Saturday, December 29, 2012

திருவாதிரைக் களி

தேவையான பொருட்கள்
பச்சரிசி-1/2கப்
பாசிப்பருப்பு-2 டேபிள்ஸ்பூன்
வெல்லம்- 1/2 கப்
தேங்காய்த்துருவல்-2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்-1
முந்திரி-7
நெய்-2டேபிள்ஸ்பூன்
உப்பு-1/4டீஸ்பூன்

செய்முறை 
அரிசி-பாசிப்பருப்பை வெறும் கடாயில் லேசாக வறுத்துக்கொள்ளவும். அரிசி-பருப்பு ஆறியதும் மிக்ஸியில் ரவை  போல பொடித்துக்கொள்ளவும்.
வெல்லத்தை கொஞ்சமாக தண்ணீர் விட்டு சூடாக்கி, கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும். (வெல்லத்தண்ணீர் ஒரு கப் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.) குக்கரில் அரை கப் தண்ணீர் + வெல்லத்தண்ணீர் சூடாக்கவும். தண்ணீர் கொதிவந்ததும் உப்பு சேர்த்து தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.
உடைத்த அரிசி-பருப்பை சேர்க்கவும். குக்கரை மூடி 2 விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
நெய் காயவைத்து முந்திரியைப் பொன்னிறமாக வறுத்து களியில் சேர்க்கவும், ஏலக்காய் பொடித்து சேர்த்து கலந்துவிடவும்.
  திருவாதிரைக் களி தயார்.

18 comments:

  1. மஹி இந்த வாட்டி நான் களி பண்ணவே இல்லே. உன் பக்கம் வந்து ஆசை தீர எடுத்துகிட்டேன்மா/

    ReplyDelete
  2. ரொம்ப ரொம்ப டேஸ்ட்டா இருந்தது.

    ReplyDelete
  3. திருவாதிரைக்கு ஒரு வாய் களின்னு சொல்லுவாங்க...ஒரு வாய் இல்ல முழுசும் சாப்பிடனும் போல இருக்கு..

    ReplyDelete
  4. ரவை மாதிரி உடைக்காம நல்லா மாவா பொடிச்சு செய்தாலும் களி தளர்வா மிருதுவா இருக்குது மகி..:)

    ReplyDelete
  5. வெகு சுலபமாக திருவாதிரைக்களி செய்து காட்டி விட்டீர்கள் மகி.

    ReplyDelete
  6. சுவையான திருவாதிரை களி பதிவுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. ஆஹா...திருவாதிரைக்களி...:)
    சூப்பர் மகி...

    நான் எங்கம்மா சொல்லித்தந்தபடி பாசிப்பருப்புக்கு பதில் கோதில்லாத உழுத்தம்பருப்பு சேர்த்து இப்படி வறுத்துச் செய்கிறேன்.
    தேங்காய்பூவாக இலாமல் நல்ல திக்கான தேங்காய்ப்பாலாக சேர்ப்பது வழமை.

    உங்கமுறையிலும் செய்து பார்க்கணும்.
    மிக்க நன்றி மகி பகிர்வுக்கு...:)

    ReplyDelete
  8. திருவாதிரைக்களி செய்ய விருப்பம். ஆனா ஒருத்தங்க சொன்ன குறிப்பைக் கேட்டு அதை நினைத்துப் பார்க்கவே இல்லை. நீங்க என்னடான்ன இவ்வளவு
    ஈசியா இருக்கே எனநினைக்கவைத்து,உறங்கிகிட்டிருந்த லயனையும் தட்டிவிட்டிட்டீங்க ரெம்ப நன்றி மகி.

    ReplyDelete
  9. படம் பார்க்கா சாப்பிட ஆசையா இருக்கு. மகி... சின்னதா ஒரு பார்சல் ப்ளீஸ்.

    ReplyDelete
  10. நல்லாருக்கும் போலிருக்கே!

    ReplyDelete
  11. ஆஹா சூப்பர் மகி.. இதை நிட்சயம் செய்து பார்ப்பேன்ன்.. நாளைக்கு வெள்ளைப்பொங்கல் செய்யலாம் என கனவு காண்கிறேன் புதுவருஷத்துக்கு:) பார்ப்போம்.

    ReplyDelete
  12. களி மிகவும் அருமையாயிருக்கு. போட்டோக்கள் அதைவிட அருமை.

    ReplyDelete
  13. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், மகி!

    ReplyDelete
  14. களி செஞ்சு சாப்டாச்சா!நான்தான் தாமதமாக வந்துவிட்டேன்.குக்கர்ல வச்சு எளிதாக்கிட்டீங்க. படங்களுடன் அழகா வந்திருக்கு.

    ReplyDelete
  15. மகி இந்த களியை முதல் முறை நேற்று செய்தபோது சூடாக இருந்த சமயம் soft-ஆக இருந்தது. ஆனால் ஆறிய பின் hard-ஆக ஆகிவிட்டது.அப்படிதான் இருக்குமா இல்லை என் தண்ணீர் அளவு குறைவினால் hard-ஆக ஆகிவிட்டதா? நன்றி.

    ReplyDelete
  16. Anony, I have used Basmati rice, and this is the quantity I used. Mine was like pongal, and it was soft.
    You might have used different rice variety or old rice. You have to increase the water quantity accordingly...you can increase the amount of ghee as well. Do try it n let me know.
    Thanks for the comment.

    ReplyDelete
  17. Oh yeah, I used sona-masoori rice.Thanks for letting me know. I'll try next time with more water or basmati rice.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails