Friday, October 19, 2012

ஹோம், ஸ்வீட் ஹோம்!

இரண்டு மாதம் கோவையில் இருந்துவிட்டு கிளம்பும் நாள் வந்ததும், வானத்துக்கே பொறுக்காமல் இடி இடித்து, மின்னல் கொட்டி முழக்கி, மழைக்கண்ணீர் விட்டு அழுது என்னை வழியனுப்ப...
சென்னை வந்திறங்கி, ஏர்போர்ட் வந்த அன்புள்ளங்களுடன் சிலமணி நேரம் செலவிட்டபிறகு, மீண்டும் தன்னந்தனியே...

 
 பயணித்து, ஒரு வழியாக ஊர் வந்து சேர்ந்தாகிவிட்டது.
ஹோம், ஸ்வீட்ஹோம்! :)

/////போன தடவை ஒரு மாசம் இருந்ததுக்கே மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி சுத்திகிட்டு கவிதை எல்லாம் எழுதி எல்லாரையும் சோகமா ஏங்க வெச்சீங்க. இந்த தடவை ரெண்டு மாசத்துக்கு மேல இருந்திட்டு வந்து என்னெல்லாம் பண்ண போறீங்களோ :)) வி ஆர் waiting ///// இப்படி ஒரு (வா)சகி ஈமெயில்ல ஆர்வமா  கேட்டிருக்காங்க!! :):):)

ஆனா பாருங்க, ஆசை  தீர ஊரில் இருந்துவிட்டு வந்ததால எல்லாரையும் சோகமா ஏங்க வைக்கற அளவுக்கு எழுத சரக்கு தேறாது! விருந்தாளிகள் வருவதால் அடுத்த வாரம் வரை கொஞ்சம் பிஸீ..அதுக்குள்ள என்னென்ன ஆகப்போகுதோ, பொறுத்திருந்து பார்ப்போம், சரீங்களா?! :))))))))

21 comments:

 1. ஹைய்யா :))) என் தங்கச்சி வந்தாச்சி :))))

  வெல்கம் மகி ..

  ReplyDelete
 2. வாங்க மகி.வந்த களைப்பு தீர விட்டு, பதிவுகள் போடுங்கள்.

  ReplyDelete
 3. 2 varatil ellamey nalla aahividum

  ReplyDelete
 4. ஹையா!!! ;)))
  _()_ வந்தனம் வெல்come.
  //அதுக்குள்ள என்னென்ன ஆகப்போகுதோ, // வேறென்ன ஆகும்! ஷாப்பிங் போவீங்க. மாவு, தக்காளி, கத்தரி என்று வாங்கி ஃப்ரிஜ்ல நிரப்புவீங்க. விட்டுட்டுப் போன மாதிரி எல்லாம் சரியான இடத்துல இருக்கா என்று செக் பண்ணுவீங்க. கமண்ட்டுக்கு எல்லாம் பதில் போடுவீங்க. திரும்ப காமராவை தோள்ல மாட்டிட்டு ஊருலா அல்லது சமையலறைக்குள் நுழைஞ்சிருவீங்க. பிறகு பாவம்... வாசக எலிகள். ;D

  ஒரு வாரம் விருந்தாளிகள் என்றால்... நிறைய ரெசிபியோட வரப் போறீங்க. ரெடி நாங்க. ;)

  ReplyDelete
 5. சாரி. ;( ஒரு திருத்தம்.... மாவு ப்ரிஜ்ல வைக்க மாட்டீங்க. ;)

  ReplyDelete
 6. ஆஆஆவ்வ்வ்வ் என் பக்கம் கண்ணை வச்சிருந்ததால.. அமெரிக்காவில ரொனாடோ வந்திறங்கியதை:) மீ கவனிக்காம விட்டுப்புட்டேனே:)) வெல்கம் பக்கு:))

  ReplyDelete
 7. எண்டைக்குமே நம்மட ஹோம்தான் நமக்கு சுவீட் ஹோம்:) அதை ஆராலும் மாத்த முடியாது... தூசு தட்டியாச்சா?:)).. கதவைத் திறந்து உள்ளே வரும்போது என்னடா வாழ்க்கை இது தனிமையில் என ஒரு டிப்பிரெஸ்ட் வரும்:)) ஆனா ஒரு நாளில் எல்லாமே நோர்மலாகிடும்...

  பழையபடி கலக்குவோம் வாங்கோ...

  ReplyDelete
 8. welcome back Mahi. We all waiting to see u'r Deepawali sweet recipes and snacks. Mother made recipes is welcome.

  ReplyDelete
 9. Welcome back Madam. Now I have someone with me to fight with poosar.

  ReplyDelete
 10. ம்ம் எல்ல்லாருக்குமே ஊரை விட்டு வந்ததும் இப்படி தான் இருக்கும், அப்படியே ஏதோ காட்டில் வந்து தனியாக உட்கார்ந்த மாதிரி இருக்கும்

  ReplyDelete
 11. //வி ஆர் waiting ///// இப்படி ஒரு (வா)சகி ஈமெயில்ல ஆர்வமா கேட்டிருக்காங்க!! :):):)//

  யார் அந்த வாசகி ????? வெல்கம் பாக் மகி. எப்படியும் நெறைய விஷயம் வெச்சு இருப்பீங்க வீ ஆர் waiting :))

  ReplyDelete
 12. //Now I have someone with me to fight with poosar.//

  வான்ஸ் இதனால தான் இவ்ளோ நாள் ஒளிஞ்சு இருந்தீங்களா? பூச கண்டு அஞ்சா நெஞ்ச தலைவி இப்புடி பயப்புடலாமா ???? கம் ஆன் யா :))

  ReplyDelete
 13. vanathy said...
  Welcome back Madam. Now I have someone with me to fight with poosar.
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  ReplyDelete
 14. //
  En Samaiyal said...
  //Now I have someone with me to fight with poosar.//

  வான்ஸ் இதனால தான் இவ்ளோ நாள் ஒளிஞ்சு இருந்தீங்களா? பூச கண்டு அஞ்சா நெஞ்ச தலைவி இப்புடி பயப்புடலாமா ???? கம் ஆன் யா :))///

  இப்பூடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமாக்கிடுவாய்ய்ய்ங்க:))

  ReplyDelete
 15. வாங்க மகி,இங்கே எப்பவுமே ஒரு கை குறையுது,அப்பாடா! கவிதையோ கதையோ கட்டுரையோ வீடியோவோ எதையாவது போட்டு அசத்துங்க...வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 16. சூட்கேஸும்,ஹேன்ட்பேகும் தன்னந்தனியே கிடப்பதைப் பார்த்தால் பாவமாத்தான் இருக்கு. ஆனாலும் எங்கு போய் சுற்றினாலும் நம் வீட்டிற்கு வரும்போது அதுவும் ஒரு சுகம்தான்.

  ReplyDelete
 17. Welcome back Mahi.

  உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
  http://enrenrum16.blogspot.com/2012/10/blog-post_18.html

  ReplyDelete
 18. கருத்துக்கள் தந்து அன்புடன் வரவேற்ற அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

  இனிவரும் நாட்களில் எல்லாருக்கும் தனித்தனியே பதில் தரவும், எல்லார் வலைப்பூக்களிலும் கருத்துக்கள் தரவும் இயலுமென்று நம்புகிறேன். :)

  தொடர்பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி பானு, சீக்கிரம் வந்து என்னன்னு பாக்கிறேன்! ;)

  ReplyDelete
 19. Too bad we couldn't meet this time. But you can't escape forever ammani. One day....:)))

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails