Friday, November 16, 2012

அச்சு முறுக்கு

முதல்லயே சொல்லிடறேன், இது அச்சு முறுக்கு ரெசிப்பி எல்லாம் இல்லைங்க, தைரியமா படிங்க! :) 

ஊரில் இருந்து வாங்கி வந்த அச்சுமுறுக்கு அச்சுக்களை எடுத்து ஒரு ட்ரையல் பண்ணிப் பார்க்கலாமே என்று ஒரு முயற்சி!  நிதானமா ஒரு வாரம் ரிஸர்ச்சோ ரிஸர்ச் எல்லாம் பண்ணேன், அப்புறம்  ஒரு நாலுநாள் முறுக்கு சுடலாமா வேணாமான்னு திங்க் பண்ணினேன்! "அலை எப்ப ஓயறது, கடல் எப்ப ஆடுவது?"  என்று திடீருன்னு ஒரு ஞானோதயம் வந்து களமிறங்கினேன். அந்த அனுபவங்களை  எல்லாம் எழுத்தில் பதித்து வைக்கலன்னா எனக்கு தூக்கம் வருமா? :))) ஸோ...என்ஜாய்! 

புது அச்சில் முதல் முறை செய்வது ரொம்ப கஷ்டம் என்று நான் தேடிய எல்லா வலைப்பூக்களிலும் போட்டிருந்தாங்க. "சிவாஜி"- படத்தில் ரஜினி சொல்லுவாரே "வாங்க, பழகலாம்"-அப்படின்னு?? அதைப் போல முறுக்கு அச்சை  பழக்க பல்வேறு டெக்னிக்ஸ் இருக்குதாம்.

சிலர் சொல்றாங்க, தினமும் எண்ணெயை சூடாக்கி, அதில் அச்சைப் போட்டு ஒரு மணி நேரம்(!) அடுப்பிலே வைச்சு சூடு பண்ணுங்க, இத ஒரு வாரம் தொடர்ந்தா அச்சு 'பழகிருமாம்!' இந்த டெக்னிக் சொல்லியிருந்தவர் "ஒரு வாரம் சூடாக்கினேன், ஆனா தினமும் எண்ணெய் சூடான பாத்திரத்தை கழுவறதுக்குள்ள தாவு தீர்ந்துருச்சு"- அப்படின்னு எச்சரிக்கையும் குடுத்திருந்தாங்க, அதனால் இந்த டெக்னிக்-ஐ  ரூல்ட் அவுட் பண்ணிட்டு அடுத்த டெக்னிக்குக்கு move on-னுங்க! ;) 

அடுத்ததாக நல்லா புளிச்ச தோசை மாவில் ஒரு நாள் முழுக்க அச்சை ஊறவிட்டு, அடுத்தநாள் கழுவி, துடைத்து..சரி, சரீ...டென்ஷன் ஆகாதீங்க, பொட்டு வைச்சு பூப்போட்டெல்லாம் கும்பிட வேணாம், ச்ச்ச்சும்மா கொஞ்சம் எண்ணெய தடவி ஒரு நாள் வைக்கணுமாம். அப்ப அச்சு பழகிருமாம்! :) இது கொஞ்சம் ப்ராக்டிகலி ஒத்து வர விஷயம்தான், ஆனா அன்னைக்குன்னு பார்த்து என்கிட்ட இட்லிமாவு-தோசைமாவு அவ்வளவு ஏன், ரெடிமேட் அரிசிமாவு, கோதுமைமாவு, மைதாமாவு ஒரு மாவு கூட இல்லைங்க! வேற வழி? மூவ் ஆன் டு நெக்ஸ்ட் டெக்னீக்! ;)))

மூணாவது முறையில அச்சை ஒரு நாள் முழுக்க புளித்தண்ணியில ஊறவிட்டு கழுவி வைக்கறது. என்னிடம் இருந்த பொருட்களை(புளி + தண்ணி தட்ஸ் ஆல்! ஹிஹி!) மட்டுமே யூஸ் பண்ணறதால் இந்த டெக்னிக்கை ஃபாலோ பண்ணலாம்னு ஒரு நாள் முழுக்க புளித்தண்ணில ஊறவிட்டு, நல்லா கழுவி  எடுத்து வைச்சாச்சு.  

 கடைக்குப் போயி தேவையான பொருட்களும் எல்லாம் வாங்கிட்டு வந்தாச்சு. வெண்ணை  முறுக்கு சுட்ட கையோட, அச்சு முறுக்கையும் ஒரு கை பார்த்துடுவோம்னு ஆரம்பிச்சேன்.  இனி அடுத்து என்ன? ரெசிப்பி!! பல்வேறு தளங்களை பார்த்து அலுத்துப் போயி, நானா ஒரு அளவு எடுத்து ஒரு கப் அரிசிமாவு, கால்கப் மைதா,கால்கப் சர்க்கரை, கால்கப் தேங்காப் பால், முக்காக் கப் தண்ணி, ஒரு சிட்டிகை உப்பு, கொஞ்சம் எள்ளு எல்லாம் சேர்த்து ஒரு ரேஞ்சுக்கு(!) மாவை  கரைச்சுகிட்டேன்.

அதுக்கப்பறம்தான் காமெடி..அச்சை  நல்லா சூடு பண்ணி மாவில dip பண்ணி எண்ணெயில விட்டா.....அவ்வ்வ்வ்வ்வ்வ்! அச்சுல இருந்து மாவு தனியே வரமாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்ணுது. எண்ணெய் வேற சூடா இருந்துதா, முறுக்கு கருகிப் போச்!! அச்சிலிருந்து முறுக்கை போராடிப் பிச்சிபிச்சி எடுத்தேன். இந்த அச்சுதான் வம்பு பண்ணுதுன்னு 2வது அச்சில ட்ரை பண்ணுனா, "அதேதாங்க இது!" ரேஞ்சில மீண்டும் அதே அழிச்சாட்டியம்! :)

இப்படியாக முதல் முயற்சி படு தோல்வியா முடிந்தது, இதற்கெல்லாம் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தி(ஹிஹி, நாந்தானுங்..டாங்க்ஸ்,டாங்க்ஸ்! :) ) அடுத்தநாள் ஃப்ரிஜ்ஜில் வைச்சிருந்த வேதாளத்த, ச்சீ,ச்சீ, மீதி மாவை  எடுத்து அதுக்கூட ஒரு முட்டை, இன்னுங்கொஞ்சம் சர்க்கரை (அளவெல்லாம் கேக்கப் புடாது, சொல்லிப்புட்டேன்!), அரிசிமாவு, தண்ணி எல்லாம் ஊத்தி கலக்கி, மறுக்கா ட்ரை பண்னேனுங்க. 

ஏற்கனவே அச்சுக்கள் ரெண்டும் சிலபல முறை எண்ணெயில போட்டு சூடு பண்ணியிருந்ததால பழகிட்டாங்க. மரக்குச்சி வைச்சு, அச்சிலிருந்து லைட்டா நகர்த்தி விட்டதும் முறுக்கு ஜூப்பரா கழண்டு வந்துருச்சு. சில முறை, ரொம்ப நல்ல புள்ள மாதிரி தானாவே முறுக்கு அச்சை விட்டு கழண்டும் வந்துது! :)))

ஆக மொத்தம் அச்சுமுறுக்கு செய்யற அச்சு ரெண்டும் பழகிருச்சு, நாந்தானுங்க இன்னும்  பழகல.... ஹாஹாஹா! முறுக்கு  texture, ருசி எல்லாம் அருமையா இருந்தாலும், முறுக்கு சைஸைப் பாருங்க, பஞ்சத்தில அடிபட்ட பரதேசி மாதிரி  இல்ல?  ;) :) என்ன ஒரு ஒல்ல்ல்ல்ல்லியான  உருவம்?!...என்னது..தெரியலையா? இருங்க, ஜூம் பண்ணறேன்...
 ...ரெடி,ஒன்!

 
... டூ!!
  ..த்ரீ! 
எப்புடி நம்ம அச்சுமுறுக்கு/அச்சப்பம்/ரோஸ் குக்கீஸ்/கொக்கீஸ் ???
:) :) :)

ஸோ..இந்தக் கதையின் நீதி என்னன்னா..[சாரி, விக்ரமாதித்தன்-வேதாளம் ஸ்டோரி லைன்லயே இருக்கறதால இடையிடையில இப்படி வசனங்கள் எல்லாம் வரும், ஆனா நீங்க அட்ஜஸ்ட் பண்ணிப்பீங்க, எனக்குத் தெரியும்! ;)] அதாவதுங்க, என்ன ப்ரச்சனைன்னா, அச்சு பழகிருச்சு, மாவு கன்ஸிஸ்டன்ஸில ஏதோ கோட்டை விட்டிருக்கேன். அதனால அச்சை  மாவில dip  பண்ணும்போது, அச்சுல முக்கால் பாகம் மாவு ஒட்டாமல், கால்பாகம் மட்டும்தான் ஒட்டுது! அடுத்த முறை  இந்தத் தப்ப சரிபண்ணி, புஷ்டியான அச்சுமுறுக்கு சுடப்பட்டு, சரியான அளவுகளோடு வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது! :) ;)

அவ்ளோதாம்பா கத! கதையும் முடிஞ்சது, கத்தரிக்கா காய்ச்சது, இல்லல்ல அச்சு முறுக்கு ப்ளேட்டோட கிடைச்சது..சாப்புடுங்க, ஸ்ஸ்ஸ்ஸோ..ஓடக்குடாது, பயப்புடாமத் தைரியமாச் சாப்புடுங்க, டேஸ்ட் எல்லாம் சூப்பரா இருக்குதுங்க! ;))))

24 comments:

  1. ஆத்தாடி அச்சு முறுக்கா ஆ ..


    மகிம்மா :))

    வாழ்நாளில் அச்சு முறுக்கு சுட்டனே அதை மறக்கவே மாட்டேன் அவ்வ்வ்வ்

    THAT WAS MY FIRST EVER COOKERY POST :))

    நான் ஒரு பழைய புக் கட்டிங் ...வச்சிருக்கேன் சிரிப்பு நடிகர் செந்திலின் மனைவி இதை ரெயில் கட்டிடம் என்று கடலை மாவில் செய்திருந்தாங்க ..தரேன் உங்களுக்கு ..ட்ரை பண்ணி பாருங்க

    ReplyDelete
  2. அச்சுமுறுக்கேதான் ஏஞ்சல் அக்காஆஆஆ! நீங்க அழகா கொக்கீஸ் - என்று படமெல்லாம் போட்டிருந்தீங்களே, ஆனா இந்தப் போராட்டத்தைப் பத்தி ஒரு வார்த்தை கூடச் சொல்லலியே?!! அதையெல்லாம் பார்த்துதான் நானும் தகிரியமா:) களமிறங்கினேன், ஆனா...அவ்வ்வ்வ்வ்![வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்! :)]

    பட், இட்ஸ் ஓகே! இப்ப கொஞ்சம் கான்ஃபிடன்ஸ் வந்துருச்சு. நெக்ஸ்ட் டைம் ட்ரை பண்ணுகையில் 101% சக்ஸஸ்தான்!

    //சிரிப்பு நடிகர் செந்திலின் மனைவி இதை ரெயில் கட்டிடம் என்று// ஆஹா! ஏற்கனவே வடிவேலு ரேஞ்சுக்குப் பினாத்திட்டு இருக்கற என்னைய செந்தில்-கவுண்டமணி ஆக்கப் பாக்குறாங்களே! எ.கொ.ஏ.இ.?! ;))))))

    ReplyDelete
  3. அசத்திட்டீங்க... வீட்டில் இது போல் முயன்று 'வெற்றி' கிடைக்கவில்லை....!

    செய்முறை விளக்கத்திற்கு நன்றி...

    ReplyDelete
  4. ஒரே முறுக்குமயமா இருக்கு."ஆனாலும் விட மாட்டமில்ல? ஒரு கை பார்த்துடலாம்!"___ செஞ்சிட்டீங்க போல.அவ்வளவும் உடையாம அழகா வந்திருக்கே.உங்களுக்குப் பரவாயில்லை,எனக்குக் கடைசிவரை முறுக்கு தானாகக் கழண்டு விழவில்லை.இதை செய்யும் எல்லோருமே இப்படித்தான் புலம்புவார்களோ!இரும்பு அச்சு இருந்தால் புஷ்டியான முறுக்கு வரும்னு நினைக்கிறேன்.அடுத்த வாரம் ஒளிச்சு வச்சிருக்கிற அச்சை வெளியே எடுக்கப்போறேன்.

    பழமொழிகள் தானாக வந்து விழுகிறதே.இப்போது கொஞ்சம் வேலை,பிறகு வந்து எல்லா பழமொழிகளையும் மீண்டும் படிக்க வேண்டும்.நன்றி மகி.

    ReplyDelete
  5. வீட்ல குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா நாங்க முட்டை சாப்பிட மாட்டோம் முட்டை சேர்க்காம பண்ணி கொடுப்பேன்

    ReplyDelete
  6. Adhu achu murukka? naan photo paatthu edho vadagam kaaya pottu irukkenu nenachutten...ha ha ha...hayo hayo... ennamo po mahi... idhukku thaan naan idhellaam seyyaradhilla you see...:) irundhaalum vikramaathikku oru ooooooo pottee aaganum...:)

    ReplyDelete
  7. //vadagam kaaya pottu// ;)) நானும் அதேதான் நினைச்சேன் மகிமா. ;)))))))

    ம்... ஒழுங்கா வந்ததும் ரெசிபி பகிர்ந்துக்கங்க. நானும் ட்ரை பண்ணுறேன்.

    ReplyDelete
  8. ஆஹா எல்லோரும் இப்படி அச்சு முறுக்கை போட்டு வெறுப்பேத்துறீங்களே...விடமாட்டேன் அடுத்தமுறை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்துடறேன்...அச்சு முறுக்கு எப்பவும் மெலிசாதான் இருக்கும் மகி...சூப்பர்ர்

    ReplyDelete
  9. //vadagam kaaya pottu// ;)) நானும் அதேதான் நினைச்சேன் மகிமா. ;)))))))
    ///////////////////////:::////////////////////::://///////// grrrrrrrrr!

    Should I change the title as "Achu Vadagam" instead of "Achu Murukku???!!? Appavi & Imma, thats what you guys are suggesting?? ;) :)

    ReplyDelete
  10. Dhanabalan, thanks very much for the appreciation..shall try it again n give you the correct measurements soon! :)
    ~~
    Chitra Akka, thank you! Will reply you in Tamil latter! ;)
    ~~
    Lakshmi Amma, initially, I tried eggless version only. Since it was not working out moved on to the next option. :)
    Thanks for the comment!
    ~~
    Menaga, thanks for the encouraging comment dear..good luck with your future trial on Achu murukku! :)
    ~~

    ReplyDelete
  11. Looking yummy. It looks like very hard to make the batter. So I am not going to try this out. My mother used make these. May be next time I will ask for this mold ( achchu ).

    ReplyDelete
  12. அச்சு முறுக்கு சூப்பர். முறுக்கு சுவதைக் கட்டிலும் அச்சை ரெடி பண்ணுவதில்தான் அதிக செலவு போல இருக்கே. இதுக்கு மகி ஊரில் முறுக்கு மாவுக்கு கலர் சேர்ப்பினம். கலர் கலரா வரும் முறுக்கு.

    ReplyDelete
  13. அச்சு முறுக்கை இவ்வளவு அழகா மகி சுட்டு அசத்திய கதை சூப்பர்.பார்சல் ப்ளீஸ்.ம்ம்..அழக் கூடாது ,அடுத்த தடவை சுடும் பொழுது அனுப்பினால் போதும்.

    ReplyDelete
  14. அச்சு முறுக்கு பார்த்தா நல்லா இருக்கு. சாப்பிடவும் நல்லா இருக்கும் போல இருக்கு. ஆனா நீங்க உங்க கதைய எழுதினதுக்கு அப்புறம் நான் எல்லாம் ஏன் ட்டரை பண்ணுறேன் சோ நீங்க என்ன பண்ணுறீங்கன்ன இன்னும் கொஞ்சம் ரேசெர்ச் பண்ணி எனக்கு மட்டும்ம்ம்ம் ஒரு பார்ஸல் ப்ளீஸ். யு. கே வுக்கு கரீக்டா சவுத்துக்கு மட்டும் அனுப்பிடுங்க நான் அஞ்சுவுக்கும் கொஞ்சம் கொடுத்துடுறேன் ஆனா தப்பி தவறி நார்த்த் பக்கம் மட்டும் அனுப்பிடாதீங்க:)) மிட் நைட் ஒரு தீபாவளி வாழ்த்து ஜோனனா இப்புடி பொயிங்கு றாங்களா க்க்கக்கர்ரர்ர்ர்ர் :)))))

    ReplyDelete
  15. pathivin introduction nagaisuvaiyodu ullathu..thodarungal..nandri.

    ReplyDelete
  16. Murukku adai vida indha post romba swarisiyam, rasichu padichen..

    ReplyDelete
  17. Mahi,
    Achchu murukku epdi irundhaalum koruk-moruk-nu nala naan sapduven. Paradhesi madhri ellam illa. Nalla iruku unga achu muruku. Oru packet enna vilai sollunga.

    Hei aprom naan en blog-la comment application sari senjuten. Ini yaarum register ellam panna theva illa. Yappa, andha application vachu approve/reply pandradhuku naana patta paadu....sssss.... :D

    ReplyDelete
  18. Good one Mahi. I don't dare to try achu murukku after reading this!

    ReplyDelete
  19. //.இதை செய்யும் எல்லோருமே இப்படித்தான் புலம்புவார்களோ!இரும்பு அச்சு இருந்தால் புஷ்டியான முறுக்கு வரும்னு நினைக்கிறேன்.அடுத்த வாரம் ஒளிச்சு வச்சிருக்கிற அச்சை வெளியே எடுக்கப்போறேன்.// சித்ராக்கா, யாரும் இவ்வளவு பப்ளிக்கா;) புலம்பியிருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்! ஆனா மொக்கை போடுவது என்பது எனக்குப் பிடித்த விஷயமாய் இருப்பதால்,அங்கங்க பழமொழி தூவி (சலிக்காம) எழுதறேன். ஹாஹா!

    இரும்பு அச்சில் நல்லா வரும்னா சொல்றீங்க? ஊரில் இரும்பு அச்சு இருந்துச்சே, நான் விட்டுப்போட்டு வந்துட்டனே!! அவ்வ்வ்... சீக்கிரம் ஒளிச்சுவைச்சிருப்பதையும் எடுத்து முறுக்கை சுட்டு அசத்துங்கோ! கருத்துக்கு மிக்க நன்றி!
    ~~
    வானதி, என் பதிவை வைச்சு எந்தவொரு (தவறான) முடிவுக்கும் வந்துராதீங்க, அம்மா கிட்ட மெஷர்மென்ட்டை கரெக்ட்டா கேட்டுச் சொல்லுங்க, செய்து பார்த்துடலாம்! நன்றி வானதி!
    ~~
    //முறுக்கு சுவதைக் கட்டிலும் அச்சை ரெடி பண்ணுவதில்தான் அதிக செலவு போல இருக்கே.// ஆமாம் அதிராவ்! அதிக செலவு நேரத்தில்தான், காசில் இல்லை! ;) கலர் கலர் முறுக்கோ? இப்பத்தான் கேள்விப்படறேன்.
    கருத்துக்கு மிக்க நன்றி அதிரா! :)
    ~~
    //பார்சல் ப்ளீஸ்.ம்ம்..அழக் கூடாது ,அடுத்த தடவை சுடும் பொழுது அனுப்பினால் போதும். // இது,இது,இது...இதுதான் ஆசியாக்கா! காமெடி பண்ணற மாதிரியே சீரியஸாப் பேசிருவாங்க! :) தேங்க்ஸ் பார் தி அண்டர்ஸ்டான்டிங் ஆசிக்கா! கருத்துக்கு நன்றி!
    ~~
    கீரி, ரிஸர்ச் எல்லாம் அம்புட்டுதானுங்..இதுக்கு மேலயும் ஆராய்ச்சி செய்ய பொறுமை லேது! ;) அடுத்த தபா:) சுடச்சொல்லோ மொதப் பார்ஸல் உங்களுக்கு, அடுத்த பார்ஸல் நம்ம ஆசியாக்காவுக்கு! டோன்ட் வொரி யா! :))))

    பொயிங்கிற ஆட்களுக்கு தரமாட்டீங்களா, சரி உங்க விருப்பம்! :)
    நன்றி கிரிஜா!
    ~~
    அரைகுறை ஞானி, முதல்வருகைக்கும் ரசித்து கருத்துச் சொன்னமைக்கும் மிக்க நன்றிங்க! நிச்சயம் தொடர்கிறேன்! ;) [நீங்கள்லாம் இப்புடி உசுப்பேத்தி விட்டு, நான் மொக்கை போடும் வேகம் அதிகமாகுது. ஹாஹ்ஹா!]
    ~~
    ஹேமா, :) //Murukku adai vida indha post romba swarisiyam, //அங்க தானுங்களே நான் நிக்கிறேன்! ;) :)
    /rasichu padichen.. / ரொம்ப சந்தோஷம்! இதை எதிர்பார்த்துத்தான் எழுதினேன்! நன்றிங்க! :)
    ~~

    ReplyDelete
  20. மீனாக்ஷி, கரெக்க்டாச் சொன்னீங்க! கறுக்-மொறுக்னு சூப்பராத்தான் இருக்குது முறுக்கு! :) கொலம்பஸுக்கு ஷிப்பிங் சார்ஜ் எல்லாம் சேர்த்து ஒரு டஜன் முறுக்குக்கு, அதிகமில்லை ஜென்டில்லேடி, ஜஸ்ட் $14.99 ஒன்லீ! :))) செக்,மணி-ஆர்டர் எல்லாமே ஏற்றுக்கொள்ளப் படும். ;) :)
    ~~
    நித்து, என்னது இது? இதுக்கெல்லாம் அசந்து போனா எப்படிங்க? ;) :) சீக்கிரமா அச்சு வாங்கி தைரியமா(!) அச்சுமுறுக்கு செய்யுங்க,ப்ளீஸ்! :)
    தேங்க்ஸ் நித்து!
    ~~

    ReplyDelete
  21. 14.99 dollar-aaa???? Mahi, andha 'achchu'-um serthu anupineengana romba vasadhi :D :D

    ReplyDelete
  22. மீனாக்ஷி, அச்சும் சேர்த்து வேணுமா? அப்ப ஒரு அச்சுக்கு 55 ரூபா + கோவை டு யு.எஸ். ஃப்ளைட் கார்கோ சார்ஜ் $100 சேர்த்து அனுப்புங்கோ! எப்படி வசதி? ஹாஹா!

    sorry about the delayed reply! :)

    ReplyDelete
  23. Mahee,
    இந்த போஸ்டுக்கு வந்ததை நான் மறந்துடுறேன் :D :D :P

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails