Thursday, March 7, 2013

வெந்தயக் கீரை பருப்பு கூட்டு

தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு -1/4கப்
சுத்தம் செய்த வெந்தயக் கீரை - 1 கைப்பிடி
சின்னவெங்காயம்-4
வரமிளகாய்-1
கடுகு-1/2டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு

அரைக்க
தேங்காய்த்துருவல் -2டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய்-3
சீரகம்-1டீஸ்பூன்
தக்காளி(சிறியதாக) -1 அல்லது அரைத்தக்காளி
மஞ்சள்தூள் -1/8டீஸ்பூன்

செய்முறை
கீரையை சுத்தம் செய்து, கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிவைக்கவும்.
பருப்பை  தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்து வைக்கவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்துஎடுத்துக்கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, வரமிளகாய் கிள்ளிப்போட்டு, வெங்காயமும் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் கீரையைச் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.
அரைத்த விழுதுடன் அரைகப் தண்ணீரும் சேர்த்து கீரை கலவையுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து பச்சை  வாசம் போனதும், வெந்த பருப்பை மசித்து கூட்டுடன் சேர்க்கவும்.
பருப்பு சேர்ந்து ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
கமகம மணத்துடன் வெந்தயக் கீரை பருப்பு கூட்டு ரெடி.
சுடுசாதம்-கூட்டு- ரசம்- ஸ்பைஸி காலிப்ளவர்-உருளை-பட்டாணி வதக்கலுடன் சிம்பிளாக ஒரு நேர உணவு வேலை முடிந்துவிடும். :)

25 comments:

 1. மகிம்மா ..இங்கே வெந்தய கீரை இப்ப கிடைக்குது ..நாளைக்கே செய்யறேன் .உடம்புக்கு ரொம்ப ஹெல்தியும் இந்த கீரை

  ReplyDelete
 2. பூசார் அங்கே பலாகொட்டை கிரேவியில் மூழ்கியாச்சு :)) இங்கே வந்தா ..நானே எல்லாத்தையும் சாபிட்டேன்னு சொல்லிடுங்க ..குட் டே உங்களுக்கு ..குட்நைட் எங்களுக்கு

  ReplyDelete
 3. வாங்க, வாங்க ஏஞ்சல் அக்கா! நீங்க எப்பவுமே ஃபர்ஸ்ட் வரமாதிரிதான் போஸ்ட்-ஐ ஷெட்யூல் பண்ணுறேனாக்கும். எல்லாம் ஒரு கால்குலேஷன்தான்! :)))))

  ஆமாம், இப்ப வெ.கீரை சீஸன்தானே, செய்து பாருங்க, நல்லா இருக்கும்.

  பூஸக்கா அங்கே பலாக்கொட்டையவே சும்மா பிரட்டிப் பிரட்டிப் பெடலெடுக்கிறாங்க. அதுக்குள்ள நாம இங்க கீரை சாப்பிடலாம்! :)

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றீ! :)

  ReplyDelete
 4. ;))))) கொஞ்சமாச்சும் எனக்கு மீதம் இருக்கா ஏஞ்சல் அக்கா!

  ட்ரை மேத்தி இருக்கு, போடலாமா மகி?

  ReplyDelete
 5. வெந்தய கீரை நல்லா இருக்கு மகி...

  ReplyDelete
 6. டிரை பண்ணிடுவோம்.

  ReplyDelete
 7. வெந்தயக்கீரை பருப்புகூட்டு சூப்பரா இருக்கு.குளிர், மழை எல்லாம் போகட்டும்,வாங்கி செய்திடுறேன்.

  ReplyDelete
 8. கொஞ்சம் கசப்பு இருக்கத்தானே செய்யும் மகி.. இது வரை செய்ததில்லை. பரவாயில்லை, ஹெல்த்துக்கு நல்லதுன்னா செய்துட வேண்டியதுதான்..:) செய்து பார்க்கிறேன்..

  ReplyDelete
 9. Super mahi... romba healthy dish...
  http://recipe-excavator.blogspot.com

  ReplyDelete
 10. நல்ல குறிப்பு. வெந்தயக்கீரை இங்கே கிடைக்கவில்லை. நானே அதை முளைக்கவைத்து கீரை ஆய்ந்து சமைக்கணும்...:)
  முயற்சிக்கிறேன்...:)))

  ReplyDelete
 11. நல்லாயிருக்கு மகி,தேங்காய் சேர்த்து சமைத்ததில்லை...

  ReplyDelete
 12. //angelin said...
  meeeeee first//// karrrrrrrrrrrrrrrrrrr விடுங்கோ விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்ன்....:)

  ReplyDelete
 13. நாங்க வெந்தயக் கீரையில் வறை மட்டும் செய்வோம் மகி, கசக்கும் எனப் பயம். உங்கட முறை நல்லாயிருக்கே... பார்க்கவே ஆசையாக இருக்கு.

  ReplyDelete
 14. ///இமா said...
  ;))))) கொஞ்சமாச்சும் எனக்கு மீதம் இருக்கா ஏஞ்சல் அக்கா!\\\

  ஓ இருக்காமே:))).. அஞ்சு அந்த மிஞ்சத்தை இமா வாணுமாம் கொடுத்திடுங்க:).. நோ தாங்ஸ் நேக்கு வாணாம்ம்ம்:))...

  ReplyDelete
 15. //முளைக்கவைத்து கீரை ஆய்ந்து சமைக்கணும்...:)/// ஆவ்வ்வ்வ் டமில் துள்ளி வெளாடுது... ஆய்தல் என்பதுதான் சரியான சொல்லாம் பட்டிமன்றத்தில சொன்னவை..

  ReplyDelete
 16. மஹி, இப்பதான் சாப்டேன். ஆனா "சுடுசாதம்-கூட்டு- ரசம்" இந்த காம்பினேஷன் பார்த்தவுடன மறுபடியும் பசிக்குது.

  ReplyDelete
 17. மஹி இந்தக்கூட்டோட ஒரு பச்சடியும் செய்து விட்டால்
  ஆஹா ருசியோ ருசிதான். நல்ல குறிப்பு.

  ReplyDelete
 18. உடல் நல்த்திற்கு மிகவும்
  உகந்த குறிப்புகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 19. ஹாய் மஹி எப்படி இருக்கீங்க?
  நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போதுதான் உங்கள் இல்லத்திற்க்கு வர முடிந்தது.பொறுமையாக ஒவ்வொன்றாக படித்து பார்க்கணும்.
  வெந்தயக்கீரை கூட்டு நன்றாக உள்ளது.நாங்களும் நீங்கள் சேர்த்திருக்கும் பொருட்களை கொண்டுதான் செய்வோம்.செய்முறை மட்டும் சில வித்தியாசம்.
  வெந்தியக்கீரை உடம்புக்கு நல்லதாச்சே...

  ReplyDelete
 20. /ட்ரை மேத்தி இருக்கு, போடலாமா மகி?/ இல்ல இமா, புது கீரைதான் நல்லா இருக்கும். நீங்களும் தொட்டியில் வளர்த்து செய்து பாருங்க. :)

  ப்ரியா,நன்றி!

  ஸாதிகாக்கா,நன்றி!

  சித்ராக்கா, செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி! உங்கூர் அளவுக்கு இங்க குளிர் இல்ல! :)

  @ராதாராணி, /கொஞ்சம் கசப்பு இருக்கத்தானே செய்யும் மகி../ நீங்க கேட்டதும்தான் யோசிக்கிறேன்! :) எனக்கு கசப்பெல்லாம் தெரிவதே இல்லைங்க. வெந்தயக்கீரை எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த முறையில் செய்து பாருங்க, கண்டிப்பா கசப்புத் தெரியாது. பருப்பு-தேங்கா-தக்காளி எல்லாம் சேர்ந்து கசப்பை டாமினேட் பண்ணிடும். ட்ரை பண்ணி பார்த்து சொல்லுங்க. நன்றி!

  சங்கீதா, நன்றி!

  இளமதி, செய்து பார்த்து சொல்லுங்க. ஒரு கவிதாயினியின் தமிழ்லயும் குற்றம் கண்டுபிடிக்கிறார், பூஸார்! என்ன கொடும..என்ன கொடும?! :)) உங்க தமிழ் கரெக்ட்டு இளமதி! கீரை ஆய்ந்துதானே சமைக்கணும்!
  நன்றி!

  மேனகா, செய்து பாருங்க, ரொம்ப நல்லா இருக்கும். நன்றி!

  @அதிராவ்..// விடுங்கோ விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்ன்....:)//ஸ்ஸூ..ஸ்ஸூ..பூஸூ..கண்ணைத் திறந்து பாருங்கோவன்! ஆருமே உங்களை டச் பண்ணேல்ல! 1..2..3..ஓடுங்கோ தேம்ஸூக்கு! :))))
  /கசக்கும் எனப் பயம். உங்கட முறை நல்லாயிருக்கே... பார்க்கவே ஆசையாக இருக்கு./aaaaav! என்னப்பா இது? ஆளாளுக்கு கசக்கும்ன்றீங்க? எனக்கு கசப்பே தெரியலையே! கீரை கொஞ்சம் குறைச்சு செய்து பாருங்க. சூப்பரா இருக்கும்.

  /ஆய்தல் என்பதுதான் சரியான சொல்லாம் பட்டிமன்றத்தில சொன்னவை../ ஆமாம்..கரீக்டாதான் சொல்லிருக்காங்க. அது பெயர்ச்சொல். வினைச்சொல்லா மாறுகையில் "ஆய்ந்து" என்றுதானே வரும் பூஸக்கா? ;))))

  //அஞ்சு அந்த மிஞ்சத்தை இமா வாணுமாம் கொடுத்திடுங்க:).. நோ தாங்ஸ் நேக்கு வாணாம்ம்ம்:))... // கொடுத்தாச்சு, ஆச்சு,ஆச்சு! நீங்க அவிச்சமுட்டை சாப்பிட்டே தொப்பையை வளத்துங்கோ, உடம்புக்கு நல்லதெலாம் வாணாம்ம்ம்ம், அல்லே? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)
  நன்றி அதிரா!

  @மீனாக்ஷி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! என்னதான் பிரியாணினாலும் எனக்கு பருப்பு0ரசம்0சோறு0காய்--காம்போ தான் பேவரிட்! :)

  @காமாட்சிமா, பச்சடி ரெசிப்பி உங்க ப்ளாகிலதான் தேடணும், செய்து பார்க்கிறேன்மா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  @இராஜராஜேஸ்வரி, வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிங்க மேடம்!

  @அப்ஸரா, வெகுநாள் கழிச்சு உங்களைப் பார்ப்பதில் சந்தோஷம். நீங்களும் இப்படிதான் செய்வீங்களா? :) உங்க செய்முறையையும் போடுங்க. ட்ரை பண்ணி பார்ப்போம்!
  நன்றி அப்ஸரா!

  ReplyDelete
 21. wow i always find unique recipe here,loved it a lot...

  ReplyDelete
 22. I too make this the same way
  http://www.followfoodiee.com/

  ReplyDelete
 23. it is one of my favourite.

  ReplyDelete
 24. Prema, thanks! :) This is just a try which turned as a favourite recipe of mine and shared it here as well!
  ~~
  Follow Foodie, Glad to know! :) thanks for stopping by!
  ~~
  Mira,same pinch! :) Thanks!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails