Monday, March 18, 2013

தொடர்பதிவு, என் பொருட்கள்...

ஆசியாக்கா அழைத்த தொடர்பதிவு...தொடர்கிறேன். :) மேலே படத்தில் இருக்கும் பெண்மணியில் அருகில் இருக்கும் பப்பி என் ஃபேவரிட்! இளங்கலை படிக்கையில் சைட் ட்ராக்ல தக்ஷிண் பாரத் ஹிந்தி ப்ரச்சார் சபா-வில் ஹிந்தியும் படித்துக் கொண்டிருந்தேன். அதற்கான பரீட்சைகள் R.S.புரம் நேரு மகாவித்யாலயா பள்ளிக்குப் போனோம். பரீட்சை முடிந்து திரும்பி க்ராஸ்கட் பஸ் ஸ்டாப் வரும் வழியில் தள்ளுவண்டியில் வந்துகொண்டிருந்த பப்பியார் என் கவனத்தைக் கவர, வீட்டுக்குக் கூட்டி வந்துவிட்டேன். :) 

அடுத்து அந்தப் குண்டுப் பெண்மணி..எப்படி வீட்டுக்கு வந்தார் என நினைவில்லை..ஆனால், பலகாலமாக எங்களுடனே இருக்கிறார். உரிக்க உரிக்க வரும் வெங்காயம் போல, ஒரு பொம்மைக்குள் இன்னும் 5 பொம்மைகள்! :) 
 ஐந்து பேரிலும் மூத்த ஆள்தான் அழகாக, திருத்தமாக முகம், கண்கள், புல்லாக்கு, நகைகள் என க்யூட்டாக இருப்பார். அளவு குறையக் குறைய நுணுக்கமான வேலைப்பாடுகள் குறைந்து இருக்கும், ஆனாலும் இந்தப் பொம்மை செட் எனக்கு மிகப் பிடித்தமானது. இவை இரண்டுமே அம்மா வீட்டில் பத்திரமாக இருக்கு. ஊருக்குப் போனபோது இந்தப் பதிவு எழுதுவேன் என்ற க்ளூவே இல்லாமல், எடுத்து வந்த படங்கள் இப்படி உபயோகமாகியிருக்கின்றன. :)
எனக்கு கூந்தல் கொஞ்சம்;) நீளம்! ஈரிழைத் துண்டுகள் மற்றும் இப்படியான துண்டுகள் ஈரத்தை சீக்கிரம் உறிந்துகொள்ளும் என்ற காரணத்திற்காக,  காலகாலமாக இப்படி காட்டன் துண்டுகள் வீட்டில் இருக்கும். மேலே படத்தில் இருக்கும் துண்டு என் கல்யாணத்தின் போது கோவை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ்-ல் வாங்கியது. இன்னும் பத்திரமாய் வைத்திருக்கிறேன்.
 
ரோஜாப்பூ போட்ட இந்தப் பர்ஸ் என்னவர் எனக்காய் வாங்கித் தந்தது. ஒருமுறை என்னிடம் இருந்த லாங் பர்ஸ் பஸ்ஸில் பிக்பாக்கெட்-ஆக பறிபோய்விட்டது. அப்போது இவரிடம் போனில் சொல்லியிருக்கிறேன், பிக்பாக்கெட்டுக்குப் பலியாவது முதல் முறை என்பதால் கொஞ்சம் ஓவராகவே(!) சொல்லியிருப்பேன் போலும்! ;) அடுத்தமுறை இந்தப் பர்ஸுடன் வந்தார். 
அழகான ப்ரவுன் கலரில் குட்டி ரோஜாப்பூவுடன் இருக்கும் இந்த பர்ஸ்..இதன் கைப்பிடிகள் எனக்கு மிகவும் பிடித்த மாடல். நேரம் கிடைக்கையிலெல்லாம் கைப்பிடிகளைப் பூட்டி, திறந்து, பூட்டி திறந்து பார்ப்பது ஒரு பிடித்தமான பொழுதுபோக்கு. :)
குட்டிப் பர்ஸில் 2 அறைகள் உண்டு. அதிகமாகப் பணம் வைத்தெல்லாம் புழங்கமுடியாது. அளவாக செலவு செய்யட்டும்னு சின்ன பர்ஸ் வாங்கிக் கொடுத்திருக்கிறார். கர்ர்ர்ர்ர்ர்! இப்போது அதில் ஒரு காலணா(Quarter cent) போட்டு பத்திரமாக எடுத்து வைச்சிருக்கேன். என் உபயோகத்திற்கு கொஞ்சம் பெரியதாக இன்னொரு பொம்மை(கள்) போட்ட பர்ஸை நானே வாங்கிட்டேன். :)))
பர்ஸ் கதை முடிஞ்சிருச்சுன்னு நினைச்சா மறுபடியும் பர்ஸ் போட்டோ??- என நினைக்கிறீங்க, கரெக்ட்? :) இது பர்ஸுக்கு இல்லைங்க, பர்ஸ் மேலே, என் கை  விரலில் இருக்கும் 3 கல் மோதிரத்துக்காக. இந்த மோதிரம் ஒரு பிறந்தநாள் பரிசாக என்னவர் வாங்கித்தந்தது. மூணு குட்டி வைரங்கள் வெள்ளைத் தங்கத்தில் பதிக்கப்பட்டு, வளையம் மஞ்சள் தங்கத்தில் செய்யப்பட்ட மோதிரம். மெல்லிசாய், அழகாய் இருக்கும். சர்ப்ரைஸாக எனக்கே தெரியாம என் கை அளவெடுத்துப் போய் கரெக்டாக வாங்கிவந்திருந்தார். :) 

சால்ட் லேக் சிட்டியில் இருக்கையில் ட்ரைவிங் லைசென்ஸ் வாங்க DMV அலுவலகம் போனபோது, அங்கே வேலைபார்க்கும் ஓர் ஆள் இந்த மோதிரத்தைக் கவனித்து ஆஹா-ஓஹோ என அஞ்சு நிமிஷம் புகழ்ந்தது பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் என்பதை இங்கே மீண்டும் ஒருமூறை நினைவு படுத்தலைன்னா எனக்குத் தூக்கம் வராதுங்க..ஹிஹிஹி!

இன்னும் பலப்பல பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் இங்கே வெளியிட அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. ;) அது என்னன்னா, என்னவர் கொஞ்சம் நல்லாவே படம் வரைவார். பேப்பர் பேனா கிடைத்துவிட்டால், ஏதாவது வரைந்துவிடுவார், நானும் பத்திரமா அதை எடுத்து வைச்சுப்பேன், அவற்றையெல்லாம் இங்கே போடலாம் என ரெடி பண்ணினேன், இருந்தாலும் வரைந்தவரிடம் ஒரு வார்த்தை கேட்போமே என கேட்க, கிடைச்சது ஆப்பூஊஊஊ! :)))) "நோ" என்று தடா போட்டுட்டாருங்க. எதிர்காலத்தில் வாய்ப்புக் கிடைச்சா படங்களை ரிலீஸ் பண்ணுகிறேன். 

இனி, இந்தத் தொடர்பதிவைத் தொடர "உலகம்" சுற்றிக்கொண்டிருக்கும் இமா & "ரசித்து ருசித்து"-கொண்டிருக்கும் ப்ரியா ராம், "பொழுது போக்குப் பக்கங்களை" பதித்துக் கொண்டிருக்கும் சித்ராசுந்தர், ஆகியோரை அழைக்கிறேன். தொடருங்க என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நன்றி! 

குறிப்பு: இந்தப் பதிவு இந்தியநேரம் மாலை 5.53க்கு வெளியாகும்படி ஷெட்யூல் செய்திருக்கேன், அதனால வாசகர்களுக்கு ஈவினிங் டிஃபனாக பஜ்ஜி-சட்னி வழங்கப்படுகிறது. :)) 
யு.எஸ்.ல கிழக்கு கடற்கரையில் இருக்கும் மக்களுக்கு ப்ரேக்ஃபாஸ்ட் டைமா இருக்கும், அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு சாப்ட்டுருங்க. எங்கூர்ப் பக்கமிருந்து வரும் ஆட்களும் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்கோ..அகில உலகமெங்கிலுமிருந்து வரும் அனைவரும் அவரவர் ஸ்னாக் டைமுக்கு இங்ஙன வந்து பஜ்ஜி சாப்பிடுங்க என அன்போடு சொல்லிக்கிறேன். 
இங்க இன்னொரு விஷயம்..ப்ளெய்ன் வாழக்கா பஜ்ஜிய விட, பஜ்ஜிக்கு கரைச்ச மீதமாகும் மாவில, சொச்சமான வாழக்காத் துண்டுகள், வெங்காய மொளகா எல்லாம் அரிஞ்சு  போட்டு இப்படி பக்கோடா-வா போடுவமே, அதுதான் என்னோட ஃபேவரிட்! ;) வாட் அபவுட் யூஊஊ?!! :)

33 comments:

  1. //அதனால வாசகர்களுக்கு ஈவினிங் டிஃபனாக பஜ்ஜி-சட்னி வழங்கப்படுகிறது. :)) //

    //இங்க இன்னொரு விஷயம்..ப்ளெய்ன் வாழக்கா பஜ்ஜிய விட, பஜ்ஜில கடைசி மாவில, சொச்சமான வாழக்காத் துண்டுகள், வெங்காய மொளகா எல்லாம் அரிஞ்சு போட்டு இப்படி பக்கோடா-வா போடுவமே, அதுதான் என்னோட ஃபேவரிட்! ;) வாட் அபவுட் யூஊஊ?!! :)//

    எனக்கு பதிவைவிட இந்த பஜ்ஜி, சட்னி, பக்கோடா முதலியன மிகவும் பிடித்துப்போய்விட்ட்தால் முதலில் அவற்றை காலி செய்து விட்டேன். இனி பதிவைப்படித்து விட்டு மீண்டும் வருவேன். >>>>>

    ReplyDelete
  2. பதிவு மிகவும் அருமையாக உள்ளது. எல்லாப்பொருட்களும் அழகோ அழகாக உள்ளன.

    பொம்மைகள் மிக அழகு.


    >>>>

    ReplyDelete
  3. //குட்டிப் பர்ஸில் 2 அறைகள் உண்டு. அதிகமாகப் பணம் வைத்தெல்லாம் புழங்கமுடியாது. அளவாக செலவு செய்யட்டும்னு சின்ன பர்ஸ் வாங்கிக் கொடுத்திருக்கிறார். கர்ர்ர்ர்ர்ர்! இப்போது அதில் ஒரு காலணா(Quarter cent) போட்டு பத்திரமாக எடுத்து வைச்சிருக்கேன். என் உபயோகத்திற்கு கொஞ்சம் பெரியதாக இன்னொரு பொம்மை(கள்) போட்ட பர்ஸை நானே வாங்கிட்டேன். :))) //

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    உங்களவரின் சிக்கனம் எனக்கு வியப்பளிக்கிறது. ;)))))

    ReplyDelete
  4. இன்னொரு பர்ஸ், மோதிரம்,தலை துவட்டும் துண்டு என எல்லாமே படத்தில் காட்டி அசத்துயுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  5. MEEEEE First :))
    //உரிக்க வரும் வெங்காயம் போல, ஒரு பொம்மைக்குள் இன்னும் 5 பொம்மைகள்! :)//

    சூப்பர் உவமானம் :))
    மகிம்மா இந்த பொம்மைகள் ரஷ்யன் nesting dolls ...aka babushka பொம்மைகள் மாதிரியே இருக்கு .
    எங்க வீட்லயும் அதே மாதிரி பப்பி பொம்மை இருந்தது ...முந்தி போர்சலின் பொம்மைகள் வண்டியில் விற்றுக்கொண்டு வருவாங்க ..

    ReplyDelete


  6. மோதிரம் அழகா இருக்கு...அந்த மூன்று கற்களும் அழகா ஒரு மலர் போல இருக்கு
    .பிக் பாக்கெட் எங்கே அங்கே அமெரிக்காவிலையா ??
    பஜ்ஜி ரெக்ட்டாங்கில் ஷேப்பில் ஒரே அளவா பார்க்கவே மொரு மொறுன்னு பசி கிளப்புது ..எங்களுக்கு லஞ்ச் டைம் அதனால் மாலை ஸ்நாக்ஸ் சாப்பிடறவங்களுக்கு விட்டுவிடுகிறேன் ..

    ReplyDelete
  7. எனக்கு அந்த பொம்மைகள் ரொம்ப பிடித்திருக்கு...நானும் மறந்த்விட்டேன் இது போல் துண்டுகள் அம்மா எனக்கும் கொடுத்தாங்க இப்பவும் அதைதான் தலை துவட்ட பயன்படுத்துகிறேன்...

    ReplyDelete
  8. அதே அதே.. குத்து விளக்கு என்னிடமும் உள்ளது மகி. மோதிரம் அழகு. சிம்பிளா
    திரும்பியும் பார்க்கத் தோணுது.நாய் குட்டியும் அழகு..பளபளப்பு தன்மை மாறாம
    பத்தரமா வச்சிருக்கீங்க..

    ReplyDelete
  9. பொம்மைகள் ரொம்ப அழகாக இருக்கு மகி.அப்புறம் குட்டி குட்டியா ஈவினிங் ஸ்னாக்ஸ் பஜ்ஜி...சூப்பர்.

    ReplyDelete
  10. படத்தில் இருக்கும் துண்டு என் கல்யாணத்தின் போது கோவை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ்-ல் வாங்கியது. இன்னும் பத்திரமாய் வைத்திருக்கிறேன்...///அடேங்கப்பாஆஆஆஆஆ!!!!!!!!!

    ReplyDelete
  11. Nice write up mahi!njoyed reading!

    ReplyDelete
  12. அழகான பொக்கிசங்கள்.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. Enjoyed your nostalgic posts Mahi.

    Good that you have preserved them well. I too had the picpocket incident once in my life. It is unforgettable. m......

    The bajji, chutney :p :p super. Thanks Mahi burrrrrrrp..... chooda kaapi kedacha thevala ;-)

    ReplyDelete
  14. அதே அதே.. குத்து விளக்கு என்னிடமும் உள்ளது மகி. மோதிரம் அழகு. சிம்பிளா
    திரும்பியும் பார்க்கத் தோணுது.நாய் குட்டிபொம்மை அழகு..பளபளப்பு தன்மை மாறாம
    பத்தரமா வச்சிருக்கீங்க..

    ReplyDelete
  15. பதிவு மிகவும் அருமையாக உள்ளது. எல்லாப்பொருட்களும் அழகோ அழகாக உள்ளன...

    ReplyDelete
  16. மகி... அருமை. அழகான மறக்க முடியாத அருமையான பொருட்களைக் காட்டி நல்லதொரு பதிவு.
    இத்தனையையும் இங்கு வசிக்கும் நாட்டிற்கும் எடுத்துவந்து பத்திரப்படுத்தி இருப்பது பாராட்டப்படவேண்டிய விஷயம்.
    அத்தனையும் அழகு.
    பஜ்ஜி பார்க்கவே பசிக்கிறதே...:) வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. மிக அழகான பகிர்வு,அந்த பொம்மை அம்மாஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,பப்பியார்,ஐ எனக்குப் பிடித்த மாதிரி கலரில் தலைதுவட்டும் துண்டு,பர்ஸ்,மோதிரக்கை..லிஸ்ட் அருமை.படங்கள் பகிர்வு தனியாக வரட்டும் என்ற எண்ணமாக இருக்கலாம்..பார்ப்போம்..
    அழைப்பை ஏற்று தொடர் பதிவிட்டு பஜ்ஜி சொஜ்ஜி(எங்கே)என்று அசத்திட்டீங்க..பஜ்ஜி போடும் நேரம் எல்லாம் எனக்கு கிடைப்பது அந்த மீதி மாவில் செய்யும் து(கு)ணுக்கு பஜ்ஜிகள் தான்,ஸோ அது ரொம்ப பிடிக்கும்..சூப்பர்ப்.நன்றி,மிக்க மகிழ்ச்சி மகி..

    ReplyDelete
  18. டிபனுடன் கூடிய கண் காட்சி நல்ல இருந்தது

    ReplyDelete
  19. எனக்கும் பபுஷ்கா ஆசை. மாமி வீட்டில் இருந்தது. இந்தியாவிலிருந்துதான் வாங்கி வந்தார். நானும் தேடுகிறேன். கிடைக்க மாட்டேன் என்கிறது. ;( ம்.. இந்தியாவில் வேறு பெயர் இருக்கவேண்டுமே!

    பப்பி குண்டு கண்ணோட அழகா இருக்கு.

    பர்ஸ் & மோதிரம் & விரல்கள் க்யூட். ஸ்டைலா இருக்கு.

    //பேப்பர் பேனா கிடைத்துவிட்டால், ஏதாவது வரைந்துவிடுவார்// ம்.. ;))

    //"உலகம்" சுற்றிக்கொண்டிருக்கும் இமா// கார்ர்ர்ர்... நான் எங்க சுற்றினேன். நான் உண்டு என் ஸ்கூல் உண்டு என்று இருக்கிறேன். உலகில் ஈ ஓடுது. ;) எனிவேஸ்... ;) நன்றி மகி. எப்பவோ, அதிராவை நானாகவே பின்தொடர்கிறேன் என்று ஒரு இடுகை தட்ட ஆரம்பித்து அப்படியே நிற்கிறது. மெதுவாகத்தான் வருவேன்.



    ReplyDelete
  20. வரிசையா வைக்கப்பட்டுள்ள பொம்மை செட் சூப்பர்.பப்பி,துண்டு,பர்ஸ்,மோதிரம்(விரல்களுடன்) எல்லாமே அழகா இருக்கு.மாலை வரப்போகும் தூறலுக்கு இந்த பஜ்ஜி இருந்தா எவ்ளோஓ நல்லாருக்கும்!

    எனக்கு மட்டும்தான் இந்தப் பழக்கம்(பூட்டி,திறந்து, பூட்டி)என நினைத்துவிட்டேன்.இன்னொன்னுகூட இருக்கு,இந்த pubble wrap ல் இருக்கிற எல்லாவற்றையும் ஒன்னுவிடாம டப்டப் என உடைத்துவிடுவேன்.மாத்திக்க நெனச்சாலும் முடியல.

    தொடர அழைத்ததற்கு நன்றிங்க.(மனசுக்குள்)நானும் ஊரில் எல்லாவற்றையும் பத்திரமா எடுத்து வச்சப்பவே ஒரு ஃபோட்டோ எடுத்து வந்திருக்கணும்.

    ReplyDelete
  21. உங்களுடைய குண்டு பெண்மணிகள் கொள்ளை அழகு .பொக்கிஷங்கள் படங்களுடன் ஜோராக பதிவிட்டுள்ளீர்கள்.

    பஜ்ஜிக்கு நன்றி

    ReplyDelete
  22. குட்டி குட்டி பர்ஸ் எனக்கும் ரொம்பப் பிடிக்கும்... ஆனா உபயோகம் அதிகம் இல்லாததால் வாங்காமல் ஏக்கத்தோட பார்த்துட்டு வந்துடுவேன்... உங்க பர்ஸ் அழகாஇருக்கு மகி...

    /ஆனால் அவற்றையெல்லாம் இங்கே வெளியிட அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. ;)// ஆஹா.. அந்த நல்ல கலைஞனின் படைப்புகளை உலகிற்கு விரைவில் அறிமுகப்படுத்துங்க... :P

    /இங்கே மீண்டும் ஒருமூறை நினைவு படுத்தலைன்னா எனக்குத் தூக்கம் வராதுங்க..ஹிஹிஹி!/ மகி போஸ்ட்டில் இந்த மாதிரி கலகல வரிகளைப் படிக்கலைன்னா எங்களுக்கும் தூக்கம் வராது.. ;)

    மோதிரம் சூப்பர்.

    ReplyDelete
  23. எங்களிடமும் அந்த குண்டு பொம்மைகள் , தஞ்சாவூர் பொம்மைகள்(தலையாட்டும்)இருந்தன.அழகான,அடக்கமான பர்ஸ். உங்க மோதிரம் மேல்தான் ஒரு கண். அவ்வளவு அழகாக இருக்கு. அழகான பொக்கிஷங்கள்
    உங்களுடையது.
    பஜ்ஜியைவிட, (பஜ்ஜி)பக்கோடாஆஆ என் பேவரிட்.

    ReplyDelete
  24. கால் சதம் :) கருத்துக்கள் தந்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் முதற்கண் நன்றிகள்!

    @வை.கோபு சார், பதிவு வெளியானவுடனே வந்து பஜ்ஜியையும் ருசித்து, எல்லாப் பொருட்களையும் ரசித்து கருத்துக்கள் தந்ததுக்கு மிக்க நன்றி! :)

    /உங்களவரின் சிக்கனம் எனக்கு வியப்பளிக்கிறது. ;)))))/ இந்த பர்ஸ் வாங்கிட்டாரே தவிர, அவருக்கு சிக்கனம்- என்பதற்கு ஸ்பெல்லிங் கூட தெரியாதுங்க! ;))))

    வருகைக்கும் பல கருத்துக்கள் தந்ததுக்கும் மிக்க நன்றிகள்!
    ~~
    @ஏஞ்சல் அக்கா, //சூப்பர் உவமானம் :))// தேங்க்யூ,தேங்க்யூ,தேங்கூ! ;))
    //இந்த பொம்மைகள் ரஷ்யன் nesting dolls ...aka babushka பொம்மைகள் // இந்த பேர்கள் எல்லாம் இப்பதான் கேள்விப்படறேன். தகவலுக்கு நன்றி!
    //பிக் பாக்கெட் எங்கே அங்கே அமெரிக்காவிலையா ??// இல்லே, கோவையில்! :)
    வருகைக்கும், ரசித்து கருத்துக்கள் தந்ததுக்கும் நன்றி ஏஞ்சல் அக்கா!
    ~~
    @ஹேமா, நன்றிங்க!
    ~~
    @மேனகா, எல்லா அம்மாவும் மறக்காம துண்டுகள் குடுத்து விட்டிருக்காங்க, அப்போ! :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    @ராதாராணி, அம்மா வீட்டு பொருள்னா நம்ம ஸ்பெஷலாத்தான வச்சிருப்போம்?! :) சொல்ல மறந்துட்டேனே, அம்மா வீட்டில் இருந்து ஒரு "மைகோதி" கூட கொண்டுவந்திருக்கேன். :) வருகைக்கும், ரசித்து கருத்துக்கள் தந்ததுக்கு நன்றிங்க!
    ~~
    @ஸாதிகாக்கா, //குட்டி குட்டியா ஈவினிங் ஸ்னாக்ஸ் பஜ்ஜி...சூப்பர்.// நன்றி! நான் பொரிக்க குறைந்த அளவு எண்ணெய்தான் பயன்படுத்துவேன், அதனால வாழைக்காயை ரெண்டா நறுக்கி, பஜ்ஜிக்கு சீவினேன். குட்டிக் குட்டி பஜ்ஜிக்கு காரணம் புரிஞ்சதா இப்போ? :)

    ///அடேங்கப்பாஆஆஆஆஆ!!!!!!!!! /// இத்தனை ஆஆஆஆ-போடற அளவுக்கு அந்தத் துண்டு ஓல்ட் ஆகிடலை ஸாதிகாக்கா! :) ;) :)

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!
    ~~
    @ரம்யா, ரசித்துப் படிச்து கருத்து தந்ததுக்கு நன்றிங்க.
    ~~
    @தனபாலன், வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க!
    ~~




    ReplyDelete
  25. இப்பதிவு என்னை மிகவும் கவர்ந்தது... அற்புதமான பொம்மைகள்.. உங்கள் purse um அருமை..Sooper mahi!!
    --

    ReplyDelete
  26. @மீரா, பஜ்ஜி சாப்ட்டதும் ச்சூடா ஒரு பில்டர் காப்பி கிடைச்சிருந்தா நல்லாதான் இருந்திருக்கும், மிஸ் பண்ணிட்டேன்! அடுத்த முறை மறக்காம காஃபியும் தரேங்க! :)) நீங்களும் பிக்பாக்கெட் விக்டிம்-ஆ!! ஆமா, மறக்க முடியாத அனுபவமேதான்!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    @ராதாராணி, மறுபடியும் நன்றிங்க!
    ~~
    @ஃபாயிஸா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
    ~~
    @இளமதி, //இத்தனையையும் இங்கு வசிக்கும் நாட்டிற்கும் எடுத்துவந்து பத்திரப்படுத்தி இருப்பது பாராட்டப்படவேண்டிய விஷயம்.// எல்லாமே இங்கே இல்லைங்க, பொம்மைகள் அம்மா வீட்டில்தான் இருக்கு. :)
    வருகைக்கும் ரசித்து கருத்துக்கள் தந்தமைக்கும் நன்றி இளமதி!
    ~~
    @ஆசியாக்கா, //எனக்கு கிடைப்பது அந்த மீதி மாவில் செய்யும் து(கு)ணுக்கு பஜ்ஜிகள் தான்,ஸோ அது ரொம்ப பிடிக்கும்..// அம்மான்னா சும்மாவா?! :))))) இப்படியான sacrifices எல்லாம் பண்ணித்தானே ஆகணும்? :))
    படங்கள் தனிப்பதிவா??! ஹ்ம்ம்..பார்ப்போம், என்ன நடக்குதென்று!
    வருகைக்கும் எல்லாப் பொருட்களையும் ரசித்தமைக்கும் நன்றி அக்கா! இன்ஃபாக்ட், இந்தத் தொடர்பதிவை ஆரம்பித்த உங்களுக்குதான் நன்றி சொல்லணும்! :)
    ~~
    @மலர், கண்காட்சி-யை ரசித்து கருத்து தந்ததுக்கு நன்றிங்க!
    ~~
    @இமா, பபுஷ்கா..நாகர்கோயில் பக்கம் கிடைச்சா வாங்கி அனுப்பச் சொல்லுங்களேன்! ;) :)

    பப்பி குண்டுக்கண்ணு, அதோட, அவர் படுத்திருக்கும் ஸ்டைலைப் பார்த்து அசந்துபோய்த்தான் வாங்கினேன்! ;) :)

    உங்க உலகம் ஈ ஓட்டுதுன்னு எல்லாருக்கும் தெரியுமே, அதான் இப்படி ஒரு தாக்குதல்!! இனியாவது ஒழுங்கா சுத்தும்ல?! ;))))

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீ! :)
    ~~
    @//இருக்கிற எல்லாவற்றையும் ஒன்னுவிடாம டப்டப் என உடைத்துவிடுவேன்.// சித்ராக்கா, இது எனக்கும் புடிக்கும்! :)
    பூட்டித் திறக்க எனக்கும் ஒரு கம்பெனி கிடைச்சுருச்சு! ஹஹ!

    /.(மனசுக்குள்)நானும் ஊரில் எல்லாவற்றையும் பத்திரமா எடுத்து வச்சப்பவே ஒரு ஃபோட்டோ எடுத்து வந்திருக்கணும்./ ம்ம்..அது சரிதான்! ஊரில் இருக்கறதெல்லாம் அது பாட்டுக்கு இருக்கட்டும், இங்க இருக்கிற (லைக் டக்குமென்டரி) மற்ற பொருட்கள் பற்றி எழுதுங்களேன்.
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
    ~~

    ReplyDelete
  27. @ராஜி மேடம், வருகைக்கும் குண்டுப் பெண்மணியையும் மற்றவற்றையும் ரசித்துக் கருத்துச் சொன்னதுக்கும் மிக்க நன்றீங்க!
    ~~
    @பானு, பல நாள் கழிச்சு தரிசனம்:) தந்ததுக்கு நன்றீ! :)
    /ஆனா உபயோகம் அதிகம் இல்லாததால் வாங்காமல் ஏக்கத்தோட பார்த்துட்டு வந்துடுவேன்.../ ஆமாங்க, லேடீஸ் அதையெல்லாம் பார்ப்போம், ஜென்ட்ஸுக்கு என்ன? கண்ணில பட்டது அழகா இருந்தா வாங்கிருவாங்க, நம்மளப் போல யோசிக்கவெல்லாம் மாட்டாங்கள்ல? :) ;)

    /அந்த நல்ல கலைஞனின் படைப்புகளை உலகிற்கு விரைவில் அறிமுகப்படுத்துங்க... :P /கட்டாயம் உங்க கருத்தை அவர் காதில போடறேன், டோன்ட் வொரி! :)

    /மகி போஸ்ட்டில் இந்த மாதிரி கலகல வரிகளைப் படிக்கலைன்னா எங்களுக்கும் தூக்கம் வராது.. ;)/ ஹிஹிஹி...தாங்க்க்க்க்க்க்க்க்க்யூஊஊ! :)

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றீங்க பானு!
    ~~
    @அம்முலு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் இருந்ததா உங்கள்ட்ட? எங்க வீட்டில குண்டா செட்டியார் பொம்மை ஒன்று இருந்தது, என்னாச்சோ தெரில, காணாமப் போச்!
    பகோடாதான் உங்க பேவரிட்-ஆ? சேம் பின்ச்! :)
    வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி அம்முலு!
    ~~
    @வித்யா, பல நாள் கழிச்சு வந்து ரசித்து கருத்தும் தந்ததுக்கு நன்றீங்க!
    ~~

    ReplyDelete
  28. //நாகர்கோயில் பக்கம்// யார்ங்க இருக்கா எனக்கு! கோவை, மன்னார்குடி, சிவகாசின்னு சொல்லி இருந்தா கூட ஓகே. ம்.. நாகபட்டினமா! ;D

    // இனியாவது ஒழுங்கா சுத்தும்ல?! // ப்ளாக் ஸ்மோக்கிங் போல. ஊதினா, செய்ன் ஸ்மோக்; விட்டா, க்விட்! ;D

    ReplyDelete
  29. //ம்.. நாகபட்டினமா! ;D// ஹிஹிஹி..ஆமாம்! தப்பாச் சொல்லிட்டேனா?! கோவை-மன்னார்குடி-சிவகாசி..ஹ்ம்ம்ம்...பெரிய வட்டம்தான் போல உங்க நட்பு வட்டம்! :)

    //ப்ளாக் ஸ்மோக்கிங் போல. ஊதினா, செய்ன் ஸ்மோக்; விட்டா, க்விட்! ;D // அட,அட,அட!! புதிய தத்துவம் பத்தாயிரத்து ஒண்ணு! :)

    பதிலுக்கு நன்றி இமா!

    ReplyDelete
  30. http://imaasworld.blogspot.co.nz/2013/04/blog-post_1.html

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails