Sunday, July 8, 2012

ஃபனல் கேக்கும், பட்டாசும்!

ஜூலை 4 -ஆம் தேதி வந்த (அமெரிக்க) சுதந்திரதினத்தை ஒட்டிய பதிவு இது என்று தலைப்பைப் பார்த்தே கண்டுபிடிச்சிருப்பீங்க! :))) ஒவ்வொரு சுதந்திர தினத்துக்கும் இங்கே ஒவ்வொரு சிட்டியிலும் குறிப்பிட்ட ஒரு இடத்தில் வருஷாவருஷம் fair நடக்கும். ரெண்டு-மூணு சாலைகளை மறித்து, சாலைகள் முழுக்க கடை-கண்ணி, குழந்தைகள் விளையாடும் ride-கள் இப்படி ஜேஜேன்னு நம்ம ஊர் திருவிழா போல இருக்கும். பகல் முழுக்க அலைமோதும் மக்கள் கூட்டம், சூரியன் மறைந்ததும் நடக்கும் ஃபயர்வொர்க்ஸ்-ஐயும் பார்த்துவிட்டு கிளம்புவாங்க.

இந்த வருஷம் எங்க ஊர்த் திருவிழாவுக்கு(!) செல்கையில் கிட்டத்தட்ட இருட்டிவிட்டது. 9 மணிக்கு ஃபயர்வொர்க்ஸ் என்று சொல்லியிருந்தாங்க, நாங்க கரீக்ட்டா 8.30க்கு போனோம், அதிர்ஷ்டவசமாக பார்க்கிங் சீக்கிரம் கிடைத்தது. [இல்லைன்னா, fair நடக்கும் இடத்திலிருந்து ஒரு மைல் ரெண்டுமைல் தள்ளிதான் பார்க் பண்ண இடம் கிடைக்கும், அவ்வ்வ்! ] கூட்டத்துக்குள் மெல்ல ஊடுருவி, நீந்தி கடைகளை பார்த்துக்கொண்டே சென்று டார்கெட்டை அடைந்துவிட்டோம். ;) வெனிஸ் பீச் பதிவில ஃபனல் கேக் பத்தி சொல்லிருந்தேன், இந்த முறையும் fair-ல ஃபனல் கேக் சாப்பிடவேண்டும் என்று ப்ளான் பண்ணிதானே கிளம்பினதே! ;))

கடையில் கேக்குக்கு காசுகுடுத்து டோக்கன் வாங்க ஒரு கியூ, டோக்கனை குடுத்து கேக்கை வாங்க ஒரு கியூ என இரண்டு வரிசை. டோக்கன் வாங்க காத்திருந்த நேரத்தில், சைக்கிள் கேப்ல கேக் சுடுவதையும் முடிந்த அளவு கேமராவில் சுட்டுட்டேன்! :)

ஒருவர் ஃபனல் கேக்கை கொதிக்கும் எண்ணெயில் ஊற்ற, நிமிஷமாய் வெந்துவிடுகிறது. இன்னொரு ஆள், கேக்கைத் திருப்பிவிட்டு, எண்ணெயிலிருந்து எடுத்து பேப்பர் தட்டில் வைக்கிறார். அதை கவுன்ட்டருக்கு கொண்டுவந்து பவுடர் சுகர் தூவி, மேலே விரும்பிய டாப்பிங்-ஐ வைச்சு குடுக்கறாங்க!

ராஸ்பெரி, சாக்லேட், ஸ்ட்ராபெரி..கூடவே விப்ட் க்ரீப் [whipped cream] என்று விதவிதமா டாப்பிங்க்ஸ் இருந்தது. ப்ளெய்ன் ஃபனல் கேக்கையே சூடு ஆறும் முன் சாப்பிடாவிட்டால் திகட்டும், இதில டாப்பிங் வேறயா?! நாங்க ப்ளெய்ன்-தான் வாங்கினோம்.

கேக்கை பிச்சு பிச்சு;) ருசித்தவாறே, பல கடைகள், ம்யூஸிக் கார்னிவல், பாப் கார்ன் கடை, நம்ம ஊர் ஊதுபத்தி - வாசனைப் பொருட்கள் கடை என்று பலகடைகளையும், வெள்ளை-கருப்பு-ப்ரவுன் நிற மக்கள் கூட்டத்தையும் கடந்து ஃபயர்வொர்க்ஸ் நடக்கும் இடத்தை அடைந்தோம்.

நம்ம ஊரில் தீபாவளிக்கு பட்டாசு களைகட்டும், மீதமானதை கார்த்திகை தீபத்தில் தீர்ப்பாங்க. கிரிக்கெட் மேட்சில் ஜெயிச்சா பட்டாசு...அரசியல் தலைவர்கள் பிறந்தநாளுக்கும் பட்டாசு, சிறையிலிருந்து விடுதலையானாலும் பட்டாசு என்று நினைத்தபோதெல்லாம் பட்டாசு வைக்கலாம். இங்க அப்படி இல்லை, வருஷத்திற்கு இரண்டுமுறைகள்[நியூ இயர் & இண்டிபென்டன்ஸ் டே] மட்டுமே பட்டாசுகளுக்கு அனுமதி.

விரும்பியபடி லட்சுமி வெடி, ஓலைவெடி, பாம்புவெடி, அணுகுண்டு எல்லாம் வாங்கி கொளுத்த முடியாது. வீடுகளில் விற்கவென்று ஸ்பெஷலா(!) இருக்கும் சாதா-சோதா;) பட்டாசுகள் மட்டுமே வாங்கமுடியும். மற்றபடி ஒவ்வொரு சிறு நகரத்திலும் அரசாங்கமே ஃபயர்வொர்க்ஸ்-ஐ நடத்தும். தீயணைப்பு வண்டிகள், முதலுதவிக் குழு, காவல்துறை இப்படி எல்லாவற்றையும் பக்காவா அரேஞ்ச் பண்ணி, மைதானங்களில் ஒரு 20 நிமிஷம் பட்டாசுகள் கொளுத்துவாங்க.

ஃபயர் வொர்க்ஸ் முடிந்ததும் மக்கள் கூட்டம் மொலுமொலு-ன்னு கலைந்து நடக்க ஆரம்பிப்பார்கள். கடைகள் எல்லாம் பிரிச்சு pack பண்ணுவாங்க.. கடைக்காரர்கள், நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் என்று அத்தனை பேர்களையும் அழகா guide செய்து தள்ளு-முள்ளு இல்லாம எல்லாரையும் பத்திரமா அனுப்பி வைக்கும் யு.எஸ். காவல்துறை! :)



சும்மா சாம்பிளுக்கு ஒரு வீடியோ... என்சாய்! :)

20 comments:

  1. நீச்சல்லாம் தெரியுமா மஹீ!! சொல்லவேயில்ல!

    ReplyDelete
  2. ஹார்ட் சூப்பர்.
    ம்.... கண்ணுக்கு மட்டுமே உணவு, காதுக்கல்ல. ;) முக்கிய நபர்கள் வாய்ல ப்ளாஸ்திரி ஒட்டிட்டு எடுத்த வீடியோ!! வன்மையாகக் கண்டிக்கிறேன். ;)))

    ReplyDelete
  3. naangalum, enga chinna oorla fireworks parthom..it was the first time for my son, he enjoyed it very much.fireworks 20 min than, but trafiicla mati veedu vanthu servatharku 2 hours :)

    ReplyDelete
  4. Sumi, we stayed in RI - few years back! I Have seen the fireworks for the first time there only! :) tkz for dropping by!

    Imma, will reply you shortly, tkz for the comment by the way! :)

    ReplyDelete
  5. ஃபயர் ஒர்க்ஸ் எல்லாம் நல்லா இருக்கே

    ReplyDelete
  6. அரசியல் தலைவர்கள் பிறந்தநாளுக்கும் பட்டாசு, சிறையிலிருந்து விடுதலையானாலும் பட்டாசு என்று நினைத்தபோதெல்லாம் பட்டாசு //

    புதுப்படம் ரிலீசுக்கு பட்டாசு !!!
    டாக்டர் பட்டம் கொடுத்தா பட்டாசு
    வெளிநாடு போய் ரிட்டர்ன் ஆனா பட்டாசு
    அவ்வவ் பட்டாசுன்னா எனக்கு பயம் .ஆனன தூர இருந்து பார்ப்பேன் காதை மூடிக்கிட்டு .
    இங்கே லண்டனில் ரக்பி /ஃபுட்பால் இதில் வின் பண்ணா பட்டாசு .
    ஸ்பெஷலா bonfire டே வச்சு அன்னிக்கும் பட்டாசு கொளுத்துவாங்க

    வெனிஸ் பீச்னாலே எனக்கு அந்த உப்பு மிளகு லவ்வர்ஸ் தான் நினைவுக்கு வராங்க .

    பொரிச்ச கேக் !!!!!!!!! டோனட்ஸ் மாதிரி இருக்கு .என்சாய்.அதில் காரமிருந்தா அள்ளி எடுத்துப்பேன் இதை அப்படியேகிரி சாப்பிட்டு மீதியிருந்தா பூசாருக்கு விட்டு கொடுக்கறேன் :)))))))

    ReplyDelete
  7. அருமையான வான வேடிக்கை ....fireworks superb ....

    ReplyDelete
  8. பனல் கேக் சூப்பர்.. சுடச்சுட, அதுவும் மாலை நேரக் குளிருக்கு இதமாகத்தான் இருந்திருக்கும்.

    நான் மகி செய்ததாக்கும் என ரெசிப்பியைத்தான் தேடினேன் முதலில்.

    ReplyDelete
  9. ஃபயர் வேர்க்ஸ் நேரம் மழை, குளிர் ஏதும் இருக்கவில்லையோ?
    இங்கு பயர் வேர்க்ஸ் நொவெம்பரில் வரும், மழையும் குளிரும் சொல்லி வேலையில்லை, இருப்பினும் போவோம்.. பக்கத்தில்தான் நடக்கும்.

    ReplyDelete
  10. //பொரிச்ச கேக் !!!!!!!!! டோனட்ஸ் மாதிரி இருக்கு .என்சாய்.அதில் காரமிருந்தா அள்ளி எடுத்துப்பேன் இதை அப்படியேகிரி சாப்பிட்டு மீதியிருந்தா பூசாருக்கு விட்டு கொடுக்கறேன் :)))))))///

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அஞ்சுவுக்கு என்னா பெரிய.. மனசூஊஊஊஊஊ.. புல்லா அரிக்குதெனக்கு... மகி... வடிவாச் சாப்பிட்டீங்களோ?:)

    ReplyDelete
  11. செவ்வாய் கிழமை தானே பதிவு வரும் ? கர்ர்ர்ர் இன்னிக்கே அமேரிக்கவில செவ்வாய் கிழமை ஆயிடுச்சா ?? என்னைய இப்புடி கொழப்ப கூடாது

    ReplyDelete
  12. உங்கூரு திருவிழா ரொம்ப அழகா இருக்கு மகி. தீபாவளி போது இந்த பட்டாச இங்கே ரொம்ப மிஸ் பண்ணுவேன். இங்கே கார்டன் க்ராகேர்ஸ் ன்னு விக்குறாங்க. Bon Fire நைட் நவம்பர் இல் வரும் அப்போ ஆசைக்கு வெடிக்கலாம் ஆனால் ரொம்ப சத்தம் எல்லாம் வராது.


    //அவ்வவ் பட்டாசுன்னா எனக்கு பயம் .ஆனன தூர இருந்து பார்ப்பேன் காதை மூடிக்கிட்டு .// அஞ்சு மகி கிட்டே சொல்லி இதை கிழிச்சு போட சொல்லுங்க பூஸ் இத பார்த்தாங்க நீங்க தொலைஞ்சீங்க:))

    //அப்படியேகிரி சாப்பிட்டு மீதியிருந்தா பூசாருக்கு விட்டு கொடுக்கறேன் :)))))))// ஹும்ம்ம் நான் கேக் பதிவா போட்டதால கேக் எனக்குன்னு கரீக்டா விட்டு கொடுத்திட்டு போன அஞ்சுவுக்கு டாங்க்ஸ் :))

    ReplyDelete
  13. அமெரிக்க சுதந்திரதின ஸ்பெஷல்_வழக்கமான உங்க நடையில்,அழகா எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
  14. Wow !! That's nice post...

    http://recipe-excavator.blogspot.com

    ReplyDelete
  15. அது என்ன ஃபனல் கேக். அதைப் பற்றியும் கொஞ்சம் தெறிஞ்சுக்க வேணுமே. வாண வேடிக்கை.வான வேடிக்கையும்தான். படிக்க நன்றாக இருந்தது.

    ReplyDelete
  16. இந்த பட்டாசு வீடியோவை பார்க்கும் போது, சிங்கப்பூர் - ல நியூ இயர்க்கு பட்டாசு வெடிப்பாங்க அதை பார்த்த மாதிரி இருந்தது....

    ReplyDelete
  17. விஜி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க!
    ~~
    லஷ்மிம்மா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா!
    ~~
    ஏஞ்சல் அக்கா, பட்டாசு எனக்கு அவ்வளவு பயம் இல்ல! ;)

    உப்பு மிளகு காதலர்கள்...ப்ரைவஸி வேணும்னு டைனிங் டேபிள்ல இருந்து சுவருக்கு ஷிஃப்ட் ஆகிட்டாங்க! ;))

    /அதில் காரமிருந்தா அள்ளி எடுத்துப்பேன் இதை அப்படியேகிரி சாப்பிட்டு மீதியிருந்தா பூசாருக்கு விட்டு கொடுக்கறேன் :)))))))/ கேக்கிலும் காரமா?! அவ்வ்வ்வ்வ்! இருந்தாலும் நீங்க விட்டுக் குடுத்ததை பாராட்டணும்! :) :)

    மிக்கநன்றி ஏஞ்சல் அக்கா!
    ~~
    தேங்க்ஸ் ஹேமா!
    ~~
    விஜிபார்த்திபன், நன்றிங்க!
    ~~
    /சுடச்சுட, அதுவும் மாலை நேரக் குளிருக்கு இதமாகத்தான் இருந்திருக்கும்./ எக்ஸாட்லி! ஜூப்பரா இருந்துச்சு அதிராவ்! :)

    /மகி செய்ததாக்கும் என ரெசிப்பியைத்தான் தேடினேன் முதலில்./ இதெல்லாம் வெளியே போகையில் எப்பவாவது சாப்பிடுவதோடு சரி. வீட்டில் எல்லாம் செய்வதா ஐடியா இல்லை! ;)

    /புல்லா அரிக்குதெனக்கு... மகி... வடிவாச் சாப்பிட்டீங்களோ?:)/ இப்ப எனக்கு புல்லாஆஆஆ அரிக்குதே!;))) வடிவாச் சாப்பிட்டேன் அதிரா! கொஞ்சம் பசியா வேற இருந்துதா, உள்ள இறங்கினதே தெரிலை..ஹிஹி!

    தேங்க்ஸ் அதிரா!
    ~~
    /செவ்வாய் கிழமை தானே பதிவு வரும் ? கர்ர்ர்ர் இன்னிக்கே அமேரிக்கவில செவ்வாய் கிழமை ஆயிடுச்சா ?? என்னைய இப்புடி கொழப்ப கூடாது/ :)))) கிரி, நான் கொஞ்சம் கொழம்பிட்டேன், பிறகு நீங்களும் கொழம்பணும்ல? அதுக்காகத்தான் இப்புடில்லாம்! ;)))))

    /தீபாவளி போது இந்த பட்டாச இங்கே ரொம்ப மிஸ் பண்ணுவேன்./ சட்டுன்னு ஒரு ஃப்ளைட்டைப் புடிச்சு ஊருக்கு ஒரு நடை போலாம்ல நீங்க? தீபாவளி-தீபாவளிக்கு ஊருக்கு போவதுன்னு ஷெட்யூல் பண்ணிகுங்க கிரி! [நான் அப்படிசெய்ய ஆசைப்படறேன், பட் இட்ஸ் நாட் வொர்க்கிங் for us! avvvvvv!]

    /பூஸ் இத பார்த்தாங்க நீங்க தொலைஞ்சீங்க:))/ don't worry-yaa! இப்பல்லாம் பூஸ் எதையுமே;) பார்க்கறதில்லையாம்! :)
    தேங்க்ஸ் கிரிஜா!
    ~~
    சித்ராக்கா../வழக்கமான உங்க நடையில்,/இதான் கொஞ்சம் இடிக்குது! ;) நீங்க நல்லவங்க, கெட்ட கிருமீஸ் மாதிரில்லாம் இல்ல, அதனால்...தேங்க் யூ! ;)
    ~~
    சங்கீதா,நன்றிங்க!
    ~~
    ரம்யா, நன்றிங்க!
    ~~
    காமாட்சிம்மா, கேக் செய்யும் மாவை தண்ணியா கரைச்சு, புனலில் எடுத்து எண்ணெயில் ஊற்றி பொரிச்சு எடுத்து, மேலே சர்க்கரை தூவினா...அதான் ஃபனல் கேக்! :)
    நன்றிம்மா!
    ~~
    ப்ரியா, மலரும் நினைவுகளா? :)
    தேங்க்ஸ் ப்ரியா!
    ~~

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails