Sunday, March 3, 2013

சின்னமன் சிப் ஸ்கோன் - Cinnamon Chip Scone

 
தேவையான பொருட்கள்
ஆல் பர்ப்பஸ் மாவு / மைதா மாவு - 11/2 கப் + 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை -1/4கப்+2டேபிள்ஸ்பூன்
பேக்கிங்  பவுடர்-11/4டீஸ்பூன்
பேக்கிங் சோடா-1/4டீஸ்பூன்
உப்பு-1/4டீஸ்பூன்
Half &Half milk / கெட்டியான பால்-3/4கப்
எலுமிச்சை ஜூஸ்- அரை பழத்திலிருந்து
[மோர் இருந்தால் நேரடியாக 3/4 கப் சேர்க்கலாம், என்னிடம் இல்லாததால் பால்+ எலுமிச்சை ஜூஸ் சேர்த்தேன்]
குளிர்ந்த வெண்ணெய்- 6டேபிள்ஸ்பூன்
உருக்கிய வெண்ணெய்-1டேபிள்ஸ்பூன்

செய்முறை
வெண்ணெயை குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்த உடனே சிறு துண்டுகளாக நறுக்கி உபயோகிக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, வெண்ணெய் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளவும்.
விரல்களால் அவற்றைக் கலந்து கொள்ளவும். வெண்ணெய்த் துண்டுகள் மிளகு அளவுக்கு வந்து, கலந்த மாவு கிட்டத்தட்ட மணல் போல crumble ஆகியிருக்க வேண்டும். 
பாலுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை மாவுடன் கலக்கவும். 
பால் சேர்த்து மாவு ஒன்றாக சேரும் வரை கலந்தால் போதுமானது. அதிகமாகப் பிசையக் கூடாது.
பிறகு சின்னமன் பேக்கிங் சிப்ஸை மாவுடன் சேர்த்து பிரட்டவும்.
உலர்ந்த மாவு தூவிய சமமான இடத்தில் ஸ்கோன் மாவை மாற்றி, லேசாகப் பிசையவும். (அதிகபட்சம் 10 முதல் 12 முறை மாவைத் லேசாகத் திருப்பிப் போட்டாலே கையில் ஒட்டாத பதம் வந்துவிடும். சப்பாத்தி மாவு போல அடித்துப் பிசைந்தா:) ஸ்கோன் கடினமா ஆகிவிடும், அதனால் கோ ஈஸி! :))

மாவை 2 பங்காகப் பிரித்து, 1/4 இன்ச் திக்னஸ் உள்ள வட்டங்களாகத் தட்டிக் கொள்ளவும்.  [இந்நிலையில் ஒரு பகுதியை ப்ரீஸரில் வைத்துக்கொண்டு தேவையான பொழுது எடுத்து bake செய்யலாம்.]

வட்டமாகத் தட்டிய மாவை கத்தியால் ஆறு சமபகுதிகளாக வெட்டி, பேக்கிங் ட்ரேயில் வைக்கவும்.
உருக்கிய வெண்ணெயை ஸ்கோன்கள் மீது தடவி, மீதமுள்ள 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரையை தூவிவிடவும்.
425F ப்ரீஹீட் செய்யப்பட்ட oven-ல் சுமார் 10-13 நிமிடங்கள் bake செய்து எடுக்கவும். 
 
டடா! சி.சி.ஸ்கோன் ரெடி!
சூடாகச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும், ஆறிய பிறகும் சுவையாக இருக்கும். ;) தேவையான போது oven-ஐ 200F ப்ரீஹீட் செய்து, 10 நிமிஷங்கள் oven-ல் வைத்தெடுத்தும் ருசிக்கலாம். :) 
~~
பகுதி -1 இல் சொல்லியது போல, பகுதி-2இல் மோரில் ஆரம்பிச்ச தடங்கல், பால்+லெமன் ஜூஸ் என அஜீஸ்;) ஆச்சுங்க..அப்புறமா கேமராக்கள் சதி!! இருந்த ஒரு சின்னக் கேமரால மெமரி ஸ்பேஸ் இல்லை..பெரிய கேமரால லென்ஸை மாத்தணும், எப்படி மாத்தன்னு தெரிலை, ஆத்துக்காரரும் வீட்டிலில்லை..பிறகு ஆப்பிள் ஐபோன் கை கொடுக்க ஸ்கோனை பேக் செய்த ஸ்டெப்ஸை பதிவும் செய்தேன். அதனால கொலாஜ்ல ஒவ்வொரு படமும் ஓரொரு சைஸில் இருக்கும். நீங்களும் அஜீஸ் பண்ணிக்குங்க. 
பி.கு. இப்பல்லாம் கேமரால லென்ஸ் மாத்த கத்துகிட்டாச்சு. ஹிஹி! :)
~~

17 comments:

  1. . இப்பல்லாம் கேமரால லென்ஸ் மாத்த கத்துகிட்டாச்சு. ஹிஹி! :) super... recipe athai vida super...

