தேவையான பொருட்கள்
பாகற்காய்(சிறிய வகை / மிதி பாகல்) - 7
வெங்காயம் -2
சீரகம்-1/2டீஸ்பூன்
சோம்பு-1/2டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -11/2 டீஸ்பூன்
மல்லித்தூள் -1 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை
பாகற்காயை கழுவி, ஓரங்களை நறுக்கிவிட்டு, நீளவாக்கில் கீறி காயின் உள்ளிருக்கும் விதைகளை அகற்றிவிடவும்.
சுத்தம் செய்த காய்களை உப்பு கலந்த நீரில் கால்மணி நேரம் ஊறவைக்கவும்.
வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காயவிட்டு, சீரகம்-சோம்பு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள்-மல்லித்தூள்-மிளகாய்த்தூள்-உப்பு சேர்த்து வதக்கவும்.
பொடிவகைகளின் பச்சை வாசம் போனதும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
மசாலா நன்கு ஆறியதும், உப்புநீரில் ஊறும் பாவக்காய்களை எடுத்து நீரை வடித்துவிட்டு, காயின் உள்ளே மசாலாவை நிரப்பவும். இதே போல எல்லாக் காய்களிலும் நிரப்பிக்கொள்ளவும்.
இட்லிப் பாத்திரம் அல்லது ஸ்டீமரில் தண்ணீர் கொதிக்கவிட்டு, ஸ்டஃப் செய்த பாகற்காய்களை அடுக்கி வேகவைக்கவும். காய் முழுவதுமாக வேகக் கூடாது. 5 முதல் 8 நிமிடங்களில் நான் வைத்த காய்களை எடுத்துவிட்டேன்.
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் காயவைத்து வெந்த பாகற்காய்களை வதக்கவும். குறைவான சூட்டில் காய்களை திருப்பிவிட்டு எல்லாப் பக்கமும் சிவக்கும் வரை வதக்கி எடுக்கவும். சுவையான ஸ்டஃப்ட் பாகற்காய் தயார். சாதம், சப்பாத்திக்கு நன்றாக மேட்ச் ஆகும். கசப்பு-காரம்-வெங்காயத்தின் இனிப்பு என கலவையான சுவை சூப்பராக இருக்கும்.
Recipe Courtesy : Here
super mahi
ReplyDeleteWill it be in BITTER taste mahi ??
ReplyDeletehttp://recipe-excavator.blogspot.com
விளக்கமான பதிவு...
ReplyDeleteபடங்களுடன் உள்ளதால் எளிதாக உள்ளது...
நன்றி சகோ !
Supera erukuthunga Mahi...
ReplyDeleteஹாய் மகி.நலம்தானே.
ReplyDeleteபார்க்கும்போது ஸ்ட்ஃப்ட் பாவற்காய் நன்றாக இருக்கிறது.இந்த பாவற்காய் கிடைத்தால் செய்துபார்க்கவேண்டியதுதான்.மற்றையதில் செய்யமுடியாதா?
உங்க போட்டோக்கள் நன்றாக இருக்கிறது.நல்ல க்ளியர் ஆகவும் இருக்கு.
உங்க ப்ளாக்கில் இருந்து சமையல் குறிப்புக்கள் செய்து இருக்கிறேன்.இவ்வளவு நாளும் கொமன்ட் தராததற்கு மன்னிக்கவும்.
Super mahi....
ReplyDeleteநானும் இதேமுறையில் தான் செய்வேன்
ReplyDeletelovely to have this type of bitter gourd...
ReplyDeleteHappy krishna jeyanthi...
VIRUNTHU UNNA VAANGA
வித்தியாசமா நல்லாயிருக்கு மகி!!
ReplyDeleteசிரிய பாகற்காயில் ஸ்டஃப் செய்து...அட்டகாசம்.
ReplyDeleteவிதியாசமாக இருக்கு.. பாகற்காய் கசக்குமுனு சாப்பிடுவதே இல்லை.. இப்படி ட்ரை பண்ணி பார்க்கிறேன்
ReplyDeleteம்-வெங்காயத்தின் இனிப்பு ///????இனிப்பு??
ReplyDeleteசகோதரி மகி!
ReplyDeleteஉங்கள் வலைப்பூ பக்கம் வந்துபோயிருக்கிறேன். பின்னூட்டம் தர இப்பதான் வேளைவந்தது;)
உங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்றாலும் அனைத்துப் பதிவுகளும் நன்றாக ஆர்வத்தைத் தருவதாகவே உள்ளது.
ஏதோ எழுதினமா போட்டமா என்றில்லாமல் ஒவ்வொருமுறையும் மகியின் புதியபதிவு என்றவுடன் ஓடிப்போய் பார்க்க வேண்டுமென்ற ஆவலைத்தரும் வகையில் தொகுப்பு & விளக்கத்துடன் மிக அருமையாக இருக்கிறது.
அதுவே உங்கள் திறமை. வாழ்த்துக்கள்!!!
இம்முறை ஸ்டஃப் பாகற்காய் வித்தியாசமான ரெசிப்பியாக இருக்கு. முடிவில் நிறைய எண்ணையில் பொரித்தெடுக்கும் விஷயமாக இல்லாமல் 1மே.க எண்ணையில வதக்கி.... அருமை. மிக்க நன்றி மகி!
பிடிச்சிருக்கு! எனக்கும் உங்க பதிவுகள் எல்லாமே பிடிச்சிருக்கு:)
ஹையோ இதை என்னால நம்பவே முடியவில்லை, அழகாக செய்திருக்கிறீங்க, ஆனா நினைச்சுப் பார்க்கவே பச்சைக் கச்சல் கைக்குமே என மனம் எண்ணுது மகி.
ReplyDeleteபொரிப்பதனால் கைப்பிருக்காதாக்கும்.
Would love to try this some time..
ReplyDeleteமிதிபாகல் ரொம்பவே கசப்பா இருக்குமே.ஆனால் நல்லதுன்னு சொல்லுவாங்க.இந்தக்காயை நான் இங்கு பார்த்ததேயில்லை.குட்டிகுட்டியா அழகா இருக்கு. குறிப்பும் படங்களுடன் விளக்கமாக உள்ளது. ஸ்டீம்பன்னி ஃப்ரை பன்னியதும் வித்தியாசமா இருக்கு.பகிர்வுக்கு நன்றி மகி.
ReplyDeleteNice pictures and descriptions Mahi, will try it soon:)
ReplyDeleteகுட்டி ஆ சூப்பர் ஆ இருக்கு ஸ்ட்ஃப்ட் பாவற்காய் பக்கத்துல மீன் பாகக்காயா ?அதுவும் அழகா இருக்கு
ReplyDeletehealthy & tasty version ..love it..:)
ReplyDeleteTasty Appetite
யம்மா,பாகற்காயில் இத்தனை வேலை செய்து சமைத்து சாப்பிட கொடுத்து வைக்கனும்.லக்கி ஃபெல்லொ :)!
ReplyDeleteLooks delicious, but the bitterness.....
ReplyDeleteசெய்திருப்பதும், முறையும் ரொம்ப நன்றாக இருக்கிறது. நான் செய்வதானால் துளி புளிப்பு சுவையும் அதில் கலந்துதான் செய்வேன். கசப்பு இருந்தால் புளிப்பு அதைக் குறைத்துவிடும். இந்த வார்த்தை என் அனுபவத்துடையது. பாகற்காய் ரொம்பவும் பிடித்த காய். உன் முறையும் அடுத்து செய்ய வேண்டியதுதான்.
ReplyDeleteபாகற்காயை இப்படி சமைக்கையில் கசப்பு அவ்வளவாகத் தெரியாது. குறைவாகவே இருக்கும், பெரிய பாகற்காயில் செய்யலாம் என்றே நினைக்கிறேன், நான் இதுவரை முயன்றதில்லை. செய்து பார்த்தால். சிரமம் பார்க்காம வந்து ஒரு வார்த்தை சொல்லுங்கள்! :)
ReplyDelete@சிவா, //// ம்-வெங்காயத்தின் இனிப்பு ///????இனிப்பு??------->ஆமாம் சிவா, இங்கே நான் உபயோகித்திருக்கும் வெங்காயம் "yellow onion" இது இனிப்பாகத்தான் இருக்கும். பொதுவாகவே பெரிய வெங்காயம் (சின்ன வெங்காயத்துடன் ஒப்பிடுகையில்) கொஞ்சம் இனிப்புச் சுவையுடையதுதானே! :)
@இளமதி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சி. /ஒவ்வொருமுறையும் மகியின் புதியபதிவு என்றவுடன் ஓடிப்போய் பார்க்க வேண்டுமென்ற ஆவலைத்தரும் வகையில் தொகுப்பு & விளக்கத்துடன் மிக அருமையாக இருக்கிறது./ ஆஹா, அப்படியே ஐஸ் மழையில் நனைஞ்சதுபோல ஜில்ல்ல்ல்ல்ல்-லுன்னு இருக்குங்க! ரொம்ப தேங்க்ஸ்! :)
நேரம் கிடைக்கையில் கருத்துக்கள் தர முயற்சியுங்கள்! நன்றி!
@காமாட்சிம்மா, தக்காளி சேர்த்தாலும் நன்றாக இருக்கிறது. நீங்க சொன்னதுபோல் புளி சேர்த்தும் செய்து பார்க்கிறேன் அம்மா! நன்றி!
~~
இந்த முறை எல்லாருக்கும் தனித்தனியே பதில் தர முடியவில்லை, கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்!
:)
~~