இஞ்சி, உள்ளி, பிரியாணிஇலைச் செடிகளையும் வளர்த்துப் படமெடுத்துப் போடவேண்டும் என்று வெஜிடபிள் பிரியாணி பதிவில் ஒரு நேயை (!?! நேயர்- பெண்பால்! :)) விருப்பம் தெரிவித்திருந்தார். ஆகவே நேயை விருப்பமாக இந்தப் பதிவு உங்க எல்லாரின் பொறுமையைச் சோதிக்க வருகிறது. :)))
பொறுங்க, அவரது புகைப்படம் (முதல் படத்தில் இருப்பது அவரின் back pose!;)) பதிவின் இறுதியில் உங்களுக்காக காத்திருக்கிறது, டொட்டொய்ங்! ;))))))))
செடிகளை வளர்த்துப் பதிவு போடவேண்டும் என்று "மட்டிலுமே" நேயை விருப்பம் தெரிவித்திருந்தார். எங்கே வளர்க்கவேண்டும் என்று அவர் குறிப்பிடாத காரணத்தால் உள்ளியை ஒரு கார்டினில்:) இருந்து பறித்து;) வந்து என் பதிவில் பதித்துவிட்டேன். கார்டின் ஆருது என்று மட்டும் தெரிந்தாலும், புரிந்தாலும் பப்ளிக்கில் சொல்லிராதீங்க!
"மியாவ்.. மியாவ் பூனைக்குட்டி,
மீசைக்காரப் பூனைக்குட்டி..."...அது, சும்மா இந்தப் பாடல் நினைவுக்கு வந்தது, பாடிட்டு போறேன், விடுங்களேன்! :)
"ஆக்லாந்த்தின் பிரியாணி இலையே!
றீச்சர் வீட்டின் தோட்ட மரமே,இலையே..."
[ஜெர்மனியின் செந்தேன் மலரே- பாடல் ட்யூனில் பாடிக் கொள்ளவும்! :))) ]
இஞ்சிச் செடி கோவையின் மேற்குச் சீமையில் (செம்மேடு), எங்க
சித்தி வீட்டுத் தோட்டத்தில் இருந்தது. இதுவரை இஞ்சியின் பூவை நான்
பார்த்ததில்லை, முதன்முறையாக இரண்டு பூக்களுடன் இருந்த இஞ்சிச் செடியைப்
பார்த்தேன், படமும் எடுத்துவந்திருந்தேன். தனிப்பதிவாக வேறு படங்களுடன் சேர்த்து பதிவிடலாம் என்றிருக்கையில், முந்திக் கொண்டு, இப்பொழுதே உபயோகமும் ஆகிவிட்டது. படத்தில் சிவப்பு வட்டங்களுக்குள் இரண்டு இஞ்சிப் பூக்கள் (அல்லது மொட்டுக்கள்?!).
~~~
அதிராவ், ஏதோ என்னால முடிஞ்சது! ;))))
ஆஹா... அருமை... (ரசிக்க வைக்கும் எழுத்து நடையும்)
ReplyDeletehaa haa haa! ;))))))) இதானா சங்கதி! ;))
ReplyDeleteகடைசி படம் சூப்பர். ;)
இஞ்சி வளர்த்து ஏகமாக விளைச்சல் கண்டிருக்கிறேன். ஆனால் பூ கண்டது இல்லை. அது வேறு இனமோ என்னவோ! படம் எடுத்து வந்து காட்டியதற்கு நன்றி மஹி. இது போல் சிவப்புப் பூஞ்செடி ஒன்று பார்த்திருக்கிறேன், சித்தரத்தை வகையில்.
பாட்டு சூப்பர். முதல்ல... அம்முலுவுக்கு பாடுறீங்களாக்கும் என்று நினைச்சன். ;D
ReplyDeleteபிரியாணி இலை செடி இப்போ தான் பார்க்கறேன்... பூனை தோசை சூப்பர்....
ReplyDeleteமகி....உங்க பதிவுக்கு கிரீடம் வைச்சமாதிரி இருக்கு பூஸ்குட்டி தோசை....;)
ReplyDeleteரொம்பத்தான் பொறுமையா அழகா தோசைமாவால பூஸ்குட்டி வரைஞ்சு (அதை சுட்டி)ருக்கிறீங்க....:)
தோசை அழகா சுட்டிருக்கிறீங்க.... ஆனாலும்... தோசையாயும் பூஸை சுடுறது மனசுக்கு வருத்தமாதான் இருக்கு........
இஞ்சிச்செடி, பிரியாணி செடி..(செடியா?மரமா அது?....)உங்க 3வது படத்தில இருக்கிறது உள்ளியா....அது வெங்காயம் மாதிரிதானே தெரியுதூஊஊ... சரி இருந்துட்டு போகட்டும்..
எல்லாம் படம் போட்டு காட்டியதுக்கும் மிக்க நன்றி.
ஆ..மா...தோட்டக்காரர் அனுமதியோடதானே போடிருக்கீங்க...:)))
தனபாலன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
ReplyDelete~~
//கடைசி படம் சூப்பர். ;)// அது வதனப்புத்தகத்தில் சுட்ட படம்! ;)
இஞ்சிப் பூ பற்றீ எனக்கும் தெரியாது இமா..புதுசா இருக்கே என்று படமெடுத்தேன். நிதானமாகப் பார்க்கலை!
//பாட்டு சூப்பர். முதல்ல... அம்முலுவுக்கு பாடுறீங்களாக்கும் என்று நினைச்சன். ;D // எந்தப் பாட்டைச் சொல்றீங்க? அவ்வ்வ்.. :)))))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இமா!
~~
ப்ரியா, நானும் இமா வீட்டுத் தோட்டத்தில்தான் பிரியாணி இலை மரத்தைப் பார்த்தேன். :)
பூனை தோசை பற்றிய பாராட்டுக்கு நன்றி! எல்லாப் புகழும் பூனைக்கே! ;) :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றீப்பா!
~~
இளமதி, //தோசையாயும் பூஸை சுடுறது மனசுக்கு வருத்தமாதான் இருக்கு........// சீரியஸாச் சொல்றீங்க போலருக்கே! வருத்தப் படாதீங்க, சும்மா தமாஷுக்குதானே! ;):)
//பிரியாணி செடி..(செடியா?மரமா அது?....)// மரமேதான் அது..றீச்சர் ஜூம் பண்ணீ இலையை மட்டும் எடுத்திருக்கினம்! ;)
//3வது படத்தில இருக்கிறது உள்ளியா....அது வெங்காயம் மாதிரிதானே தெரியுதூஊஊ...// உள்ளி-எண்டா வெங்காயம் அல்லவோ?!! நான் அப்படி நினைச்சுத்தானே யுனைட்டட் கிங்க்டம் வரைக்கும் போயி க்வீனிண்ட பேத்தி வீட்டு கார்டினில களவெடுத்து வந்தேன்?!! அவ்வ்வ்வ்வ்வ்வ்.... ;))))))
/ஆ..மா...தோட்டக்காரர் அனுமதியோடதானே போடிருக்கீங்க...:))) / அனுமதியோட போட்டா த்ரில் இருக்காதில்ல?! ஹாஹாஹ்ஹா! :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இளமதி!
~~
நாளைக்கு வாறன்....மகீஈஈஈஈ எச்சூச்ச்மீஈஈஈ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)
ReplyDeleteSuper Mahi. I like the poosar in the last plate. Cute.
ReplyDeleteஎன்று வெஜிடபிள் பிரியாணி பதிவில் ஒரு நேயை (!?! நேயர்- பெண்பால்! :)) விருப்பம் தெரிவித்திருந்தார். ////
ReplyDeleteaவ்வ்வ்வ் அந்த நேயை(நான் இமாவைச் சொல்லல்ல:)).. கேட்டிருந்ததை மீயும் பார்த்தேன்:) ஆனா அவ தோசைப் பூஸ் கேட்டமாதிரித் தெரியல்லியே?:)) அப்போ இது பை வன் கெட் வன் ஃபிரீயா?:))))
அதெப்பூடி இவ்ளோ அழகா பூஸ் செய்திருக்கிறீங்க? சூப்பர்.. நான் ஆரம்பம் யானையோ.. எலியோ எண்டெல்லாம் ஓசிச்சிட்டேன்ன்ன்... ஆனா இதுக்கு முழுக்க முழுக்க காரணம் உங்கட தோசை மாவேதான் .... கல்லில ஓடாமல் சொன்ன பேச்சைக் கேட்குதே..:))
ReplyDelete//உள்ளியை ஒரு கார்டினில்:) இருந்து பறித்து;) வந்து என் பதிவில் பதித்துவிட்டேன். கார்டின் ஆருது என்று மட்டும் தெரிந்தாலும், புரிந்தாலும் பப்ளிக்கில் சொல்லிராதீங்க!//// ஹா..ஹா..ஹா... இதுக்குத்தான் சொல்லுவினம், அவசரப்பட்டுக் களவெடுக்கும்போதும்:) நிதானமா எடுங்க என:)) ஏனெண்டால் உது உள்ளி இல்லை வெங்காயம்.. உள்ளியும் எங்கினமோ இருக்கு.... போட்டிருக்கிறேன்ன்.. அது வேற உது வேற.. உது வெளிநாட்டு வெங்காயம் அதுதான் வெள்ளையா இருக்கு:)))
ReplyDeleteஊ.கு:
மகிக்கும் இப்போ “உள்ளி” எனப் பேச வருதே:)).. அஞ்சு கொஞ்சம் ஓடி வாங்கோஓஓஓஒ:))
என்னாது அது றீச்சர் வீட்டுப் பிர்ர்ர்ர்ராணி இலையோ? ஆனா அவ ஒருக்காலும் பிர்ராஆஆஆஆஆஆஆஅணி செய்ததா எனக்க்கு நினைவில்லையே:)).. ஹையோ படிச்சதும் கிழிச்சு... செனை கூவத்தில வீசச்சொல்லி பிளைட்டில அனுப்பிடுங்க மகி.
ReplyDelete//அதிராவ், ஏதோ என்னால முடிஞ்சது! ;))))// என்னாது?:)) உங்களால முடிஞ்சது ஒரு அப்பாவிப் பூஸைத் தூக்கி அவன் ட்ரேயில மல்லாக்கப் படுக்க வைப்பதோ?:)) என்ன கொடுமை முருகா:))).. அப்பவும் பூஸ் அழகுதேன்ன்ன்:))...
ReplyDeleteஅந்த “நேயை” நன்றியாம் எனச் சொல்லச் சொன்னவ மகி”:))
ReplyDeleteபகிர்வு இண்ட்ரெஸ்டாக இருக்கு..எனக்கு ஒரு யானை தோசை கிடைக்குமா? :)..
ReplyDeleteஎன்னை இப்படி செடி கொடியெல்லாம் போட்டு பெருமூச்சு விட வைக்கிறதே வேலையாப் போச்சு மகி,இமா அதிராவுக்கு.
மரம்,செடி எல்லாம் அழகா இருக்கு. அதைவிட பூஸ்தோசை அழகு.இளமதியின் கருத்து எனக்கும் வந்தது.பின் ஜோக் என்றிருந்திட்டன்.
ReplyDeleteஇஞ்சி செடிக்கு அருகில் விழுந்திருக்கும் பூ அரளிப்பூவா?.
பிரியாணி இலை நானும் இப்போதான் பார்க்கிறேன்.
மிகவும் அருமையான பதிவு தொடருங்கள் நன்றி சகோ!
ReplyDeleteNice post, only after you mentioned, I realize I have not seen a ginger plant and the flowers too..
ReplyDeleteMahi,
ReplyDeleteFantastic food art :)
பூனை குட்டி ரொம்ப அழகா இருக்கு, ஆனா அதை பிச்சு சாப்டனும்னு நினைக்ரப்ப மனசு வலிக்குது (குணா கமல் மாதிரி படிங்க... ) :D :P
நேயர் விருப்பக் கருத்துக்களுக்கு பதில்மரியாதைகள் :) விரைவில் செய்யப்படும் என்று உறுதிகூறப்படுகிறது, நன்றி! ;) :)
ReplyDeleteமியாவ் மியாவ் பூனைக்குட்டி மீசை போன பூனைக்குட்டி :))
ReplyDeleteஹையா தோசை சூப்பர் ஆனா பாவம் இனிமே சுடாதீங்க மகி அவன்ல போட்டு பேக் பண்ணிடுங்க
ஹாஆஅ :)))
உள்ளி =வெங்காயம்தான்
ஆனா இலங்கையர் பூண்டைதான் உள்ளி என்கிறாங்க
இந்தியால வேங்காயம்னுதான் நாங்க சொல்வோம்