Wednesday, December 28, 2011

ரசித்து ருசித்தவை - 6

ரசித்து ருசித்தவற்றை பகிர்ந்து பலநாட்களாகி விட்டதுபோல தோன்றியது..அதனால் இந்த வருடத்தின் கடைப்பதிவாக ரசித்து ருசித்தவை ஆறாம் பகுதி! :)

1.Sweet Shells/Gavvalu - ஸ்வீட் ஷெல்ஸ்

Gavvalu -இது ஆந்திரா இனிப்பு, கவ்வாலு(கவ்வலு?) என்பது தெலுங்கில் சிப்பியைக் குறிப்பது. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை இதனை செய்திருக்கிறேன். சுத்தமாக மறந்து போயிருந்த இந்த இனிப்பை இங்கே பார்த்ததும் மறுபடி செய்து பார்ப்போம் என்று செய்தேன். கடந்தமுறை முள்கரண்டி மூலம் சிப்பி வடிவம் செய்தேன், இந்தமுறை சீப்பு(!)!!! ஆமாங்க, comb-தான்!! புத்தம்புதுசா ஒரு சீப்பை இந்த ஷெல்ஸ் செய்யன்னு எடுத்து வைச்சிருக்கேன். ;) விரைவில் ஸ்டெப் வைஸ் படங்களுடன் ரெசிப்பியை போஸ்ட் பண்ணுகிறேன்.

2.தெள்ளேவு/Thellevu - தோசை

இதுவும் அதே ப்ளாகில் பார்த்து செய்ததுதான்..தோசையேதான்,ஆனா நார்த் கர்நாடகா ஸ்பெஷல் தோசை. அரிசி-உளுந்து-வெந்தயம்-வெள்ளரிக்காய் சேர்த்து அரைத்து புளிக்கவைத்து தோசையாக ஊற்றவேண்டியதுதான். தோசை மிக மெல்லியதாக, பேப்பர் மாதிரி இருக்குமாம். கரண்டியால் தோசையை வட்டமாக தேய்க்காமல், வாழையிலையால் மெல்லியதாக தேய்த்து செய்வார்களாம். நாம கரண்டிலயே மெல்ல்ல்ல்ல்ல்ல்லிசா தோசை சுடுவம்ல?~ இதுக்கு ரெசிப்பியும் அடுத்து வந்துட்டே இருக்கு. :)

Thanks Vani Lohith for the yummy recipes! :)

3.எண்ணெய் கத்தரிக்காய் /Stuffed Brinjals

நித்து'ஸ் கிச்சன்ல இருந்து செய்த ஸ்டஃப்ட் எண்ணெய் கத்தரிக்காய். அவங்க ரெசிப்பியுடன் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதை(தனியா) சேர்த்து வறுத்து பொடித்து ஸ்டஃப் பண்ணினேன். தக்காளி பிரியாணியுடன் சூப்பரா மேட்ச் ஆச்சு. நன்றி நித்து! ஸ்டெப் பை ஸ்டெப் படங்களைப் பார்க்க இங்கே க்ளிக் பண்ணுங்க.

4.தோசைப்பொடி

வானதியின் வலைப்பூவிலிருந்து தோசைப்பொடி! இதுவரை இட்லிப்பொடியைத்தான் தோசைக்கும் வைத்து சாப்பிடுவது வழக்கம். தோசைக்குன்னு தனியாப் பொடி அரைச்சதில்லை. ;) அதனாலேயே இந்தப் பெயர் என்னைக் கவர்ந்தது. கரெக்ட்டா வீட்டிலும் இட்லிப்பொடி தீர்ந்து போயிருந்ததால் உடனே வறுத்து அரைத்துவிட்டேன்..
அரை கப் ட்ரை தேங்காய்ப் பவுடர், கால்கப் எள்ளு, ரெண்டு வரமிளகாய், ஒரு டீஸ்பூன் குறுமிளகு எல்லாம் கருகாமல் வறுத்து எடுத்து உப்பு சேர்த்து அரைத்தா தோசைப்பொடி ரெடி.

இங்கே வழக்கம்போல மகி காமெடி ஒண்ணு நடந்தது..வறுத்த பொருட்களை மிக்ஸில போட்டு அரைஅரைஅரைன்னு அரைச்சுட்டேன் போல..எள்ளுல இருந்து கிட்டத்தட்ட நல்லெண்ணெயே வந்துடுச்சு..ஹிஹிஹி! இந்தப் பொடிக்கு எண்ணெயே வேணாம்,அப்படியே சாப்புடலாம்னு என்னவர் ரசித்து சாப்ட்டார். அப்புறம்தான் அவங்க ப்ளாக்ல பாத்தேன், ஒண்ணா ரெண்டாதான் அரைக்கணும் போல! ;) எப்படி அரைச்சா என்ன..பொடி சூப்பரா இருந்தது.நன்றி வானதி!

இது நான் இட்லிப்பொடிக்கு வறுத்து வைத்த பொருட்கள். இந்தமுரை ப.பயறு-கொள்ளு-து.பருப்பு-அரிசி இப்படி ஒரு காலத்தில் அம்மா சொன்ன ரெசிப்பிய ஃபாலோ பண்ணினேன்.கூடவே கொஞ்சம் மிளகும் சேர்த்துகிட்டேன்..படத்திலிருக்கும் பொருட்கள்+ சிறுதுண்டு வெல்லம்-தேவையான உப்பும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்தா சூப்பர் இட்லிப்பொடி ரெடி! நீங்க விரும்பின தானியங்களை வறுத்து சேர்த்துக்கலாம், என்ன ஒண்ணே ஒண்ணு...கடலைப்பருப்பும்,உளுந்துப்பருப்பும் மேக்ஸிமம் க்வான்டிட்டி இருக்கறமாதிரி பாத்துக்குங்க. :)

4.மணத்தக்காளி வத்தக்குழம்பு

இது என்னோட வலைப்பூவில இருக்க சுண்டக்காய் வத்தக்குழம்பை ரசித்து ருசித்து, அடுத்து மணத்தக்காளி வத்தல்ல குழம்பு வைத்தேன். :) கசப்பு-புளிப்பு-இனிப்புன்னு தூளா இருந்தது! :P:P
நம்ம சமையலையே ரசித்து ருசிக்கக்கூடாதா என்ன??என்ன சொல்றீங்க?! ? :))))))))))
நீங்களும் ரசித்து ருசியுங்க! நன்றி! :)
~~~
CNN-லயும் வந்தாச்சாம்...ஒய்....ஒய்....ஒய்...ஒய்?!!!!!!!!!!!!!!ஒரிஜினல் பாட்டைவிட இந்தக் குட்டிப்பையன் பாடறது எனக்குப் பிடிச்சிருக்கு. நார்த் இண்டியன் வாசத்தோட, மழலையில் இந்தக்குட்டி பாடறதை கேட்டுப்பாருங்க. கொலவெறி அப்பப்ப குலவெறி ஆகும்..மூன் மூணாகும்!! க்யூட்டா இருக்கு! :))))

28 comments:

 1. நம்ம சமையலையே ரசித்து ருசிக்கக்கூடாதா என்ன??பின்ன நம்ம சமையலுக்கு நாம தான் first ஜட்ஜ். சூப்பர் ரெசிபீஸ் வித் சோனு நிகம்'ஸ் cute கொலவெறி.

  ReplyDelete
 2. ஆஹா ! பகிர்வுக்கு நன்றி.தோசைப்பொடி செய்து பார்க்கணும்.ஸ்வீட் ஷெக்ஸ் விரைவில் எதிர்பார்க்கிறேன்.நித்துவின் ரெசிபீஸ் சூப்பர்.என் வீட்டில் என் மகள் ரூமில் நிவான் நிகமின் கொலைவெ(ற்)றி அப்ப அப்ப அலறும்.நானும் ரசிப்பதுண்டு.

  ReplyDelete
 3. எல்லாமே சூப்பர் ரெசிபிஸ் மகி. தோசைக்கு அரைக்கும் போது கொஞ்சம் கடலை பருப்பு சேர்த்து அரைச்சா மொறு மொறுன்னு வரும்முன்னு பெங்களூர் நண்பி ஒருத்தங்க சொல்லி கொடுத்தாங்க. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

  இது வரைக்கும் வெள்ளரிக்கா சேர்த்து செஞ்சதில்ல இந்த வீக் எண்டு செஞ்சிடுவோம். வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா ன்னு பா..ஆடிகிட்டே தோசை சுட்டா தோசை நல்லா வருதோ இல்லையோ என் பாட்டை ரசிச்சுகிட்டே வீட்டுல சாப்பிட்டுற மாட்டாங்க? என்ன நான் சொல்லுறது?

  ReplyDelete
 4. இட்லி பொடி இது வரைக்கும் அரைச்சதில்ல. ஊர்ல இருந்து வரும் போது எடுத்துகிட்டு வந்தது தீர்ந்து போச்சுன்னா ஷக்தி இட்லி பொடிதான் உபயம். உங்க பொடி ரெசிபி அளவு ஒரு பதிவா போடுங்க ப்ளீஸ்.

  நானும் ஷக்தி வத்தல் குழம்பு மிக்ஸ் யூஸ் பண்ணி கொழம்பு வெச்சேன் நல்லா இருந்திச்சு. இப்போ மண தக்காளிக்கு எங்கே போவேன். நீங்க ஊரில இருந்து எடுத்திட்டு வந்தீங்களா?

  ReplyDelete
 5. மகி, சூப்பரா இருக்கு எல்லாமே. படங்கள் எல்லாமே அழகா இருக்கு. தோசை நானும் ட்ரை பண்ணப் போகிறேன்.

  தோசைப் பொடி தேங்காய் சேர்த்து செய்வது கொஞ்சம் கில்டியாக இருந்தாலும் சாப்பிடும் போது அதெல்லாம் காணாம போயிடும். இந்தப் பொடி என் அம்மாச்சி செய்வார்கள். உரலில் இடித்து செய்வது ஊர் வழக்கம். நான் கிட்டத்தட்ட 6 வருடங்களின் பின்னர் இந்தப் பொடி சாப்பிட்டேன். இனிமேல் கொஞ்சம் ப்ரேக் விட்டு, மீண்டும் செய்ய வேண்டும்.

  ReplyDelete
 6. தோசை பொடி கண்டிப்பா செய்து பார்க்கனும்

  தோசையில் வெள்ளரி கலந்து சுட்டதில்லை புதுசு.

  மனத்தக்காளி குழம்பும் ம்ம்ம்ம்

  ReplyDelete
 7. நீத்துவுன் கத்திர்க்காய் நானும் பார்த்து இருக்கேன்,. படமே நாவில் நீர் சுரக்க வைக்கும்

  ReplyDelete
 8. சவுமியா சொல்வது போல் என் சமையலை செய்ததும் முதலில் ரசித்து ருசிப்பது நான் நானே தான்/

  ReplyDelete
 9. all recipes looks soo good,wish u a happy new year mahi!!

  ReplyDelete
 10. எல்லாமே ஆஹா /ஓஹோ /பேஷ் பேஷ் சூப்பர்ப்

  அதுவும் அந்த தோசை சூப்பரோ சூப்பர் .
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மகி

  ReplyDelete
 11. your all collecton recipes are yummy and mouthwatering. I want to try your shell sweets waiting step by step picture mahi.

  advance Happy New Year wishes.

  ReplyDelete
 12. கிரிஜா,இட்லிப்பொடி முதல்லயே போஸ்ட் பண்ணிருக்கேன்..இந்தாங்க லிங்க்!;)

  http://mahikitchen.blogspot.com/2010/07/blog-post_23.html

  இது பேஸிக் பொடி..அதுபோக, லேபிள்ஸ்ல இருக்க பொடி வகைகளைக் க்ளிக் பண்ணினா இன்னும் 2-3 பொடிகள் கிடைக்கும். இட்லிப்பொடிக்கு எனக்குத் தெரிந்த ஈஸி டெக்னிக் க.பருப்பு&உ.பருப்பு சமஅளவு வரமாதிரி போட்டு அரைங்க.அம்புட்டுதான். :)

  ReplyDelete
 13. சௌம்யா,கரெக்ட்டாச் சொல்லிட்டீங்க! ;) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  ஆசியாக்கா,நியூ இயருக்கு இனிப்பா போஸ்ட் பண்ணிடறேன். :) எனக்கு கொலைவெறி அவ்வளவா இம்ப்ரஸ் பண்ணலை..எல்லாரும் பார்க்கறாங்களே,என்னதான் இருக்குன்னு எட்டிப்பாத்தேன்..இந்தக் குட்டிப்பையன் வர்ஷன் நல்லா இருந்தது! நன்றி ஆசியாக்கா!

  கிரிஜா,இட்லிக்கு ஈஸ்ட் போடறது,தோசைக்கு க.பருப்பு-து.பருப்பு எல்லாம் போட்டு அரைக்கறது நானும் கேள்விப்பட்டிருக்கேன்.
  ஆனா இதுவரை அதெல்லாம் பண்ணாமயேதானுங்க மல்லிகே இட்லில இருந்து 6 வகை தோசை வரைக்கும் செய்யறேன். (Touch wood!;) ) எப்பவாவது இதெல்லாம் ட்ரை பண்ணி பார்க்கணும்னு நினைப்பேன்..ஆனா செய்யறதில்லை! ;) தேங்க்ஸ் for the tips though!

  நீங்க நார்மலா சமைக்கிறதே ஒரு கொடும..அதில பாடிட்டே வேற சமைக்கப்போறீங்களா? அவ்வ்...ஐயோ பாவம் டாக்டரும்,அவர் பையனும்! ;) ;))))))

  வத்தலெல்லாம் ஊர்ல இருந்து கொண்டுவந்ததுதான். பார்ஸல் போட்டு விடச்சொல்லுங்க. இல்லைன்னா...பக்கம்தானே,ஒரு எட்டு சென்னைக்குப் போய் எடுத்துட்டு வந்துருங்களேன்! :)

  நன்றி கிரிஜா!

  வானதி,உரல்ல இடிச்சாலே போதுமா? அப்ப அடுத்த முறை அப்படி ட்ரை பண்ணிப் பார்க்கிறேன். யம்மியாதான் இருக்கு..ஆனாலும் அப்பப்ப கில்ட்டினஸ் எட்டிப் பாக்குதே! :P ப்ரேக் விட்டு செய்யப்போறீங்களா..சரி,சரி! என்சாய்! :)
  நன்றி வானதி!

  ReplyDelete
 14. ஜலீலாக்கா,நம்மள்ளாம் ஒரே கட்சிதானா அப்ப? :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜலீலாக்கா!

  மேனகா,தேங்க்ஸ்ங்க.உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ஏஞ்சல் அக்கா,நரசுஸ் காபி ரேஞ்சுக்கு அழகா "பேஷ்,பேஷ்" சொல்றேள். தேங்க் யூ! :)
  வாழ்த்துக்களுக்கு நன்றி..உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  விஜிக்கா,சீக்கிரம் போஸ்ட் பண்ணிடறேன்..நீங்க என்ன ஸ்வீட் புத்தாண்டுக்கு? :)
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  ReplyDelete
 15. மகி லிங்குக்கு ரொம்ப நன்றி. பொடி காலியான ஒடனே உங்க பொடி அரைச்சு பார்த்திட்டு சொல்லுறேன்

  நானும் க.பருப்பு எப்போவாச்சும் தான் சேர்த்து அரைப்பேன் ஏன்னா அந்த மாவுல இட்லி சரியா வராது. எங்க வீட்டுல எனக்கு மட்டும் தான் இட்லி புடிக்கும். அதனால ஒரே மாவுதான் இட்லி & தோசைக்கு ஆனா உங்க வெள்ளரிக்கா தோச மட்டும் exception !

  ReplyDelete
 16. நான் போட்ட ஒரு நாலு பதிவ வெச்சே என் சமையல எல்லாம் நீங்க இப்புடி புகழ கூடாது அப்புறம் திரிஷா அக்கா ரொம்ப கூச்ச படுவேன்ல ?

  என் பாட்ட பத்தி உங்க கமெண்ட் படிச்சதில இருந்து "" பாடு கிரிசா பாடு "" ன்னு நீங்க அன்பா கேக்குற மாதிரியே இருக்கு எனக்கு. இப்போ இங்க மிட் நைட் இருந்தாலும் கொலை வெறிய என் குரல்ல ரீமிக்ஸ் பண்ணி உங்களுக்கு அனுப்பணும் போல தோணுதே :))

  ReplyDelete
 17. என்னாது டாக்டரும் அவர்ர்ர்ரர் பையனுமா?? சாமி சத்தியமா அவன் என் பையனும் தானுங்கோ ::))

  அது சரி விட்டா சென்னைக்கு பொடி நடையா போயிட்டு பொடி வாங்கிட்டு வர சொல்லுவீங்க போல இருக்கு ஒய் ஒய் ஒய்??

  ReplyDelete
 18. மகிக்கும் மற்றும் அனைவர்க்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. அக்கு வேறு ஆணி வேறாப் பிரிச்சு கமண்ட் போட் ஆஅசைதான், நேரம் பத்தல. ;( சோ... இப்போதைக்கு //அரைஅரைஅரைன்னு அரைச்சுட்டேன்// ம்... அபோஓ... ஒண்ணரை... கணக்கு சரியா??

  ReplyDelete
 20. தோசைய பாக்கனும்னே திரும்ப வந்தேன் ,
  தக தகன்னு ஜொலிக்குதே/டிஷ்யு மெட்டிரியல் இந்த கலர்ல சல்வார் தச்சி போட்டா நல்லா இருக்கும்

  ReplyDelete
 21. ஸ்வீட் ஷெல்ஸ் - பார்க்க ரொம்ப அழகா இருக்கு.

  தெள்ளேவு - வித்தியாசமா இருக்கு. வெள்ளரிக்காய் போட்டு பேப்பர் மாதிரி தோசை ! :) சூப்பர்... ட்ரை பண்ணி பார்க்கணும்.

  எண்ணெய் கத்தரிக்காய் - பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு. எங்க மாமியார் செய்வாங்க.... ஆனால் வேர்கடலை எல்லாம் போட மாட்டாங்க. என் கையாள நான் ட்ரை பண்ணி பார்க்கணும். வீட்டுல கத்தரிக்காய் கூட இருக்கு. நாளைக்கே ட்ரை பண்ணி போஸ்ட் பண்ணிடறேன் மகி.

  தோசை பொடி - வானதி ப்ளாக்ல பார்த்ததுல இருந்தே செய்யணும்னு இருக்கேன். தேங்காய் போட்டு செய்யணுமேன்னு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.

  மணத்தக்காளி வத்தக்குழம்பு - ஓட்டல்ல ஒரு முறை என்னவர் சாப்பிட்டு விட்டு சூப்பர்ரா இருக்குனு சொல்ல.... நானும் வீட்டுல அரச்சு விட்டு பண்ணேன். சூப்பர்ரா வந்தது.

  கொலவெறி பாட்டு நிறைய தடவை கேட்டு இருக்கேன். குட்டி பையன் வாய்ஸ்ல கேட்க நல்லாத்தான் இருக்கு...

  ReplyDelete
 22. ஸரியாபோரதா

  ReplyDelete
 23. ஸரியாபோரதா

  ReplyDelete
 24. கமென்டஸ் போஸ்ட் ஆவதேயில்லை.
  இன்னிக்கு போவதுமாதிரி இருக்கு. அடுத்தடுத்து எத்தனை முயற்சி செய்தும் .எவ்வளவு கமென்ட்ஸ் எழுதியும்.
  என்ன சுவையானவற்றிலும் என்னுடய பங்கு .ரஸித்து ருசித்தவற்றை ருசித்து ரஸித்தேன். புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும் உன்னுடைய ரஸிகர்களுக்கும். அன்புடன் காமாட்சிம்மா

  ReplyDelete
 25. மகி...ஸ்ஸ்ஸ்ஸ் இதிலிருப்பதனைத்தும் என் பேவரிட்ட்ட்ட்ட்ட்ட்.....

  முதலாவதைத்தவிர:).. அதைத்தான் நாங்கள் சிப்பி சோகி என்போம்... நாங்க எல்லாம் தமிழர்களாக்கும்:)) அதனால தமிழில்தான் பெயர் வைப்போம்:))).

  தோசைப்பொடி, இட்லிப்பொடி சூப்பர்... செய்ய வேணும்போல இருக்கு.. ஆனா நான் இடியப்பம், புட்டோடுதான் சாப்பிடுவேன்:))... இதுவரை செய்ததில்லை:(.

  எண்ணெய்க் கத்தரிக்காய்க் குழம்பு சொல்லவே வேண்டாம்... சூப்ப்ப்ப்... சுண்டங்காய் வத்தல் அதை விட சூஊப்ப்ப்ப்... நான் கறிமட்டும் தந்தாலே சாப்பிட்டு விடுவேன் அவ்வளவு பிடிக்கும்....


  ம்ம்ம்ம் தாமதமா வந்ததினால் அடுத்த வீட்டிலயும் போய் ரீ குடிக்கோணும் அதனால மீ எஸ்ஸ்ஸ்:)))

  ReplyDelete
 26. திரிஷாக்கா..உங்க கொக்ககோலா கொழம்புல நம்மள்லாம் அடிச்ச கும்மி மறக்கக்கூடியதா?? நீங்க விருந்து குடுத்த படத்தை(மட்டும்) காட்டினதிலயே உங்க சமையல் பெருமை உலகறியும்! :))))))

  சென்னைக்குப் பொடிநடையாப் போறீங்களா..ஜூப்பர் ஐடியா! கட்டுசாதம் கட்டிகிட்டு கிளம்புங்க். ஒரு புல்லக்கார்ட்:) வேணா அரேஞ்ச் பண்ணித்தாரேன் டாக்டர் சார்கிட்டச் சொல்லி,டீலா??!;))))
  நன்றிங்க கிரிஜா!

  ப்ரியா,உங்களுக்கும் இனிய புத்தாண்டுநல்வாழ்த்துக்கள்!

  //அக்கு வேறு ஆணி வேறாப் பிரிச்சு கமண்ட் போட் ஆஅசைதான், நேரம் பத்தல.//அப்பாடி,தப்பிச்சோம் பிழைச்சோம்!! ரீச்சர் போட்டா தப்புக்கணக்கும் கரீக்ட்! ;)))நன்றி ரீச்சர்!

  /தக தகன்னு ஜொலிக்குதே/டிஷ்யு மெட்டிரியல் இந்த கலர்ல சல்வார் தச்சி போட்டா நல்லா இருக்கும்//ஹஹ்ஹாஹா!!ஏஞ்சல் அக்கா உங்க கமென்ட்டைப் படிச்சு பக்னு சிரிச்சுட்டேன். என்ன ஒரு ரசனை உங்களுக்கு!நீங்க சொன்னப்பறம்தான் கவனிச்சுப்பார்த்தேன்!! ஆமாம்..சூப்ப்பரா இருக்கும் அந்தக் கலர்! எங்கிட்ட அதே கலர் சுடிதார் ஒண்ணு இருக்கே..இன்னும் போடாம புதுசா வைச்சிருக்கேன்,அனுப்பிவிடவா?? :)))))

  ப்ரியா,ஒரொரு ஐட்டமா ரசித்து கமென்ட் போட்டிருக்கீங்க.ரொம்ப சந்தோஷம் + நன்றி! :)

  ஆச்சி,ரெம்ப பிஸியாகிட்டீங்களா?? அப்பப்ப ஜுனியர் ஆச்சிகிட்ட ரிக்வஸ்ட் பண்ணி லேப்டாப்பு வாங்கிக்கலாம்ல?? ;)
  உங்களுக்கும் இனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்.

  காமாட்சிம்மா,ப்ளாகர் ஏதோ வம்பு பண்ணிருக்கு போலஇருக்கு உங்ககிட்ட.இருந்தாலும் சமாளித்து கமென்ட்டைப் பதிவு செய்ததுக்கு மிக்க நன்றிம்மா! உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  வாங்க அதிராவ்! :) சிப்பி சோகி உங்களுக்குப்புடிக்காதா??? ஒய்ய்ய்ய்? மத்த ரெசிப்பிஸ் எல்லாம் பிடிச்சிருக்குன்னு சொன்னது சந்தோஷம். செஞ்சு பாருங்க. நன்றி அதிராவ்! ;)

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails