புதினாச் செடியின் படம், வெஜிடபிள் பிரியாணி-ன்னு டைட்டில்! இந்த ரெண்டுக்கும் என்ன சம்பந்தம்னு இந்நேரம் நீங்களே கண்டுபுடிச்சிருப்பீங்க..கரெக்ட்டா? பின்னே..மகி'ஸ் ஸ்பேஸ் ரீடர்ஸ்-ஆ கொக்கா?! :))))))
பார்ட்டிகளுக்கு பெரிய அளவில் பிரியாணி செய்கையில் இந்த oven-ல செய்யும் முறை சுலபமாக இருக்கும். சாதம் தனியாக க்ரேவி தனியாக செய்து தயாரிப்பதால் முதல்நாளே கூட க்ரேவி செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக்கொண்டு, சாதம் மட்டும் சூடாகச் செய்து, உணவு நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன் லேயராக அடுக்கி அவன்-ல தள்ளீட்டீங்கன்னா(!) சூடாக எடுத்து பரிமாறிவிடலாம்! :)
இந்த முறை ஸ்டெப் பை ஸ்டெப்பாக படங்கள் எடுக்கவில்லை, சிலபடங்கள் மட்டுமே எடுத்தேன். ரெசிப்பியை எழுதிவிடுகிறேன், ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன் ரெசிப்பிக்கு இங்கே க்ளிக்கவும்.
தேவையான பொருட்கள்
சாதத்துக்கு
பாஸ்மதி அரிசி -3 கப் (~3/4 கிலோ)
பிரியாணி இலை -2
பட்டை
ஏலக்காய்-2
கிராம்பு -2
நெய்- 2 டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லி இலைகள் - கொஞ்சம்
உப்பு
தண்ணீர் - 6 கப்
செய்முறை
அரிசியை 2-3 முறை அலசி, தேவையான தண்ணீர் விட்டு அரைமணி நேரம் ஊறவிடவும்.
பெரிய பாத்திரத்தில் 6 கப் தண்ணீரை சூடாக்கவும். தண்ணீர் கொதிவரும்போது வாசனைப் பொருட்கள், புதினா-கொத்துமல்லி இலைகள், உப்பு சேர்க்கவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் ஊறிய அரிசியை தண்ணீர் வடித்து சேர்க்கவும்.
பாஸ்மதி 7 நிமிடங்களில் முக்கால்பதம் வெந்துவிடும். அதனை எடுத்து, தண்ணீரை வடித்துவிட்டு நெய் கலந்து வைக்கவும்.
அவன்-ல் வைக்கும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி, முதலில் ஒரு லேயர் சாதத்தை சீராகப் பரப்பவும். அதன் மீது கொஞ்சம் பிரியாணி மசாலா பொடியைத் தூவிவிட்டு இரண்டாவது லேயராக காய்கறி க்ரேவியை பரப்பவும். க்ரேவி மீது நறுக்கிய தக்காளித்துண்டுகள் மற்றும் மல்லி-புதினாவை தூவிவிடவும். மூன்றாவது லேயராக சாதம், அடுத்து க்ரேவி இப்படி மாற்றி மாற்றி இதே போல லேயர்கள் வரும்படி வைக்கவும். கடைசி அடுக்காக சாதம் வரும்படி பார்த்துக்கொள்ளவும்.சாதத்தின் மேல் ஃபுட் கலரை ஆங்காங்கே தெளித்துவிடவும்.
பாத்திரத்தை அலுமினியம் ஃபாயில் பேப்பரால் நன்றாக மூடி 400F ப்ரீஹீட் செய்த அவன்-ல வைத்து 45 முதல் ஒரு மணி நேரம் பேக் செய்யவும். கமகம பிரியாணி ரெடி! :)
ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன் ரெசிப்பிக்கு இங்கே க்ளிக்கவும்.
பார்ட்டிகளுக்கு பெரிய அளவில் பிரியாணி செய்கையில் இந்த oven-ல செய்யும் முறை சுலபமாக இருக்கும். சாதம் தனியாக க்ரேவி தனியாக செய்து தயாரிப்பதால் முதல்நாளே கூட க்ரேவி செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக்கொண்டு, சாதம் மட்டும் சூடாகச் செய்து, உணவு நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன் லேயராக அடுக்கி அவன்-ல தள்ளீட்டீங்கன்னா(!) சூடாக எடுத்து பரிமாறிவிடலாம்! :)
இந்த முறை ஸ்டெப் பை ஸ்டெப்பாக படங்கள் எடுக்கவில்லை, சிலபடங்கள் மட்டுமே எடுத்தேன். ரெசிப்பியை எழுதிவிடுகிறேன், ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன் ரெசிப்பிக்கு இங்கே க்ளிக்கவும்.
தேவையான பொருட்கள்
சாதத்துக்கு
பாஸ்மதி அரிசி -3 கப் (~3/4 கிலோ)
பிரியாணி இலை -2
பட்டை
ஏலக்காய்-2
கிராம்பு -2
நெய்- 2 டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லி இலைகள் - கொஞ்சம்
உப்பு
தண்ணீர் - 6 கப்
செய்முறை
அரிசியை 2-3 முறை அலசி, தேவையான தண்ணீர் விட்டு அரைமணி நேரம் ஊறவிடவும்.
பெரிய பாத்திரத்தில் 6 கப் தண்ணீரை சூடாக்கவும். தண்ணீர் கொதிவரும்போது வாசனைப் பொருட்கள், புதினா-கொத்துமல்லி இலைகள், உப்பு சேர்க்கவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் ஊறிய அரிசியை தண்ணீர் வடித்து சேர்க்கவும்.
பாஸ்மதி 7 நிமிடங்களில் முக்கால்பதம் வெந்துவிடும். அதனை எடுத்து, தண்ணீரை வடித்துவிட்டு நெய் கலந்து வைக்கவும்.
வெஜ். பிரியாணி க்ரேவி - தேவையான பொருட்கள் (to marinate)
சற்றே பெரியதாக நறுக்கிய காய்கள் - 21/2 கப் (கேரட்-பீன்ஸ்-காலிஃப்ளவர்-உருளை-பச்சைப் பட்டாணி)
இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
புதினா-கொத்துமல்லி நறுக்கியது - கால்கப்
பச்சைமிளகாய் -2
மிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் -1 டேபிள்ஸ்பூன்
பிரியாணி மசாலா தூள் -11/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
தயிர் - கால் கப்
பட்டை-கிராம்பு-ஏலக்காய்-பிரியாணி இலை சேர்த்து அரைத்த விழுது - 2டீஸ்பூன் (முழு கரம் மசாலா பிடிக்கும் எனில் அரைக்காமல் அப்படியே சேர்க்கலாம்)
உப்பு
தாளிக்க
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
முந்திரி, பாதாம் - கொஞ்சம்
நீளமாக நறுக்கிய வெங்காயம் -2
தக்காளி -1
செய்முறை
மேரினேட் செய்ய வேண்டிய எல்லாப் பொருட்களையும் பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கலக்கி அரைமணி முதல் ஒருமணி நேரம் ஊறவிடவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து முந்திரி பாதாம் சேர்த்து, பொன்னிறமானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் பெரிய துண்டுகளாக நறுக்கிய தக்காளி மற்றும், மாரினேட் செய்த காய்கறி கலவையைச் சேர்த்து வதக்கவும். 3/4 கப் தண்ணீர் விட்டு, உப்பு சரிபார்த்து, கடாயை மூடிபோட்டு வேகவிடவும்.
காய்களும் முக்கால் பதம் வெந்தால் போதுமானது. கலவை கொதிக்கத் தொடங்கியதும் 5 நிமிடங்களில் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். இப்போது சாதம், க்ரேவி இரண்டுமே தயார். அடுத்ததாக பிரியாணியை அவன்-ல தம் போடுவது எப்படி என்று பார்க்கலாம்.
தம் போட தேவையானவை
அவன் ப்ரூஃப் பாத்திரம் -1
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
நீளமாக நறுக்கிய தக்காளி -1
நறுக்கிய புதினா,மல்லித்தழை - கொஞ்சம்
பிரியாணி மசாலா -1/2டீஸ்பூன்
ஃபுட் கலர் (விரும்பினால்) -சிலதுளிகள், ஒரு டேபிள்ஸ்பூன் பாலில் கலந்து வைக்கவும்.
அலுமினியம் ஃபாயில் பேப்பர்
அவன்-ல் வைக்கும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி, முதலில் ஒரு லேயர் சாதத்தை சீராகப் பரப்பவும். அதன் மீது கொஞ்சம் பிரியாணி மசாலா பொடியைத் தூவிவிட்டு இரண்டாவது லேயராக காய்கறி க்ரேவியை பரப்பவும். க்ரேவி மீது நறுக்கிய தக்காளித்துண்டுகள் மற்றும் மல்லி-புதினாவை தூவிவிடவும். மூன்றாவது லேயராக சாதம், அடுத்து க்ரேவி இப்படி மாற்றி மாற்றி இதே போல லேயர்கள் வரும்படி வைக்கவும். கடைசி அடுக்காக சாதம் வரும்படி பார்த்துக்கொள்ளவும்.சாதத்தின் மேல் ஃபுட் கலரை ஆங்காங்கே தெளித்துவிடவும்.
பாத்திரத்தை அலுமினியம் ஃபாயில் பேப்பரால் நன்றாக மூடி 400F ப்ரீஹீட் செய்த அவன்-ல வைத்து 45 முதல் ஒரு மணி நேரம் பேக் செய்யவும். கமகம பிரியாணி ரெடி! :)
ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன் ரெசிப்பிக்கு இங்கே க்ளிக்கவும்.
~~
முதன்முறை இங்கே வந்து படிப்பவர்களுக்கும், புதினா படத்துக்கு விளக்கம் கேட்பவர்களுக்கும், இதோ விளக்கம்! :)சில மாதங்கள் முன்பு கடையில் வாங்கிவந்திருந்த புதினாவின் தண்டுகளை தொட்டியில் நட்டுவிட்டு ஊருக்குப் போய்விட்டேன். திரும்பிவரும் வரை தோழி வீட்டில் சமர்த்தா :) வளர்ந்திருந்தது புதினாச் செடி. போனவாரம் அறுவடை செய்து, பாட்லக் டின்னருக்கு செய்த வெஜிடபிள் பிரியாணியில் உபயோகப்படுத்தியாயிற்று.
Wow.. Biriyani romba super ra iruku... basmathi rice naan romba alasa maathen.. Oru thanni thaan poothu alasuven. Romba alasinal vaasanai + rice odaithu vidum endru ennaku neenaipo.. Varum sunday intha biryani thaan seiya poohiren...
ReplyDeleteஆஆஆஆவ் சூப்பர்ர்... வெஜ் பிராணிக்கும் தயிர் சேர்ப்பது இப்பத்தான் நேக்குத் தெரியும்... அதுசரி ஸ்டைலா புதினாச் செடியைப் படம் போட்டீங்க.. ஏன் இனிசி, உள்ளி, பிரியாணி இஅலிச் செடி.. இவற்றையும் வளர்த்து படம் போட்டிருக்கோணும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எங்கிட்டயேவா....:))
ReplyDeleteஆனாலும் புதினா நல்லா செழிச்சு வளருதே.. நீடூழி வளர வாழ்த்துகிறேன்ன்ன்ன்ன்:).
super and yum dum briyani
ReplyDeleteசிநேகிதி, எந்த அரிசின்னாலும் தண்ணில போட்டு 2-3 நிமிஷம் வைச்சுட்டு அப்புறமாதான் 2-3 முறை அலசி ஊறவைப்பேன். இதுவரை பாஸ்மதி அரிசியை அலசினால் வாசனை போயிரும் என்று நான் யோசிச்சதே இல்லைங்க! :)
ReplyDeleteஉடைஞ்சுரும்ங்கறது கரெக்ட்டுதான், ஆனா கவனமா அரிசியை கசக்காமதான் அலசி எடுப்பேன், நீங்களும் ட்ரை பண்ணிப் பார்த்து சொல்லுங்க, வாசனை இருக்குதா இல்லையா என்று!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
அதிராஆஆஆஆவ்! வாங்கோ! ரொம்ப தயிர் சேர்க்கக் கூடாது, கொஞ்சமாய்ச் சேர்த்தால் சுவையாய் இருக்கும், முயற்சித்துப் பாருங்க. :)
//ஏன் இனிசி, உள்ளி, பிரியாணி இஅலிச் செடி.. // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இனிசி;) செடி ஊரில அம்மா வீட்டில இருக்குது..உள்ளியும் கூட போனவருஷம் வளர்த்தேன், பிரியாணி இஅலிச் செடி (உங்களுக்கும்) தெரிஞ்ச ஒரு ஆளிடம் இருக்குது, எல்லாஆஆஆஆச் செடியும் போட்டோ எடுத்துப் போட்டுருவேன், ஜாக்கிரத! ;) ;)எங்கிட்டயேவாஆஆஆ? :))
//நீடூழி வளர வாழ்த்துகிறேன்ன்ன்ன்ன்:).// புதினாப் பிள்ளை:) சார்பாக நன்றிகள்! :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிராவ்வ்வ்வ்வ்வ்!
~~
அனு, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!
~~
veg piriyaani padangalum vilakkamum nallaa irukku seythu paakkanum
ReplyDeletesuper and easy briyani , i love read your posts as it was like talking directly
ReplyDeletesharanya sara's Tasty Buds
Drooling here..super a irukku..
ReplyDeleteஆகா... சூப்பரா இருக்கு... செயல்முறை விளக்கத்திற்கு நன்றி...
ReplyDeleteSuper Briyani... I can feel the smell now :P
ReplyDeletehttp://recipe-excavator.blogspot.com
சூப்பர் மகி... your biriyani & புதினாச் செடி...
ReplyDelete//ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன் ரெசிப்பிக்கு இங்கே க்ளிக்கவும்./// சுருக்கமா எழுதறதுக்கு உங்களுக்கு எப்படி மனசு வந்ததுன்னு ரொம்ப கவலையாக இருந்தது.... இந்த வரி சமாதானப்படுத்திடுச்சு..;-))
Super biryani, craving for biryani now
ReplyDeleteசெய்து பார்த்திட தூண்டும் சுலபான ருசியான நல்ல குறிப்பு!
ReplyDeleteமகி....பொதுவாவே அரிசியை தண்ணியில ஊறவைச்சுதான் சமைப்பீங்களோ? இல்லை இப்படி ஸ்பெஷல் ஐட்டத்துக்கு மட்டுமோ?
ஏன்னா.. நான் பொதுவாவே ஊறவைக்கிறதெல்லாம் இல்லை. நல்...லா அலசீட்டு ரைஸ்குக்கரில் போட்டேனா , போனேனா.. அவ்ளோந்தான்......:)))
புதினாவும் நல்லா இருக்கு. இருக்கோணும்...;)
பகிர்வுக்கு ரொம்ப நன்றி மகி!
மஹி... இமாவின் உலகிலும்... வெஜிடபிள் பிரியாணி.
ReplyDeletehttp://imaasworld.blogspot.co.nz/2012/11/blog-post_27.html
பூஸோ கொக்கோ.. என்பக்கத்திலும் பொயிங்கிட்டேன்:)) வெஜிடபிள் பிர்ர்ர்ர்ராஆஆணிதேன்:))
ReplyDeletehttp://gokisha.blogspot.co.uk/2012/11/blog-post_27.html
பிரியாணி செய்முறை எல்லாம் மிக அருமையாக கொடுத்திருக்கிறீங்க மகி. நான் இதுவரை செய்ததுபார்த்ததில்லை. உங்க ரெசிப்பி முயற்சி செய்து
ReplyDeleteபார்க்கனும். நானும் ஒருமுறைதான் அலசுவேன். ஊறவிடுவது ஒருமுறை நான் ரைஸ்குக்கரில் போட்டுவிட்டு மறந்துட்டேன்.ஆனா அன்று ரைஸ் நன்றாக வந்தது. அதன் பின் 2நிமிஷம் விடுவேன்.
என்னிடமும் புதினா இருக்கு. என்னோட பாட்லக் இப்ப குளிருக்கு தண்டுகள்தான் இருக்கு.சம்மருக்கு பார்க்கலாம்.
லஷ்மிம்மா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா! கட்டாயம் செய்து பாருங்க.
ReplyDelete~~
சரண்யா, முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! :) ஒண்ணு சொல்லட்டுமா உங்களுக்கு? நேரில் பார்த்தீங்கன்னா நான் ரொம்ப ரொம்ப அமைதியான பொண்ணு, அதிகமா பேசமாட்டேன்! ;) அதையெல்லாம் சேர்த்து வைச்சு இங்க எழுதித் தள்ளிடறேன். :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
ரம்யா, அடுத்த பாட்லக்-க்கு பிரியாணி செய்து அசத்திருங்க! :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
தனபாலன், வீட்டில் செய்து பார்க்கச் சொல்லுங்க, நன்றி!
~~
சங்கீதா, கரெக்ட்டு! வீடே மணக்கும் பிரியாணி செய்துமுடிச்சு, அது காலியாகும் வரை. கருத்துக்கு நன்றி!
~~
//சுருக்கமா எழுதறதுக்கு உங்களுக்கு எப்படி மனசு வந்ததுன்னு ரொம்ப கவலையாக இருந்தது..// பானு, இதையப் படிச்சு பிழியப் பிழிய அழுதுட்டணுங்க! ;)))))))) உங்கள மாதிரி நல்ல்ல்ல்ல்ல மனசு வேற யாருக்கு வரும்?! :)
முதலே செய்த படங்கள், லிங்க் எல்லாமே கைவசம் இருந்தது, அதனால இப்படி குறுக்கு வழிய யோசிச்சுட்டேன். :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பானு!
~~
ஜெயஸ்ரீ, செய்து பாருங்க, சூப்பரா இருக்கும் பிரியாணி! :)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
~~
//மகி....பொதுவாவே அரிசியை தண்ணியில ஊறவைச்சுதான் சமைப்பீங்களோ? இல்லை இப்படி ஸ்பெஷல் ஐட்டத்துக்கு மட்டுமோ? // இளமதி, எப்பவுமே அரிசியைக் களைந்து அரைமணி ஊறவிட்டுத்தாங்க சமைப்பேன். சாதாரண வெள்ளை சோறுன்னாலும் சரி, இப்படி பிரியாணி-புலாவ் வகைகளானாலும் சரி, அரிசியை ஊறவைத்து சமைப்பதுதான் வழக்கம். எங்க வீடுகளில் பலகாலமா இப்படித்தான் செய்வோம். நீங்களும் இனிமேல் செய்து பாருங்க, வித்யாசம் தெரியும். இந்த முறையில் செய்தால் சாதம் நல்லா இருக்கும்.:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இளமதி!
~~
இமா, தேங்க்ஸ் ஃபார் the free publicity! ;) :)
~~
//பூஸோ கொக்கோ..// பூஸொன்று புயலானது தெரியும், இப்ப கொக்கும் ஆகிட்டதோ? அவ்வ்வ்...
