Monday, August 12, 2013

மேக ஊர்வலமும், அக்வாஃபோபியாவும்!

ஒரு சனிக்கிழமை மாலை நேரம்..
கடைக்குப் போகலாம் என கிளம்பி காரில் அமர்ந்து அண்ணாந்து பார்த்தால்...
வானவீதியெங்கும் வெண்மேகங்களின் ஊர்வலம்...
எப்படி இத்தனை அழகாக மேகங்கள் உருவெடுத்தன எனத் தெரியவில்லை, வானெங்கும் 360டிகிரி கோணத்தில் பார்த்தாலும் கிள்ளிப்போட்ட பஞ்சுத் துணுக்குகளாக மேகத்துளிகள் ஒரே சீராகப் பரவிக் கிடந்தன.
சிறிது நேரம் கழித்து காற்றும் மேகச் சதுரங்களை கலைத்துவிட்டிருந்தது. சூரியன் மேற்கில் இறங்க, சூரியஒளி பட்டு மேகத்துணுக்குகள் பிரகாசித்த காட்சி மிக அழகாக இருந்தது. :)
~~~
ஒரு சில வகை நாலுகால் செல்லங்கள்(water friendly dogs) தண்ணீர், குளியல், ஸ்விம்மிங், கடலில் விளையாட்டு என்றால் உற்சாகமாக இருக்கும்.  ஆனால் ஜீனோவின் பாரம்பரியத்தைச் சேர்ந்த CHUG ஆட்களுக்குத் தண்ணீர் என்றாலே அலர்ஜி! வீட்டில் குளிக்கவே வேண்டாவெறுப்பாக எப்ப முடிப்பாங்க, எப்ப வெளியே ஓடி தண்ணீரை உதறலாம் என பயத்துடன் காத்திருப்பார். இதுவரை கடலோரம் கூட்டிப்போகவில்லை, சிலநாட்கள் முன் சான்டியாகோ சென்றபோது அங்கே ஒரு கடற்கரைக்கு அழைத்துப்போனோம், அப்போது அரங்கேறிய காட்சிகள் உங்கள் பார்வைக்கு..
ஜீனோ: ….இது என்னது? ஒரே தண்ண்ண்ண்ண்ண்ணியா இருக்கே??! எல்லாரும் தண்ணிக்குள்ள வெளாட்றாங்க..பக்கத்தில ஒரே மண்ணு மண்ணா இருக்கே?!!
டாடி தண்ணில பயமில்லாம நிக்கறாங்க..நாமளும் போலாமா??! ஹ்ம்ம்ம்….
போலாமா வேணாமான்னு முடிவு பண்றதுக்குள்ள இப்படி இஸ்த்துக்கினு:) போறாங்களே? நான் என்ன்ன்ன்ன்ன செய்வேன்??!...
ஜீனோவ இழுத்துட்டுப் போனாங்க, பட் ஜீனோ தண்ணிக்கு  வரமாட்டேன்னு அடம்புடிச்சு மண்ணெல்லாம் பிறாண்டி, கண்ணுக்குள்ள எல்லாம் மண்ணு விழுந்து..போராடி எஸ்கேப் ஆகி... 
மம்மி மடில செட்டில் ஆகிட்டேன்! இதான் நமக்கு ஸேஃப் ப்ளேஸ்!! அடிக்கிற குளிர் காத்துக்கு கதகதப்பா பாதுகாப்பா இருக்கு!
 அப்பாடா!! வீடு வந்தாச்சுப்பா! ஐ யம் அ டொமஸ்டிக் டாக் யு ஸீ! :) 
போங்கய்யா,,,நீங்களும் உங்க கடலும்! அவ்வ்வ்வ்வ்வ்!
~~~ 
மேக ஊர்வலம் பார்த்தவாறே நாங்கள் சென்ற கடை "Sprouts-Farmers Market".
அங்கே இருந்து வாங்கி வந்தது..
இதை வைத்து செய்யப்போவது...
என்ன ஏது என்பதை அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம். நன்றி!

12 comments:

 1. Nice Photos. Aqua phobia... Sounds like poosar.

  ReplyDelete
 2. ரசனையான பதிவு.. டிராயிங் நல்லா இருக்கு.. இதென்னது..? கவுணி அரிசி மாதிரி தெரியுது.

  ReplyDelete
 3. மேக ஊர்வலம் மிக அழகு ..!

  ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...!

  ReplyDelete
 4. மெகா ஊர்வலத்தை நன்கு அழகாக படம் பிடித்ஹ்டு விட்டீர்களே!

  ReplyDelete
 5. படத்தைப் பார்த்தால் வானம் தொட்டுவிடும் தூரம்போல் தெரிகிறது + தலையில இடிச்சிருமோன்னும் தோணுது. மேகங்கள் அழகாக இருக்கிறது, ஸாரி, அழகா படம் பிடிச்சிருக்கீங்க.

  ஆஹா, ஜீனோவோட வீக்னஸ் தெரிஞ்சுபோச்சே!!

  கவுனி அரிசி பாயஸம் வரப்போகுது !!

  ReplyDelete
 6. மேகத்தின் மெகா ஊர்வலம் அழகாருக்கு.

  ReplyDelete
 7. அப்பப்பா!! கொள்ளை அழகு முகில்கள்.

  பாவம் ஜீனோ. ;)

  கருப்பு அடை! கருப்பு தோசை! கருப்பு அப்பம்! கருப்பு அரிசி பாயாசம்! கருப்பு சந்தவை! கருப்பு... உதைபடப் போறேன் போல இருக்கே! ;))

  ReplyDelete
 8. மேகப் பாயைத் தூக்கி
  மேலே போட்டது யாரு?
  போகப் போக அழகாய்ப்
  புரியுது நல்லாய்ப் பாரு!
  வீட்டுக் குள்ளே இருந்த
  நாலு காலு வாலு
  வேணாம் பாவம் ஆளு!
  தானா தவிக்குது கேளு!

  மேகக் கூட்டங்கள் நடத்திய மாநாடோ?

  ரொம்ம்ம்பவே அழகாய்ப் படம் பிடிச்சுப் போட்டுவிட்டிருக்கிறீங்க மகி!

  கண்களைக் கவ்வி இழுக்கின்றன காட்சிகள்!
  ஜீனோவும் கடற்கரை விளையாட்டும் சூப்பர்!

  வாழ்த்துக்கள் மகி!  ReplyDelete
 9. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஆருகும் பதில் போடாமல் புதுப்போஸ்ட் போட்டமைக்கு என் வன்மையான கண்டனங்கள்.

  ராத்திரி பெட்டுக்குப் போகமுன்புதான் இதைப் படித்தேன், அப்படியே நித்திரையாகிட்டேன்ன்.. நைட் முழுக்க ஜீனோவும் நானும்தான்.. ஹையோ கனவில வந்து என்னோடு ஒரே டூயட்தான் போங்கோ..:).

  மேகம் சூப்பர், நானும் மேகத்தை ரசிப்பேன்ன்.. சில நேரங்களில் சூப்பராக உரக்க கத்தோணும் போல எல்லாம் வரும் அதன் அழகு பார்க்க.

  ///போலாமா வேணாமான்னு முடிவு பண்றதுக்குள்ள இப்படி இஸ்த்துக்கினு:) போறாங்களே? நான் என்ன்ன்ன்ன்ன செய்வேன்??!...
  ஜீனோவ இழுத்துட்டுப் போனாங்க, பட் ஜீனோ தண்ணிக்கு வரமாட்டேன்னு அடம்புடிச்சு மண்ணெல்லாம் பிறாண்டி, கண்ணுக்குள்ள எல்லாம் மண்ணு விழுந்து..போராடி எஸ்கேப் ஆகி... ///

  ஜீனோ அவங்கட மம்மியைப்போலவேதான் போல:)) மீ குளிக்கிறதுக்குச் சொன்னேனாக்கும்:)).

  ///என்ன ஏது என்பதை அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம். நன்றி!///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

  ReplyDelete
 10. அது கவுனி அரிசி ரெசிபினு நினைக்கிறேன்...

  ReplyDelete
 11. super aa itunthathu unga mind voice.i really enjoyed.

  ReplyDelete
 12. வாவ்வ்வ்.சூப்பர் மகி.அழகான மேகக்கூட்டங்கள்.பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல."அதோ மேகஊர்வலம்" அந்தப்பாட்டுத்தான் ஞாபகம் வருது. நீங்க வேறு அதை அழகாக போட்டோ எடுத்திருக்கிறீங்க.க்ராபிக்ஸ் போட்டோ நல்லாயிருக்கு.அய்ய் ஜீனோவும் தண்ணீருக்கு பயமா.என்னோட (ஊரில இருந்த)செல்லம் "விது"அவருக்கும் சரியான பயம்.(இப்ப இல்லை.)மிக அழகான படங்கள் மகி.நாங்களும் இப்ப இந்த மாதிரி கடற்கரை(பால்டிக்கடல்) நாடாகிய போலந்து க்குதான் போனோம். நன்றி மகி பகிர்வுக்கு.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails