~~~
பொதுவாக தாயம் பரமபதம் இவற்றில், தாயக் கட்டையில் அல்லது பகடையில் ஒன்று (தாயம்) விழுந்ததும்தான் ஆட்டம் ஆரம்பிக்கும். தாயம் விழும் முன் என்ன நம்பர் விழுந்தாலும் கணக்கில்லை. 2-3-4 இவற்றில் ஏதாவதொன்று விழுந்தால் நம்ம டர்ன் முடிந்துபோகும். எதிராளி தாயக்கட்டை உருட்ட ஆரம்பிப்பார்.முன்பெல்லாம் பரமபதம் பெரீய்ய பேப்பரில் பெரிய ஏணிகள் மற்றும் பாம்புகளோடு இருக்கும். இப்பொழுது மாடர்னைஸ் ஆகி, "snakes and ladder" என்ற பெயரோடு, சிரிக்கும் பாம்புகள்:) மற்றும் ஏணிகளுடன் வருகிறது. தாயக்கட்டைக்குப் பதிலாக பகடை ஒன்று தருகிறார்கள், கூடவே கலர் கலராக ப்ளாஸ்டிக் காய்களும் தருகிறார்கள்.
மொத்தம் நூறு கட்டங்கள் இருக்கும் இந்த விளையாட்டில், கூடவே ஆங்காங்கே பாம்புகளும் ஏணிகளும் பரவிக் கிடக்கும். பகடை/தாயக்கட்டையை உருட்டி, தாயம் விழுந்ததும் விளையாட்டு ஆரம்பிக்கும். பகடையில் விழும் எண்ணிக்கைக்கேற்ப நமது காயை நகர்த்தி வைக்கணும். பாம்பின் தலை இருக்கும் இடத்தில் சென்று சேர்ந்தா அம்புட்டுதான், கடி வாங்கி, இறங்கி பாம்பின் வால் இருக்கும் கட்டத்துக்கு வந்துவிடுவோம், அது போல நாம் சேரும் இடத்தில் ஏணி இருந்தால் ஜாலியா ஏறி, மேலேஏஏஏஏயும் போகலாம். முதலாம் கட்டத்தில் ஆரம்பிச்சு, இறுதியில் இருக்கும் நூறாவது கட்டத்தை வெற்றிகரமா சென்று சேரும் முதலாவது ஆளே ஜெயிப்பாங்க.
கூட விளையாடிய ஆட்கள் இருவரும் பாம்புகளிடம் கடி வாங்கி சர்ரென்று பலகட்டங்கள் கீழ இறங்குவதும் குட்டி ஏணிகள் மூலம் கொஞ்சமாய் படியேறி சிலகட்டங்கள் மேலே வருவதுமாய் இருக்கவும், மடமடன்னு மேலே ஏறிகிட்டு இருந்த எனக்கு நல்லா உற்சாகமா இருந்தது. கிட்டத்தட்ட 50 கட்டங்கள் தாண்டியதும்தான் கெட்ட நேரம் ஆரம்பிச்சது, அதோ, படத்தில பச்சைக்கலரா ஒரு பெரீஈஈஈய்ய ஆள் இருக்காரு பாருங்க, அவர்கிட்ட கிட்ட கடி வாங்கினேன், அதுக்குப் பொறகு தட்டுத் தடுமாறி ஒரு வழியா செஞ்சுரி அடிச்சுட்டோம்னு வைங்க. [அதாரது, "எத்தனாவது ஆளா செஞ்சுரி அடிச்சீங்க?"ன்னு கேக்கறது?? கர்ர்ர்ர்ர்ர்ர்!! அந்த ப.பா-- என்ற ஃப்ரெண்டுதான், சொல்லிக் குடுத்துருவேன், போட்டோலேருந்து நேரா உங்க மானிட்டர்-ல வந்து சீறும், ஜாக்கிரத! ;) ;) :)))]
சிம்பிள் கேமா இருந்தாலும், நிறைய ஆட்கள் சேர்ந்து விளையாடுகையில் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். நம்ம ஏணில ஏறலைன்னாலும், மத்தவங்க கடி வாங்கறதைப் பார்க்கையில் ஒரு ஆனந்தம்! :)))) அப்படியே சோளக் கருது, வேவிச்ச கள்ள தின்னுட்டே ஒரு ஞாயித்துக் கெழம சாவகாசமா வெளயாடிப் பாருங்க, அப்பத்தான் அந்த ஆனந்தத்தை அனுபவிக்க முடியும், ஹாஹ்ஹா! :)
~~~
தாயக்கரம் ரெடிமேடா கிடைக்குதா என்று தெரியலை, ஒரு பேப்பர்(மாத காலண்டரின் ஒரு ஷீட் சரியா இருக்கும்! :)) ஒரு ஸ்கேல், பென்ஸில் இருந்தா நீங்களே போட்டுரலாம்ல? அப்புறம் எதுக்கு கடைல தேடணும்? கரகரன்னு தாயக்கரம் வரைஞ்சாச்சு. விளையாட 4 பேர் ரெண்டு டீமாவும் உட்கார்ந்தாச்சு. ஒரு டீமுக்கு சோழி, ஒரு டீமுக்கு கல்லு-ன்னு ஆறாறு:) உருப்படி எடுத்து வைச்சு விளையாட ஆரம்பிச்சோம்.
இந்த விளையாட்டு நிறையப் பேருக்குத் தெரியும்னு நினைக்கிறேன்..இருந்தாலும் என்னோட மனதிருப்திக்காக கொஞ்சூண்டு சொல்லிடறேன். பொறுக்காத ஆட்கள் கமென்ட் பாக்ஸுக்கு தாவிருங்கோ! :)
நடுவில் ஒரு சதுரம், அதை மையமா வைச்சு, நாலு புறமும் நாலு செவ்வகங்கள். செவ்வகங்களை நீளவாட்டில் 3 கட்டமாகவும், அகலவாட்டில் ஆறு கட்டங்களாகவும் பிரிச்சுக்கணும். பெருக்கல் குறி போடப்பட்டிருப்பதெல்லாம் மலை-ன்னு சொல்லுவோம். இரு டீம் ஆட்களுக்கும் பொதுவான ஏரியா அது. அங்கே ஒருவர் இன்னொருவரை வெட்ட:) முடியாது. வெட்டறதுன்னா??! அப்படின்னு அவசரப் படக்குடாது யுவர் ஹானர், ஸ்டெப்-பை-ஸ்டெப்பாத்தான சொல்ல முடியும்?
மேற்கண்ட படத்தில அம்புக் குறி போட்டிருக்கும் டைரக்ஷன்ல விளையாட ஆரம்பிச்சு, எல்லாக் கட்டங்களையும் சுற்றி வந்து உள்ளே போகணுங்க. அப்படி சுத்தி வரும்போதே எதிராளியை அட்லீஸ்ட் ஒரு முறையாவது வெட்டிரணும், அப்பத்தான் பழமெடுக்கப் போலாம், இல்லன்னா சுத்தி சுத்தி வந்தீக-ன்னு சுத்திகிட்டே இருக்கவேண்டியதுதேன்! :)
இந்த வெட்டறது-வெட்டறதுன்னதும் ஏதோ திருப்பாச்சி அருவாள எடுத்துட்டு வெட்டறதுன்னு சில பேர் வெடவெடக்கறீங்க, டோன்ட் வொர்ரி யா! இது ஜஸ்ட் வெளாட்டுதான? பயப்புடக் குடாது, என்ன? ;)
அது ஒண்ணுமில்லீங்க, for example, நம்ம கல்லு வைச்சு வெளாடற டீம்னு வைச்சுக்கலாம். நம்ம ஆப்போஸிட் சைட் மலைல இருந்து, தாயம் போட்டு வெளியே வந்து, இறங்கி சுத்தி சோழி வைச்சிருக்க மலைப்பக்கமா வந்துடறோம். அந்நேரம் சோழி டீமும் தாயம் போட்டு வெளியே வராங்க, கரெக்ட்டா அவங்க சோழி வைச்சிருக்க இடத்தில நம்ம காய் போய் நிக்கற அளவுக்கு உங்களுக்கு தாயக்கட்டையில் நம்பர் விழுந்தா அம்புட்டுதான், கல்லு சோழிய வெட்டீரும், ஸேம் கதை வித் சோழி டீம்! வெட்டுப் பட்ட ஆட்கள் மறுபடி அவங்க ஆரிஜின் மலைக்குள்ள போய் உட்கார்ந்து, தாயம் போட்டு வெளியே வந்து மறுபடி சுத்தணும்! :)
எதிராளியை முடிந்த அளவு வெட்டி, நம்ம காயை வெட்டுக்குடுக்காம புத்திசாலித்தனமாச் சுத்தி நம்ம ஆரிஜின் மலைக்கு வந்து உள்ளே போகணும். உள்ளே போய் பழம் எடுத்துட்டா, ஆறில் ஒரு காய் குறையும். அதேபோல மீதி எல்லாக் காய்களையும் பழமாக்கணும்.
இந்த பழம் எடுக்கும் போது இன்னொரு இன்ட்ரஸ்டிங் ஈவன்ட் வரும். படத்தில வட்டம் போட்டு காட்டிருக்கேன் பாருங்க, அங்க வந்து காய் மாட்டிரும்! அதுக்குப் பேரு "டொக்கு"!!! :D :) அதாவது இனி ஒரு தாயம் போட்டாத்தான் பழம் ஆகும் என்ற நிலை! அந்நேரம் பார்த்து தாயமே விழுகாது...அவ்வ்வ்வ்வ்வ்வ்! :) ஆறு-அஞ்சு-பன்னண்டுன்னு விருத்தமா விழுகும், ஆனா ஒரே ஒரு தாயம் மட்டும் விழாது! நம்ம தாயத்துக்காக வெயிட் பண்ணிண்டே இருப்போம், எதிர் டீம் சுத்தி வந்து உள்ளே போய் பழம் எடுக்கற அளவு கூட டைமெடுக்கும் பார்த்துக்குங்க.
பரமபதத்தில் வந்து சேராத அதிர்ஷ்டம் தாயக்கரத்தில் வந்து சேர்ந்தது. சோழி டீமை வெட்டிச் சாச்சுப்புட்டு நாங்க ஜெயிச்சுப்புட்டோம்! :) விளையாட்டு விளையாட்டா இருக்கோணும், அடிதடில எல்லாம் இறங்கீரக் கூடாது. கையில கிடைச்சதை எடுத்து கம்பியூட்டர் மேல வீசாதீங்க!!...பரமபதம்-தாயம் பத்தி இவ்வளவு விரிவா எழுதியிருக்கேன், படிச்சுட்டு கமென்ட்
போடாமப் போனா தாயக் கட்டை உங்களோட 12 வருஷம் கோவிச்சுக்கும், அதனால
புடிச்சுதோ புடிக்கலயோ, ஒரு கமென்ட்டப் போட்டுட்டே கிளம்புங்க! எதுக்கும்
எச்சரிக்கையா இருக்கறது நல்லதில்லையா, என்ன நாஞ்சொல்றது? :))))))
~~~~
தாயக்கட்டை பற்றிய விளக்கத்துக்காக இந்தப் படம் பதிவோடு இணைக்கப்படுகிறது. :) தாயக்கட்டை வெண்கலம், மரம் அல்லது இரும்பு இதில் ஏதாவதொன்றால் செய்யப்பட்டிருக்கும். நான்கு பக்கங்களில் ஒரு பக்கம் ப்ளெய்னாகவும், ஒரு புறம் ஒரு புள்ளி, அடுத்த பக்கம் 2 புள்ளி மற்றும் மூன்றாவது பக்கம் 3 புள்ளிகள் இருக்கும்படி இருக்கும். இரண்டு தாயக்கட்டைகளை உருட்டும்போது பர்முடேஷன்-காம்பினேஷன் படி எண்கள் விழும்.
~~~~
..... அப்படியே சோளக் கருது, வேவிச்ச கள்ள தின்னுட்டே ஒரு ஞாயித்துக் கெழம சாவகாசமா வெளயாடிப் பாருங்க, அப்பத்தான் அந்த ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்.....
ReplyDeleteநல்லா அனுபவிச்சி எழுதி இருக்கீங்க.. உண்மைதான் இந்த விளையாட்டுக்கு வேற நொறுக்கு தீனி யெல்லாம் ஒத்துவராது.. வேப்பமர நிழல், வீட்டுத்திண்ணை, இங்க இருந்து விளையாடின்னால் ரொம்ப சுறுசுறுப்பா இருக்கும். சும்மா நக்கல் நையாண்டியுமா பொழுது நிமிஷத்தில ஓடியே போயிரும்.
ஆமா மஹி நானும் ஈரோடுக்கு போயிருந்தப்போ பரமபதம் பல்லாங்குழி கேரம் தாயக்கட்டம்னு ஆடிகிட்டே இருந்தேன் பெரனுடன் அதையும் பதிவாகவும் போட்டிருந்தேன் உனக்கு படம் தெரியலேன்னு சொரே என்ன ப்ராப்லம் தெரியலியெ
ReplyDeleteAfter long am seeing this game,pleasant memories...
ReplyDeleteநல்ல இருக்கே...... இப்ப அடிக்குற மழைக்கு இன்டர்நெட் பாவிக்க முடியாம வீட்டுல சும்மா இருக்கும் பொது பிடிக்குற பைத்தியத்த போக்க இது நல்ல வைத்தியம்
ReplyDeleteHa ha... Lovely post... :)
ReplyDeletehttp://recipe-excavator.blogspot.com
அதுவும் குழந்தைகளோடு போட்டி போடாமல், குழந்தையோடு குழந்தையாக விளையாடினால்... அந்த சந்தோசமே தனி...
ReplyDeleteரசனையான பகிர்வுக்கு நன்றி...
Good post
ReplyDeleteஆஹா ஸ்னேக்ஸ் அண்ட் லடேர்ஸ், லூடோ அனைத்தையும் நினைவு படுத்திட்டீங்க.... சின்ன வயதில் அதெல்லாம் ஒரு பைத்தியம்.
ReplyDeleteஇப்பவும் வீட்டில் இருக்கு, ஆனா பிள்ளைகளுக்கு பெரிதாக அதில் ஆர்வம் இல்லை.. இப்போ எல்லாமே.. ரீவி ஹேம்ஸ்க்கு முன்னேறி விட்டமையால்...
பரமபதம்.. புதுப் பெயர் இப்போதான் அறிகிறேன்.
En payyanukku paramapatham last week than solli kuduthen n he likes it a lot.... Ippa thayathaiyum nalla solli kudukka lam... Share pannathukku romba nandri....
ReplyDeleteEvent: Dish name starts with P
maranthu pona vilayatu...
ReplyDeleteபரமபதம் கேள்விப்பட்டிருக்கிறேன். இதுதான் அந்த விளயாட்டுன்னு இன்றைக்குதான் தெரிஞ்சுகொண்டேன். பாம்பும் ஏணியும் இப்பவும் எனக்குப் பிடித்த விளையாட்டு:)
ReplyDeleteஆனால் பாம்பிடம் கடி வாங்கினால் மனம் ரொம்பவே கஷ்டமாகிடும். அப்போது எனக்கது விளையாட்டாகவே தோணுவதில்லை. ஏன்னென்றால் பாம்புக்கும் எனக்கும் சின்ன வயதில் அப்படி ஒரு அட்டாச்;)) இப்ப நினைச்சாலும் .... வேணாம்.
தாயக்கரம் பார்த்ததோ விளையாடினதோ இல்லை. நம் ஊரில் தாயம், எட்டுக்கோடு அப்பிடின்னு வேற மாதிரி கட்டம் கீறி, விளையாட்டும் வேற மாதிரிதான் விளையாடி இருக்கிறோம்.
இதுவும் நன்றாக இருக்கும்போலுள்ளது.
ஆனால் அதகுக்கு தாயக்கட்டை இப்பிடித்தான் இருக்கோணுமோ. ஒரு கட்டையில் 4 பக்கத்திலும் பக்கத்திற்கொன்றாக 1,2,3,4 எண்ற எண்ணிக்கையில் போடவேண்டுமோ:) புரியவில்லை.....:)
தாயக்கட்டைக்கு மேலதிக விளக்கம் ப்ளீஸ்ஸ்.......:))))
பகிர்வுக்கு மிக்க நன்றி மகி.;)
உங்கள் கட்டுரை படித்ததும் பழைய நினைவுகள் முட்டி மோதிக் கொண்டு வந்தன.
ReplyDeleteஇரண்டு வருடம் முன் என் பேரன்களுடன் விளையாட ஸ்ரீரங்கத்தில் இருந்து பரமபதம், தாயக்கட்டை எல்லாம் வாங்கி வந்தேன்.
அருமையான படங்கள், விளக்கங்கள் என்று அசத்தி விட்டீர்கள் மஹி!
பாராட்டுக்கள்!
மலரும் நினைவுகள்..ஆஹா ! சுவாரசியப் பகிர்வு,இந்த விளையாட்டில் இவ்வளவு இருக்கா?
ReplyDeleteஇமா வராங்க விளையாட. ;)
ReplyDeletethanks Imma!:)
ReplyDeleteNow I can come and reply all the comments after lunch! ;)
முன்பு ஏஞ்சல் வருவாங்க விளையாட. இப்போ ;(
ReplyDeleteஎங்க ஆட்கள் மொனோபோலி ஆடுவாங்க. வேற புதுசு புதுசா என்னென்னவோ எல்லாம் வைச்சு இருக்காங்க. நான் போறது ஸ்ராபிள்ஸ் அல்லது 'பிக் அப் ஸ்டிக்ஸ்' என்றால் மட்டும். தாயக்கட்டைக்கும் எனக்கும் வெகு தூரம். ;(
எனக்குப் பிடிச்ச இன்னொரு விளையாட்டு இருக்கு. தனி போஸ்ட்டாக போடுறேன். :)
//தாயக்கட்டைக்கு மேலதிக விளக்கம் ப்ளீஸ்ஸ்.......:))))// இளமதி, மேலே படங்கள் இணைத்திருக்கேன், பாருங்க! இரண்டு தாயக் கட்டைகளை ஒன்றாக உருட்டணும், இரண்டிலும் விழும் புள்ளிகளை எண்ணி, அதற்கேற்ப தாயக்கட்டத்தில் காய்களை நகர்த்தணும்.
ReplyDelete12, 6, 5, 4, 3, 2, 1 (தாயம்) இவற்றில் ஏதாவது ஒரு எண் விழும். இதில் 12,5,6,தாயம் இவை விழுந்தால் ஆட்டம் தொடரும், இல்லன்னா எதிராளிக்கு டர்ன் போயிரும். எனக்குத் தெரிந்தளவு எளிமையா விளக்க முயற்சித்திருக்கேன், புரியுதுங்களா? இல்ல குழப்பிட்டேனா? ;) :)
நன்றி இளமதி!
~~
மற்ற கருத்துகளுக்கு பதில்கள் வார இறுதி கழிந்து! அதுவரை, நன்றிகள்! :)
~~
என் மகளுக்கு பாம்பு, ஏணி விளையாட விருப்பம். ஆனால் நான் ஒரு தரம் தாயம் உருட்டினால் அவர் 4 தரம் உருட்டி, பாம்பு நிற்கும் கட்டங்களை தவிர்த்து, ஏணியில் மட்டும் ஏறி 100 க்கு போய்விடுவா. நான் வென்றதாக சரித்திரம் இல்லை. மகளை ஜெயிக்க விட்டு, அவரின் சந்தோஷத்தை பார்க்கவே அடிக்கடி விளையாடுவதுண்டு.
ReplyDeleteஇது மட்டும் தான் நேக்கு தெரியும். மற்ற விளையாட்டுக்கள் தெரியாது.
மகி...:) ரொம்ப ரொம்ப நன்றி!
ReplyDeleteஅழகா படமும் பாடமும் நடத்தீட்டீங்க. நலாவே புரிஞ்சிடிச்சு.
தாயகட்டமும் விளையாட்டும் இன்ரஸ்டிங்கா இருக்கு. கட்டம் வரைஞ்சுக்கலாம். தாயக்கட்டை செய்யணும்.
செஞ்சிட்டு உங்க எல்லாருக்கும் சொல்லுறேன். வாங்க விளையாடிப் பார்த்துடலாம்..;))
மீண்டும் எனக்காக படம்போட்டு விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி..:)
//தாயக்கட்டை செய்யணும்.
ReplyDeleteசெஞ்சிட்டு உங்க எல்லாருக்கும் சொல்லுறேன். வாங்க விளையாடிப் பார்த்துடலாம்..;))//
Me ready:) .. are u ready?:))
Super post Mahi, I miss those metal dhaya kattai and its sounds :)
ReplyDeleteபல்லாங்குழி,தாயம் எப்படி விளையாடனும்னு யாராவது கேட்டால் இங்கு கைகாட்டிவிட வேண்டியதுதான்.நல்ல விளக்கம்.இங்கு வந்த புதிதில் Mancala ஐப் பார்த்ததும் நம்ம ஊர் தாயம் மாதிரி இருக்கேன்னு வாங்கினேன்.
ReplyDeleteதாயக்கட்டைகளைப் பார்த்ததும் பழைய நினைவுகள். இதை விளையாட எங்க வீட்டில் அனுமதியில்லை. இரண்டு வீடுகள் தள்ளியிருக்கும் எங்க பாட்டி வீட்டில் (அம்மாவின் அம்மா)விளையாடுவோம். விளையாட உட்கார்ந்தால் அவ்வளவுதான்,உலகமே மறந்துவிடும்.
ஹை,எங்க வீட்டிலும் வேர்க்கடலை சூடா அவிச்சு வச்சிருக்கேன்.லஞ்ச் முடிச்சிட்டு கொறிக்க.
ராதாராணி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! வெகு நாளைக்கப்புறம் இப்படி சாவகாசமா உட்கார்ந்து விளையாட சான்ஸ் கிடைச்சது. அதான்! :)
ReplyDeleteலக்ஷ்மிம்மா, உங்க ப்ளாகில போட்டோஸ் இருக்க இடத்தில கருப்பா ஒரு சதுரம் ஆச்சரியக் குறியுடன் இருந்தது. என்னன்னு தெரிலையே!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா!
ப்ரேமா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! பழைய நினைவுகளை அசைபோடுவதே ஒரு இனிமைதான்!
HajasreeN, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! நீங்க சொல்வது கரெக்ட்தான், கரென்ட் இல்லாத நேரங்களில் இப்படி பொழுதைப் போக்கலாம்! :)
சங்கீதா, தாங்க் யூ!
தனபாலன் சார், சின்னப் பசங்க கிட்ட தாயக்கட்டம் கடன் வாங்கினோம்னு சொன்னேன், அவங்ககூடதான் விளையாடினேன்னு சொல்லவேயில்லையே! ;) :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
சிநேகிதி,நன்றிங்க!
அதிரா, உங்க புண்ணியத்திலதான் லூடோ என்ற ஒரு விளையாட்டு இருப்பதை தெரிந்துகொண்டேன், ஹிஹி! உங்களுக்குப் பரமபதம் புதுசாய் இருக்கோ? அப்ப கணக்கு சரியாப் போச்!;) ;):)
ReplyDeleteஇந்தக்காலத்தில தாயக்கட்டம் விளையாடுவது அரிது! எங்கேயாவது ஓரொருவர்தான் அதிராவ் விளையாடறாங்க.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றீ அதிரா!
~~
அகிலா, உங்க பையனுக்குப் பிடிச்ச விளையாட்டா? சூப்பருங்க! ரொம்ப சந்தோஷம் உங்க கமென்ட் பார்த்து!
~~
ஸ்ரீவித்யா, ஆமாங்க..மறந்து போன நினைவுகளை கொஞ்சம் தூசி தட்டிப்பார்த்தேன்! :)
~~
இளமதி, சின்னவயசில ரொம்ப பயந்த சுபாவமா இருந்திருக்கீங்க! :) ரியல் பரமபதம் இன்னும் பெரிய பேப்பரில் இருக்கும். அப்பல்லாம் தாயம்தான் இன்ட்ரஸ்டிங்கா இருந்தது, பரமபதம் பக்கம் நான் திரும்பியதே இல்லை..மிஸ் பண்ணிட்டேன்!
நீங்க சொல்வது போல எங்கூர்ப்பக்கம் 7 கட்டங்கள் போட்டு இன்னொரு தாயக் கட்டம் விளையாடுவதும் உண்டு, அது பற்றி சரியாகத் தெரியாததால் நான் குறிப்பிடவில்லை.
//தாயக்கட்டை செய்யணும். செஞ்சிட்டு உங்க எல்லாருக்கும் சொல்லுறேன். // நிஜமாகவா சொல்றீங்க? எப்படி செய்வீங்க??!! நீங்க எந்த ஊரில இருக்கீங்க என்று கூட எனக்குத் தெரியாது, ஆனாலும் ஒரு க்யூரியாஸிட்டில கேக்கிறேன்! தாயக்கட்டை கடையில் வாங்குவதுதான் வழக்கம். அல்லது லேத் வைத்திருக்கும் இரும்பு பட்டறை ஆட்களிடம் சொல்லி செய்து தரச் சொல்வாங்க, நீங்க எப்படி??!!
நன்றி இளமதி!
~~
ரஞ்சனி மேடம், உங்க கருத்தைப் பார்த்து மிக்க மகிழ்ச்சியும், நன்றிகளும்! எனக்குத் தெரிந்த முறையில் விளக்கிட்டாலும், ரொம்ப எழுதிட்டனோ என்று பயந்துட்டு இருந்தேன்! ;) :)
நன்றீங்க!
~~
ஆசியாக்கா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
~~
இமா, நானும் மொனோபாலி விளையாடிருக்கேன். பிக்-அப்-ஸ்டிக்ஸ் பற்றி தெரிலை..சீக்கிரம் உங்க ஃபேவரிட் விளையாட்டு என்னன்னு எழுதுங்க, சஸ்பென்ஸா இருக்கு! :) ;)
நன்றி(14வது கமென்ட்டுக்கு) & நன்றி இமா!
~~
வானதி, குட்டீஸ் கூட விளையாடித் தோற்பது ஒரு சுகம்தான்! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்! ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானதி!
~~
/Me ready:) .. are u ready?:))/ மீயும் ரெடி அதிராவ்! ;):)
~~
ராஜி, அடுத்தமுறை ஊருக்கு போயிட்டு வரப்ப தாயக்கட்டை வாங்கிட்டு வந்துருங்க! :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி!
~~
சித்ராக்கா,mancala-வா? புதுப்புது விளையாட்டுகளா சொல்றீங்க எல்லாரும்!
எங்க வீட்டிலும் வீட்டுக்குள்ளே விளையாட அனுமதியில்லை, திண்ணைல / வாசல்ல உட்கார்ந்துதான் விளையாடுவோம். கோடை விடுமுறை முழுக்க நேரம் போவதே தெரியாமல் இருக்கும்!
லஞ்ச்-க்கு அப்புறம் வேர்க்கடலையா? :) கலக்குங்கோ, என்சொய்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~