சும்மா சொல்லக்குடாது அதிராவ், உங்க பக்யார்ட்;) புதினாப்பிள்ளை சும்மா கொழுக்-மொழுக்னு இருக்கார். நீடூழி வாழ வாழ்த்துகிறேன். :)
~~
அம்முலு, பிரியாணி செய்து பாருங்க. வின்டருக்கு சுடச்சுட சாப்பிட சூப்பரா இருக்கும். :)
அரிசியை ஊறவைத்து சமைத்தால் சோறு நிறையவும் ஆகும், நல்லாவும் இருக்கும் அம்முலு, ஆனா // 2நிமிஷம்// பத்தாது, அட்லீஸ்ட் 20 நிமிஷமாவது விடுங்க!
பிரித்தாணியாப் புதினா நல்லா இருக்கே, உங்க ஊர்ப் புதினா ஏன் தண்டுகள் மட்டும் இருக்கு, பத்திரமா வீட்டுக்குள்ள வைச்சு பார்த்துக்குங்க. :)
வருகைக்கும், கருத்துக்கும், ஜெர்மன் பற்றீய என் கேள்விகளுக்கு பொறுமையா பதிலளித்தமைக்கும் மிக்க நன்றி அம்முலு!
~~
Super recipe. Bake this biryani for 45 - 60 minutes.....isn't it correct?? Next time I will bake mine for a longer period of time. I normally bake for only 15 minutes.
ReplyDeleteமகி,
ReplyDeleteஇம்முறையில் இதுவரை செய்ததில்லை.அடுத்த முறை செய்யும்போது இம்முறையில் செய்துவிடுகிறேன்.
புதினாவைப் பார்க்கும்போதே வாசனை வருகிறது.
வானதி, ஆமாம் 45 நிமிஷம் பேக் செய்யுங்க. அரிசி அளவு குறைவா இருக்குன்னா, அரைமணி நேரம் பேக் பண்ணிட்டு அவன்-ஐ ஆஃப் பண்ணி, 15 நிமிஷம் கழிச்சு பிரியாணியை வெளியே எடுங்க.
ReplyDeleteஅதிக அளவில் செய்வதாக இருந்தால் ஒரு மணி நேரம் கூட பேக் செய்யலாம். 15 நிமிஷம் பத்தாதுன்னு நினைக்கிறேன். நான் ட்ரை பண்ணதில்லையே! :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானதி!
~~
சித்ராக்கா, செய்து பாருங்க. சூப்பரா இருக்கும்.
/புதினாவைப் பார்க்கும்போதே வாசனை வருகிறது. // ஆஹா!! :)))) நன்றி! :)
~~
அருமையான பிரியாணி, வாவ் ஃப்ரெஷ் புதினா..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியாக்கா!
ReplyDeleteமஹி, நானும் தீபாவளி potluck-ku வெஜிடேபிள் பிரியாணி செஞ்சேன். எனக்கு ஓவன் முறை தெரியாது. கண்டிப்பா ஒருமுறை ட்ரை செய்றேன்.
ReplyDeletemeeeeeeeeeee the firstu...enakuthan priyanii..
ReplyDeleteதயிர் - கால் கப்??
ReplyDeletewhy should add this?
மீனாக்ஷி, ட்ரை பண்ணிப் பாருங்க, நல்லா இருக்கும்!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
சிவா, உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் பார்ஸல் போட்டுட்டாப் போச்சு,டென்ஷன் ஆகாதீங்க!
/why should add this? / மசாலா எல்லாம் காய்கறியில் பிடிக்க தயிர் ஹெல்ப் பண்ணும், மாரினேட் பண்ணும் ரெசிப்பி எல்லாத்துலயுமே மோஸ்ட்லி தயிர் சேர்த்துதான் செய்வாங்க, சிவா கவனிச்சத்தில்லையோ? ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா!
~~
நான்தான் ரொம்ப லேட். கமகம பிரியானி பண்ணிப் பார்க்கணும். நன்னா வாஸனையாயிருக்கு!
ReplyDeleteSo tasty and simple dish
ReplyDelete