    ReplyDelete
  2. என் பொண்ணு செய்யபோறா மகி :))..அவளுக்கு ஈஸ்டர் ஹோலிடேஸ் வருது அப்ப செய்லாம்னு சொல்லிருக்கேன் ..பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. Super recipe. I do not have half & half. Feeling very tired today to go shopping. Will try next week end.

    ReplyDelete
  4. Asusual super one Mahi !! Keep rocking...
    http://recipe-excavator.blogspot.com

    ReplyDelete
  5. ஆஹா..அசத்தல் மகி.

    ReplyDelete
  6. மிக நல்ல அருமையாக இருக்கிறது சின்னமன் ஸ்கோன்

    ReplyDelete
  7. Thanks Mahi for sharing this recipe, I'll translate this recipe for my daughter who wants to bake during her spring break :)

    ReplyDelete
  8. இவ்வளவு (காமிரா)பிரச்சினையிலும் ஸ்டெப் பை ஸ்டெப்பாக எடுத்துப் போடுவது பெரிய விஷயமே. நல்ல நிறத்தில் வந்துள்ளது.என்றாவது ஒருநாள் செய்துபார்க்க வேண்டும்.நன்றி மகி.

    ReplyDelete
  9. கடவுளே முருகா.. கதிரமலையானே!!! மகிக்கு ஆரது சினமன் ஃபிரீயாக் கொடுத்தது...:) ஒரே சினமன் ஐட்டமாப் போட்டுக் கலக்குறா...

    ReplyDelete
  10. ஆனாலும் சூப்ப்ரா இருக்கு மகி, நல்லா வந்திருக்கு... சூப்பர் .. பார்க்க ஆசையாக இருக்கு..

    ReplyDelete
  11. பார்க்க நன்றாக‌ இருக்கு. எனக்கு சினமன் என்றால் விருப்பம்.அம்மா அதிகம் சாப்பிடவிடமாட்டார்கள்.
    நிச்சயம் இதை செய்துபார்க்கனும் குறிப்புக்கு நன்றி.

    ReplyDelete
  12. Mahi,
    ஸின்னமன் சிப்ஸ் ஸ்கோன்ஸ் ... பெயரே ஒரு tongue twister மாதிரி இருக்கு :) (எங்க, "ஸின்னமன் சிப்ஸ் ஸ்கோன்ஸ்"..."ஸின்னமன் சிப்ஸ் ஸ்கோன்ஸ்"..."ஸின்னமன் சிப்ஸ் ஸ்கோன்ஸ்".... இப்டி பத்து தடவ வேகமா சொல்லுங்க... :D)
    இந்த போஸ்ட் நல்ல விரிவா விளக்கமா இருந்துச்சு. Thanks அண்ட் கீப் இட் அப். :)

    ReplyDelete
  13. புதுசாக இருக்கு.சூப்பர் மகி.

    ReplyDelete
  14. //[இந்நிலையில் ஒரு பகுதியை ப்ரீஸரில் வைத்துக்கொண்டு தேவையான பொழுது எடுத்து bake செய்யலாம்.]// யூ மீன் ஃப்ரிஜ்!!

    எலுமிச்சை சாறு! புதுசா இருக்கு. படிக்கவே வாசனை மூக்கில் தெரியுது. யமி ;P
    நானும் ஈஸ்டரோடு செய்கிறேன்.. நினைவுபடுத்தினால். ;)

    ReplyDelete
  15. புதுசா இருக்கு ,செய்து பார்ப்போம்...

    ReplyDelete
  16. கருத்துக்கள் தந்த அனைவருக்கும் அன்பான நன்றிகள்!

    /"ஸின்னமன் சிப்ஸ் ஸ்கோன்ஸ்"..."ஸின்னமன் சிப்ஸ் ஸ்கோன்ஸ்"..."ஸின்னமன் சிப்ஸ் ஸ்கோன்ஸ்".... இப்டி பத்து தடவ வேகமா சொல்லுங்க... :D)/ பத்து தடவ என்ன, பலநூறு தடவ சொன்னாலும் என்ர டங்;) ஸ்லிப் ஆகாம கரெக்ட்டா சொல்லுதுங்களே மீனாக்ஷி? :D :) செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி!

    /மகிக்கு ஆரது சினமன் ஃபிரீயாக் கொடுத்தது...:) ஒரே சினமன் ஐட்டமாப் போட்டுக் கலக்குறா... / கடவுளே, கதிரமலையானே..இந்த பூஸுக்கு கொஞ்சம் புத்தியைக் கொடுங்கோ! ;) ஒரே ரெசிப்பிய பலமுறை பாத்து குழம்பிட்டாகளே! அவ்வ்வ்வ்! ;)

    /யூ மீன் ஃப்ரிஜ்!!/ இல்லே இமா, Freezer! ஃப்ரீஸர்ல இருந்து எடுத்து வேண்டிய வடிவில் நறுக்கி, உருக்கிய வெண்ணெய் தடவி, bake செய்யலாம். De-frost கூட செய்யத் தேவையில்லை. :) ஈஸ்டர் டைமிலதானே? நினைவு "படுத்தி" உங்களை படுத்தி எடுத்திடரேன்! ;) :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails