Friday, March 1, 2013

ஸ்கோனும், நானும்!

என்னங்க,  தமிழ்ப்பட டைட்டில் மாதிரி இருக்குதா? :) இருக்காதா பின்னே...பல்வேறு தடங்கல்களுக்கப்புறமும் விடாமுயற்சியோட போராடி...இருங்க, ரொம்ப எமோஷனல் ஆகப்புடாது, உடம்புக்கு கெடுதி!...இப்பவே சொல்லிடறேன், இது(வும்) ஒரு மொக்க பதிவுதான். சிரிச்சு சிரிச்சு கண்ணீர் வரப்போற கண்ணும், வலிக்கப்போற உங்க வயிறும் ஜாக்கிரதைஐஐஐஐஐ! :)))))

எதோ உலகசாதனை லெவலுக்கு பில்ட்-அப் குடுத்துட்டு நான் சொல்லப்போறது ஒரு சமையல் குறிப்பு! அதனால வானத்தில் பறந்த உங்க கற்பனைக் குதிரையக் கட்டுப்படுத்தி உங்க சமையலறைக்குள்ளாற கொணாந்து பார்க் பண்ணுங்க, பார்ப்போம்! :) [ஆஹா..மகி, நீ இப்படில்லாம் எழுதி, குதிரை கடிக்கறமாதிரி கனவெல்லாம் வரப்போகுது உனக்கு! ;) ]

பதிவப் படிச்சுப்புட்டு "ச்சீ,ச்சீ, இந்தப் பயம்:) புயிக்கும்:)" அப்படின்னு ரெசிப்பிய செய்ய தயங்கிராதீங்க. உங்களுக்கு எந்ந்ந்ந்ந்ந்ந்த இடைஞ்சலும் வரப்படாது-அப்படின்னுதான் நான் எல்லா ஆராய்ச்சிகளையும் பண்ணி விஸ்வரூப வெற்றியடைஞ்சிருக்கேன். அதனால இந்தப் பதிவு காமெடிக்கு மட்டுமே என எடுத்துக்குங்க. ரெசிப்பி விரைவில தனிப் பதிவாப் போட்டுத் தாக்கிடறேன்.[விடாஆஆஆது கருப்பு!...:)]

அடடா, குதிரையப் பார்க் பண்ணீட்டு ரெம்ப நேரமா நிக்கிறீங்களே, வாங்க! வந்து டைனிங் டேபிள்ல வசதியா உக்காருங்க..களைப்புத் தீர ப்ரேக்ஃபாஸ்ட் சாப்டுங்க..பயமில்லாம சாப்புடலாம்[நான் செய்யல],  பனீரா ப்ரெட்ஸ்-ல இருந்து வந்திருக்கு. :)
பனீரா ப்ரெட்ஸ் - வடஅமெரிக்கா மற்றும் கனடாவில்  பிரபலமான ஒரு செய்ன் ஆஃப் பேக்கரி, கஃபே, ரெஸ்டாரன்ட்டுங்க.  சமீபத்தில் ஒருநாள் அங்கே போய் மேலிருக்கும் தட்டை காலி செய்தது நானேதான்! :) அதில அந்த ரவுண்டா  உளுந்து வடை ஷேப்ல இருக்கே, அந்த ஹாலப்பினோ பேகல்- எல்லாம் வேண்டாம், பக்கத்தில ஒரு வஸ்து:) உட்காந்திருக்கே, அதான் இன்னிக்கு போஸ்ட்டோட கதாநாயகி/கதாநாயகன்??! ;) 
இவருக்குப் பேர் "சின்னமன் சிப் ஸ்கோன் [Cinnamon Chip Scone]". ஸ்கோன் எனப்படுவது யாதெனின், யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்! :)))))) கோவப்படாதீங்க! சும்மா டமாசு! :)))) 

Scone  என்பது கொஞ்சமா இனிப்பு போட்ட கேக்/ க்விக் ப்ரெட்..டீ டைம்ல, ப்ரேக்ஃபாஸ்ட் டைம்ல உண்ணப் படுவது. இதைப் பற்றி நான் கேள்விப்பட்டிருந்தாலும் இதுவரை ருசிக்கும் வாய்ப்பு கிடைக்கலை. அன்று பனீரா ப்ரெட்-ல அதிர்ஷ்டவசமா என் கண்ணில பட்டுச்சு, "ஏனுங், இதொண்ணு வாங்கி குடுங்.." -னு எங்கூட்டுக்காரர்கிட்ட கேட்டனுங்களா, அவரும் வாங்கிக் குடுத்தாருங்கோ. பிச்சு ஒரு வாய் வாயில போட்டனா...ஆஹா!! செம ருசியா இருந்துச்சு. பிறகு மறுபடி ஒருமுறை போனப்ப நான் என்ன வாங்கி சாப்பிட்டிருப்பேன் அப்படின்னு கஷ்டமான கொஸ்டின் எல்லாம் உங்ககிட்ட கேக்க மாட்டேன். கவுன்ட்டருக்குப் போனேன், ஒரே ஒரு சி.சி.ஸ்கோன் குடுங்க அப்படினு அதய மட்டும்ம்ம்ம் வாங்கி சாப்பிட்டேன். எங்காத்துக்காரர் "இப்படியும் ஒரு ஜந்து!"-ங்கறமாதிரி ஓரப்பார்வை பாத்துகிட்டே சான்ட்விச் சாப்ட்டாரு. 

வீட்டுக்கு வந்தப்புறம் கை கம்முன்னு இருக்குமா?  இன்டர்நெட்டில தேட ஆரம்பிச்சேன், ஒரே தேடல்ல இந்த வலைப்பக்கம் கிடைச்சது. இவ்ளோ ஈஸியா ரெசிப்பி கிடைச்சிருச்சேன்னு படிக்க ஆரம்பிச்சேன், அப்பதான் "சின்னமன் பேக்கிங் சிப்ஸ்" அப்படின்னு இருந்ததை கவனிச்சேன்.  சாக்லட் சிப்ஸ் - பட்டர் ஸ்காட்ச்  சிப்ஸ் இவையெல்லாம் பார்த்திருக்கேன், ஆனா இதுவரை சின்னமன் பேக்கிங் சிப்ஸ் கேள்விப்படவே இல்லை. அவ்வ்வ்வ்வ்வ்வ்! 

பொறகென்ன?  அதுக்கு ரெசிப்பியத் தேடினேன். அதிகம் தட்டுப்படாமல் ஒண்ணு-ரெண்டு கிடைச்சிது. அங்கே காத்திருந்தது இன்னொரு ஆப்பூ! :) தேவையான பொருட்கள்-ல "லைட் கார்ன் ஸிரப்" இருந்தது. அதெல்லாம் நான் இதுவரை வாங்கினதில்லீங்க. கடைக்குப் போகவும் வாய்ப்பில்லை. வாட் நெக்ஸ்ட்? "லைட் கார்ன் ஸிரப் ஸப்ஸ்டிட்யூட்" என்று கூகுளைத் தட்டியதில் காதில, ச்சே, கண்ணில தேன் பாய்ந்தது! :) ஆமாம் தேனேதான் ஸப்ஸ்டிட்யூட்! ஸோ, முஷ்டிய மடக்கிட்டு களத்தில குதிச்சேன்.  
படங்களில் எண்கள் அங்கங்க இருக்கு, உங்களுக்கு 1-2-3 தெரியும்தான? அந்த வரிசப்படி பாக்கோணும்.  பட்டை  தூள்-சர்க்கரை-வெண்ணெய்-தேன் இந்த நாலு ஐட்டத்தையும் கலந்து, பேக்கிங் ட்ரேல பரப்பி, சதுரமாத் தட்டி, 200F-ல ஒரு அரைமணி நேரம் bake செய்யணும்ங்க. படம் -7 ல இருக்க மாதிரி அவுட்கம் வரும். அது கொஞ்சம் ஆறினதும் பிஸ்ஸா கட்டர்/ கத்தியால குறுக்கும் நெடுக்குமா கோடுகள் போட்டு வைச்சிருங்க. நல்ல்ல்ல்ல்லா ஆறினதும் சின்ன சதுரங்களாப் பிச்சு எடுத்தா சின்னமன் பேக்கிங் சிப்ஸ் ரெடி! :) :) 

இதையெல்லாம் செய்து முடிக்க வெள்ளிக்கிழம சரியாப் போச்சா, சனிக்கிழம ப்ரெக்ஃபாஸ்டுக்கு ஸ்கோன் செய்யலாம்னு ஆர்வமா எழுந்து வந்தேன். மாவு-பேக்கிங்பவுடர்-உப்பு-பேக்கிங் சோடா-சர்க்கரை-வெண்ணெய் எல்லாம் பவுல்ல எடுத்து போட்டாச்.  பேக்கிங் சிப்ஸ் கொஞ்சம் கொழகொழன்னு இருக்க மாதிரி இருந்துச்சு. கொஞ்ச நேரம் oven-ல வைச்சா இறுகிரும்-அப்படினு ஒரு சாத்தான் மண்டைக்குள்ள உட்கார்ந்து வேதம் ஓதுச்சு, நானும் ட்ரேய அவன்ல வைச்சிட்டேன். அதிகமில்ல ஜென்டில்மென்/ வுமன், ஜஸ்ட் அஞ்சே நிமிஷம்!! ட்ரேய எடுத்தா........ஆஆஆஆஆஅ..ஆஆ! சிப்ஸ் எல்லாம் உருகி, மறுபடி படம் 7-ல இருக்க லெவலுக்கு வந்திருச்சு!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!! 

சுக்குநூறா ஒடஞ்சு போன மனசைத் திடப்படுத்திகிட்டு, மாவு போட்ட பாத்திரத்தை பத்திரமா மூடி ப்ரிஜ்ல வைச்சிட்டு, சின்னமனை ஆறவிட்டேன். அப்பதான் எழுந்து வந்த என்னவர், நான் செஞ்ச காமெடியக் கேட்டு கன்னா-பின்னான்னு சிரிச்சுட்டு, சிப்ஸ்-ஐ கொஞ்ச நேரம் ஃப்ரீஸர்ல வைச்சிருந்தா hard ஆகியிருக்குமே அப்படின்னு valuable suggestion கொடுத்தாருங்க. ஒடனே ட்ரேய ப்ரீஸர்ல போட்டு,  பிறகு அதை கட் பண்ணி, சிப்ஸாக்கி எடுத்து வைச்சு.

அடுத்தநாள் காலைல அவர் பைக்கிங் போனபிறகு  வெற்றிகரமா சின்னமன் சிப் ஸ்கோன் பேக் பண்ணி எடுத்தேன். ட்ரே-ய oven-la  இருந்து எடுக்கவும், என்னவர் வீட்டுக் கதவைத் திறக்கவும் சரியா இருந்துச்சு. 

"சுடச்சுட ஸ்கோன்.. சாப்பிடுங்க!"என்றதும் ஆச்சர்யத்தில மூழ்கிட்டார். இருக்காதா பின்னே? 24 மணி நேரம் முன்னே முசுமுசுன்னு மூக்கச் சிந்திகிட்டு இருந்த புள்ள, இப்ப சிரிச்சுகிட்டே ஸ்கோன் எடுத்துக் குடுத்தா?!! "அந்த ஸ்கோனை உனக்கு அவ்வ்வ்வ்வ்வளவு புடிச்சிருச்சாம்மா?"என்று கேட்டவாறே சாப்பிட்டார், ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார் அதுக்கப்புறம்! 
"HEAVENLY!" 
 இஸின்ட் இட் லவ்லி?! ;) :)
அவரே எடுத்துக் கொடுத்ததுதான் மேலேயுள்ள மற்றும் கீழே கொலாஜில் உள்ள  படங்கள் எல்லாமே!
 
நம்புங்க, நம்புங்க, பனீரா ப்ரெட் சி.சி.ஸ்கோன் டேஸ்ட்ல 95% வந்துருச்சு. ரெடிமேட் சின்னமன் சிப்ஸ் கிடைக்காததுதான் மீதி 5%க்கு காரணமே தவிர என் குற்றம்  எதுவுமே இல்லை! இங்கே கடைகளில் தேடியமட்டும் சின்னமன் பேகிங் சிப்ஸ் கிடைக்கலை. ஸோ ஹோம் மேட் இஸ் த பெஸ்ட் வே! ஸோ, நீங்க ரெடியா? ஸ்கோன் செய்வமா? 
:)))))))

21 comments:

 1. என் பொண்ணு ப்ளைன் ஸ்கோன்ஸ் செய்வா மகி ...இதை மொழிபெயர்த்து காட்றேன் அவளுக்கு ..

  அப்புறம்..குதிரையா ..இங்கே ஐரோப்பாவே குதிரைன்னா அலறுது ..:))

  ஹெவன்லி சின்னமன்ஸ்கோன்ஸ் அது சரி ;))...அப்ப லவ்லி யாரு;)) ;))) நான் கிரியை இந்த மாறி நேரத்தில்தான் மிஸ் செய்கிறேன் ரொம்பவே

  ReplyDelete
 2. நானே first :))

  ஆமாமாம் சும்மா ராசாவின் மனசிலே ஹீரோ கணக்கா இருக்கு ..அது கதாநாயகன் தான்

  ReplyDelete
 3. இவ்வளவு கஷ்டப்பட்டு ரெசிபி தேடி செய்து பார்த்து எல்லாருக்கும் சொல்லியிருக்கீங்க மகி..இந்த பதிவை பாத்து எனக்கு ஒரு ஐடியா கிடைச்சுட்டுது..:) ஆமா..மகி நானும் சோன் பப்டி ரெசிபி கூகுள் ல தேடினப்ப அதில கார்ன் சிரப் சேர்த்து செய்ய வேண்டியதா போச்சு..கார்ன் சிரப் இங்க கிடைக்காது. வேற வழி இல்லாம சோன் பப்டி செய்யலை. இப்பதான் அதுக்கு ஸப்ஸ்டிட்யூட்டா தேன் சேர்க்கலாம்னு சொல்லிட்டீங்களே.. சோன் பப்டி செய்து பார்த்திட வேண்டியதுதான்.

  ReplyDelete
 4. ha ha interesting akka... loved it...

  ReplyDelete
 5. akka , your introduction to the recipe was super . i like your humorous writing a lot...........

  ReplyDelete
 6. ம்ம்ம்ம்ம்ம்.... இந்த போஸ்ட்-க்குதான் நான் ரொம்ப வெயிட் பண்ணிட்டு இருந்தேன் மஹி. ஒவ்வொரு முறை க்ரோகர் மார்க்கெட் போகும்போது இது வாங்கி சாப்டு பாக்கணும்-னு ரொம்ப ஆசை. என்ன பொறுத்தவரை ரெசிப்பி ட்ரை பண்ணணும்ன அது சாப்டு பாத்து எப்டி இருக்கும்னு தெரிஞ்சாதானே நல்லா பண்ண முடியும். உங்க ச்கோன்ஸ் பெர்பெக்டா வந்துருக்கு மஹி. 'டு ட்ரை' லிஸ்ட்-ல இருக்கு. எப்ப நேரம் வருதுன்னு பாக்கலாம். ரெசிப்பி சீக்ரம் போடுங்க.

  ReplyDelete
 7. oops, park பண்ண குதிரையை மறந்துட்டேன்... போய்ட்டு வரேன்... {டொக்டொக்..டொக்டொக்..டொக்டொக்.... }

  ReplyDelete
 8. இங்கும் சின்னமன் நல்ல பேமஸ்.கிறிஸ்மஸ் காலத்தில் இப்படியான பேக் ஐட்டம்ஸ் நிறையகிடைக்கும். நீங்க செய்ததும்நன்றாக இருக்கு.
  நன்றாகவும்,நகைச்சுவையாகவும் எழுதியிருக்கிறீங்க கோவைப்பாஷையில்.

  ReplyDelete
 9. Very interesting blog!!! enjoyed reading it, waiting for the recipe. You should write a tamil novel.

  ReplyDelete
 10. மகி...அம்முலு சொன்னதையே நானும் றிப்பீட்டு...:)
  இங்கு நல்ல குளிர் காலத்தில் இதை அதிகம் வாங்கி உண்பார்கள். சினமனுக்கு ரத்தத்தை சூடாக்கிவிடும் தன்மை உண்டெனச் சொல்வார்கள். குளிர்காலத்தில் மிக அவசியமானதல்லவா.

  குறிப்பும் அருமை. அதைவிட உங்க டயலாக் அருமை. நல்ல நகைச்சுவை உணர்வுடன் அழகாக நல்ல ஒரு தேர்ந்த எளுத்தாளராக வரக்கூடிய திறமை வெளிப்படுகிறது. சிறப்பு. வாழ்த்துக்கள் மகி.

  உங்கள் எழுத்தின் ரசிகை நானாக்கும்...:)
  தொடர்ந்து இப்படி எழுதுங்கள். படிக்க ஆவல்...:)

  ReplyDelete
 11. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஒரு இம்மந்துண்டு ஸ்கோன் செய்ய இவ்ளோ சவுண்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. நான் அனியன் ஸ்கோன் செய்தனே, பஜ்ஜுலர்ஸ் ரெசிப்பியில் இருக்கு. என்பக்கத்தில் போட்டனா இல்லையா என மறந்துபோச்ச்ச்ச்ச்:))..

  சினமன் ஸ்கோன் சூப்பரா வந்திருக்கு.. அதை எங்க ஒழுங்கா ரெசிப்பி படிக்க விட்டீங்க:)... இடையிடையே... கிச்சுகிச்சு மூட்டினா எப்பூடியாம் படிச்சு ஸ்கோன் செய்யுறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

  ReplyDelete
 12. //ட்ரே-ய oven-la இருந்து எடுக்கவும், என்னவர் வீட்டுக் கதவைத் திறக்கவும் சரியா இருந்துச்சு///

  ஸ்ஸ்ஸ்ஸ் அவ்ளோ சினமன் வாசம்போல:)

  ReplyDelete
 13. இனி ஒவ்வொரு ரெஸிபிக்கும் இரண்டு பதிவுகளை எதிர்பார்க்கலாம்.உங்க கொங்கு தமிழைப் படிக்கும்போதே சூப்பரா இருக்கு.

  எங்க ஊரைச்சுற்றி இந்தக்கடை உண்டு.சின்னமன் டேஸ்ட் என்றால்(எனக்கு மட்டும்)விருப்பம்.ரெஸிபி வரும்வரை வெயிட் பண்ண வேண்டுமா?அல்லது நாளையே கடைக்குப் போய்விடலாமா?

  ReplyDelete
 14. 14
  சினமன் பேக்கிங் சிப்ஸ்!! ம். ;) ப்ரான்டி ஸ்னாப் பண்ணி, கெடுத்து, துண்டு போட்டு இருக்கிற மாதிரி இருக்கு. ;D
  //கொஞ்ச நேரம் oven-ல வைச்சா இறுகிரும்// அவ்வ்வ்! என்னா சிந்தனை!! ;)
  டேட் ஸ்கோன்ஸ், சீஸ் ஸ்கோன்ஸ்தான் செய்வேன். குறிப்புக்கு வெய்ட்டிங்.

  ReplyDelete
 15. ஏஞ்சல் அக்கா, நடுராத்திரில பப்ளிஷ் ஆகறமாதிரி போஸ்ட் ஷெட்யூல் பண்ணிவுட்டுட்டு தூங்கிட்டேன், அதான் "மீ- த செகன்ட்" போட முடீல! ;)

  /குதிரையா ..இங்கே ஐரோப்பாவே குதிரைன்னா அலறுது ..:))/ஏன்ன்ன்ன்ன்? டிட் ஐ மிஸ் சம்திங் ஹியர்? ஒண்ணுமே புரிலையே!

  ஐரோப்பால ஸ்கோன் பிரபலமான அளவுக்கு இங்க பிரபலமாகலைன்னு நினைக்கிறென்.

  /அப்ப லவ்லி யாரு;)) ;)))/ ஹஹஹா! லவ்லியும் ஸ்கோன்தான்! ;) யாரா இருக்கும்னு நீங்க நினைச்சீங்க? ;)

  /நான் கிரியை இந்த மாறி நேரத்தில்தான் மிஸ் செய்கிறேன் ரொம்பவே/ ஆமாம்..அவிங்க இருந்திருந்தா இந்நேரம் சரிக்குச் சரி கமென்ட் கதகளி நடந்திருக்கும். ஹூம்!
  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஏஞ்சல் அக்கா!
  ~~
  ராதாராணி, உங்களுக்காக இதோ இன்னொரு சோன்பப்டி ரெசிப்பி..இதில கார்ன் ஸிரப் எல்லாம் சொல்லலை. அந்த ப்ளாகர் சென்னைகாரங்கதான். இந்த லிங்க் பாருங்க.
  http://www.tastyappetite.net/2011/10/soan-papdi-patisa-diwali-sweets.html

  என் பதிவு உங்களுக்கு உபயோகமா இருந்ததில் மகிழ்ச்சி, கருத்துக்கு நன்றி!
  ~~
  மற்ற கருத்துக்களுக்கு அப்புறமாக வந்து நன்றி நவில்கிறேன். புரிதலுக்கு நன்றி! :)
  ~~


  ReplyDelete
 16. super and mouth watering recipe. I will try this very soon.


  நாங்களும் அடிக்கடி Paners bread போவதுண்டு. எனக்கு அங்கே கிடைக்கும் சான்ட்விச், சூப் என்றால் கொள்ளை விருப்பம்.

  My Lord, இங்கே கட்டப்பட்டிருந்த என் கற்பனைக் குதிரையைக் காணவில்லை.

  ReplyDelete
 17. இவ்வளோ சிரமம் எடுப்பதில்லை..

  ஆனால் செய்து ஆகனும் என்றூ நினைத்தால் அது எப்படியானாலும் எவ்வளவு நேரம் ஆனாலும் செய்துடுவேன் , நீங்க இதை செய்ததை பார்த்தால் என்னை போல் நினைக்க தோனுது.

  "HEAVENLY!"
  இஸின்ட் இட் லவ்லி?! ;) :)


  பேக்கிங் அயிட்டத்தில் எக்ஸ்பேட்டாச்சே நீங்க இருக்காதா பின்ன ...

  ReplyDelete
 18. Enjoyed reading the post, and the scones look lovely, will try out on my next visit to Panera..

  ReplyDelete
 19. விஜி, சரண்யா வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!
  ~~
  மீனாக்ஷி, தைரியமா வாங்கி சாப்ட்டுப் பாருங்க. அப்புறம் வீட்டில செய்துடலாம். :)

  /oops, park பண்ண குதிரையை மறந்துட்டேன்.../ :)))) உங்களை மாதிரியான சப்போர்டிவ் வாசகிகள் இருக்கும்வரை என் பாடு கொண்டாட்டம்தான்! குதிரை பத்திரம், ஓக்கே?! ;)
  நன்றி!
  ~~
  அம்முலு, இங்க எல்லா சீஸன்லயும் சி.சி.ஸ்கோன் இருக்குதுங்க. நீங்களும் இளமதியும் சொல்லித்தான் சின்னமன் சூடு-ஐட்டம்னே எனக்கு தெரிஞ்சது. இனிமேட்டு அடக்கி வாசிக்கறேன். ஐ மீன், அளவாச் சாப்பிடறேன், ஹிஹிஹ்!
  நன்றி அம்முலு!
  ~~
  நீலா, நீங்க வேற!!நாவல் எழுதலாம்னெல்லம் கிளப்பி விட்டீங்கன்னா விளையப்போற விபரீதங்களுக்கு நான் பொறுப்பில்ல..அவ்வ்வ்! :) உங்க பொண்ணை கட்டாயம் செய்து பார்க்க சொல்லுங்க. ரொம்ப சிம்பிள் ரெசிப்பிதானே!
  நன்றி நீலா!
  ~~
  //சினமனுக்கு ரத்தத்தை சூடாக்கிவிடும் தன்மை உண்டெனச் சொல்வார்கள்.// தகவலுக்கு நன்றி இளையநிலா!:)
  என் எழுத்துக்கு இன்னொரு தீவிர விசிறி நீங்க, நீங்க சொல்லி நான் எழுதாம இருப்பனா? கட்டாயம் எழுதறேன்.
  நான் /தேர்ந்த எளுத்தாளராக/ வருவேன்றீங்க? ஹ்ம்ம்ம்..லெம்மீ திங்க் எபவுட் இட்! ;)
  நன்றி இளமதி!
  ~~
  அதிராவ்வ்வ்வ்வ்வ்..இது ஸ்கோன் ரெசிப்பியே இல்லையல்லோ? எங்கயோ கவனத்தில வந்து எதையோ எளுதிப்போட்டு;) நடையக் கட்டும் பூஸாருக்கு கழுத்தில ஒரு மணியக் கட்டிவிடப்போறேன். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
  /ஸ்ஸ்ஸ்ஸ் அவ்ளோ சினமன் வாசம்போல:) / ஹிஹி..ஓம் மிஸ் மிYஆஆஆஆஅவ்! :))))
  ~~
  /எங்க ஊரைச்சுற்றி இந்தக்கடை உண்டு.சின்னமன் டேஸ்ட் என்றால்(எனக்கு மட்டும்)விருப்பம்./ அப்புறமென்ன, வாக் போகைல ஒரு எட்டு கடைக்குள்ள போனீங்கன்னா ஒரு ஸ்கோன் வாங்கிச் சாப்புடலாம். ரெசிப்பியும் குடுத்துட்டேன், விரும்பினா வீட்டிலயே ட்ரையும் பண்ணலாம்! :)) சீக்கிரம் baking ட்ரை பண்ண ஆரம்பிங்கோ சித்ராக்கா!
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  ~~
  இமா, வெள்ளிக்கிழம 13-ஆம் நம்பர்ல நின்ற கருத்துக்களை 14 ஆக்கிய நல்லவரே! நன்றி! :))
  ப்ராண்டி ஸ்னாப்-என்றதும் தூக்கிவாரிப் போட விக்கிப்பீடியாவுக்கு ஓடிப் போய் அது என்ன என்று பார்த்து, ப்ராண்டி இல்லாம செய்யற ஸ்னாக் என்றதும்தான் நிம்மதியாச்சு! :)
  சீஸ் ஸ்கோன் ரெசிப்பி தாங்க இமா! நான் சி.சி.ஸ்கோன் போட்டுட்டனே!
  ~~
  வானதி, எங்காத்துக்காரரும் சூப் வாங்கித் தந்தார், ஆனா நாமதான் ஸ்கோன்லயே செட்டில் ஆகிட்டமே, வேறென்ன வேண்டும்!?! :)
  /இங்கே கட்டப்பட்டிருந்த என் கற்பனைக் குதிரையைக் காணவில்லை./ ஐயகோ! யாரது வானதியின் பஞ்சகல்யாணியைக் களவெடுத்தது? ஒயுங்காக அவரிடம் ஒப்படையுங்கள், அடிக்கடி அவர் என் வலைப்பூவுக்கு வர இந்தப் பஞ்சகலியாணியே காரணம்....ஆஆஆங், குர்ர:) கிடைச்சிட்டா வானதி? :)
  ~~
  ஜலீலா அக்கா, நானும் பிடித்த விஷயம்னா விடாம மோதி ஒரு கை பாத்துடறதுதான்! நன்றிக்கா!
  ~~
  ஹேமா, கட்டாயம் ட்ரை பண்ணிப்பாருங்க..ரெசிப்பி போட்டாச், வீட்டிலும் ட்ரை பண்ணிப்பார்க்கலாம். நன்றிங்க கருத்துக்கு!
  ~~


  நன்றி வானதி!
  ~~

  ReplyDelete
 20. ஆஹா இந்த பகிர்வை எப்படி மிஸ் செய்தேன்..இந்தளவு முயற்சி எல்லாம் நான் செய்வதில்லை மகி,ஏதோ வீட்டு சமையல் மட்டும்.வெரி இண்ட்ரெஸ்டிங்..செய்து தந்தால் சாப்பிடலாம்,தங்க காப்பு போடலாம்..

  ReplyDelete
 21. /..செய்து தந்தால் சாப்பிடலாம்,தங்க காப்பு போடலாம்../ வார்த்தைய விட்டிருக்கீங்க, இதோ..தங்கக் காப்புக்கு அளவு வளையல் அல்ஐனுக்கு அனுப்பிட்டேன்ன்ன்ன்! ;) :)

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails