சந்தைக்கு போலாம் வாங்க- என்று சிலமாதங்களின் முன்பு ஒரு பதிவு வெளியிட்டபொழுது, கோவை சந்தையை எதிர்பார்த்து ஏமாந்து போன நட்புக்களுக்காக எங்களூரின் இந்த வார சந்தையின் சில காட்சிகள், இந்தப் பதிவில்!
கோவை வந்து இரண்டு திங்கட் கிழமைகளை தவறவிட்டு, இந்த வாரமும் இருள் கவியும் மாலை நேரத்தில்தான் சந்தைக்குச் செல்ல நேரம் கூடி வந்தது. சூரியன் மேற்கில் இறங்கும் வரை கிடைத்த வெளிச்சத்தில் எடுத்த சில படங்கள் இவை.
ப்ளாஷ் அடிக்கும்போது ஒரு நொடி பக்கென்று பயந்து, பிறகு காமராவை கவனித்து கண்டுக்காம:) சென்ற பொது ஜனங்கள் பல பேர்!
எதுக்கு போட்டோ எடுக்கறீங்க? என்று என்னிடமும், உடன் வந்த அக்காவிடமும் கேட்டு தெளிவு:) பெற்று, இதழில் நெளியும் புன்னகையுடன்
சென்ற பொதுஜனங்கள் சிலபேர்!
சந்தையில் பல கடைகளில் காய்கள் சிறு சிறு பகுதிகளாக பிரித்து விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன. இப்படி விற்பதற்கு "கூறு" கட்டி விற்பது என்று சொல்வார்கள்.
ஒரு கூறு ஐந்து ரூபாய், சில காய்கள் ஒரு கூறு பத்து ரூபாய். இதையெல்லாம் நன்றாக பாத்து வாங்கவேண்டும். சொத்தை காய்களை நைசாக உள்ளே வைத்து, மேலாக நல்லா காய்களை வைத்து நம் தலையில் கட்டப் பார்ப்பார்கள்! :)
விளக்கு வெளிச்சத்தில் பளபளக்கும் தக்காளிகள்..
பொழுது சாயும் வேளை என்பதால் சந்தையில் அலைமோதும் கூட்டம், கீரை வகைகள், கறிவேப்பிலை-கொத்துமல்லி-புதினா விற்கும் கடைகள், ஊசி பாசிக் காரர்களின் கடைகள், மளிகைப் பொருட்கள் விற்கும் கடைகள் என்று ஜே-ஜே ன்னு இருந்த சந்தையை என் திருப்திக்கு படமெடுக்க இயலாமல் வானம் இருள் கம்பளம் கவிழ்த்து மறைத்துக் கொண்டது.
சந்தைன்னா முதலில் நினைவு வருவது பொரிதான். பலாப் பழத்தை ஈ மொய்ப்பது போல, பொரிக்கடையில் மனிதக் கூட்டம்! பொரி போட்டு தரும் பிளாஸ்டிக் கவர் தரம் குறைவாக இருப்பது காரணமாக எதோ சர்ச்சை இருக்கிறது போலும். போட்டோ எடுத்ததும் ஜெர்க் ஆன பொரிக்கடைக்காரர் அப்புறமா "போட்டோ எடுத்து என்னை போலீஸ்-ல பிடிச்சு குடுக்கப் போறீங்களா மேடம்?" - என்று காமெடி பண்ண ஆரம்பித்தார்.ஹாஹா! :)
பொரியுடன் கலந்து சாப்பிட நிலக் கடலை, பொட்டுக் கடலை, பூந்தி, மிக்சர் என்று ஒரு மினி ஸ்நாக் பார் வைத்திருந்தார் பொரிக்கடையில்.
கீழே உள்ள படத்தில் பொரிக்கு இந்தப் பக்கம் இருப்பது "வர்க்கி". கர கர மொறு மொறு என்று ஜூப்பரா இருக்கும். பல்லில்லாத பாட்டிகள் கூட டீயில் நனைத்து வாயில் போட்டால் நழுவிக் கொண்டு வயித்துக்குள்ள போயிரும்! :)
சந்தையில் சுத்தியடிச்ச களைப்புத் தீர பொரியும் வர்க்கியும் சாப்பிடுங்க. இந்த வர்க்கிக்கு ரெசிப்பி பல நாட்களாக இணையத்தில் தேடுகிறேன், கிடைக்கவில்லை. யாருக்கும் கிடைத்தால் சொல்லுங்களேன், நன்றி!
யப்பப்பா..மெனகெட்டு போட்டோ எடுத்து அதனை பதிவாக்கி விருந்தளித்த மகிக்கு ஒரு ஓஓஓஓஓஒ...இப்படி காட்சிகளெல்லாம் பார்த்து எவ்வளவு நாட்களாகிற்று.?
ReplyDeleteகோவை செல்லும் உறவினர்கள் பேக்கரியில் வர்க்கி வாங்கி வருவார்கள் செம் சுவையாக இருக்கும்.அது இப்ப சந்தியில் கூட கிடைக்கின்றதா?சந்தைபார்க்க வேண்டி கோவை வரணும் போல் இருக்கு.
ReplyDeleteஸாதிகா அக்கா, சந்தையில் நான் பொரி மட்டும்தான் வாங்கினேன், வர்க்கி எப்படி இருக்கும் என்று தெரிலை. ஆனா பேக்கரிகள்-ல வர்க்கி சும்மா செம சுவையா இருக்கும். நெய் வர்க்கி-ஊட்டி வர்க்கி இப்படி பல பேர்களில் கிடைக்கும். :)
ReplyDeleteபதிவை வெளியிட்ட உடனே படித்து கருத்துக்கள் பதிந்தமைக்கு மிக்க நன்றி அக்கா!
மகி நலமா?
ReplyDeleteசந்தைய பார்க்கும்போது எங்க ஊர் சந்தை ஞாபகம் வந்துவிட்டது. கமரா கொண்டுபோனேனன். ஆனா எடுக்க பயத்தில எடுக்காமல் வந்துவிட்டேன்.ஆமிகாரர்கள் பக்கத்தில பலாப்பழம் வாங்கிகொண்டிருந்தார்கள்.
பெரிய சந்தையா மகி.?மினி ஸ்நாக் பார் கடைய பார்க்க.ம்ம்ம் பெருமூச்சுதான்.
நல்லா என்ஜாய் செய்யுங்க.
பன் dryயா இருந்தா மாதிரி இருக்குமே அதைதான் வர்க்கின்னு சொல்றீங்களா மகி....கூறு போட்டு எங்க ஊர் சந்தையிலும் விற்பாங்க மகி.அதோட தமிழ் மருத்துவ மூலிகைகளும் விற்பாங்க.
ReplyDeleteSemma post Mahi... Enaku enga ooru (Salem) santhai nybagathuku varuthu... Athulan naan school padikum pothu ponathu :) Thanks for this wonderful post...
ReplyDeletehttp://recipe-excavator.blogspot.com
ப்ரியா, வாங்க! நலம், நலமறிய ஆவல்! :)
ReplyDeleteஓரளவு பெரிய சந்தை தாங்க! பகலில் போயிருந்தா இன்னும் இன்ட்ரஸ்டிங் படங்கள் எடுத்திருக்கலாம். :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
~~
ராதாராணி, வர்க்கி பன்-ஐ விட சின் சைசில் இருக்கும். கருக் மொருக்னு flaky -யா கொஞ்சூண்டு இனிப்பா டேஸ்ட்டியா இருக்கும். முடிந்தால் சீக்கிரம் வாங்கி, படமெடுத்து போடறேன், வெயிட் பண்ணுங்கோ! ;)
இங்கயும் நாட்டு மருந்துகள் கிடைக்கும். A டு Z எல்லா பொருட்களுமே கிடைக்கும்னு வைங்களேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
~~
அருமையான சந்தை பதிவு மகி. படங்கள் எல்லாமே அருமை. நான் வர்க்கி சாப்பிட்டதில்லே பட் படத்த பார்க்கும் போது வாய் ஊறுது உங்க பேக்கரியில் ரெசிபி கேட்டு போடுங்களேன்.
ReplyDeleteஊரில் சந்தோஷமா சுத்தி பார்த்திட்டு சீக்கிரம் ஊருக்கு திரும்புங்க இல்லேன்னா உங்க வீ.காரர் சமையல்ல கில்லாடி ஆகி அருண் ஸ்பேஸ் ன்னு ஆரம்பிச்சிட போறார்:))
புகைப்படமும் விளக்கமும் நல்லா இருக்குங்க... நன்றி...
ReplyDeleteArumai:-)
ReplyDeletenice post Mahi. Enjoyed the stroll inside the market with you :) thanks for the pori, kadalai :p
ReplyDeleteமஹி உங்க ஊரு சந்தை நல்லா இருக்கே. அதையும் போட்டோ எடுத்து ரசிக்க வைத்ததர்க்கு நன்றி
ReplyDeletewow i was stayed in cbe for 3 years, but now only heard about sandhai mahi... in which place is this mahi?
ReplyDeleteVIRUNTHU UNNA VAANGA
Naan indha mathiri sandhaikku ponnuthillai Mahi, thanks for sharing this, would love to visit some thing like this sometime..
ReplyDeleteஉங்க ஊரு சந்தை அருமை. போட்டோ எடுத்தா, ஏதாவது மிஸ் உஸ் பண்ண போறாங்கனு, சண்டைக்கு வருவாங்க.... பரவைல்லையே நீங்க சந்தைக்கு போய் போட்டோ எல்லாம் எடுத்து வந்து இருக்கீங்க.
ReplyDeleteநாங்க கோவை வரும்போது, ஊட்டி போய் இருக்கும் போது கூட வரிக்கி வாங்கி ருசிச்சு பார்த்தோம். சூப்பராக இருந்தது....
ஆஆஆஆஆ மகி... உங்க ஊர் சந்தையோ? சூப்பரா இருக்கு. பார்க்கப் பார்க்க ஆசையா இருக்கும். இன்னும் பகல்ல போய் கீரை, மரக்கறிகள் அதிகம் படமெடுத்திருக்கலாம்.
ReplyDeleteஎன்ன இது புதுஷாப் புதுஷா பெயர் சொல்றீங்க வர்கியா?
ReplyDeleteநான் இன்னும் அகர் அகரே ஒழுங்காச் செய்து முடிக்கேல்லை:).
Nice photos. Veggies look fresh and nice. When are you coming back??????
ReplyDeleteஆத்தா சந்தைக்கு போனா,வர்க்கி வாங்கினா,பொரி வாங்கினா..அருமையான பகிர்வு.
ReplyDeleteஉங்க ஊர் சந்தை இரவு வரைக்கும் இருக்குமா! திருவிழாபோல் உள்ளது. படங்களைப் பார்த்ததும் ஊரில் இருப்பது மாதிரியே இருக்கு. பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி.
ReplyDeleteசந்தைக்கு போவதோடல்லாமல் மலிவா கிடைக்கிறதென்று வேண்டியவாளுக்கு வாலண்டியரா வாங்கிக் கொடுப்பதும் உண்டு.உங்க ஊரு சந்தை களைகட்டிண்டு நன்னா இருக்கு. அது என்ன வர்க்கி.
ReplyDeleteஎனக்கும் தெறிஞ்சிக்கணும். கண்டுபிடிச்சு சொல்லு.
சூப்பர் மகி எங்க ஊர்லயும் திங்கள் கிழமை தான் சந்தை. ஜாலி ஆ இருக்கும் .உள்ள போய் ஷாப்பிங் முடிச்சிட்டு வெளிய வரவே ரொம்ப நேரம் ஆகிடும் .
ReplyDelete//போட்டோ எடுத்து என்னை போலீஸ்-ல பிடிச்சு குடுக்கப் போறீங்களா மேடம்//
ReplyDeleteஅச்ச்சோ... அவருக்கு நீ போலி எழுத்தாளர்னு தெரியலியா ...:)