Thursday, March 21, 2013

ஹோம் மேட் or ரெடிமேட்?!

பனீர்...ஹோம் மேட் ஆர் ரெடிமேட்? எதற்கு உங்க வோட்டு? :)) இந்த கேள்வியை என்னை நானே கேட்டுக்கிட்டு, கிடைச்ச பதில்/பதில்கள் மற்றும் சுவையான பனீர் மக்கன்வாலா ரெசிப்பி எல்லாமே இந்தப் பதிவில் வருகின்றன. [என்ன செய்யறது..பனீர் மக்கன்வாலா ரெசிப்பி வேணும்னா, இலவச இணைப்பான மொக்கையையும் நீங்க படிச்சேதான் ஆகணும், எவ்ரிதிங் இன்க்ளூடட் இன் தி பேக்கேஜ், யு ஸீ?! ;) ]
சரி, வாங்க..மொக்கைய ஸ்டார்ட் பண்ணுவோம். :)))

பதில் 1:
என்னது...ரெடிமேட் பனீரா? ச்சே,ச்சே...அது நல்லாவே இருக்காதுங்க. சமைச்சம்னா ரப்பர் மாதிரி ஆகிரும். எந்தக்காலம் செய்து இன்டியன் ஸ்டோர் ப்ரீஸருக்கு வந்துச்சோ? வீட்டிலயே ஈஸியா சுவையான பனீர் செய்ய வழி இருக்கும்போது யாராவது கைக்காசைக் குடுத்து அந்த ரப்பனீரை;) வாங்குவாங்களா? வீட்டிலேயே பனீர் செய்தா காசும் மிச்சம், சப்பாத்தி மிருதுவா வரத் தேவையான whey water கிடைக்கும். தரமான பனீரும் கிடைக்கும், நம்ம கையாலயே செய்து, ஆரோக்கியமான உணவை நம்ம குடும்பத்துக்குக் குடுக்கிறோம் அப்படீன்ற ஆத்மதிருப்தியும் கிடைக்கும். கரெக்ட்டா? :)

பதில் 2:
என்னது...வீட்டிலயே பனீர் செய்யறதா??! அவ்வ்வ்வ்வ்வ்..பாலை பக்கத்திலயே நின்னு காய்ச்சி, லெமன் ஜூஸைப் புழிஞ்சு, அதை வடிகட்டி..[அதுக்கு வேற சீஸ் க்ளாத் வாங்கிவைக்கணும், இல்லன்னா காட்டன் துணி தேடணும்..கர்ர்ர்ர்ர்], அந்த whey water-ஐ வேற பத்திரமாப் புடிச்சு வைச்சு, பனீரைச்  சுத்தமாப் புழிஞ்சு, ஒரு மணி நேரம் தண்ணி வடியவிட்டு, அப்புறம் அதுமேல கனமான பொருளை[அதுக்கு ஒரு பாட்டம் மண்டையப் பிச்சுக்கணும், குக்கரில தண்ணி புடிச்சு வைக்கலாமா இல்ல க்ரைண்டர் குழவிய வைக்கலாமான்னு! ;)] ஒரு மணி நேரம் வைச்சு, இருங்கோ, இன்னும் ப்ராசஸ் முடீல! உஸ்....அப்பாடா-ன்னு 3 மணி நேரம் பாடுபட்டு பனீர் கிடைக்கும். இதுக்கிடைல, நீங்க பால் காய்ச்சின பாத்திரத்த கழுவோணும்னு நினைச்சாலே, கிச்சன விட்டு ஓடீரலாம்னு தோணும்!!  சீஸ் க்ளாத்னா தூக்கிப் போட்டுரலாம், காட்டன் துணினா, மனசு கேக்காம, அந்தத் துணியையும் அலசணும்! இத்தனை வேலை செய்யறதுக்கு, இன்டியன் ஸ்டோருக்கு போனமா, $3-க்கு ஒரு பனீர் பேக்கட்டை வாங்கிட்டு வந்தமான்னு வேலைய முடிக்கலாம்ல? ;)))))))
~~~
ஸோ..உங்க பதில் 1 ஆர் 2??!! ஆவலோடு எதிர்பார்க்கிறேன். :))))
~~~
இது ரெண்டு பதிலுமே முழுக்க முழுக்க என்னோடதுதாங்க. :) இன்டியன் ஸ்டோர்ல பனீர்  வாங்கலாம்னு  டெம்ப்ட் ஆகும்போது, 500கிராம் பனீர் கட்டி பயமுறுத்தும். அவ்ளோ பனீரை வாங்கி நான் என்ன்ன்ன்ன்ன்ன செய்வேன்? அதனால ஹோம் மேட் பனீருக்கான பதில்1 -ஐச் சொல்லி, மனசைத் தேத்திகிட்டு களமிறங்குவேன். :)))) அதுவும் மோஸ்ட்லி ஏதாச்சும் பார்ட்டி-கெட் டு கெதர் இப்படியான நேரங்களில், சின்ஸியர் சிகாமணியா பதில்1-ஐச் சொல்லிப்புட்டு, ஸ்பெஷலா 2%மில்க்(திக்கான பால்) வாங்கிவந்து பனீர் செய்வேன்.

கொஞ்ச நாட்கள் முந்தி வழக்கமாகப் போகும் கடைய விட்டு, வேறு ஒரு கடைக்குப் போனோம், அங்கே கோபி-என்ற ப்ராண்ட் நேமில் 250கிராம் பனீர் கிடைச்சது, வாங்கிப் பார்க்கலாமேன்னு வாங்கிவந்தேன். க்வாலிட்டி, ருசி, விலை எல்லாமே நல்லா இருந்துச்சு.  வாங்கிவந்து ஒரு முறை பனீர்-கேப்ஸிகம் கறி செய்தேன், மீதி பனீரை காலிபண்ண ஒரு இன்ட்ரஸ்டிங் ரெசிப்பி தேடினேன், மாட்டினான் மக்கன்வாலா! :))) ஏதோ மனுஷன் பேர் மாதிரி இருக்கே என்று ஆர்வத்தில ரெசிப்பியை படிச்சேன், செய்தும் பார்த்தேன்..சூப்பரா இருந்துச்சுங்க. மக்கன் - makhan என்பது ஹிந்தியில் வெண்ணையைக் குறிப்பது. வெண்ணெய் சேர்த்து செய்யப்படும் பனீர்- என்பதுதான் பனீர் மக்கன்வாலா என்பதன் தமிழாக்கம் என்பதறிக! :))))

ஓகே..மொக்கை  ஓவர்..நவ் ஓவர் டு ரெசிப்பி - "பனீர் மக்கன்வாலா"
________________________________________________________________________________
தேவையான பொருட்கள்
பனீர்-125கிராம்
வெங்காயம்-1
முந்திரி-5
தயிர்-1டேபிள்ஸ்பூன்
தக்காளி-2
பச்சைமிளகாய்-2
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்
கரம் மசாலா பொடி-1/2டீஸ்பூன்
கசூரி மேத்தி-1/2டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது-1டேபிள்ஸ்பூன்
Half & half milk (or) ஃப்ரெஷ் க்ரீம் -1/4கப்
வெண்ணெய்-1டேபிள்ஸ்பூன்
எண்ணெய்-1டேபிள்ஸ்பூன்
உப்பு

செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயை ஒன்றிரண்டாகத் தட்டி வைக்கவும். இஞ்சி பூண்டு விழுதை தயாராக வைக்கவும்.

கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய், கொஞ்சம் வெண்ணெய் காயவைத்து வெங்காயம், முந்திரி இவற்றை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் ஆறவிடவும்.
ஆறிய வெங்காயம்-முந்திரி கலவையுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தயிரும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
தக்காளிகளையும்  மிக்ஸியில் அரைத்து எடுத்து வைக்கவும்.
கடாயில் மீதமுள்ள வெண்ணெய், எண்ணெய் காயவைத்து இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
 பிறகு தட்டிய பச்சைமிளகாயை சேர்த்து வதக்கவும்.
இஞ்சி-பூண்டு-பச்சைமிளகாய் வதங்கியதும் அரைத்த தக்காளியைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
தக்காளி பச்சைவாசம் போய், எண்ணெய் பிரிந்து வந்ததும் வெங்காயம்-முந்திரி விழுதைச் சேர்த்து வதக்கவும்.
எல்லாம் நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள், கசூரி மேத்தி, கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கி,
தேவையான உப்பு சேர்த்து, ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். 
  
மசாலா நன்கு கொதித்ததும் தீயைக் குறைத்துக் கொண்டு ஹாஃப் &  ஹாஃப் (அ) பாலைச் சேர்க்கவும்.
 சில நிமிடங்கள் கொதித்ததும், பனீர் துண்டுகளைச் சேர்க்கவும். ஓரிரு நிமிடங்களில் கொத்துமல்லி இலை, சர்க்கரை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும்.
 
சூப்பர்-டூப்பர் பனீர் மக்கன்வாலா தயார்! சப்பாத்தி-புலாவ்-ஜீரா ரைஸ் இவற்றுடன் சரியான ஜோடிங்க இந்த மக்கன்வாலா! பார்டிகளுக்கேற்ற பர்ஃபெக்ட் டிஷ்! ட்ரை பண்ணிப் பார்த்துச் சொல்லுங்க. நன்றி!
  

36 comments:

  1. உங்கள் பனீர் மக்கன்வாலா சாப்பிடத் தூண்டுகிறது .
    அருமையாக விளக்கமாக எழுதியுள்ளீர்கள்.

    ReplyDelete
  2. இவ்வளவு நன்றாக செய்து விட்டு மொக்கை என்று சொன்னால் எப்படி...?

    ReplyDelete
  3. /இவ்வளவு நன்றாக செய்து விட்டு மொக்கை என்று சொன்னால் எப்படி...? / அப்ப, மொத 2-3 பாரா மொக்கை இல்லைன்றீங்களாங்ணா?! :)))) ரொம்ப நன்றிங்கோ!

    ~~
    ராஜி மேடம், உடன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க!
    ~~

    ReplyDelete
  4. பனீர் ரெசிப்பி பார்க்கவே சாப்பிடும் ஆவலைத்தூண்டுகிறது. நிச்சயம் செய்துபார்க்கிறேன் மகி.
    நீங்க வீட்டில் பனீர் செய்யும் முறை போட்டிருக்கிறீங்களா. நான் செய்து பார்ப்பேன் ஆனா இறுக்கமாக வருவதில்லை. உதிரியாக வருகிறது. என்ன செய்யலாம்? பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  5. ஹைய்ய்ய்.... சூப்பர் பனீர் மக்கன்வாலா.
    உங்க மொக்கை (இது நீங்க சொன்ன வார்த்தை) அதை விட சூப்பரோ சூப்பர்.

    எப்பிடித்தான் இப்பிடியெல்லாம் செய்யவும் சொல்லவும் உங்களால முடியுறதோ....:) நல்லா காமெடி படம், படத்துணுக்குகள் பார்க்கிறீங்களோ...;)

    அருமை. வாழ்த்துக்கள் + நன்றிகள்!!!

    ReplyDelete
  6. /நான் செய்து பார்ப்பேன் ஆனா இறுக்கமாக வருவதில்லை. உதிரியாக வருகிறது. என்ன செய்யலாம்?/ அம்முலு, தண்ணிய சுத்தமாப் பிழியாமல் இருந்தால் உதிரியாக வர வாய்ப்பு இருக்கு.

    வடிகட்டிய பனீரை நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாப் பிழிஞ்சுட்டு, ஒரு மூட்டை மாதிரி கட்டி, ஒரு மணி நேரம் சிங்க் பைப்-லயே hang பண்ணுங்க. அப்புறம் ஒரு 5லிட்டர் குக்கர் முழுக்க தண்ணி புடிச்சு, பனீர் மூட்டை மேல 1-2 மணி நேரம் வைச்சுருங்க. பிறகு மூட்டையைப் பிரிச்சு கட் பண்ணினா நல்லா வருமே பனீர்!

    அப்படியும் உதிரியாகுதுனா, மூட்டையப் பிரிச்சு, சப்பாத்தி மாவு போல பிசைஞ்சு சதுரமா தட்டி, ப்ரிட்ஜ்ல கொஞ்ச நேரம் வைச்சு அப்புறம் கட் பண்ணி பாருங்க.

    அப்ப, உங்க பதில் 1-ஆ?! ;)) ஓகே, குட்லக்! :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்முலு!

    ReplyDelete
  7. /எப்பிடித்தான் இப்பிடியெல்லாம் செய்யவும் சொல்லவும் உங்களால முடியுறதோ....:) நல்லா காமெடி படம், படத்துணுக்குகள் பார்க்கிறீங்களோ...;)/ ஹஹஹ! :)))) சொன்னா நம்ப மாட்டேள்:) இளமதி, நான் தமிழ்ப்படம் பாக்கறதை விட்டு பலநாளாச்சு. இப்பல்லாம் ஒன்லி டிடெக்டிவ்-த்ரில்லிங் ஆங்கில சீரியல்கள், காமெடி ஆங்கில சீரியல்கள் தான் மீ வாச்சிங்! ;):)

    காமெடி அதுவாஆஆஆஆ ஊற்றெடுத்து வருதுங்க! கஷ்டப்பட்டு அடக்கினாலும், ஒரு சில சமயங்களில முடியறதில்லை! ;)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இளமதி!

    ReplyDelete
  8. Mahi, makkanwalavum super, adukku munnadi pota mokkai, adai vida super, en option, 2nd one, making paneer at home..

    ReplyDelete
  9. Rasamalai seium poluthu mathum thaan paneer veethil seiven.. matha recipe ku shop il thaan vaaguven.. ungal recipe super..

    ReplyDelete
  10. ஹேமா, நீங்க வீட்டில்தான் பனீர் செய்வீங்களா? ஓக்கே..என்சாய்! :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    ஃபாயிஸா, சேம் பின்ச்! நானும் கிட்டத்தட்ட உங்கள மாதிரிதான்! ரஸமலாய்க்கு பனீர் வீட்டில செய்தாதான் நல்லா இருக்கும். :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~

    ReplyDelete
  11. Gopi Thayir use pannirukken...too good.Have to try Gopi paneer..
    Nowadays always homemade paneer only:-)

    ReplyDelete
  12. இந்த முறை என்னவர் கோபி தயிர் தான் வாங்கிட்டு வந்திருக்கார், முதல் முறையா! :)
    பனீரும் வாங்கிப் பாருங்க ரம்யா, நல்லா இருக்கு.

    /Nowadays always homemade paneer only:-)/...hmmm!Looks like I am the lazy person here to make the paneer! hahaha! ;) :)

    ReplyDelete
  13. Naan neenga homemade panner kooda pottu irupinganau ninachean. Ok anyhow, this makkanwala looks super

    ReplyDelete
  14. /homemade panner kooda pottu irupinganau ninachean./ :) ஏமாத்திட்டேனா உங்கள? :) இந்த பனீர் ஹோம் மேட் பனீர் மாதிரியேதாங்க இருக்கு!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனு!

    ReplyDelete
  15. akka , super recipe......... clicks are tempting..........

    ReplyDelete
  16. Super mahi

    http://www.followfoodiee.com/

    ReplyDelete
  17. Super doooper recipe BTW, i always prefer Homemade Panner... But till now panathu illa :D
    http://recipe-excavator.blogspot.com

    ReplyDelete
  18. அருமையான விளக்கம் அழகான படங்கள்.

    ReplyDelete
  19. அருமை. நன்றிகள்!!!

    ReplyDelete
  20. அடடா கறிக்கு பெயர் வைக்கிற சாட்டில “மக்கன்” என ஆரையோ திட்டுறமாதிரி இருக்கே:) சரி சரி எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ்:))..

    இதுக்கு என்னோட ஆன்ஷர் = 2.

    ReplyDelete
  21. //Your comment will be visible after approval.

    //

    இது என்ன கொடுமை சாமீஈஈஈஈஈஈஈஈஈ.. விடுங்கோ விடுங்கோ... இஞ்ச விடுங்கோ.. என் கையை விடுங்கோ:).. நான் என்ன தேம்ஸ்க்கா போகிறேன்ன்:)).. எல்லோரும் மொடரேஷன் போட்டிட்டினம்.. நான் மட்டும் போடாமல் இருந்தால் என்னை ஒரு குருவிகூட மதிக்காதாக்கும்:)).. இப்பவே போடுறேன்ன்ன்:))

    ReplyDelete
  22. அழகான சூப்பர் குறிப்பு.. நல்ல கறி.. எங்கட வீட்டில டோபு எண்டாலே ஓல் ரைம் ஃபேவரிட் அனைவருக்கும்.. ஆனா நான் செய்ய மாட்டேனே:)).. அதாவது கடையிலதான் வாங்குவேன் எனச் சொன்னேன்:)..

    ReplyDelete
  23. சரண்யா, நன்றி!
    ~~
    Follow Foodie, நன்றிங்க!
    ~~
    /i always prefer Homemade Panner... But till now panathu illa :D/ சங்கீதா, இப்ப என்னதான் சொல்லவரீங்க? :) ஹோம் மேட் பனீர் புடிக்கும், ஆனா இதுவரை வீட்டில் செய்ததே இல்லையா? ஹவ்...ஹவ்?? வீட்டில செய்யாமலே எப்படி உங்களுக்குப் புடிச்சது? ;)))))
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க!
    ~~
    ஸாதிகாக்கா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    மாலதி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    //கறிக்கு பெயர் வைக்கிற சாட்டில “மக்கன்” என ஆரையோ திட்டுறமாதிரி இருக்கே:)// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! திட்டறதுக்கு இன்னொரு "கால்" போடோணும் அதிராவ்..மாக்கான்-னாதான் திட்டுவது, இது மக்கன்! ;))))

    /நான் மட்டும் போடாமல் இருந்தால் என்னை ஒரு குருவிகூட மதிக்காதாக்கும்:)).. இப்பவே போடுறேன்ன்ன்:)) / ...ஆங்! இவிங்க, பதிவே போடுறதில்லே, இதிலே கமென்ட் மாடரேஷன் போடுறாகளாம்! கிக்க்க்கீஈஈஈ! ;)))))))) இல்ல அதிரா, ஜஸ்ட் ஃபார் எ சேஞ்ச் போட்டுப் பார்க்கலாமே என போட்டேன், இன்ட்ரஸ்டிங்கா இருக்குது. பொறூப்பா ஓரொருகமென்டுக்கும் அப்பப்ப பதில் சொல்லிடறேன், அதான்! :))

    எனக்கு டோஃபு- புடிக்காது..பனீர் இப்ப இப்ப புடிக்க ஆரம்பிச்சிருக்கு. /அதாவது கடையிலதான் வாங்குவேன் எனச் சொன்னேன்:).. / குட்! நாலு கையில:) ஒரு கையக் குடுங்கோ! நீங்களும் என்னைய மாதிரியே குட் கர்ள்! :)))

    வருகைக்கும் பதிவுகளுக்கும் மிக்க நன்றி அதிராவ்!

    ReplyDelete
  24. மகி, வழக்கம் போல உங்க பதிவும் சூப்பர். டிஷ்-ம். சூப்பர். கட்டாயம் ட்ரை பண்றேன். முதல் 2 பாராமுதல் 2 பாரா தான் Mahi's ஸ்பெஷல். hahahaaaaa.....

    ReplyDelete
  25. 'பனீர் மக்கன்வாலா'வைப் பார்க்கும்போதே செய்யணுமா இருக்கு.இவங்க யாரும் பனீர் சாப்பிடமாட்டாங்க.அதனால அந்தப் பக்கமே போவது இல்லை.

    என்னோட ஓட்டு வீட்டுப் பனீருக்கே.திட்டமா, கொஞ்சமா செய்வதால், மீதமாயிடுச்சு,இத எப்ப காலி பன்றது என்ற பிரச்சினையெல்லாம் இல்லாம ஃப்ரீயா இருக்கலாம்.மொக்கை&குருமா ரெண்டுமே நல்லாருக்கு.

    ReplyDelete
  26. சுபா, செய்து பார்த்து சொல்லுங்க! /முதல் 2 பாரா தான் Mahi's ஸ்பெஷல். hahahaaaaa..... / :))) நீங்கள்லாம் இப்புடி ஏத்தி விட்டுத்தான் என் பேனா நிக்க்க்க்க்க்க்க்க்காஆஆஆஆம எழுதித் தள்ளுதுங்க! :) மிக்க நன்றி!
    ~~
    சித்ராக்கா, திட்டமா, கொஞ்சமா பனீர் செய்து மக்கன்வாலா செய்து பாருங்கோ! ;) இந்த பனீர் கால்கிலோ பேக்கில் கிடைப்பதால் 2 முறையில செலவாயிருது. அதனால்தான் முதல் 2 பாரா மொக்கையே உதயமாச்சு.

    /இவங்க யாரும் பனீர் சாப்பிடமாட்டாங்க.அதனால அந்தப் பக்கமே போவது இல்லை./ உங்க ப்ளாகில் டோஃபு ரெசிப்பிகள் பாத்திருகெகென், பனீர் இல்லாததற்கு இதுதான் காரணமா? :)

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா!
    ~~

    ReplyDelete
  27. உங்க ரெசிபிய பார்த்ததுமே நெனச்சேன் 'டோஃபு'வை வச்சு செஞ்சிடலாம்னு.இதையுமே சாப்பிடமாட்டாங்க. நான்தான் சாப்பிடுவேன். கொஞ்சம் ஹெவியா இருக்குமேன்னு பனீருக்கு பதிலா 'டோஃபு'வை வாங்கிடுவேன்.

    ReplyDelete
  28. /கொஞ்சம் ஹெவியா இருக்குமேன்னு பனீருக்கு பதிலா 'டோஃபு'வை வாங்கிடுவேன்./ அது கரெக்ட்தான் சித்ராக்கா! ஹெல்தி உணவுவகைகளை சேர்ப்பது நல்லதுதானே.

    டோஃபு வாங்கி செய்து குடுங்க, கட்டாயம் சாப்பிடுவாங்க! இல்லன்னா, கொஞ்சமாச் செய்து நீங்க (மட்டும்) சாப்பிடுங்க! ;)

    ReplyDelete
  29. naan romba safe..en payanuku paneera suthama pudikathu...ao naan vangurathum illai, seiyurathum illai. but restaurant pona kandippa paneer order panuven, enakaga...

    BTW, I had to add the word verification again,as I am getting lot of spam mails without that. Dont know why? :)

    ReplyDelete
  30. பனீர் புடிக்காத பையரா உங்க பையர்? :) அப்ப ப்ரச்சனையே இல்ல போங்க!

    word verification - நீங்க சொல்றதும் கரெக்ட்தான் போல, எனக்கு தமிழ் ப்ளாக்ல ப்ராப்ளம் இல்ல, ஆனா இங்க்லீஷ் ப்ளாக்ல நிறைய்ய்ய்ய spam comments வருது, நானும் அங்கே வெரிஃபிகேஷன் போடலாமான்னு இப்ப திங்க் பண்ணறேன்! :)

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுமி!

    ReplyDelete
  31. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. Vanathy, thanks for the comment.. I accidentally removed your comment, sorry about that. I have to blame the iPhone for this..sorry,sorry!

      Delete
  32. jரொம்பரொம்ப அருமை. என் ஓட் எந்த பன்னீரானாலும், ஸமயத்துக்கு உதவுவது பேக்கெட் பன்னீர்தான். அருமையா ஒவ்வொன்றும், படிப்படியாக போட்டோக்களும் அருமை. எங்க மும்பை
    ப்ராஞ்சில் அடிக்கடி பன்னீர் டிஷ் உண்டு. முந்திரி சேர்த்த பன்னீருக்கு ஷாஹி என்ற அடைமொழி சேர்ந்து விடுகிரது. ஜமாய்க்கிராய். அன்புடன்

    ReplyDelete
  33. என் ஒட்டு எப்பவும் 200 gm அமுல் பனீருக்குத்தான் தான்,ஏற்கனவே நான் கிச்சன்லேயே இருக்கேன்னு பேரு.பனீர் செய்றேன்னு அதனோடு கூத்துப் பிடிக்க எனக்கு தெம்பில்லைபா..
    கிட்ட தட்ட நானும் இப்படி தான் செய்வேன்,.நான் போஸ்ட் செய்யனும் என்று நினைப்பதை நீ போஸ்ட் செய்வதே வேலையாப் போச்சு.இரண்டு பேருக்கும் ஏதோ டெலிபதி வேலை செய்யுது..சூப்பர் டெம்ப்டிங்.

    ReplyDelete
  34. காமாட்சிம்மா, முந்திரி சேர்த்த பனீர் ஷாஹி -என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுமா??! தகவலுக்கு நன்றிம்மா! இதிலே முந்திரி குறைவாகவும் வெண்ணெய் நிறைவாகவும்:) இருப்பதால் மக்கன்வாலா ஆகி இருக்கணும் என நினைக்கிறேன்.:)

    /என் ஓட் எந்த பன்னீரானாலும், ஸமயத்துக்கு உதவுவது பேக்கெட் பன்னீர்தான்./நீங்களும் என் கட்சி என தெரிந்து மகிழ்ச்சி! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா!
    ~~
    ஆசியாக்கா, ஏதோ டெலிபதி தான் வொர்க் அவுட் ஆகுது போல! ;) :) நீங்களும் உங்க ரெசிப்பிய போஸ்ட் பண்ணுங்க, ட்ரை பண்ணிப் பார்த்திருவோம்.

    /ஏற்கனவே நான் கிச்சன்லேயே இருக்கேன்னு பேரு./ :):) சமைத்து அசத்தறீங்களே, அப்புறம் என்னவாம்?! :))))

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியா அக்கா!
    ~~

    ReplyDelete
  35. Nice step by step instructions Mahi, i'll try this soon :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails