வீட்டுத்தோட்டத்தின் முதல் அறுவடை..ஒரே ஒரு ஸ்ட்ராபெர்ரி!:) சரிபாதியா நறுக்கிருக்கேன்,எல்லாரும் சுவைத்துப் பாருங்க.
இந்தப்பதிவில் நாங்க வாங்கிவந்த செடிகள் பற்றி..
இவைதான் நர்சரியிலிருந்து வாங்கி வந்த மொத்த செடிகள்! மோஸ்ட்லி எல்லா நாற்றுகளும் தெரியுதுன்னு நினைக்கிறேன்.(என்னென்ன செடிகள்னு கண்டுபிடிங்களேன்,முடிஞ்சா.. :) )
ப்ளாஸ்டிக் டப்பால புதைத்து வைத்த வெந்தயம், இவ்வளவு அழகா,செழிப்பா முளைத்து வந்தது.சில நாட்கள்-ல ப்ளாஸ்டிக் டப்பா-ல இருந்து மண்ணுக்கு மாற்றி வைக்கிறேன் பேர்வழின்னு, மொத்த நாற்றுகளையும் பிரித்து மண்ணில நாலைந்து இடத்தில நட்டுவைத்தேன்..பிரிக்கும்போது வேர்கள் அறுந்து போயிருக்கணும்..எல்லா செடிகளும் அப்படியே வாடிப்போய்விட்டன.அதே மாதிரி கொத்துமல்லி விதைகள் ஒன்றுகூட முளைக்கவேயில்லை.:(
இரண்டு ஸ்ட்ராபெர்ரி நாற்றுகள் வாங்கிவந்தோம்(சில பிஞ்சுகளுடன்).
மண்ணில் நட்டபின்னர் பெரிதாய் இருந்த காய்கள் செடிக்கு ஒன்று என்ற வீதத்தில் பழுத்தன.மற்றவை அப்படியே வாடிப்போய்விட்டன.இதோ எங்க ஸ்ட்ராபெர்ரி பார்ம் அறுவடை... :)
செடிகள் வளர்கிறது..எப்ப பூ,காய்,பழமெல்லாம் விரைவில் வந்துடும்னுஎதிர்பார்க்கிறேன்.
யெல்லோ கோல்டன் பீன்ஸ்..இதுவும் பூக்களுடன் நர்சரில இருந்து வந்தது.இரண்டிரண்டா ரெண்டு மூன்று முறை காய்த்தது.
இப்போதைக்கு இவ்ளோதாங்க அப்டேட்டு..மீண்டும் அடுத்த பதிவில தோட்டநிலவரம் தொடரும்.
முந்தைய பதிவுகள் காண,
என் வீட்டுத் தோட்டத்தில்...
தோட்டம்..
Wow mahi ur garden is so pretty and healthy!never seen strawberry palnt before...luks wounderfull!
ReplyDeleteஅந்த பீன்ஸும் ஸ்ட்ராபெர்ரியும் எனக்கு. ;)
ReplyDeleteவெந்தயம் அழகா முளைச்சிருந்தது.. வருத்தமா இருக்கு.. :(
ReplyDeleteகொத்தமல்லி விதைகள கையால தேச்சு விட்டுத் தூவியிருந்தேன்.. அடுத்த வாட்டி அப்பிடிப் பண்ணிப் பாருங்க..
முடிஞ்சா வேலியால் கவர் பண்ணீ வையுங்க ஸ்ட்ரா பெர்ரி செடிய..
lovely garden....tempt me to plant something, but we live in appartment, so noway....
ReplyDeleteஉங்கள் தோட்டம் ரொம்ப அழகா இருக்கு .
ReplyDeleteஸ்டிரா பெர்ரி அழகோஅழகு..!!
ReplyDeleteகுழந்தைகள் ( நர்சரி ) அழகா இருக்கு
இங்கேயும் அதே கதை தான் மகி...வெறும் வெந்தயகீரையாக சாப்பிட்டு இப்பொழுது எல்லாம் போர் அடிச்சுபோச்சு...புரோக்கொலி வந்து கொண்டு இருக்கின்றது...தக்காளி, ஸ்ட்ராபெர்ரி எல்லாம் பூ பூத்து காய் தொடங்கி இருக்கு...புதினா நல்லா வந்து இருக்கு...இங்கேயும் கொத்தமல்லி வரவில்லை...ஒருவேளை வறுத்த கொத்தமல்லி விதையாக இருக்கும் என்றி நினைக்கிறேன்....உங்கள் தொட்டில் தக்காளி, ஸ்டாரபெர்ரி, பூ செடிகள் தானெ வைத்து இருக்கின்றிங்க...
ReplyDeleteதோட்டம் நல்லா இருக்கு!!!!!1
ReplyDeleteசூப்பராயிருக்கு தோட்டம்!!
ReplyDeleteநல்லா இருக்கு மகி.உங்கள் தோட்டத்தை அடுத்த பதிவில் காண ஆவல் கூடிப்போச்சு.
ReplyDeleteமகி, எனக்கும் இந்த முறை கொத்தமல்லி விதை போட்டு சரி வரவில்லை. போன முறை நல்லா வந்திச்சு. ஸ்ட்ராபெரி அடுத்த சம்மருக்கு இன்னும் பெரிய செடியாகி, நிறைய பழங்கள் வரும்.
ReplyDeleteஆகா தோட்டம் சூப்பராக இருக்கு பார்க்கவே.
ReplyDeleteநல்லாயிருக்கீங்களா மகி..
இப்படி மறந்துட்டீங்களே!
kutti thottam cute aa irrukku..
ReplyDeleteஐ...strawberry ... செர்ரி போடலையா? எனக்கு அது தான் பிடிக்கும்... போட்டு கொஞ்சம் அனுப்புங்களேன்... ஹா ஹா ஹா ... cute garden, thanks for sharing pics
ReplyDeleteதோட்டத்துச் செடிகளும் ஸ்ட்ராபெரியும் மிகவும் அழகு மகி! என்ன இருந்தாலும் நம் தோட்டத்து பூக்களும் செடிகளும் நம் குழந்தைகள் மாதிரி நம் கையால் வளர்க்கும்போது ரொமபவும் சிறப்பானதுதான்!!
ReplyDelete@ப்ரேமா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! எனக்கும் ஸ்ட்ராபெர்ரி முதல்முதலா பார்த்தப்ப இப்படிதான் இருந்தது.:)
ReplyDelete@இமா,அது உங்கள் எல்லாருக்கும்தானே படம்பிடித்து போட்டிருக்கேன்? எடுத்துக்கோங்க!:)
@/முடிஞ்சா வேலியால் கவர் பண்ணீ வையுங்க ஸ்ட்ரா பெர்ரி செடிய../ இருப்பதே இத்துனூண்டு இடம்..இதிலே வேலியெங்கே போடறது சந்தனா? அடுத்த சீஸனுக்கு காய்வரும்னு சொல்லறாங்க,பார்க்கலாம்.
@நானும் அபார்ட்மெண்தான் வேணி.அதிசயமா இந்த முறை க்ரவுண்ட் ஃப்ளோர்,அதிலும் அதிசயமா இப்படி ஒரு குட்டி கார்டன் வைக்க இடம்! :)
@நன்றி சாரு!
@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெய் அண்ணா! குழந்தைகள் எல்லாம் வளர்ந்துட்டாங்கள்-ல?
@உங்க தோட்டத்தையும் போட்டோ எடுத்து போடுங்க கீதா..நாங்களும் பார்ப்போமில்ல?
மூணு செடிகளைதான் சொல்லிருக்கீங்க.சொன்னவரை கரெக்ட்தான்.:)
@தெய்வசுகந்திஅக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@மேனகா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@ஸாதிகாக்கா,மாதமிருமுறை அப்டேட் பண்ணிட்டே இருக்கேன்.வந்து பாருங்க! நன்றி!
@வானதி,/ஸ்ட்ராபெரி அடுத்த சம்மருக்கு இன்னும் பெரிய செடியாகி, நிறைய பழங்கள் வரும்./நீங்க சொன்னா சரிதான்!:)
@மலிக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..மறக்கவெல்லாம் இல்ல! சீக்கிரம் உங்க ப்ளாக் பக்கம் வரேன்.
@நன்றி சௌம்யா!
@புவனா,செர்ரிதானே? ஹ்ம்ம்..இப்பதான் விதை போட்டிருக்கேன்.செடி வளர்ந்து, மரமாகி,பழம் வரும்வரை நான் இதே வீட்டிலிருந்தால் கட்டாயம் உங்களுக்கு அனுப்பறேன்.ஹா..ஹா!!
நன்றி புவனா!
@ஆமாம் மனோ மேடம்..என் நேரத்தில கொஞ்சம் உருப்படியா இந்த செடிகளுடன் செலவு செய்யறேன். வருகைக்கு மகிழ்ச்சியும்,நன்றியும்!