Tuesday, September 18, 2012

கிக் கிக் கீ...கிக்கீ...கீ!

இன்று நீங்கள் சந்திக்கப் போகும் நபர் - கோயமுத்தூரில் வசிக்கும் ஒரு அழகான கிளி!!
..
...
..... வெயிட்
...வெயிட், "மகி-யைத் தான் எங்களுக்கு பலநாளாத் தெரியுமே"ன்னு நீங்க சொல்வது எனக்கு கேட்குது, நன்றி, நன்றி! ஹிஹி!! ;) ;) :) ஆனா இன்று வந்திருப்பவர் நிஜமாலுமே அழகான ஒரு பச்சைக் கிளிங்க. கொய்யாப் பழம் சாப்பிடுவது எப்படின்னு உங்க எல்லாருக்கும் சொல்லித் தரப் போறாராம்.

வீட்டுக் கொல்லையில் இருக்கும் கொய்யா மரத்தில் பழங்களை ருசிக்க கிளிகள் வரும் என்று அம்மா சொல்லியிருந்தார்கள். மொட்டை மாடியில் காற்று வாங்கப்போனபோது எதிர்பாராத ஒரு நாளின் காலையில் "கிக் கிக் கீ.." கேட்டது. எட்டிப் பார்த்தால் கொய்யாக் கிளையில் ஊஞ்சல் ஆடியவாறு அமர்ந்திருந்தார் இந்தக் கிளியார்.

சட்டென்று கீழே வந்து காமெராவுடன் மாடிக்குச் சென்று ஆசை தீருமட்டும் போட்டோவும் வீடியோவும் எடுத்த பின்னர் கிளியார் பறந்துவிட்டார்.

ஹலோ, எக்ஸ்கியூஸ்மீ கிளி, கொஞ்சம் முகத்தைக் காட்டுங்க... :)

கழுத்தில் மாலை( அந்த வட்ட வடிவக் கோடாம்!) இருந்தால் அது மாலைக் கிளி, மாலையில்லாமல் ப்ளெய்ன் ஆக இருந்தால் அது தென்னங் கிளி என்று ஒரு நட்பூ புதுத் தகவலும் தந்தார். ஆனால் நான் பார்த்தவரை கிளிகள் எல்லாம் கழுத்தில் மாலையுடன் இருந்ததாகத்தான் நினைவு. இந்தக் கிளியாரும் மாலைக் கிளியார்தான். ஆசை ஆசையாக அவர் கொய்யாவை ருசித்ததைக் கண்டதும், நானும் எட்டிப் பார்த்தேன், இன்னுமொரு பழம் கண்ணில் பட்டது..

சட்டென்று இறங்கி வந்து...
ஒன்றுக்கு நான்காக கொய்யாப் பழங்கள் பறிச்சாச்சு. :)
.கிளி ரேஞ்சுக்கு, கொய்யாக் கிளையில் ஒற்றைக் காலில் அமர்ந்து ஒய்யார ஊஞ்சல் ஆடியபடியே பாதிப் பழத்தை ருசித்து, மீதிப் பழத்தை கீழே துப்பியபடி ஸ்டைலாக சாப்பிட்டீங்கன்னாலும் சரி, அல்லது சாதாரணமாச் சாப்டீங்கன்னாலும் சரி, என்ஜாய்!



~~

ஹேப்பி பர்த்டே டு ஆனைமுகன்..அவர் பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் அன்பான விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!


23 comments:

  1. ஹையா !! முதல் கொய்யா எனக்கே ...வாங்க இமா கிரி அம்முலு நாமெல்லாம் உப்பு மிளகா தொட்டு சாப்பிடலாம் .

    ReplyDelete
  2. ஒரு கிளி நிச்சயம் இன்னொரு கிளியை தேடி வந்திருக்கு ..ரொம்ப அழகா இருக்கார் கிளியார் ..
    மெட்ராஸ்ல எங்க வீட்டுளும் இதே வகை கொய்யா மரம் இருக்கு மகி
    ஆனா எங்களுக்கு சாப்பிட ஒன்னு கூட விட மாட்டாங்க அணிலார்களும் கிளியார்களும் குயிலார்களும் ..
    நான் அவங்கள ரசிப்பதிலேதான் இருந்தேனே தவிர காமிரா வில் சிறைபிடிக்க மறந்திட்டேன்

    ReplyDelete
  3. ஆஹா.. கிளியாரும் கொயாவும் அழகோ அழகு. எங்கள் ஊர் வீட்டை நினைவு படுத்தி விட்டீங்கள். எங்கள் வீட்டிலும் இப்படித்தான் கொய்யா மரங்கள் உண்டு... மஞ்சள் பல்ப் பூட்டியதுபோல பழுத்திருக்கும் அங்காங்கு.

    அங்கு கிளி வருவதைக் காணவில்லை, அணில்தான் வருவார்.

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. Very beautiful. Seeing a parrot after a long time.

    ReplyDelete

  5. அட கொய்யாக்காய்
    பக்கத்துக்கு வீட்டில் ஆட்டைய போட்ட நியாபகம் எல்லாம் வருதே....:)
    கொய்யா பழம் மட்டும் எல்லை இலைகளும் மருந்தாம் ..

    ReplyDelete
  6. அந்த நோக்கிய மொபைல் N1100 இன்னும் இருக்கா ..GOOD MOBILE..

    ReplyDelete
  7. கிளி,கொய்யாமரம் படம் போட்டு ஊர்ஞாபகம்தான். எங்க வீட்டிலும் மரம் இருக்கு. கூட்டமாக வருவார்கள்.கிளிகள் கொய்யா சாப்பிடும் அழகோ அழகு.அவர்கள் ஒருவரை ஒருவர் ஏசி,பேசி(அவர்கள் பாஷையில்) அணில்களுடன் சண்டை பிடித்துக்கொண்டு, நாள் முழுதும் ரசிக்கலாம்.
    வீட்டு வாசலில் அழகான‌ கோலம்.மிக நன்றாக இருக்கு மகி.
    உங்களுக்கும்,உங்க குடும்பத்தவர்களுக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. ஊர் நினைவுகளை ரொம்ப அழகாக படங்அக்ளுடன் பகிர்ந்துள்ளீர்கள் மகி.

    ReplyDelete
  9. விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்..வாசலில் கோலம் மகி போட்டதோ...கிளியும், கொய்யாவும் கொழு கொழுன்னு இருக்கு.

    ReplyDelete
  10. இங்க மும்பைல எங்க மகன் வீட்ல சுத்திவர பாதாம் மரங்கள்தான் அதில பூராவும் கிளிக்கூட்டம்தான் பாதாம் கடிப்பதும் கொஞ்சிவிளையாடுவதும் தினசரி ரசிக்கவெண்டிய காட்சிகள் ஆனா இலைக்கும் கிளிகளுக்கும் ஒரெ பச்சைக்கலர் எது கிளி எது இலைன்னே வித்யாசம் இருக்காது போட்டோ எடுத்தாகூட கிளி தனியெ தெரியவே மாட்டெங்குது

    ReplyDelete
  11. ;(((((((

    //கொய்யாக் கிளையில் ஒற்றைக் காலில் அமர்ந்து ஒய்யார ஊஞ்சல் ஆடியபடியே// இல்ல. அவருக்கு கால்ல ஏதோ ஆக்சிடண்ட் ஆகிருக்கு மகி. பாவமா இருக்கு. ;( ஃபோட்டோல பார்த்தப்பவே யோசிச்சேன். சோம்பல் முறிக்க இப்புடி புடிப்பாங்க. ஆனா... வீடியோ பூரா... ஹ்ம்! எனக்கு ஜூலி நினைப்பு வருது. ;(

    பத்திரமா பார்த்துக்கங்க.

    ReplyDelete
  12. நோக்கியாவை நோக்கினால்... பெயரொன்று தெரிகிறதே!!! ;)

    கோலம் அழகு. பிள்ளையார் சுழி!! சங்கு!! மீதி பற்றி விபரம் ப்ளீஸ். என் ஃபேவரிட் பிள்ளையாருக்கு ஹாப்பி பர்த்டே.

    ReplyDelete
  13. wow... nalla rasanai mahi ungaluku... migavum rasithu padithen n parrot arumai azhagu...
    HAPPY VINAYAGAR CHATHURTHI TO YOU AND YOUR FAMILY..... Today: My Glass Painting of Vinayagar
    VIRUNTHU UNNA VAANGA

    ReplyDelete
  14. Very beautiful post, the parrot too..

    ReplyDelete
  15. மகி! என் கண்ணை கவ்வீடிச்சு உங்க கிளி!
    பச்சைகிளின்னா அப்படி ஒரு பச்சை, அழகா இருக்கார். பழம் கொத்தி கொத்தி சாப்பிடும் அழகோ அழகு.

    இப்படி எம் கண்ணுக்கும் கருத்துக்கும் ஊர்லதான் விருந்து இருக்குங்க.
    முதல் காட்டின மயிலும் இப்ப காட்டியிருக்கும் கிளியும் பார்த்திட்டே இருக்கலாம். மனசுக்கு அத்தனை சந்தோஷமா இருக்கு:))

    ஆனா இமா சொன்னதுபோலவே பாவம்க இவருக்கு கால்லை அடிபட்டிருக்கு:(. ஆனாலும் ஒத்தக்காலிலையே பாலன்ஸ் தப்பாம ஊனிக்கொண்டு கொய்யாவை சாப்பிடும் அழகு தனிதான்:)

    பகிர்வுக்கு மிக்க நன்றி மகி!

    ReplyDelete
  16. ம்,ஜாலியா எஞ்ஜாய் பன்றீங்க.வீடியோ சூப்பரா இருக்கு.

    ReplyDelete
  17. கிளி அழகா இருக்கு... மயில் பார்த்தாச்சு... கிளி பார்த்தாச்சு.. அடுத்தது என்ன மகி ?

    ReplyDelete
  18. கிளியாரின் காலை கவனித்தேன், ஆனால் உங்கள் அளவுக்கு விசனப் படாமல் "காலை இப்படியாக்கினாலும், கிளியாரை அழகாக guide பண்ணி கவனித்துக் கொள்வார் அந்த ஆண்டவன்" என்ற நம்பிக்கையில், "டேக் இட் ஈசி! "-யாக எடுத்துக் கொண்டேன் இமா & இளமதி! :)


    லஷ்மிம்மா, இங்கும் பாதாம் மரம் இருக்கிறது, பாதாம் பழ சீசன் முடிந்துவிட்டதால் கிளியார் கொய்யாப் பழம் உண்ண வந்திருக்கிறார்.


    சிவா,நோக்கியா போன் இன்னும் இருக்கு! எனக்கு ரொம்ப பிடித்த போன் அது! :)


    கருத்துக்கள் தந்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  19. மகி !!! பல்லாங்குழி படம் டேஷ் போர்ட்லருக்கு ஆனா இங்கே இன்னும் கிளியார்தான் கீச் கீச்னு பழம் சாப்பிட்டுக்கொண்டு இருக்கார்

    ReplyDelete
  20. கிளியும் பகிர்வும் அருமை..

    கிளிகொஞ்சும் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  21. அன்பின் மகி - கிக் கிக் கீ...கிக்கீ...கீ! அருமை - படங்களும் விளக்கங்களும் காணொளியும் கண்டு மகிழ்ந்தேன் - கோவையில் வசிக்கும் கிளியாரை அறிமுகம் செய்தது நன்று. கொய்யாவும் நன்று - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails