Tuesday, September 25, 2012

பல்லாங்குழி..தாயம்..பரமபதம்! :)

 இவை எல்லாமே நாம் சிறு வயதில் விளையாடி இப்பொழுது கிட்டத்தட்ட மறைந்துவரும் விளையாட்டுக்கள்! சிலநாட்கள் முன் என் தோழி வீட்டிற்குச் சென்றபோது அங்கே இருந்த பல்லாங்குழியும், தாயக் கட்டையும், குட்டீஸ்-களிடம் இருந்து கடன் வாங்கிய பரமபத-கட்டமும் ஒரு ஞாயிற்று கிழமையை மனப் பேழையில் சேமித்துக் கொள்ளும் வகையில் இனிய நினைவுகளாக ஆக்கிவிட்டன.  விளையாடிக் கொண்டே கொறிக்க வேக வைத்த கடலைக் காயும், சோளக் கருதுகளும் சூப்பராக ஜோடி சேர்ந்து கொண்டது கட்டாயம் நீங்க எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்! ஹாஹா!

எங்க வீட்டில் இருந்த பல்லாங்குழி மீன் வடிவில் இருக்கும், அழகாக வளைந்த இரு மீன்கள். [இப்போது எங்கயோ..ஓ..ஓ ஒரு பெட்டிக்குள் பத்திரமா இருக்குன்னு அம்மா சொல்றாங்க. ;)]
இங்கே படத்தில்  இருப்பதும் மீன் வடிவ பல்லாங்குழிகள்தான். ஆனால் இவை straight -ஆன மீன்கள். நாங்கள் புளியங் கொட்டைகளை வைத்துத்தான் விளையாடுவோம், தோழி வீட்டில் திருச்செந்தூரில் வாங்கிய வெள்ளைச் சோழிகள் வைத்திருந்தாங்க.

இது ஈரோடு ஸ்டைல் விளையாட்டு...எல்லாக் குழிகளிலும் ஆறு-ஆறு சோழிகளாகப் போட்டு ஆன்டி -க்ளாக்வைஸ் டைரக்ஷனில் விளையாடுவது. :) ஆட்டத்தின் விதிமுறைகள் எனக்கே சரியாக விளங்கவில்லை..அதனால், இதுக்கு மேல எதுவும் டவுட்டு கேட்டுராதீங்க என்று அட்வான்சா சொல்லிக்கறேன்! :)




எங்க வீட்டுப் பக்கம் விளையாடுவது ஒவ்வொரு புறமும், நடுவில் ஒரு குழியை விட்டுவிட்டு, மற்ற  குழிகள்ல   பன்னிரண்டு காய்கள் போட்டு கிளாக்-வைஸ் டைரக்ஷனில் விளையாடுவது. காலியாக இருக்கும் குழியின் பெயர் "காசிக் குழி"...அதில் பொதுவாக காய்கள் சேர்ந்து கொண்டே இருக்கும், ஆட்டத்தில் இடையில் யாரவது ஒரு ஆள் "காசி அடித்தால்" (விளையாடிக் கொண்டே வருகையில் காசிக் குழியின் இடப்பக்க குழி காலியாக இருக்கும் போது விளையாடுபவரின் கையிலும் காய் இல்லை என்றால், காலிக் குழியைத் தொடச்சு, காசிக் குழி-யை அடிச்சுக்கலாம்! :) ) அந்த ஆட்டம் முடிந்தால் காசிக் குழி அவருக்குச் சொந்தம் ஆகி விடும்.


இந்த இடத்தில் நீங்க ஒரு டவுட்டு கேக்கோணும், கேக்கலைன்னா, நான் சொல்றது உங்களுக்குப் புரிலைன்னு அர்த்தம்! :) விளையாடும் ஆட்கள் ரெண்டு பேரும் ஒரே காசி அடிச்சிட்டா என்ன பண்ணுவது -அப்படின்னு நீங்க கேக்கலை..அதுக்காக நான் சொல்லாம இருக்க முடியுமா? ;)
குழியில் இருக்கும் மொத்த சோழிகளையும் ரெண்டா பங்கிக்க வேண்டியதுதேன்! ;) அப்புறம்,காலியான  குழிகளில் ஆறு சோழிகள் சேர்ந்தா அதன் பெயர் "பசு", அதை நாமே எடுத்துக்கலாம்!....சரி,சரி..இந்தாங்க, பஞ்சு..dual பர்ப்பஸ்!! காதில் வடியும் ரத்தத்தை துடைச்சுக்கலாம்,அல்லது காதையே அடைச்சுக்கலாம்..சாய்ஸ் இஸ் யுவர்ஸ்! ;)

பல்லாங்குழி-யை நாங்க பேச்சு வழக்கில் "பாண்டிங்குழி"-ன்னு சொல்லுவோம். கோடை விடுமுறையில் ஆட்கள் நிறைய பேர் இருந்தா நாலு பேர் சேர்ந்து விளையாடுவதும் உண்டு. ஆளுக்கு மூணு-மூணு குழிகள்..ஆட்டம் விறுவிறுப்பா போகும். :) தனியே ஒரு ஆள் மட்டும் விளையாடும் ஆட்டமும் உண்டு. அதன் பெயர் "சீதைப் பாண்டி". அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதை தனியே விளையாடிய விளையாட்டு, அதனால் இந்தப் பெயர் என்று சொல்வாங்க.

ஒகே...ரொம்ப மொக்கை போட்டாச்சு இன்னிக்கு, இதோட ஸ்டாப் பண்ணிக்கலாம்! தாயம் விளையாட தாயக்கட்டம் ரெடியாகிட்டே இருக்கு...,


அதையும் பரபதம் ஆடுவதையும் அடுத்த பதிவில் பார்ப்போம். டென்ஷன் ஆகாம இந்த இனிப்பை சாப்பிட்டுக்கோங்க..
 

29 comments:

  1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீ ட 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:))

    விரைவில் மீண்டும் வாறேன்ன்ன்..

    ReplyDelete
  2. ஊரில ரிலாக்ஸா, சந்தோஷமா இருக்கீங்க என்று நீங்க விளையாடும் விளையாட்டைப்பார்த்தாலே தெரியுது. நல்ல சந்தோஷமா இருந்து அம்மாவின் கையால் சாப்பிட்டு வாங்க மகி.இந்த விளையாட்டெல்லாமா இன்னும் விளையாடுறாங்க. இப்படியான விளையாட்டுக்கெல்லாம் மறந்து வருகிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு கூட இருக்குது கூடுதலா கிராமப்புறத்தில் இவ்விளையாட்டுக்கள் இருக்கும் என நினைக்கிறேன்.பல்லாங்குழி கட்டை மீன் வடிவில் அழகா இருக்கு.
    நீங்க அழகாக விளக்கம் கொடுத்திருக்கிறீங்க.

    ReplyDelete
  3. மகி பல்லாங்குழி அழகா இருக்கு... எங்க வீட்டுல கூட பல்லாங்குழி பித்தளை -ல இருக்கு. மொதல்லையே கமெண்ட் போட்டு பாக்ஸ் புல்லா dry குலாப் ஜாமுன் மொத்தமா எடுத்துக்காலம்னு பார்த்தேன்... :(

    ReplyDelete
  4. ஹையோ என்ன அழகா இருக்கு அந்த மீன் வடிவமும்.. சோகியும்.. சூப்பர்ர்..

    எனக்கு பல்லாங்குழி எல்லாம் தெரியாது... ஸ்நேகாவும் பாட்டும்தான் நினைவுக்கு வருது.

    நீங்க நல்லா வெளாடுங்கோ மகி.. மயில் ஆட்டம், கிளிக்கூத்து... சூப்பர்மர்கட்டு.. இப்போ பல்லாங்குழியா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    ReplyDelete
  5. ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பா.. அஞ்சுவுக்கு ஏதோ பிரச்சனையாம்... மகிவீட்டு செக்கியூறிட்டிக் கார்ட் உள்ளே வர அனுமதிக்கேல்லையாம் அவவை.. :)) பின்னே.. பூஸிட பொயிங்கலைப் பார்த்து பேயாசமோ எனக் கேடால் ஆர்தான் உள்ளே விடுவினம் சொல்லுங்கோ:)))...

    மகீஈஈஈஈஈஈ கெதியா வந்திடுங்க:)).. தாமதித்தான்ன்.. இங்கின எங்களை எல்லாம் ஹை கோர்ட்டிலதான் மீட் பண்ணுவீங்க ஜொல்லிட்டேன்ன்:))..

    ஹையோ மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்பூஊஊஊஊஊஊ.. கொய்யாப்பூஊஊஊஊஊஊஊ:))

    ReplyDelete
  6. பல்லாங்குழி சத்தியமா இது எனக்கு வெளாட:)) தெரியாது ஸோ நான் டவுட்டு எல்லாம் கேக்க ஆரம்பிச்சேன் அந்த டிஷ்யூவ நீங்க யூஸ் பண்ணிக்க வேண்டி வரும் உங்க காது ரத்தத்த தொடைக்க:))

    ReplyDelete
  7. //விளையாடிக் கொண்டே கொறிக்க வேக வைத்த கடலைக் காயும், சோளக் கருத்துகளும் சூப்பராக ஜோடி சேர்ந்து கொண்டது கட்டாயம் நீங்க எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்//

    ரொம்ம்ம்ப முக்கியம்மம்ம்ம்ம் கர்ர்ரர்ர்ர்ர்

    ReplyDelete
  8. //இந்த இடத்தில் நீங்க ஒரு டவுட்டு கேக்கோணும், கேக்கலைன்னா, நான் சொல்றது உங்களுக்குப் புரிலைன்னு அர்த்தம்! :) //

    எனக்கு முன்னே வந்த பூசே டவுட்டு கேக்கலே ஸோ யாருக்கும்ம்ம் பிரியலேன்னு நெனைக்குறேன் மகி வீடியோ போட்டு கிளாஸ் எடுத்தீங்கன்னா தான் எங்கள மாதிரி விம் பாருக்கு எல்லாம் வெளங்கும்:))

    ReplyDelete
  9. //ஒகே...ரொம்ப மொக்கை போட்டாச்சு இன்னிக்கு, இதோட ஸ்டாப் பண்ணிக்கலாம்!//

    ஆகா என்ன நல்ல மனசு உங்களுக்கு. இந்த மாதிரி மொக்கையும் போட்டு சுவீட்டும் வாங்கி கொடுக்குறீங்களே. பூஸ் first வந்தாலும் சுவீட் எனக்கே எனக்கா பூசுக்குத்தான் சுவீட் புடிக்காதே.

    ReplyDelete
  10. //பூஸிட பொயிங்கலைப் பார்த்து பேயாசமோ எனக் கேடால் ஆர்தான் உள்ளே விடுவினம் சொல்லுங்கோ:)))...//

    என்னாது பூஸ் பொயிங்கல் செஞ்சாங்களா அய்யய்யோ மகி அவங்க பக்கம் போயிடாதீங்கோ ஓஓஓ :)) எஸ்கேப் ப்ப்ப்ப் :))

    ReplyDelete
  11. நானும் கூட இந்த பல்லங்குழி பரமபதம் ஆட்டங்கள் பத்தி ஒரு பதிவு போட்டிருக்கேனே பாத்தியோ மஹி

    ReplyDelete
  12. பழைய காலத்தை நினைவுக்கு கொணர்ந்துவிட்டீர்க்ள்,

    ReplyDelete
  13. Really nice games mahi.. i went to my past.

    ReplyDelete
  14. Thanks very much for your valuable comments Dear friends! :)

    ReplyDelete
  15. ஊரில் ஆடுகிற ஆட்டத்திற்கு அளவில்லாமல் போய்விட்டது,இதைக் கேப்பார் யாருமில்லையா? இனி தெருவில் பாண்டி விளையாட வேண்டியது தான் பாக்கி.
    எல்லாம் ஓவர் புகையினால் தான்...

    ReplyDelete
  16. ஹாய் மஹி
    நான் ஜேமாமி
    நலமா?
    பல்லாங்குழி ஆட்டம் பதிவு அருமை.
    இன்னும் நிறைய மறந்து போன விளையாட்டுக்கள் பற்றி எழுதுங்க.

    ReplyDelete
  17. அப்படியே என் ப்ளாக் 'manammanamviisum.blogspot.com' கிற்கு ஒரு விசிட் அடியுங்க மஹி.

    ReplyDelete
  18. ஒரு டவுட்டு... சோளக் கருத்து எந்த அங்கிள் தோட்டத்துல சுட்டது!! ;)))

    என் தோழி வீட்ல இருந்துது பாண்டிக்குழி. இப்படி மடிக்கிற மாதிரி இல்லை அது. ஓவல் ஷேப்ல இருக்கும். வெற்றுக்குழி இரண்டும் இரண்டு ஓரங்களில் இருந்ததாக ஞாபகம். ஒழுங்கா விதிமுறைகள் கேட்டு சொல்லுங்க மஹி. ஒன்று செய்துவைக்க ஆசை.

    பூஸை மட்டும் விளையாடக் கூப்பிடாதைங்க. புளியங்கொட்டை எல்லாம் சுட்டுச் சாப்பிட்டுத் தீர்த்துருவார்.

    ReplyDelete
  19. அன்புள்ள மஹி,

    உங்களது இந்தப் பதிவு பற்றி இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.

    இன்னொரு surprise அங்கே!

    வருகை தருக, ப்ளீஸ்!

    http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_10.html

    நன்றி!

    ReplyDelete
  20. அன்பின் மஹி

    பல்லாங்குழி பற்றி எழுதி என்னுடைய மலரும் நினைவுகளைத் தூண்டி விட்டீர்கள் - அசை போட்டு மகிழ்ந்தேன் - எத்தனை ஆண்டுகள் - 50 ஆண்டுகட்கு முன்னர் ஆடிய ஆட்டம். நல்ல படங்களுடன் நல்ல விளக்கங்களுடன் எழுதப் பட்ட பதிவு - நல்வாழ்த்துகள் மஹி - நட்புடன் சீனா.

    ReplyDelete
  21. பல்லாங்குழி குறித்த நல்லதொரு பதிவு. நம்முடைய பாரம்பரிய விளையாட்டுக்களைக் குறித்த பதிவு எனும் போது இன்னும் முக்கியமாகிறது. இளமையில் அக்காக்களுடன் விளையாடித் தோற்றிருக்கிறேன்.

    ReplyDelete
  22. //சோளக் கருத்து // Imma,spelling mistake has been corrected now! Infact, I was checking whether you are reading the post correctly or not! ;) ;)

    சோளக் கருது came from my friend's neighbours house! :)
    ~~
    Thanks a bunch for all the friends who took their time to read and add their comments on this post! :) :)

    Special thanks to Ranjani madam for introducing me in Valaicharam.

    ReplyDelete
  23. நல்ல கதை! அதெல்லாம் கண்ணில பட்டுதே. நாங்கள் கருதும் இல்ல கருத்தும் இல்லாமல் கதிர் தான் சொல்லுவோம். இது உங்கட மண்வாசனையாக்கும் என்று அப்பிடியே தட்டினேன்.

    ReplyDelete
  24. ஒன்னும் சத்தத்தையே காணோம்!வந்த களைப்பு? / வருவதற்கான ஏற்பாடு? /வின்(ட்)டர் முடிந்து வருவதாக உத்தேசம்? எதுன்னு தெரியல.

    ReplyDelete
  25. மகி, தங்களின் பல்லாங்குழி தாயம் பற்றிய பதிவுகளை படித்துப் பார்த்தேன். கலக்கலாக எழுதி இருக்கிறீர்கள். தாயம் மிகவும் அற்புதமான விளையாட்டு. இரண்டு மூன்று மணி நேரம் வரை முன்பு சலிக்காமல் விளையாடுவோம். ஆனால் என் மகள் (ஏழு வயது) காய்களை வெட்டி விட்டால், அழுதுவிடுகிறாள் :((. அதனால் விளையாடுவதில்லை. சில நாட்கள் கழித்து முயற்சிக்க வேண்டும். Trouble என்கிற போர்டு கேம் கிட்டத்தட்ட ஒருவகை தாயம் மாதிரி தான் இருக்கிறது. முயன்று இருக்கிறீர்களா?

    ReplyDelete
  26. Troubles-இதுவரை நான் கேள்விப்பட்டதில்லைங்க. இங்க போர்டு கேம் விளையாடும் அளவுக்கு கம்பெனி இல்லை! :) ஊருக்குப் போயிருந்தபொழுது விளையாடியதுதான்! அங்கே என் தோழியின் மகள்(6 வயது) உங்கள் மகளைப் போலதான், பல்லாங்குழியில் தோற்றால் அழுவாள், அதனால முடிவில்லாம கண்டினியஸா, போரடிக்கும்வரை விளையாடினோம்! :)) இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும் சரியாகிருவாங்கன்னு நினைக்கிறேன்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

    ReplyDelete
  27. இந்த விளையாட்டை வீடியோவாக பதியமுடியுமா..இதில் சில சந்தேகங்கள் இருக்கிறது. நான் தஞ்சாவூர். எங்களி ஊர் பக்கத்தில் இப்படி விளையாடுவதில்லை. நீங்கள் முதலில் சொன்னதுப் போல் விளையாடுவோம்.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த முறை ஊருக்கு வரும்போது வீடியோ எடுக்க முயற்சிக்கிறேன். தற்போதைக்கு வீடியோ இணைக்க வாய்ப்பில்லைங்க. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! :)

      Delete

LinkWithin

Related Posts with Thumbnails