Tuesday, August 7, 2012

ஹைக்கிங்..

இரண்டு வாரங்களுக்கு முன்னர் பக்கத்திலிருக்கும் ஒரு ஹைக்கிங் ட்ரெய்ல்-க்கு சென்று வந்தோம், அதிலிருந்து சில படங்கள் + சில நினைவுகளின் தொகுப்பே இந்தப் பதிவு. வேலியோரம் பூத்திருக்கும் ஊமத்தம் பூக்களை ஊரில் பார்த்திருக்கிறேன், இங்கே பார்ப்பது இதுவே முதல்முறை. [ இது ஊமத்தம்பூ தானா என்றும் தெரியாது. நம்ம வசதிப்படி அப்படியே சொல்லிக்கலாம்! :)]

ட்ரெய்ல் ஹெட்-ன் அருகில் இருக்கும் அறிவிப்பு பலகை. சமீபத்தில் இந்த ட்ரெய்லில் ஒரு mountain lion -(மலை சிங்கம்!?!) விஸிட் அடித்துவிட்டு போயிருக்காராம். நியூஸில் சொன்னாங்க..யூ ட்யூபில் வீடியோ கூட இருக்குன்னு நினைக்கிறேன். இவற்றை கண்டால் நேராக நிமிர்ந்து, அசையாமல் நின்னுக்கணுமாம். உயரமான பொருட்களைப் போல நின்றுவிட்டால் அந்த சிங்கம் தன் பாட்டுக்குப் போயிருமாம்! :) வரவழியில் மீட் பண்ணினா(!) ப்ளாகுக்கும் அவரைக் கூட்டிட்டு வரலாம்னு நினைச்சுட்டே போனேன். ஆனா பாருங்க, அவரைப் பார்க்க முடிலை! ;) ஆனால் இந்த அழகான குடும்பத்தினர் எங்கள் பாதையைக் கடந்து போனாங்க..

ஒரு அம்மா, ஒரு குட்டி..கிடுகிடுன்னு பாதையைத் தாண்டிய பிறகும் திரும்பி திரும்பி யாரையோ எதிர்பார்த்தபடியே போனாங்க இவிங்க 2 பேரும்.. திரும்பி வருகையில் மீண்டும் ஓரிடத்தில் கடந்தார்கள், அப்போதுதான் மூன்றாவது ஆள் கண்ணில் பட்டார், அவரும் குட்டி மான்தான்! படமெடுக்க தெம்பு மிச்சமில்லாததால் விட்டுவிட்டேன். ;)

அதன்பிறகு கொஞ்சதூரம் மரநிழல் இருந்தது. பிறகு மொட்டை வெயில்...ஒரு இடத்தில் பாதை இரண்டாகப் பிரிய, நாங்க "road not taken"-ஐ செலக்ட் செய்து மலையேற ஆரம்பிச்சோம். மொட்டை வெயில்..மலைப் பாதையோ நெட்டுக்குத்தா மேலே ஏறுது. ஒதுங்க நிழல் கூட இல்லை. இப்படி ஒரு வழியை செலக்ட் செய்துட்டமேன்னு இருந்தாலும், மெல்ல மெல்ல ஏறினோம்.

சிறிது தூரம் மேலே ஏறியதும் கொஞ்சம் சமமான ஓரிடமும் சில குற்றுச் செடிகளும் வந்தன. அவற்றின் நிழலில் உட்கார்ந்து இளைப்பாறிவிட்டு..
திரும்பிப் பார்க்கையில் அருகிலிருந்த இன்னொரு செடியில் ஜோடிக் குருவிகளும், தேன்சிட்டு ஜோடிகளும் ஏகாந்தமாய் பறந்து திரிந்ததை கொஞ்சம் ரசித்துவிட்டு, கீஈஈஈழே தெரிந்த வீடுகளைப் படமெடுத்துக்கொண்டு கீழே இறங்க ஆரம்பித்தோம்.

மேலே ஏறுவதற்கு எவ்வளவு சிரமமாய் இருந்ததோ, அதற்கு அப்படியே ஆப்போஸிட்டாய் வெகுவேகமாக இறங்கியாச்சு..திரும்பி வருகையில் ட்ரெயிலில் சில பல இடங்களில் கடக்கும் சிற்றோடை வெயிலுக்கு இதமாய் சில்லென்று காற்றை வழங்கியது.

ட்ரெய்ல் ஹெட் கிட்டத்தட்ட முடியப் போகும் இடத்தில் ஓடையின் ஒரு புறமாக...

மணத்தக்காளி செடியேதாங்க! :) நிறையக் காய்களும் பழமுமாக தனியே நின்றிருந்தது. பழங்களைப் பறித்து சாப்பிட்டுவிட்டு, படமும் எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

எங்களுடன் அலைந்து திரிந்து வீடு வந்து சேர்ந்ததுக்கு நன்றி! ஃபுல் மீல்ஸ் ரெடி..தெம்பா சாப்பிடுங்க! :)

18 comments:

  1. படங்களுடன் விளக்கம் அருமை...
    தொடர வாழ்த்துக்கள்... பகிர்வுக்கு நன்றி...


    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    ReplyDelete
  2. மகிட மானுக்குக் கொம்பைக் காணவிலையே... கர்ர்ர்ர்ர்ர்ர்:).

    சைக்கிளில் மலை ஏறுவது மகியாயிருக்குமோ?:).

    ReplyDelete
  3. எங்களுடன் அலைந்து திரிந்து வீடு வந்து சேர்ந்ததுக்கு நன்றி! ஃபுல் மீல்ஸ் ரெடி..தெம்பா சாப்பிடுங்க! :)//

    நோ தங்கியூ.. மீ விரதம், பச்சைத்தண்ணி கூடக் குடிக்க மாட்டேன்ன்ன்.. ஆடிச் செவ்வாய்யாக்கும்:)).

    ReplyDelete
  4. Vijayalakshmi Dharmaraj said...//

    VijiParthiban said... //

    :) அடடே! ரெண்டு விஜியும் அடுத்தடுத்து வந்திருக்காங்க! :) வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி விஜி-களே! :))))
    ~~
    /திண்டுக்கல் தனபாலன் said...படங்களுடன் விளக்கம் அருமை.../ ஏதோ என்னை கிண்டல் பண்ணற மாதிரியாவே தெரியுது! ச்சே,ச்சே...இருக்காது, தனபாலன் சார் நம்ம கெட்ட கிருமீஸ் மாதிரியெல்லாம் சிரியஸா கருத்து போடமாட்டார்! ;))
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! :)
    ~~
    will come later!! BUSY>> BUSY>>>>:(. ======> மீ விரதம், பச்சைத்தண்ணி கூடக் குடிக்க மாட்டேன்ன்ன்..??? அதான் பிஸியோ அதிராவ்? ;)))))

    /மகிட மானுக்குக் கொம்பைக் காணவிலையே... கர்ர்ர்ர்ர்ர்ர்:)./இருங்க, ஒருக்கா மான் கிட்ட கேட்டுச் சொல்றேன்!
    ...
    ......
    .
    ..
    ....
    ஆங்! கொம்பை கழத்தி, க்யூஸ்;) அடிக்க குடுத்திருக்காம் அதிராவ்! அடுத்த கிழமைக்குள்ள கிடைச்சிருமாம்! :)))))

    /சைக்கிளில் மலை ஏறுவது மகியாயிருக்குமோ?:). / இருக்காதே..மகி சைக்கிளில் மலையேறியிருந்தால் உங்களுக்கு எப்படி மகி ப்ளாகில், மகியே வந்து மகிட போட்டோவைப் போடமுடியும்? சொல்லுங்கோ? ;) பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கற வைத்தியருக்கே பைத்தியம் பிடிச்சா....எந்தப் பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கற வைத்தியரைக் கூட்டி வாரது? ஹிஹ்ஹி! :)

    /மீ விரதம், பச்சைத்தண்ணி கூடக் குடிக்க மாட்டேன்ன்ன்.. ஆடிச் செவ்வாய்யாக்கும்:))./ ஹூம்! கொஞ்சம் முன்னால சொல்லிருக்கலாம்! நான் இப்பதான் டொமினோ'ஸ் பிஸ்ஸா- என்ற பேரில் ஒரு வஸ்து(!)வை 2 ஸ்லைஸ் உள்ளே;) தள்ளினேன்! :)))

    பிஸி ஷெட்யூல்லயும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிராவ்!
    :)))))
    ~~

    ReplyDelete
  5. படங்களோட விளக்கமும் மிக அருமை. நல்ல எக்ஸர்ஸைஸா.

    ReplyDelete
  6. /Vijiskitchencreations said.../அடடே, 3வது விஜி! :))) வாங்க வாங்க விஜியக்கா! :)
    /நல்ல எக்ஸர்ஸைஸா./ அதையேன் கேட்கறீங்க..ஒரு வாரத்துக்கும் சேர்த்து ஒரே நாள்ல நடந்த மாதிரி ஆகிருச்சு! ஹிஹி! ;)

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  7. Like the full meals plate
    Looks lovely

    http://www.followfoodiee.com/

    ReplyDelete
  8. அது.. ஊமத்தம்பூ போலதானே இருக்கு!

    இமா ஹைக்கிங் வரமாட்டாங்களாம். கர்ர்ர்ர்ர் //உயரமான பொருட்களைப் போல நின்றுவிட்டால் அந்த சிங்கம் தன் பாட்டுக்குப் போயிருமாம்!// எப்புடீ!!

    //....கொஞ்சம் சமமான ஓரிடமும் சில குற்றுச் செடிகளும் வந்தன. அவற்றின் நிழலில் // MA BA எல்லாம் படிச்சுட்டு.... சொல்ல மறந்துட்டீங்களே!!

    எனக்கு ஒரு கட்டு 'புல்ரஷ்' அனுப்புங்க. தேடுறேன், கிடைக்க மாட்டுதாம். அதுல சமையல் ரெசிபி கொடுக்கலாமே! ;)

    அப்புறம்... ம்... சுக்குட்டிக்காய்.. பழம் கொண்டாந்து தொட்டில வளக்கறீங்களாமே! உண்மையா!!

    ReplyDelete
  9. Nice clicks and lovely explanation....
    http://recipe-excavator.blogspot.com

    ReplyDelete
  10. /Follow foodie said...Like the full meals plate, Looks lovely/ டைரக்ட்டா மீல்ஸ்-லயே லேண்ட் ஆகிட்டீங்க?! :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    சரஸ், தேங்க்யூ!:)
    ~~
    இமா,/அந்த சிங்கம் தன் பாட்டுக்குப் போயிருமாம்!// எப்புடீ!!//// ஆஹ்!! கொஞ்சம் இருங்க, கூகுள்ட்ட கேட்டு சொல்றேன்! ;)

    /MA BA எல்லாம் படிச்சுட்டு.... சொல்ல மறந்துட்டீங்களே!!/ ஹிஹி! அதெல்லாம், படத்தைப் பாக்கறவங்க கவனிச்சு கேட்டா பரவால்ல, நானே சொல்லிக்க முடியுமா?! ;)

    /எனக்கு ஒரு கட்டு 'புல்ரஷ்' அனுப்புங்க. தேடுறேன், கிடைக்க மாட்டுதாம். அதுல சமையல் ரெசிபி கொடுக்கலாமே! ;)/ இந்த வெளாடுக்கு நான் வரலை இமா! நான் பாட்டுக்கு புல்ரஷ்-ஐப் போய் பிடுங்க..கவன்ர்மென்ட்டு வந்து என்னைய கைது பண்ண..ஆ,நினைக்கவே உதறுதே! ;))

    /பழம் கொண்டாந்து தொட்டில வளக்கறீங்களாமே!/ தொட்டில போட்டுவைச்சேன், வளருமா, வளராதா அது சுக்குட்டிப் பழம்தான் தீர்மானிக்கணும்! :) இதுவரை வளர்ந்த மாதிரி தெரிலை...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றீ இமா!
    ~~
    சங்கீதா. தேங்க்ஸ்ங்க!
    ~~

    ReplyDelete
  11. Manathakkali keerai parikkalaya..

    ReplyDelete
  12. ம்ம்ம்..சூப்பர்.நான் சாப்பாடு தட்டை சொன்னேன்.பகிர்வும் தான்.:)!

    ReplyDelete
  13. /keerai parikkalaya.. / :) ஹேமா, படத்தில செடி இருக்கே, பார்க்கலையா நீங்க? நமக்கெல்லாம் ஒரு கட்டு கீரை வாங்கினாதான் சரியா இருக்கும், இந்த அஞ்சாறு இலைகளைப் பறிச்சு என்னங்க செய்யறது? ;))))))
    ~~
    அடடே ஆசியாக்கா, ரமதான் கரீம்! :) எப்படி இருக்கீங்க?
    சாப்பாடு நல்லாருக்கு சரி, அதுக்காக 'பகிர்வும் தான்.:)! ' இப்படிப் போட்டு என் லிட்டில் ஹார்ட்-ஐ ஒடச்சுப் புட்டீங்களே? :)))) இட்ஸ் ஓகே, நான் கம் போட்டு ஒட்டிக்கறேன், நோ ப்ராப்ளம்! ;)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~

    ReplyDelete
  14. ஜாலியான ஹைக்கிங்.இந்த ஊமத்தம்பூவை இங்கே நிறைய வீடுகளில் பார்க்கிறேன்.ஆனால் முட்கள் நிறைந்த காய்கள்தான் இல்லை. மணத்தக்காளியின் விதைகளில் மட்டும் கொஞ்சமா அனுப்பிவிடுங்க.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails