Friday, April 12, 2013

ஸ்ட்ராபெரி பெண்ணே!..

நீங்க மார்கெட் போகாமல் உங்கள் வாழ்க்கைத் துணைவரை தனியாக அனுப்பினால் என்ன ஆகும்?  நீங்க அனுப்பிய தேவையான பொருட்கள் லிஸ்ட்டை சுத்தமாக மறந்துபோயி, அவர்கள் கண்ணில் பட்டதையெல்லாம் அள்ளிக்கொண்டு, பச்சைமிளகாய்-இஞ்சி-கொத்துமல்லித் தழை போன்ற கொசுறுகளை ஒரு கணமும் நினைக்காமல், ஒரு மினி ஃப்ரூட்-வெஜிடபிள் மார்க்கட்டையே காரில் நிறைத்துக்கொண்டு வருவார்கள். :) அதையெல்லாம் விட முக்கியமான ஒன்று, ப்ளாகில் போட நமக்கு ஒரு பதிவு தேறும், ஹிஹி! :)

மினி மார்க்கெட்டைப் பார்த்து மயக்கம் போட்டுவிடாமல், எல்லாத்தையும் பத்திரமாக குளிர்சாதனப் பெட்டியில் வைச்சு உபயோகிப்பது உங்க பொறுப்பு! எங்க வீட்டில் நடந்த இப்படியாகப்பட்ட  நிகழ்வொன்றில் ஒய்யாரமாக கண்ணாடிப் பெட்டியில் செக்கச்செவேர் என்று வந்த ஸ்ட்ராபெரி பழங்கள் புளிப்புன்னா புளிப்பு, வாயில் வைக்க முடியாத அளவு புளிப்பு!! அதற்காக தூக்கி குப்பையில் போட  மனசு வருமா? இப்படி ஒரு ஸ்மூத்தியை மிக்ஸியில் அடிச்சு, ஒரு டால் க்ளாஸ் நிறைய ஊற்றி, ஸ்டைலா ஒரு பழத்தையும் கட் பண்ணி வைச்சு போட்டோ புடிச்சுட்டு, அக்கடான்னு உக்கார்ந்து குடிச்சும் முடிச்சுட்டேன்!
தேவையான பொருட்கள் 
ஸ்ட்ராபெரி பழங்கள் -5 (பெரிய பழங்கள்)
தயிர்-கால்கப்
தண்ணீர்-1/2கப்
சர்க்கரை(விரும்பினல்)-2டீஸ்பூன்

செய்முறை
ஸ்ட்ராபெரி பழங்களை நன்றாக கழுவி, அவற்றின் தலையில் இருக்கும் இலை மற்றும் தண்டுப் பகுதியை நீக்கவும்.
பழங்களை துண்டாக்கி மிக்ஸியில் போட்டு சிலநிமிடங்கள் அரைக்கவும்.
பிறகு அத்துடன் தயிர், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து மேலும் சிலநிமிடங்கள் அரைக்கவும்.
ஜில் ஜில் ஸ்ட்ராபெரி ஸ்மூத்தி தயார். கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி சில்லென்று பருகவும்.
பி.கு. புளிப்பான பழம் என்பதால் போட்டோவில் இருக்கும் ஒரு ஒய்யாரக் கொண்டை ஸ்ட்ராபெரி அக்கா :) போட்டோ செஷன் முடிந்ததும் மீண்டும் குளிர்சாதனப் பெட்டிக்கே குடியேறிவிட்டார். புளிப்பில்லாத பழம் என்றால், ஸ்மூத்தி பருகும்போது இடையிடையே அந்தப் பழத்தையும் ஒவ்வொரு கடி கடிச்சு சாப்பிடலாம். :)

இது டயட்(!) வர்ஷன்..இதிலேயே கொஞ்சம் வேரியேஷன் வேணும்னா...ஸ்ட்ராபெரி பழங்கள், குளிர்ந்த பால், சர்க்கரை, ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் சேர்த்து அரைத்தா..
ரிச் அண்ட் டேஸ்ட்டி ஸ்ட்ராபெரி மில்க்‌ஷேக் ப்ரேக்ஃபாஸ்ட்-டுக்கு ரெடி!  

இலவச இணைப்பு : மின்சாரக் கனவிலிருந்து ஒரு பாட்டு.. :) :)))~~~
அனைவருக்கும் இனிய தெலுங்கு மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
~~~

17 comments:

 1. வாவ்வ்வ்...:) சூப்பர் மகி!
  அசத்தலான ஸ்மூத்தி. அதுவும் தயிர் போட்டு செய்யுறது ம்..ம்... எனக்கும் வேணுமே..:)

  வழக்கமான உங்க நகைச்சுவையோடு ஜில்லென்னு தந்த ஸ்மூத்திக்கும், ஸ்ரோபெரி கண்ணே சூப்பர் பாட்டுக்கும் ரொம்ப நன்றி...:)

  ReplyDelete
 2. இளமதி, சட்டுன்னு செய்துருங்க, உடனே சுவைத்திடலாமே! ;) :)
  வருகைக்கும், நகைச்சுவையை(மொக்கை-ந்னு லேபிள்ல மாத்தணுமோ!? ;)) ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றி இளமதி!
  ~~
  ;))))))))
  நன்றி. ;)
  ~~

  ReplyDelete
 3. இனிய தமிழ்ப்புத்தாண்டு “விஜய” நல்வாழ்த்துகள்,

  ரிச் அண்ட் டேஸ்ட்டி ஸ்ட்ராபெரி மில்க்‌ஷேக் அருமையான ஐடியா ;)))))

  ReplyDelete
 4. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வை.கோபு சார்!

  அதிகாலை 3.23 மணிக்கு இங்கே வந்து கருத்துப் பதிந்தமைக்கு மிக்க நன்றி! :)

  ReplyDelete
 5. மகிம்மா !!!! இந்த செவத்த பழமா புளிப்பு !!
  கலர் நல்லா பாக்க sweetமாதிரி இருக்கே ..

  ...மகி எங்க வீட்ல கிலோ கணக்கில் கடுகு ,மிளகு தனியா எல்லாம்சூப்பர் மார்கெட்டில் இருந்து வரும் ..
  தக்காளி காரட் மட்டும் ரெண்டு கிலோ இருக்கும் எப்பவும் :)))

  ஸ்ட்ராபெரி ஸ்மூதி நல்ல இருக்கு ..
  apple/plums /berries புளிச்ச காயாக இருந்தா ..உப்பு மிளகுதூள் போட்டு தொட்டு சாப்பிடுவேன் :)))

  ReplyDelete
 6. கலரைப் பார்த்து ஏமாந்துரக் கூடாது என்பதற்கு இது ஒரு சான்று ஏஞ்சல் அக்கா! ;) :) இங்கே இண்டியன் ஸ்டோர் சாமான்லாம் அங்கருந்து போன் செய்து கடையில் எங்க இருக்கு என்று கேட்டுத்தான் எடுப்பார்! :) அதனால் கடுகு மிளகெல்லாம் கரெக்டாதான் வரும். காய்கள்தான் இப்படி!! தக்காளி கூட அஜீஸ் பண்ணிப்பேன், இங்கயும் கேரட்-முட்டைக்கோஸ் ரெண்டும் தவறாது! அவ்வ்வ்வ்!

  ஸ்ட்ராபெ ரிக்கும் உப்பு மிளகுதூள் தொட்டு சாப்பிடலாம்னு சொல்றீங்களா? ம்ம்..நான் அரைச்சே குடிச்சு முடிச்சுட்டேன்!;) அடுத்தமுறை இப்படி நேர்ந்தா உங்க டெக்னிக்கை நினைவு வைச்சிக்கறேன். :)

  ReplyDelete
 7. ஸ்ஸ்ஸ்.... மில்க்‌ஷேக் அருமை...

  இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. ha ha super one... my favorite one...

  ReplyDelete
 9. Lovely recipe with an entertaining song :)

  Carrot and Paneer- Dish it out event announcement
  http://kitchenista-welcometomykitchen.blogspot.com

  ReplyDelete
 10. Good one. I just mix maple syrup with strawberry and never bother to make smoothie at all.

  ReplyDelete
 11. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மகி.
  காலையில் உங்க பதிவு பார்த்துக் கொண்டிருக்கும் போது என்னவர் ஒரு bag தந்தார். அதில் ஸ்ட்ராபெரி. நான் எதிர்பார்க்கவில்லை. பிறகென்ன வாசித்த உடனே செய்துபார்த்து ருசித்தும்விட்டாச்சு. சூப்பரா இருந்திச்சு.ஸ்ட்ராபெரி வாங்கினால் ஸ்மூத்திதான். தாங்க்ஸ் மகி.
  உங்க நகைச்சுவை கலந்த (பதிவு)எழுத்து சூப்பர்.

  ReplyDelete
 12. நல்ல குறிப்பு மகி.. ஸ்மூத்திக்காக ஸ்ட்ராபெர்ரி வாங்கினால் கையோடு வாழைப்பழமும் சேர்த்து வாங்கிடுவேன். அடுத்த முறை உங்க மெதட் ட்ரை பண்றேன்... நன்றி மகி.

  ReplyDelete
 13. பச்சைக் கொண்டை ஸ்ட்ராபெரி அக்கா பருகப் போவதுபோலவும்,பருகிக் கொண்டிருப்பதுபோலவும் (இந்தப் படம் சூப்பரா இருக்கு)நல்ல ஐடியா.

  வெயிலுக்கு ஸ்மூதியும்,டயட்டுக்கு(!!!) ஸ்ட்ராபெரி மில்க்‌ஷேக்கும் செய்திடுறேன்.

  உங்களுக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுக்கும் நன்றி மகி.

  ReplyDelete
 14. இந்த ஸ்டாராபெர்ரி சீசனில் செழிக்க நானும் வாங்கி அசத்தியாச்சு,மிச்சமிருந்தால் பல் தேய்க்க பயன் படுத்துங்க,பளிச்சென்று ஆகிவிடும்..ஹா ஹா!

  ReplyDelete
 15. தனபாலன், விஜி, நீலா, வானதி, பானு, சித்ராக்கா, ஹேமா, ஆசியாக்கா & அம்முலு, அனைவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள்!

  வானதி, மேப்பிள் சிரப் எனக்கு அவ்வளவாப் புடிக்காதுங்க, அதனால் வாங்குவதே இல்லை! :)

  அம்முலு, சட்டுப்புட்டுன்னு ஸ்மூத்திய செய்து பார்த்து படமும் போட்டுட்டீங்க, ரொம்ப சந்தோஷமும், நன்றிகளும்!

  பானு, பொதுவாவே பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் எனக்குப் பிடிக்கும், இந்த் ஸ்மூத்திதான் நான் போஸ்ட் பண்ணியிருக்கும் முதல் பழரசம் ரெசிப்பின்ன பார்த்துங்கோ! ;) வாழைப்பழம் + ஸ்ட்ராபெரி தான் உங்க காம்பினேஷனா? நெக்ஸ்ட் டைம் இப்படி முயற்சித்துப்பாருங்க. நன்றி!

  சித்ராக்கா, உங்க கருத்து அருமை! சூப்பரா ரசிக்கிறீங்க! :) மிக்க நன்றி!

  ஹேமா, தயிர் -சர்க்கரை- ஸ்ட்ராபெரி = லஸ்ஸி..ஆமாம்ல!! எனக்கு ஸ்ட் ரைக் ஆகவே இல்ல பாருங்க! ;)

  ஆசியாக்கா, //மிச்சமிருந்தால் பல் தேய்க்க பயன் படுத்துங்க,பளிச்சென்று ஆகிவிடும்..ஹா ஹா!// மெய்யாலுமா சொல்றீங்க?..அவ்வ்வ்வ்வ்வ்!! யாராவது செக் பண்ணிப்பாத்து சொல்லுங்கப்பா! :)))

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails