Thursday, March 14, 2013

என்ன பெயரிட்டு அழைக்க?..

குறிப்பிட்டுப் பெயரிட முடியாதபடி இந்தப் பதிவில் அதுவுமிதுவாக பல இருப்பதால் என் மனதில் தோன்றிய கேள்வியே டைட்டிலாக அவதாரம் எடுத்துவிட்டது. :) கடந்த வெள்ளியன்று காலையில் எழுந்தபோதே இரவெல்லாம் மழைபெய்து கழுவிவிடப்பட்ட பூமி புதிதாகப் பளபளத்துக் கொண்டிருந்தது. சூரியனும் பளிச்சென்று வரவும், பஸிஃபிக் கடல் பக்கமாய் வானவில்லில் பாதியையும் பார்க்கமுடிந்தது. 
அன்று முழுவதுமே மழை வரும் என்ற வானிலை அறிவிப்பும் ஏற்கனவே வந்திருந்தது.  வண்ணங்கள் குழைத்த வானவில் வந்து கட்டியம் கூற ஆலங்கட்டி மழை வந்து தாலாட்டிப் போனது. :)
முன்பே ஒருமுறை இந்த Hail Stones வந்திருந்தாலும் இவ்வளவு அதிகமாக விழவில்லை, விழுந்தவையும் சில நிமிடங்களில் கரைந்தே போயின. ஆனால் இந்த முறை கிட்டத்தட்ட பனிப் பொழிவு போல ஆங்காங்கே  பனிக்கட்டிகள் படர்ந்துகிடந்தன. 
 அன்று மாலை வரையிலும் கூடக் கரையாமல் அப்படியே ஜவ்வரிசிகளைப் போல கொட்டிக் கிடந்த ஹெய்ல் ஸ்டோன்ஸ்...
அடுத்தநாள் காலையில் தொட்டிச் செடிகளைப் பார்க்கிறேன், ஆலங்கட்டிகள் கரைந்து போயிருந்தாலும் அவற்றின் தடம் இந்தச் செடியில் சற்று அழுத்தமாகவே படிந்திருந்தது.
  ~~~
எனக்குப் பிடித்த மஞ்சப் பூ! :) 
பூக்களைப் படமெடுக்க எனக்குச் சொல்லவே வேண்டாம், அத்தனையையும் இங்கே பதிவிட்டு உங்களைப் படுத்தியெடுக்காமல், ரெண்டே ரெண்டு படங்கள்! :)
~~~
கண்ணுக்கு உணவு வழங்கியாயிற்று, அடுத்தபடியாக வயிற்றும் சிறிது ஈந்துவிடுவோம். :)  
இது வடஇந்திய உணவு. "பனீர் மக்கன்வாலா & ரொட்டி"
இது தென்னிந்திய உணவு."செட்டிநாட்டு பக்கோடா குழம்பு, சோறு, உருளைக் கிழங்கு கறி"
இரண்டிற்கும் சமையல் குறிப்புகள் அடுத்து வரும் பதிவுகளில் எதிர்பாருங்கள். நன்றி! :)

15 comments:

  1. Romba azhaga iruku mahi ! Beautiful cliks too... Yellow flower ivalo fresh'ah parthate illa... Thanks for sharing...
    http;//recipe-excavator.blogspot.com

    ReplyDelete
  2. ம். ;) இருக்கிற செடி குறைவு, அதால ஹாயாக 'தடங்கள்' படம் போட்டு இருக்கிறீங்க. சில சமயம் விளைவுகள் கொடூரமாக இருக்கும். ;(

    தலைப்பு! ம்... தனபாலன் சொல்லி இருக்கிற தலைப்பு பொருத்தம்.

    ReplyDelete
  3. வானவில் நீங்கள் எடுத்த படமா ?மிக அழகு பூக்களும் அழகு

    ReplyDelete
  4. VIBGYOR !!!!!! சூப்பர்:))

    மஞ்சள் பூ எல்லாவற்றையும் விட சூப்பரோ சூப்பர் ..
    இந்த ஆலங்கட்டிகள் சில நேரம் கல்கண்டு ஷேப் சிலநேரம் குட்டி கோலிகுண்டு ஷேப்பெல்லாம் விழும் ..
    எனக்கு பகோடா குழம்பு வேணும் :))

    ReplyDelete
  5. Nice pictures Mahi, and the pakoda kuzhambu and urulai kizhangu curry is making me hungry now..

    ReplyDelete
  6. வானவில்லின் நிறமெடுத்து
    மேகமென்னும் வெண் திரையில்
    மின்னலென்னும் தூரிகையால்
    நான் வரைந்த கோல(மெ) மிது....
    பழைய பாடல் நினைவுக்கு வந்தது வானவில்லைப் பார்த்ததும்...முரசு தொலைகாட்சிக்கு நன்றி!

    கண்ணுக்கும் நல்விருந்து, வயிற்றுக்கும் சுவையான விருந்து....

    ReplyDelete
  7. தூரத்தில் வானவில்லைப் பார்க்கும்போது கலர்ஃபுல் டொர்னடோ ஒன்று,ஒரு ஊரைப் பதம் பார்த்துக்கொண்டு வருவதுபோல் உள்ளது.மஞ்சள் சாமந்தி சூப்பரா இருக்கு.

    உங்க ஊர் ஆலங்கட்டி மழைபோல் எங்க ஊர் ஸ்னோவைப் போட்டுவிடுகிறேன்.சாப்பாடு எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்ட‌து.

    ReplyDelete
  8. Super rainbow and hail stone rain.

    ReplyDelete
  9. வானவில்லே !வானவில்லே! என்று பகிர்வைப் பார்த்தவுடன் பாடத்தோன்றுகிறது..பகிர்வு அட்டகாசம்..

    ReplyDelete
  10. ஹைய்ய்யோ... அழகென்றால் அப்படி அழகு.
    வானவில் அழகு...
    ஆலங்கட்டி அழகு...
    மஞ்சள் மலரழகு...
    மகி எடுக்கும் படங்கள் அழகு, பதிவு அழகு, சமையல் அழகு...
    நீங்கள் எம்முடன் பழகும், பகிரும் விதம் அழகோ அழகு...
    வாழ்த்துக்கள் அழகே!

    ReplyDelete
  11. என்ன பெயரிட்டழைக்க? அழகே நான் உன்னை ஆராதிக்கிறேன். என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஆலங்கட்டி மழை,அருமையான வானவில்
    அழகுப் பூக்கள், விருப்ப சாப்பாடு எல்லாம் கண்ணைக் கட்டுகிரது.

    ReplyDelete
  12. Never seen hailstorm in my life. But atleast i am able to see the trace it had left through your post Mahi. :) thanks for sharing.

    The yellow flower is so cute. I too love it very much.

    The vibgyor! wow! what a beauty!

    Thanks for the Regional Treat :-)

    ReplyDelete
  13. தனபாலன், நன்றிங்க!
    ~~
    சங்கீதா, கருத்துக்கு நன்றிங்க! நம்ம ஊரில இதை விட ப்ரெஷ் செவ்வந்திப் பூக்கள் இருக்குமே..என்ன ஒண்ணு, இப்படி பூங்கொத்தா விற்பனைக்கு வருவது குறைவு. பூக்களா பறிச்சு விற்பாங்க. :)
    ~~
    //இருக்கிற செடி குறைவு, அதால ஹாயாக 'தடங்கள்' படம் போட்டு இருக்கிறீங்க. சில சமயம் விளைவுகள் கொடூரமாக இருக்கும். ;( // பயமுறுத்தாதேள் இமா! ;) :) இவையெல்லாம் நம்ம கன்ட்ரோலில் இல்லாத நிகழ்வுகள்! தொட்டிச் செடிகள்னா பத்திரமா மாத்திவைக்கலாம், மண்ணில் வைச்ச செடிகளை என்ன செய்யமுடியும்?! ம்ஹூம், எல்லாம் இயற்கையன்னையின் கைவண்ணம்!

    /ம்... தனபாலன் சொல்லி இருக்கிற தலைப்பு பொருத்தம்./ :) நன்றி! :)
    ~~
    /வானவில் நீங்கள் எடுத்த படமா ?/ மலர், இப்படில்லாம் எடக்குமொடக்கு கேள்வி கேக்கறீங்களே, நியாயமா?;) நான் எடுத்தா என்னங்க..என் கணவர் எடுத்தா என்னங்க? எல்லாமே எங்க:) படம்தானே! ஹிஹிஹி... :))) ஆனாலும், உங்க கமென்ட்டை என்னவரிடம் காட்டிட்டேன். ;)

    மஞ்சள் பூ நான்தான் க்ளிக்கினேன். நன்றிங்க!
    ~~
    /ஆலங்கட்டிகள் சில நேரம் கல்கண்டு ஷேப் சிலநேரம் குட்டி கோலிகுண்டு ஷேப்பெல்லாம் விழும் ../ ஆமாம் ஏஞ்சல் அக்கா! ஊரில நானும் அந்த சைஸ்ல ஆலங்கட்டிகள் பார்த்திருக்கேன். இங்கே 2 முறை விழுந்தவையும் படத்திலிருக்கும் சைஸ்தான்! :)

    வானவில் படத்தை ப்ளாகில் போட்டு, நீங்க எல்லாரும் பாராட்டுவது என்னவருக்கு ரொம்ப சந்தோஷம்! :)

    பகோடா குழம்பு சீக்கிரமா போஸ்ட் பண்ணறேன். ஈஸ்டருக்கு செய்து அசத்திருங்க! :)
    கருத்துக்கு நன்றி!
    ~~
    ஹேமா, :) சீக்கிரமா 2 ரெசிப்பியும் போஸ்ட் பண்ணறேன்! கருத்துக்கு நன்றிங்க!
    ~~
    ரஞ்சனி மேடம், அழகான பாடல்! பகிர்ந்தமைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்!
    ~~
    /தூரத்தில் வானவில்லைப் பார்க்கும்போது கலர்ஃபுல் டொர்னடோ ஒன்று,ஒரு ஊரைப் பதம் பார்த்துக்கொண்டு வருவதுபோல் உள்ளது./ ஆஹா! நானே பஸிஃபிக் கடல் பக்கத்தில் இருந்து சுனாமி வருமோ என சந்தேகப்பட்டுகிட்டே இருக்கேன், இதில நீங்க வேற டொர்னடோ-னெல்லாம் கிளப்புறீங்களே சித்ராக்கா! ;) :)

    அட, உங்கூரில ஸ்னோ வந்துச்சா? படம் போடுங்க. பூக்களை, சாப்பாட்டை ரசித்து கருத்துச் சொன்னதுக்கு நன்றி!
    ~~
    வானதி, நன்றி! :) அப்பப்ப இப்படியே எட்டிப்பாருங்க, என்ன? ;)
    ~~
    ஆசியாக்கா, பாட்டு ஜூப்பர்ர்ர்ர்ர்ர்! கருத்துக்கு நன்றி! :))
    ~~
    ஐ..இளமதி, கவிதையிலேயே வாழ்த்திக் கருத்துச் சொன்னமைக்கு மிக்க நன்றி கவிஞியே! :)
    ~~
    காமாட்சிம்மா, "அழகே உன்னை ஆராதிக்கிறேன்!" - சூப்பரான தலைப்பா இருக்கே..வருங்காலத்தில் ஏதாவதொரு பதிவுக்கு உபயோகப்படுத்திக்கீறேன். நன்றிமா! :)
    ~~
    மீரா, நீங்க ஆலங்கட்டி மழை பார்க்கவே இல்லையா? உங்களுக்கு அதை போட்டொவில் காட்டியது குறித்து மகிழ்ச்சிங்க! :)

    வருகைக்கும், எல்லாப் படங்களையும் ரசித்து கருத்து சொன்னமைக்கும் மிக்க நன்றி மீரா!
    ~~

    ReplyDelete
  14. Nice pictures and comments Mahi, pakada kulambu is new to me. waiting for ur next post :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails