிமா / ஹும்..என்னத்தச் சொல்ல? குட்டி சிங்கம் டிவா;)வுக்கு கண்ணு சரியாத் தெரியறதில்லை! நல்ல veterinary டாக்டராப் பாருங்கோ! :)
    ~~//


    avvv....

    ReplyDelete
  25. said...
    /எங்கட குட்டிச் சிங்கம் டிவாவை:) / :) அதான் மேல தெளிவா கருத்து போட்டிருக்காரே, பார்க்கலை?! ;) /////

    hahaha

    babI athira...am fine.

    பேபி அதிரா வாழ்க வாழ்க

    ReplyDelete
  26. ungal vida vidamana pathivugal... neengal miga nalla rasanai ullavar nu katudhu... kalakareenga..rock on!

    ReplyDelete
  27. மகிமா... நானும் நல்லா டீவீ பார்த்துப் பார்த்து... பேப்பர் பிச்சு பிச்சு மடிப்பேன். தொடரட்டோ!! அனுமதி கிடைக்குமா!!

    ReplyDelete
  28. ;)) _()_

    http://imaasworld.blogspot.co.nz/2012/07/blog-post_28.html

    ReplyDelete
  29. குட்டி சிங்கம் டிவா:), தேங்ஸ்..மறுபடி வந்ததுக்கு! :)
    ~~
    வித்யா, ரொம்ப சந்தோஷம்+ நன்றி..அடிக்கடி வாங்க! உங்க கமென்ட் பார்த்தா ஒரு கப் பூஸ்ட் குடிச்ச மாதிரி தெம்பா இருக்கு! ;)
    ~~
    இமாமா;), நீங்க பிச்சுப் பிச்சு மடிச்சதுக்கும், கல்கி படத்துக்கும்;) நன்றி!
    ~~

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails