Thursday, July 15, 2010

ஸ்வீட் பன்

தேவையான பொருட்கள்
மைதா-2கப்
ஏக்டிவ் ட்ரை ஈஸ்ட்-1டீஸ்பூன்
சர்க்கரை-1/3கப்
உப்பு-1டீஸ்பூன்
இளம் சூடானதண்ணீர்-1/4கப்
முட்டை(அறை வெப்பநிலையில்)-1
வெண்ணெய்(அறை வெப்பநிலையில்)-1டேபிள்ஸ்பூன்
பால் -1/4கப்
வெள்ளை எள்-1டேபிள்ஸ்பூன்

செய்முறை
வெதுவெதுப்பான தண்ணீரில் ஈஸ்ட்,2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை,உப்பு சேர்த்து கலந்து பத்துநிமிடங்கள் வைக்கவும்.
முட்டையில் மஞ்சள்கரு-வெள்ளைக் கருவைத் தனித்தனியாகப் பிரித்து வைக்கவும்.
பாலைக் காய்ச்சி,ஆறவைக்கவும். அத்துடன் உருக்கிய வெண்ணெய்,முட்டையின் வெள்ளைக்கரு,மீதமுள்ள சர்க்கரை சேர்த்து கரைத்துவைக்கவும்.
பத்துநிமிடங்களில் ஈஸ்ட்கலவை நுரைத்திருக்கும். அத்துடன் பால்+முட்டை கலவையை சேர்த்து கலக்கவும்.
மைதாவுடன் இந்தக்கலவையை சிறிதுசிறிதாக சேர்த்துகலக்கவும். மாவு சற்றே தளர்ச்சியாக இருக்கவேண்டும். பிசைந்த மாவை 2மணி நேரங்கள் சற்றே சூடான இடத்தில் வைக்கவும்.

மாவு இரண்டுமடங்காகி இருக்கும்.உலர்ந்த மாவினை கைகளில் தடவிக்கொண்டு பிசைந்த மாவை மறுபடியும் பிசைந்து எலுமிச்சைப்பழ அளவில் உருண்டைகளாக்கி சூடான இடத்தில் ஒரு மணிநேரம் வைக்கவும்.

முட்டையின் மஞ்சள்கருவுடன் ஒருஸ்பூன் பால்சேர்த்து நன்றாக கலந்து, அதனை நன்றாக உப்பியிருக்கும் பன்களின் மீது சீராகத் தடவவும்.

பன்கள் மீது எள்ளை தூவி, 375F ப்ரீஹீட் செய்த அவன்-ல் சுமார் 16நிமிடங்கள் பேக் செய்யவும்.

பன்கள் தயார்.


விருப்பபடி பட்டர்,ஜாம் தடவி சாப்பிடலாம்.28 comments:

 1. wow....delicious and yummy yum sweet bun looks so beautiful, perfectly done, fabulous Mahi

  ReplyDelete
 2. சூப்பர் மகி, கடையில் வாங்குவதுபோலவே இருக்கு.

  நானும் கறிபண் செய்வேன் இப்படித்தான், ஆனால் இவ்வளவு அழகாக வந்ததில்லை, அதுக்கு ஒரு காரணம் நான் முட்டை சேர்க்காமலேயே இதுவரை செய்தேன், இனி முயற்சி செய்கிறேன்.

  உண்மையில் நீங்கள் ஒரு பேஸ்ட்ரிக் கடை ஆரம்பிக்கலாமே....

  பி.கு:
  ஒரு எலி பன்னும் செய்திருக்கலாமெல்லோ..... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

  ReplyDelete
 3. மகி.. சுப்பர் பண். எனக்கு அந்தத் தட்டை அப்பிடியே அனுப்பிருங்கோ.

  //எலி பன்னும் செய்திருக்கலாமெல்லோ// ம். எங்க வந்து என்ன சொல்றீங்கள்?? இப்ப கர் சொல்றது அவங்கட முறை. ;))

  ReplyDelete
 4. Perfect bake! luks too gud...

  ReplyDelete
 5. மகி சூப்பராக இருக்கின்றது...படங்கள் டாப் டக்கர்...பேஸ்டரி ராணி என்று உங்களுக்கு பட்டமே கொடுக்கலாம்...

  ReplyDelete
 6. சூப்பர் மகி!! looks sooooooo good & yummy!!

  ReplyDelete
 7. பன்கள் ரொமப் சூப்பராயிருக்கு மகி,அப்படியே எடுத்து சாப்பிடனும் போல் இருக்கு...

  ReplyDelete
 8. வாவ்.. என்னென்னமோ பண்ணுறீங்க மஹி.. நாங்களெல்லாம் எட்ட முடியாத உயரத்துக்கு போயிட்டு இருக்கீங்க.. ம்ம்.. பாக்கவே ஆசையா இருக்கு.. ஒரு பாக்கெட் ஃபெடெக்ஸ் ல அனுப்பி வையுங்களேன் :)))

  ReplyDelete
 9. //மகி.. சுப்பர் பண். எனக்கு அந்தத் தட்டை அப்பிடியே அனுப்பிருங்கோ. //

  தட்டை (மட்டும்) கழுவாமல் அப்பிடியே ந்யூ க்கு பார்சல் அனுப்பிடுங்கோ :)

  ReplyDelete
 10. எல்ஸுக்கு ஒரு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;)

  ReplyDelete
 11. இமாக்கு ஒரு பதில் கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))

  ReplyDelete
 12. மகி மேடம், சூப்பர். நல்ல பொறுமையா செய்து காட்டியிருக்கிறீங்க. சந்தனா போல பார்சல் எல்லாம் வாண்டாம். நானே செய்து பார்க்க வேண்டும்.

  ReplyDelete
 13. ஆஹா..குழந்தையின் கன்னம் மாதிரி அழகா மெத்துன்னு இருக்கே..!!!


  ஏற்கனவே 14 பேர் சாப்பிட்டு விட்டு போனதால வேற என்ன சொல்ல .அவ்வ்வ்

  ReplyDelete
 14. இதில உள்ள படத்தை மட்டும் சுட்டு நா சாப்பிட்டுட்டேன் .

  ReplyDelete
 15. வாவ் சூப்பர் மகி. இதே போல் என் தோழியில் வலை தளத்தில் இருந்து நானும் பார்த்து செய்தேன். ரொம்ப நன்றாக வரவில்லை நான் ஏதோ சொதப்பிட்டேன். இதை பார்த்ததும் நினைவு வந்தது. நான் இதே போல் பேக்கிங் புது வித உணவு செய்முறை தான் நிறய்ய பார்வையிடுவது வழக்கம் அது உஙகள் வலை தளத்தில் இருக்கிறதை நான் அடிக்கடி பார்ப்பேன், செய்வதும் உண்டு. நன்றி மகி.

  ReplyDelete
 16. ம்ம்.. அப்படியே சாப்பிடனும் போலிருக்கு. படங்களிலேயே இவ்வளவு அழகா இருக்கே, சாப்பிட்டா இன்னும் எவ்வள‌வு ஸ்வீட்டா இருக்கும்.. சோ, பார்சல் ப்ளீஸ்:)

  ReplyDelete
 17. வாவ்... பாக்கறதுக்கே ரெம்ப அழகா இருக்கு மகி...

  ReplyDelete
 18. அருமையான புகைப்படம்! உடனே செய்து பார்க்கத்தூண்டுகிறது!

  ReplyDelete
 19. I have bookmarked this,sure going to try this out!

  ReplyDelete
 20. அன்பான கருத்துக்களைச் சொன்ன அனைவருக்கும் நன்றி!

  எங்க வீட்டிலேயே பேக்கிங் பக்கம் வர வாய்ப்புகிடைத்த முதல்ஆள் நான்தான். அவ்வப்பொழுது நான் செய்யும் பரிசோதனை முயற்சிகளை ஊக்குவிப்பது உங்களனைவரின் கருத்துக்களும்தான்! மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது! அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 21. Perfect buns u've got....looks super yum!

  ReplyDelete
 22. முதல் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றிங்க ஷர்மிலி!

  ReplyDelete
 23. ஹாய் மகி. இந்த பன்னுக்கு மே அடுப்பு கீ அடுப்பு இரண்டையும் பத்தனுமா

  ReplyDelete
 24. சபீக்கா,நீங்க பேக்-ப்ராயில் ரெண்டும் பத்தி கேக்கறீங்கன்னு நினைக்கிறேன்..இதுக்கு Bake மட்டும் செய்தா போதும்.அதாவது அவன்-ல கீழே இருந்து சூடாகும்.அதுமட்டுமே போதும்.

  ReplyDelete
 25. Hi Mahi after doing this how to store or normal room temperature is ok?

  ReplyDelete
 26. Soumya,you can store the buns in an airtight box at room temperature for 2-3 days.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails