Thursday, October 25, 2012

சுலைமானி / மசாலா டீ

இது நாகர்கோயிலைச் சேர்ந்த என் தோழி ஒருவர் செய்து காட்டியது. கேரளாவின் வடக்குப் பகுதியில் இந்த "சுலைமானி also known as மசாலா டீ" மிகவும் பிரபலம். ஹெவியான உணவுக்குப் பிறகு இந்த சுலைமானியைக் குடித்தால் வயிற்றுக்கு மிகவும் நல்லது, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்று உபாதைகளுக்கும் இந்த சுலைமானி நல்லதொரு தீர்வாம். வெளிநாட்டில்/வெளியூரிலிருந்து ஊர் திரும்பும் ஆட்களை ரிசீவ்  பண்ண ஏர்போர்ட் போகையில் இந்த சுலைமானியை ஃப்ளாஸ்க்கில் ஊற்றி எடுத்துச் செல்வார்களாம் அவங்க ஊரில். களைப்பைப் போக்கி புத்துணர்வைத் தரும் இந்த சுலைமானி செய்முறையை பார்க்கலாமா? :)

தேவையான பொருட்கள்

தண்ணீர் - 3 கப்
ஏலக்காய்-6
இஞ்சி ~~4" துண்டு ( கட்டைவிரல் அளவுள்ள இஞ்சித்துண்டு)
டீத்தூள் - 11/2 டீஸ்பூன்
சர்க்கரை - 3டீஸ்பூன் (ருசிக்கேற்ப)

செய்முறை
பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கவும். நீர் நல்ல சூடானதும் ஏலக்காயைத் தட்டிப் போடவும். இஞ்சியையும் நன்றாக நசுக்கி  நீருடன் சேர்த்து கொதிக்கவிடவும்.

தண்ணீர் கொஞ்சம் சுண்டி இஞ்சி சாறு  தண்ணீரில்  இறங்கியதும் டீத்தூள் சேர்க்கவும்.
டீத்தூள் சேர்த்த பிறகு நிறைய நேரம் கொதிக்கவிடக் கூடாது..ஓரிரு நிமிடங்கள் ஆனதும், இனிப்புக்கேற்ப சர்க்கரை சேர்த்து கலந்து, 

டீயை  அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டவும்.
சுலைமானி aka மசாலா டீ ரெடி!
இந்த டீ சட்டென்று சூடு ஆறிவிடும், அதனால் வடிகட்டியதும் சூடாகப் பருகவும்.  அதே போல டீத்தூளும் அதிகமாய் போடக்கூடாது. நம்ம ஊர் டீ என்றால் மூணு கப்புக்கு அரை டீஸ்பூன்- ஒரு டீஸ்பூன் போட்டாலே போதுமாம். நான் உபயோகிப்பது Tetley டீ என்பதால் கிட்டத்தட்ட ஒண்ணரை டீஸ்பூன் போடவேண்டி இருந்தது. இந்த டீயை நல்லா சுருக்குன்னு குடிச்சா தொண்டைக்கு இதம்மா இருக்கும்! :)
(சுருக்குன்னு - சூடாக... இது எங்கூரு பாஷைங்கோ! :)))


20 comments:

 1. சுலைமானி மசாலா டீ குடிச்சு ஃப்ரெஷாக கமெண்ட் போட வந்துட்டேன்

  ReplyDelete
 2. மகி நலமா? நல்லதொரு மசாலா டீ சொல்லியிருக்கிறீங்க. இஞ்சி டீ குடித்திருக்கோம். இனிமேல் ஏலக்காயும் சேர்த்து போட்டிட வேண்டியதுதான்.
  அழகான ரிங்.

  ReplyDelete
 3. Real healthy tea !!! Love it Mahi...
  http://recipe-excavator.blogspot.com

  ReplyDelete
 4. இந்த மழைக்காலத்திற்கு அருமையாக இருக்கும்...

  நன்றி...

  ReplyDelete
 5. தனி இஞ்சி டீ அல்லது தனி ஏலக்காய் டீதான் போடுவேன். ட்ரை பண்ணிரலாம். ஆனா... கல்லு மோதிரம் போடாம சக்கரை போட்டா கரையுமா!

  ReplyDelete
 6. சுலைமானி டீ ..!!!! இப்பவே போடபோறேன் ...
  நாங்க தனித்தனியே தான் செய்து குடிதிருக்கோம் ஏலக்கா இஞ்சி சேர்த்து செய்வது இப்பதான் தெரியும் ..

  ReplyDelete
 7. ம்ம்ம் தொண்டைக்கு இதமான ப்ளாக் டீ...

  ReplyDelete
 8. //சுருக்குன்னு - சூடாக... இது எங்கூரு பாஷைங்கோ! :))//
  appadi podu ammani...:)

  ReplyDelete
 9. அவ்வ்வ்வ் பெயரைப் பார்த்ததும் என்னவோ ஏதோ எனப் பயந்தே போயிட்டேன்ன்ன்ன்ன்... இதுதான் நாங்க அடிக்கடி செய்யும் இஞ்சி பிளீன் ரீ... ஆனா ஏலக்காய் சேர்ப்பதில்லை, இதில சேர்த்திருக்கிறிங்க... ட்ரை பண்றேன்ன்...

  இப்போ எந்தப் பிரச்சனை வரினும்.. இருக்கவே இருக்கு “கிரீன் ரீ” ஒரு கப் குடித்தால்.. எல்லாமே போயே போச்ச்ச்ச்:))...

  அவ்வ்வ்வ்வ் பிங் கல்லு மோதகம்:))

  ReplyDelete
 10. மசாலா டீ இந்த மாதிரி போட்டு குடிச்சதில்லை. இஞ்சி டீ எங்க வீட்டில் அடிக்கடி போடுவேன். ஊரில் த்ரீ ரோசெஸ் அதிமதுரம் டீ தூள் கிடைக்குது. அதுவும் நல்லா இருக்கும்.

  பிங்க் மோதகம் :)) ஊரில் இருந்து புதுசா ??

  ReplyDelete
 11. நான் எப்போதும் இஞ்சி டீ, அல்லது ஏலக்காய் டீ என்று தனியாக செய்வதுண்டு என் ஆ.காரருக்கு. இரண்டும் கலந்து செய்ததில்லை. அடுத்த முறை ட்ரை பண்றேன்.

  ReplyDelete
 12. Great for the cold weather..

  ReplyDelete
 13. மகி! அருமையான ரீ. எப்படி இதை தவறவிட்டேன்ன்ன்.....:(

  எல்லோரும்போலவே ஏலக்காய், இஞ்சியை நானும் தனித்தனியேதான் போட்டு ரீ செய்திருக்கேன். சில சமயங்களில் சுக்குபவுடர் அதை ஏலக்காயுடன் சேர்த்து இதுபோல் செய்வதுண்டு. பகிர்வுக்கு மிக்க நன்றி!

  நான் இங்கு வர தாமதமானதற்கு அதிராவுக்கு கர்ர்ர்ர்ர்:)))

  ReplyDelete
 14. ஓ...இது தான் மசாலா டீயா? இதை நாங்க இஞ்சி டீன்னு சொல்வோம்.... இதோடு ஒண்ணு,ரெண்டு கிராம்பு, பட்டை ஒடித்து போட்டால் மசாலா டீன்னு சொல்வோம்.... டீயில் கிராம்பு பட்டையான்னு பார்க்காதீங்க.... செய்து பாருங்க...நல்லாஇருக்கும் :))

  ReplyDelete
 15. //நான் இங்கு வர தாமதமானதற்கு அதிராவுக்கு கர்ர்ர்ர்ர்:)))//

  இப்போ பாருங்கோ என்பக்கம் இணைச்சிட்டேன்ன் எல்லோரையும்:)

  ReplyDelete
 16. அருமை.மகி, இதே முறையில் டீத்தூள் பதில் டிப் டீ ஒரு பேக் போட்டு சுலைமானி செய்து பாருங்க கடுக்காமல் சூப்பராக இருக்கும்.

  ReplyDelete
 17. கீதா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  லஷ்மிம்மா, ப்ரெஷ்ஷா கமென்ட் போட்டதுக்கு நன்றி!
  அம்முலு, //அழகான ரிங்.// ப்ரெண்ட் கிட்ட சொல்லிடறேன்!:)
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
  சங்கீதா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  தனபாலன் சார், ஆமாங்க செய்து தரச்சொல்லி குடிச்சுப் பாருங்க, நன்றி!
  இமா,//கல்லு மோதிரம் போடாம சக்கரை போட்டா கரையுமா!// நல்ல கேள்வி! ;) கேட்டுச் சொல்றன், வெயிட் பண்ணுங்க ஒரு மாசம்! :))) நன்றி இமா!
  ஏஞ்சல் அக்கா, எனக்கும் ஒரு கப் அனுப்பலாம்ல? :) இந்த மாதிரி டீ எல்லாம் யாராவது போட்டுத் தந்தா நல்லா இருக்கும், அவங்கவங்களே போட்டு குடிக்க போர்! ;)
  வருகைக்கும் கருத்துக்கும், ருசித்து படத்துடன் சொன்னதுக்கும் நன்றிகள்!
  மேனகா, நன்றிங்க!
  அப்பாவி, தாங்க்ஸம்மிணி! :)

  ReplyDelete
 18. //“கிரீன் ரீ” ஒரு கப் குடித்தால்.. எல்லாமே போயே போச்ச்ச்ச்:))...// எல்லாமே?! :)) எனக்கு இப்படி கலர் கலர் டீ எல்லாம் புய்க்காது அதிராவ்! அதிலும் பர்டிகுலரா இந்த க்ரீன் டீ...ஆள விடுங்கோ! :))
  /அவ்வ்வ்வ்வ் பிங் கல்லு மோதகம்:))/ ஆங்!! உங்களுக்குத்தான் பச்சைக்கல்லு மோதகம்:) இருக்கே, அப்புறம் என்ன? அவ்வ்வ்வ்வ்!
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றீ அதிராவ்!

  கிரி, //ஊரில் த்ரீ ரோசெஸ் அதிமதுரம் டீ தூள் கிடைக்குது.// த்ரீ ரோஸஸ்ல மசாலா டீ-னு குடிச்சிருக்கேன், அதிமதுரம்-ரேஞ்சுக்கு கவனிக்கலைங்க! :) இது நல்லா இருந்தது, நீங்களும் ட்ரை பண்ணுங்க!
  /பிங்க் மோதகம் :)) ஊரில் இருந்து புதுசா ?? / கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! படம் பார்த்து கமென்ட் போடும் கிரிஷா:) டவுன்,டவுன்! ஒயுங்கா போஸ்ட்ட முதல்ல இருந்து படிங்கோ!
  நன்றி கிரி!
  வானதி, ட்ரை பண்ணிப் பாருங்க, நல்லா இருக்கும்! நன்றி வானதி!
  ஹேமா,தேங்க்ஸ்ங்க!
  இளமதி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! நீங்க போட்ட போட்டில அதிராவ் ப்ளாகைச் சரி பண்ணீட்டாங்களாம்! :) அதுக்கும் சேர்த்து நன்றி! :))
  பானு, பட்டை-கிராம்பு போட்ட டீ நானும் கேள்விப் பட்டிருக்கேன், ஆனா யாராச்சும் செய்து குடுத்தா ட்ரை பண்ணலாம்,ஹிஹி!
  தேங்க்ஸ் பானு!
  அதிராவ், தாங்க்ஸ் எகெய்ன்!
  ஆசியாக்கா, டிப் டீ-யா?? ம்ம்ம்...நல்ல டிப்ஸ்தான்! தேங்க்யூ! :)

  ReplyDelete
 19. wow குளிர் நேரத்தில் இப்படித்தான் டீ போடுவேன், சிலசமயம் இஞ்சிக்குப் பதில் 2 கிராம்பும் பட்டை(cinnamon) போடுவேன், கொஞ்சமாய் :)

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails